ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
பாதுகாப்பு வளையத்தில் கொன்று குவிக்கும் ராணுவம் வியாழக்கிழமை, மே 7, 2009, 16:16 [iST] சென்னை: வன்னி பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர், எப்படி அப்பாவி மக்களை சரமாரியாகக் கொன்று குவித்து வருகின்றனர் என்பதை கண்ணீர் மல்க, இதயம் துடிதுடிக்க இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அகதிகள் விவரித்துள்ளனர். ஆந்திர மாநில கடற் பகுதிக்கு 9 நாட்களுக்கு முன்பு இலங்கை அகதிகள் சிலர் படகில் வந்தனர். மொத்தம் 21 பேர் படகில் வந்தனர். இவர்களில் நான்கு வயது குழந்தை உள்பட 10 பேர் நடு வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தப்பி வந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மனித உரிமை அமைப்பு ஒன்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மருத்துவமனையில் சேர்…
-
- 0 replies
- 831 views
-
-
வன்னி மக்களை பட்டினி அவலத்திலிருந்து காப்பாற்றுங்கள் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவசர கோரிக்கை வன்னியில் உள்ள மக்கள் பாரிய பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளதால், அவர்களை பட்டினியில் இருந்து காப்பாற்றுவதற்கு சர்வதேச சமுகம் மற்றும் மனிதநேய அமைப்புகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவசர கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்>>>
-
- 0 replies
- 514 views
-
-
மட்டக்களப்பில் 4 இளைஞர்களை காணவில்லையென தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மூலம்: வீரகேசரி மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் நண்பர்களான 4 இளைஞர்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரே சமயத்தில் இந்நால்வரும் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. தாண்டவன்வெளி எல்லை வீதியைச் சேர்ந்த யோகேந்திரன் யோசான்(வயது 20) சேற்றுக்குடாவைச் சேர்ந்த மகேசன் பேர்னாட்(வயது22), ஜயந்திபுரத்தைச் சேர்ந்த தவராசா ஹரிமுகுந்தன் (வயது 20) மற்றும் மாமாங்கத்தைச் சேர்ந்த பெர்ணான்டோ பிரசாந்த (வயது20) ஆகியோரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்…
-
- 1 reply
- 632 views
-
-
பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நா.உ. ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் தலையீடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஸ்ரீகாந்தா தொடர்ந்து பேசியதாவது:- வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள ஒன்றரை இலட்சம் மக்களினது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அங்கு முன்னெடுக்கப்ப…
-
- 2 replies
- 968 views
-
-
சென்னை: சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி.. நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரத்தை கண்டித்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் குண்டடிபட்டும், பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கின்றனர். சிவசங்கர் மேனன் 2 முறை கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜபக்சேவிடம் போனில் பேசி தமிழ் மக்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை : அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி இணையம் 5/7/2009 1:40:35 PM - இலங்கை யுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசத் தயாராக இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என உயர் அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வாழும் கலைப் பயிற்சி நிறுவனம் மக்கள் மனதில் பிழையான கருத்துக்களை ஏற்படுத…
-
- 0 replies
- 511 views
-
-
: இலங்கை அரசு பலமிக்க ஒரு அமைப்புடன் மோதுகின்றது - ரஷ்யா Wed May 06, 2009 1:24 pm இலங்கை அரசாங்கம் வலுவானதும், சவால்மிக்கதுமான ஓர் அமைப்புடன் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ரஸ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ரஸ்யா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயாக பயன்படுத்தி வருகின்றமை பரகசியமான உண்மை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் புதிய தலைவரும், ரஸ்ய பிரதிநிதியுமான விட்டாலி சுருக்கின் தெரிவித்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=7117
-
- 3 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாண சபை உறுப்பினரான வெள்ளைத்தம்பி அமீர்தீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினராக இவர் தெரிவானார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிலிருந்து விலகி அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்திருந்தார். இவரது ராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விருப்புத் தெரிவு வாக்கு அடிப்படையில் 7914 வாக்குகளைப் பெற்றிருந்த காத்தான்குடி நகர சபைத் தலைவரான யு.எல்.எம். முபீன் பதவி ஏற்கவிருக்கின்றார். தனது நியமனம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் தாம் பதவி ஏற்கவிருப…
-
- 0 replies
- 866 views
-
-
இனமா, பணமா என மெய்ப்பிக்க வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. இனம்தான் வென்றது என்று எதிர்வரும் 16 ஆம் நாள் நாம் உலகுக்குத் தெரியவைக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும் இயக்குநருமான சீமான் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர் தன்னாட்சியையும் இறைமையையும் மீள உறுதிப்படுத்த மக்களால் நடத்தப்படும் வாக்குப்பதிவு நோர்வேயில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-
-
இந்தியாவில் இருந்து ஒலிக்கும் ஜெயலலிதாவின் குரல் ஈழத்தில் விடியலை உறுதிசெய்ய வேண்டும் என்று மலேசிய தமிழர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 426 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் 22 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது. எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோத…
-
- 0 replies
- 609 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்வது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த வாழும் கலை நிறுவனத்தின் தலைவர் சிறீ சிறீ ரவிசங்கர் குருஜியுடன் எந்தவிதமான பேச்சுக்களையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் எந்தவித பேச்சுக்களையும் நடத்துவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் அரசாங்க வட்டாரங்கள், இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை உருவாக்குவதற்கு வாழும் கலை நிறுவனம் முற்படக்கூடாது எனவும் எச்சரித்திருக்கின்றது. கடந்த மாதத்தில் கொழும்பு வந்த சிறீ சிறீ ரவிசங்கர், அரச தலைவர் மகிந்த ராஜப…
-
- 0 replies
- 590 views
-
-
ஈழத் தமிழர்கள் படும் இன்னல் கண்டு அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்து வருவதற்கு கனடா வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடியத் தமிழர் பேரவை நன்றி கூறுகின்றது. அன்னை இந்திராவின் பின் நீங்கள் ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு அவர்கள் துயர் துடைக்க நீங்கள் விழைவது - இக்கட்டான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினைத் தருகின்றது" என்று கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
யாழ். பாடசாலை மாணவர்களை கடத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது யாழில் இயங்கிவரும் பிரபரல பெண்கள் பாடசலை மாணவி கடந்தவாரம் பெரும் தொகை பணத்தை கப்பமாக கோரிகடத்தபட்டுள்தாகவும் பின்னர் பணம் கிடைத்தும் வைத்தியசாலையினை அண்மித்த பகுதியில் வைத்து விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்படுகின்றது. யாழில் பெரும் செல்வந்தாகளின் பிள்ளைகளை குறிவைத்து இத்தகைய கடத்தல் சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் கோரப்படும் கப்பம் கிடைக்காதவிடத்து கிழக்கு மாகாண பகுதியில் இடம் பெறும் சம்பவங்களே உங்கள் பிள்ளைகளுக்கும் இடம் பெறும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய சம்பவஙகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் நிலையங்கள்,…
-
- 0 replies
- 795 views
-
-
புத்தர் பெருமான் அவதரித்த நாளான வெசாக் நாளினை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமையும், நாளை மறுநாள் சனிக்கிழமையும் சிறிலங்காவில் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், இந்த நாட்களில் தென்பகுதியில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் இந்திய மத்திய அரசு அமையும் நாளையும், எங்கள் அன்னை பூமியில், எங்கள் உரிமை பூமியில் நாம் 'தனி ஈழம்' காணும் நாளையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்று பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொடிய சிங்கள இனவெறி அரசின் கொலைக்கரங்களில் இருந்து எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள் என்று உலகத்தின் வீதிகளில் நாளும் பொழுதும் கண்ணீரோடு போராட்டங்களை நடத்திவரும் எங்களுக்கு அண்மையில் தாங்கள் ஆற்றிய உரை புதுத்தென்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. தாயகத்தில் இருந்து அன்றாடம் கிடைக…
-
- 0 replies
- 482 views
-
-
போர் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டிருப்பது ஒருவித வேதனை. எறிகணைகள் மற்றும் ஆயுதங்களின் தாக்குதலில் அகப்பட்டு எப்போது உயிர் பிரியுமோ என்ற மரண பயம் வினாடிக்கு வினாடி மக்கள் மனங்களைக் கொன்று கொண்டிருப்பது அந்த வகை வேதனை. ஆனால் உயிரைத் தக்க வைத்து விட்டோம், அது பறிக்கப்படும் ஆபத்து 90 முதல் 95 வீதம் நீங்கிவிட்டது என்ற ஆறுதலுடன் நலன்புரி நிலையங்களுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் படும் வேதனை இன்னொரு விதம். எதுவுமற்ற ஏதிலிகளாக, உடுத்த உடையுடன் முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி வந்த மக்கள்வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் அடைபட்டிருக்கும் மக்கள்படும் துன்ப துயரங்கள் நீண்ட நிரல் வரிசைப்படுத்தக் கூடியவை. இங்கே வந்து இத்துணை வடிவங்களில் அல்லற்பட்டு ஆற் றாது வி…
-
- 0 replies
- 898 views
-
-
இலங்கையில் படுகொலையை நிறுத்துறுமாறும் இன அழிப்பை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் கனடாவின் ரொறன்ரோ நகரில் பேரணியும் நடைபவனியும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 496 views
-
-
மேற்குலகுக்குப் புதிய பாடம் புகட்ட எத்தனிக்கும் கொழும்பு.. இலங்கை விவகாரத்தில் மேற்குலகுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவம் "வளர்த்த கடா மார்பில் பாய்ந்த" கதைக்கு ஒப்பானதுதான். "படகு ஏறும்போது அண்ணன், தம்பி. ஆற்றைக் கடந் ததும் நீ யாரோ நான் யாரோ" என்பது போல மேற்குலகத்தை இப்போது தூக்கி எறிந்து நடக்கின்றது கொழும்பு.இலங்கையில் 2002 ஆம் ஆண்டை ஒட்டிய காலப் பகுதியில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியில் அதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல் மேற்குலகு நடந்து கொண்டது. அச்சமயம் அம்முயற்சியில் ஈடுபட்ட இரு பக்கத்தினருமே அதில் "சமதரப்பு" என்ற அந்தஸ்துடனேயே பங்குபற்றினர். அதில் ஒரு தரப்பை "பயங்கரவாதிகள்" …
-
- 0 replies
- 1.5k views
-
-
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் இந்திய மத்திய அரசு அமையும் நாளையும், எங்கள் அன்னை பூமியில், எங்கள் உரிமை பூமியில் நாம் 'தனி ஈழம்' காணும் நாளையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்று பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 563 views
-
-
தனி ஈழம்தான் தீர்வு என்று கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வணங்குகிறேன் என்று இயக்குனர் சீமான் கூறினார். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு சார்பில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ஈரோட்டில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசியதாவது : தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது.அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன்.இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன். இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம்.அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து க…
-
- 2 replies
- 1.9k views
-
-
http://link.brightcove.com/services/player/bcpid1529573111
-
- 32 replies
- 6.5k views
-
-
| செய்தி06ஃ05ஃ2009, 23:49 மணி தமிழீழம் சிறிலங்காவிற்கான உதவித்தொகையை $7.5 மில்லியன் டொலர்களாக கனடா அதிகரித்துள்ளது கனடாவுக்கான சர்வதேச கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜெ ஒடா அண்மையில் சிறிலங்காவுக்கு சென்று திரும்பியபின்பே கனடா தனது மனிதாபிமான உதவித்தொகையை கூ7.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. போரினால் இடம்பெயர்ந்தோரின் மனிதாபிமான அவலங்களை கணக்கில்கொண்டு அவர்களுக்குத்தேவையான உணவுஇ தண்ணீர்இ வதிவிடம்இ மற்றும் மருந்து போன்ற மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றவே தாம் இவ்வுதவிப்பணத்தை அதிகரித்துள்ளதாக பெவர்லி ஜெ ஓடா அவர்கள் தெரிவுத்துள்ளார். இவ்வுதவிகள் உடன் மக்களைச் சென்றடைய வேண்டுமெனில் யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்படவேண்டுமெனவு
-
- 0 replies
- 669 views
-