ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடு தமிழ்க் கிராமத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்கிராமத்தில் 106 குடும்பங்கள் வாழ்ந்து வந்த போதிலும் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரங்களையடுத்து அக்குடும்பங்கள் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திலுள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் இது தொடர்பாக அவர் முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். "வேளாண்மை, மீன் பிடி, சேனைப் பயிர்ச்செய்கை, கால் நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செ…
-
- 1 reply
- 712 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தொடர் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய சண்டையில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 295 views
-
-
போர் நிறுத்தம் செய்ய இலங்கை மறுப்பு IMF இன் நிதியை தாமதப்படுத்த பிரித்தானியா பிரான்ஸ் கோரிக்கை : உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை எனவும் தற்போது போர் நிறுத்தம் மேற்கொண்டால், அது புலிகள் மீண்டும் பலம் பெற மாத்திரமே உதவும், அத்துடன் பிரபாகரன் தப்பிச் செல்லவும் உதவும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதால், சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் மூலம் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை தாமதப்படுத்துமாறு பிரித்தானியாவும் பிரான்சும் கோரியுள்ளன. இதேவேளை அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளரிடம் ஹிலாரி கிளிட்டனிடம், தமது இலங்கை பயணம் குறித்து, பிரித்தானி…
-
- 4 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டுள்ளன. இம்முறியடிப்புத்தாக்குதலில
-
- 0 replies
- 855 views
-
-
அனைத்துலக ரீதியாக ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாகத் தனது கவலையைத் தெரியப்படுத்திய அமெரிக்காவின் அரச தலைவர் பராக் ஒபாமா, சிறிலங்காவில் ஒருவருட காலத்துக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்தின் பரிதாபகரமான நிலை தொடர்பாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கையின் மிகப்பெரும் விவசாய பூமியான வன்னிப் பெருநிலப்பரப்பின் வயல்களில் கடுமையாக உழைத்து ஊருக்கும், நாட்டுக்கும் அரிசி வழங்கி வந்த விவசாயக் குடிமக்கள் இன்று ஒரு வேளை சோற்றுக்குக் கையேந்தும் நிலையில் வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் அபயம் தேடியுள்ளனர். ஊசலாடும் உயிரைத் தவிர அனைத்தையும் முழுவதுமாக இழந்து ஏதிலிகளாக்கப்பட்டிருக்கும் இந்த மக்களின் பூர்வீக விவசாயப் பாரம்பரியம் தெரிந்தவர்களுக்கு, இவர்களது இன்றைய நிலைமை எவ்வளவு துயரமானது என்பது புரியும். எப்போதுமே பல மாதங்களுக்குத் தேவையான நெல் மூட்டைகளை வீடுகளில் குவித்து வைத்து, அயலவர்களுக்கும், சொந்தங்களுக்கும் வேண்டியளவு வழங்கி வளமாக வாழ்ந்து வந்த இவர்கள், இப்போது ஒரு சோற்றுப் பார்சலுக்குக் கையேந்தும் நிர்ப்ப…
-
- 0 replies
- 984 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 412 views
-
-
பிரசுரித்த திகதி : 02 May 2009 இன்று காலை வழமையாக இயங்கிக்கொண்டிருந்த முல்லைத்தீவு வைத்தியசாலை மீது 9.00 மணியளவில் ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்ததாகவும் இதில் 23 நோயாளிகள் இறந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் வன்னியில் இருந்து டாக்டர் சத்தியமூர்த்தி அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில் கடந்த வியாழன் அன்று இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்ததையும் நினைவுபடுத்தினார். அத்துடன் முல்லைத்தீவு வைத்தியசாலை திரும்பவும் காலை 10.30 மணிக்கு மீண்டும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கும் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள் இருப்பினும் வைத்தியசாலை தமது சேவைகளை இடை நிறுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார். எந்த வகையான இடர் வரினும் அங்குள்ள மருத…
-
- 0 replies
- 596 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் கண்மூடித்தனமான தமிழ் இன அழிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் அனைத்துலக சமூகம் உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரான சிட்னியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் 1,500-க்கும் அதிகமான தமிழர்கள் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
உலகெங்கிலும் செய்தியாளர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். உலக பத்திரிகை சுதந்திர தினமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவும் இவ்வருடம் கொண்டாடப்படும் நிலையில், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சகலவித முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து சமுதாயங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். உலக பத்திரிகை சுதந்திர தினம், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. நாளை 16ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படும் இத்தினத்தையொட்டி…
-
- 1 reply
- 653 views
-
-
இலங்கைத் தமிழர் நிலை குறித்து எங்களுக்கு இருக்கும் கவலைகளை எல்லாம் போக்குகின்ற வகையில் - ஆக்கபூர்வமாக - துணிச்சலாக - பகிரங்கமாக - அச்சம் இன்றி - ஞானத்தோடு நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று எனக்கு உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் பெருமிதம் வெளிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 329 views
-
-
தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்த பிரசாரம் - பாரதிராஜா சனிக்கிழமை, மே 2, 2009, 11:09 [iST] சென்னை: தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்துவோம். இதை மையமாக வைத்து தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார். சென்ன போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா. அப்போது அவர் கூறுகையில், திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத் துறையிலிருந்து இ…
-
- 0 replies
- 985 views
-
-
இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவியை நிதியாக எதிர்பார்க்கும் சிறிலங்கா, பொருளாக வழங்க முனையும் உலகம் திகதி: 02.05.2009 // தமிழீழம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன. இம்முறை பல நாடுகள் சிறிலங்காவிடம் நிதியாக வழங்காமல் சர்வதேச தொண்டர் அமைபப்புக்கள் ஊடாக பொருட்களை வழங்க முனைந்துள்ளதை காணமுடிகின்றது. நோர்வே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் ஊடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நோர்வே உயர் ஸ்தானிகராயப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்படின் மேலும் உதவிகள் வழங்கப்படும்…
-
- 0 replies
- 444 views
-
-
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் கோவை வழியாக கொச்சி துறைமுகம் மூலம் சிறிலங்காவுக்கு 80 பாரஊர்திகளில் ஆயுதங்கள் அனுப்பப்படுவதாகப் பரவிய செய்திகளையடுத்து கோவை அருகே நீலம்பூர் என்ற இடத்தில் இந்தியப் படையினருக்குச் சொந்தமான 5 பார ஊர்திகளை பொதுமக்களும், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் முற்றுகையிட்டுத் தாக்கினார்கள். ஆனால், ஆயுதங்கள் எதுவும் கடத்தப்படவில்லை என படை விளக்கமளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 331 views
-
-
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் கோவை வழியாக கொச்சி துறைமுகம் மூலம் சிறிலங்காவுக்கு 80 பாரஊர்திகளில் ஆயுதங்கள் அனுப்பப்படுவதாகப் பரவிய செய்திகளையடுத்து கோவை அருகே நீலம்பூர் என்ற இடத்தில் இந்திய போர்ப் படையினருக்குச் சொந்தமான 5 பார ஊர்திகளை பொதுமக்களும், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் முற்றுகையிட்டுத் தாக்கினார்கள். ஆனால், ஆயுதங்கள் எதுவும் கடத்தப்படவில்லை என இந்தியப் படை விளக்கமளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 412 views
-
-
"எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
மனிதநேய உதவிகளுக்கும் அப்பால் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை கூடிய விரைவில் மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக கண்ணிவெடி அகற்றும் குழுவினரை இந்தியா விரைவில் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. கடந்த வருடம் மீட்கப்பட்ட மன்னார் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பத
-
- 0 replies
- 707 views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பொதுமக்களது நலன்புரி சேவைகளுக்காக நோர்வே அராசங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் உதவிகளை வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தவிர கூடாரங்கள் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் நோர்வே அரசாங்கம் வடபகுதி இடம்பெயர் மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ்வின்
-
- 1 reply
- 662 views
-
-
பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் இன்னும் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாவதாக நான் அறிகிறேன். எனவே, அவர்கள் அனைவரையும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அத்துடன் அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு: துரதிஷ்டவசமாக பாதுகாப்பு வலயத்தில் இன்னும் விடுதலைப் புலிகளால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள், அதிக கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக நான் அறிகிறேன். விடுதலைப் புலிகள் தங்கள் சொந்தப் பாதுகாப்புக் கருதி, அப்பாவிப் பொதுமக்களாகிய உங்களை மனிதக் …
-
- 0 replies
- 529 views
-
-
ஜ.நா அமைப்பின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு முடிவு பிரசுரித்த திகதி : 01 May 2009 ஜ.நா செய்மதியூடாக முல்லைத்தீவை சுமார் ஒரு மாதகாலம் புகைப்படம் எடுத்திருந்தது அது இன்டர்சிட்டி பிரஸ் மூலமாக கசிந்த செய்திகளை முதன் முதலாக தமிழில் அதிர்வு இணையத்தளம் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ஏனைய தமிழ் ஊடகங்களும் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், தமிழ் நெட் இணையத்தளமும் ஆங்கிலத்தில் இச் செய்தியை பிரசுரித்தது. பாதுகாப்பு வலயத்தில் தாம் தாக்குதல் நடத்தவில்லை என கூறிவந்த இலங்கை அரசாங்கத்தை இச் செய்தி பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளதால் இலங்கை அரசு கடும் விசனமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜ.நா வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
யுத்த வலயத்தில் சுதந்திரமாக தொண்டு நிறுவனங்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் தெரிவித்துள்ளார். யுத்த சூன்ய பிரதேசம் மற்றும் அகதி முகாம்களில் சென்று சேவையாற்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொண்டு நிறுவனங்கள் குறித்து ஏற்கனவே இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொண்டு நிறுவனங்களை அனுமதிக்குமாறு இந்திய முதல் தடவையாக உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அகதிகளுக்கு 40000 நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்வின்
-
- 0 replies
- 564 views
-
-
சர்வதேச நாடுகளினால் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் வகையில் ராஜ்தந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்கள் அந்நாடுகளினது உயர் இராஜதந்திரிகளுடன் இலங்கையின் நன்மதிப்பை கூட்டக் கூடிய வகையில் பிரச்சாரங்களை முன்னெப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொஹனே தெரிவித்துள்ளார். வேறும் நாடுகளது தூதுவராலயங்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி இலங்கை நிலவரங்களை விளக்கும் விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி உரையாடல்களை ஏற்படுத்தி இலங்கை நிலவரத்தை தெளிவுபடுத்தத் திட்ட…
-
- 0 replies
- 528 views
-
-
தமிழீழத்தின் வன்னி மன்ணில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு மிக அண்மையில் கைதுசெய்யப்பட்ட (பயணக் கைதிகளை விடுவித்ததாக சிறீலங்கா சிங்கள அரசும் இந்திய சோனியா காங்கிரஸ் அரசும் சொல்லிக் கொண்டன) தமிழ் மக்களில் சுமார் 3000 வரையான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளனர் என்று சிறீலங்காவின் சிங்கள எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவை ஆளும் சிங்கள ராஜபக்ச அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார். இது சிங்களவர்கள் தமக்கிடையே சொன்ன செய்தி மட்டுமே ஆகும். இதற்குள் உருமறைப்புச் செய்யப்பட்ட விடயங்களும் எண்ணிக்கைகளும் அடங்கும்..! அந்த வகையில் சிங்களப் படைகளிடம் சிக்கிய தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போகடிக்கப்…
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்த சுவீடன் Posted by Renu on Friday, May 1, 2009, 18:10 | 50 Views | T இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கத்தினால் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆரம்பத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு விஸா வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள போதிலும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட் வி…
-
- 6 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் மீட்கும் படையினரின் பிரயத்தனத்தில் இப்போது புலிகளின் தாக்குதல் வியூகங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக GTN னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த சில தினங்களாக கடல் மற்றும் தரைவழி தரையிறக்கம் மற்றும் முன்நகர்வுகளை தடுப்பதில் புலிகளின் தற்கொலை அணிகளே களமிறக்கப்பட்டுள்ளன. குறைந்த உறப்பினர்களின் இழப்புடன் படையினருக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணுதல் மற்றும் படையினரின் மனவலிமையைச் சிதைப்பது என்ற உத்திகளை விடுதலைப் புலிகள் அதிகமாக கையாளத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த இரு நாட்களுக்கு முன்பாக 7 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் படை நகர்வு பின்னடைவைச் சந்தித்ததாகத் தெரிய வர…
-
- 8 replies
- 3k views
-