ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142921 topics in this forum
-
27/04/2009, 21:13 [ வன்னியன்] சிறிலங்காவின் சர்வதேசத்தை ஏமாற்றும் வித்தை சிறிலங்கா அரசு வெளியிடுகின்ற தகவல்களை அப்படியே உள்வாங்கி அறிக்கைகளை வெளியிடுவது இப்போது சர்வதேசத்திற்கு ஒரு வழக்கமாகிவிட்டது. அதன், நம்பக்தன்மை குறித்தோ, அதன் உறுதிப்பாடு குறித்தோ எந்தவித ஆராய்வினையும் மேற்கொள்ளாமல் உடனடியாகவே வரவேற்று அறிக்கை வெளியிடுவதென்பது இப்போது இயல்பாக அமைந்துவிட்டது. அந்தவகையில் சிறிலங்கா இன்று வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன. விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று உடனடியாகவே மறுத்திருந்த சிறிலங்கா, சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாக இன்று புதிய அறிவிப்பொன…
-
- 1 reply
- 903 views
-
-
துரோகக் குற்றச்சாற்றும் பழியும் மறுக்க முடியாத உண்மையாகிவிடும் என்பதால் கருணாநிதி திடீரென்று அண்ணா சதுக்கத்தில் உண்ணாவிரதம் எனும் மோசடி நாடகத்தை நடத்தியுள்ளார் என்று குற்றம்சாற்றியுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, கல்லறைக்குள் இருக்கும் அறிஞர் அண்ணா கருணாநிதியின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். ஊஐகஉ இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் எச்சரித்ததாலும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டித்ததாலும் கிழக்கு தைமூரிலும் கொசோவாவிலும் தலையிட்டதைப்போல இலங்கையிலும் சர்வதேச நாடு…
-
- 0 replies
- 956 views
-
-
எல்லாம் முடிந்தது, என்று இலங்கை அரசு அறிவித்து கொக்கரித்து கொண்டிருக்கும் நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறார். முறைப்படி அனுமதி பெறாமல் எல்லா ஊர்களிலும் தி.மு.க.வினர் திடீர் உண்ணாவிரதம் மேற் கொண்டிருக்கிறார். சாலை மறியல்களும் நடத்தப்படுகிறது. பேருந்துகள் மறித்து நிறுத்தப்படுகின்றன, தேர்தல் முடிவுகள் எப்படி அமையப்போகிறது என்பதை முன் கூட்டியே உணர்ந்து மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த திடீர் போராட்டம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இது காலம் கடந்த நடவடிக்கை. 3 மாதத்திற்கு முன்பாவது போரை நிறுத்தி இருந்தால் ஒரு வேளை பல்லாயிரம் ஈழத் தமிழர்களின் உயிரை காப்பாற்றியிருக்க முடியு…
-
- 0 replies
- 655 views
-
-
முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக ஓர் தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. ஆனால் இலங்கையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ள பழ.நெடுமாறன், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக கருணாநிதி திட்டமிட்டு நடத்திய இந்த நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்பது போன்ற ஓர் தவறான தோற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்ட முயற்சி நடைபெற்று வருகிறது. உலக …
-
- 0 replies
- 1.1k views
-
-
மீதமுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது. வான், கடற்படை மற்றும் தரைப்படை என்பனவற்றை தாக்குதலில் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களையும் முன் நகர்த்தி பாரிய அழிவினை ஏற்படுத்த இலங்கை அரசு முனைகிறது. கடும் முறியடிப்புச் சமரில் விடுத்லைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் ஊடாக இராணுவத்தினரை தரையிறக்கி தாக்குதலை நடத்த இராணுவம் திட்டமிட்டிருந்ததாகவும். பல படகுகளில் இராணுவத்தினர் தரையிறக்கத்துக்காக காத்திருந்த வேளை புலிகளின் RPG தாக்குதல் பிரிவு நடத்திய தாக்குதலில் பல படகுகள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது. வட்டுவாகல் பகுதியில…
-
- 2 replies
- 2.5k views
-
-
வன்னியில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடயங்களில் இருந்து இடம்பெயர்வது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் ரொபேட் வூட் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், யுத்த சூனிய வலையத்தினுள் குண்டுத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களின் அவலங்களும் அதிகரித்து செல்வதாக நம்பகமான தகவல்கள் எமக்கு நாளாந்தம் கிடைத்துவருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தை யுத்த சூனியப்பிரதேசத்தினுள் மக்களின் நலன்கருதி குண்டுத்தாக்கதல்களை மேற்கொள்ளவேண்டாம் என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிக்கின்றோம். அதேவேளை பொதுமக்களை யுத்தசூனியப்பிரதேசத்தில் இருந்து வெளி…
-
- 9 replies
- 3k views
-
-
வன்னியின் மனித பேரவலமும் நீதி தவறிப்போன ஐ.நா சபையும் [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 01:25.35 PM GMT +05:30 ] சுதந்திரமான ஊடகவியலாளர்களோ அல்லது கண்காணிப்பளர்களோ அற்ற நிலையில் வன்னியில் ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலம் உலகின் கண்கணில் அதிகம் தெரிவதில்லை என்பது மிகவும் வேதனையானது. இலங்கை அரசாங்கத்தின் பிரசாரங்களை அனைத்துலகமும், அனைத்துலக ஊடகங்களும் நம்ப முற்படுவதுடன், இந்தப் பேரவலத்தை நிறுத்துவதற்கும் அவர்கள் முன்வரவில்லை. இருந்தபோதும் அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் சிறு சிறு அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், எதிர்வரும் 29 ஆம் திகதி ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தினை முறியடிக்கவும் இலங்கை அரசாங்கம் தனது தாக்குதலை தீவிரப…
-
- 1 reply
- 804 views
-
-
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1091390
-
- 12 replies
- 2.7k views
-
-
அன்பான எம் தமிழ் உறவுகளே...!!! தமிழ் ஊடகங்களே..!!! சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்கும் தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். உண்மையான தியாகத்தை புரிந்து தீயில் சங்கமமான முத்துக்குமார் போன்ற சகோதரர்களின் உணர்வுகளின் முன் இந்த அரசியல் கோமாளிகளின் அற்பத்தனமான செயல்கள் ஈழத்தமிழனையும் விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்றன. தேர்தல் வெற்றி ஒன்றே குறியாக கொண்ட இந்த கபட நரிகளின் பசப்பு வார்த்தைகளை இனியும் நம்ப ஈழத்தமிழன் எவனும் கேணையர்கள் இல்லை. ஈழத்தமிழனுக்கும் ஆதரவு என்ற மாயையை தமிழக மக்களிடம் ஏற்படுத்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை:இலங்கை அரசு அதிரடி போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அறிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாணயக்கார, இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்ல என்று விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி .........நக்கீரன் ஒருவேளை…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரித்தானிய ,பிரான்ஸ் , சுவிடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை செல்ல உள்ளனர் பிரித்தானியா பிரதமர் அலுவலகம் : பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் க்விச்னர் மற்றும் சுவிடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் ஆகியோர் எதிர்வரும் புதன் கிழமை இலங்கை செல்ல உள்ளதாக பிரித்தானியா பிரதமர் கோடன் பிரவுணின் லண்டன் டௌனிங் வீதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் நடுநிலை முனைப்புகளை மேற்கொள்வதற்காக இவர்கள் அங்கு செல்ல உள்ளனர். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் உரையாடியுள்ள பிரித்தானிய பிரதமர் போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக …
-
- 0 replies
- 649 views
-
-
சர்வதேச சமூகத்தை சிறீலங்காவும் தமிழக மக்களை சோனியா - கருணாநிதி கூட்டணியும் ஏமாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்ட கனரக ஆயுதங்களை, போர் விமானங்களை தாக்குதல் அற்ற வலயத்தில் பாவிப்பதில்லை என்ற சிறீலங்கா சிங்கள அரசின் அறிவிப்பை போர்க்களத்தில் எந்தக் கண்காணிப்பாளர்களும் இல்லாத நிலையில் தானே மீறி வருகிறது. சோனியா, மகிந்த ராஜபக்சவிடம் தனது தூதர்கள் மூலம் பேசி விட்டு கருணாநிதிக்கு தொலைபேசியில் செய்தி அனுப்பியதும் அவர் உண்ணாவிரதம் இருப்பார். பின்னர் ராஜபக்ச முன்னேறித் தாக்குதல் நிறுத்தம்... கனரக ஆயுதப் பாவனை நிறுத்தம் என்று போலி அறிக்கைகளை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்குவார். அவை சர்வதேச அரங்கில் சுற்றிச் சுழன்றடித்து ஏற்படுத்தும் பரபரப்பு அடங்குவதற்கிடையில் சிங்கள இராணுவம் தமிழர்களைக…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7482
-
- 23 replies
- 3.3k views
-
-
http://www.independent.co.uk/news/world/as...ed-1674753.html
-
- 1 reply
- 904 views
-
-
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதிமொழி தந்ததையடுத்து தனது போராட்டத்தை பிற்பகலில் கருணாநிதி முடித்துக் கொண்டார். முன்னதாக அவர் உண்ணாவிரதம் அமர்ந்ததால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட கருணாநிதி, வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு உத்தரவிட்டார். அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனத…
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஜபக்சேவை பாராட்டிய வக்கீல்-சக வக்கீல்கள் தர்ம அடி திங்கள்கிழமை, ஏப்ரல் 27, 2009, 16:52 [iST] பெற மக்களவைத் தேர்தல்-2009 சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் நடத்திய போராட்டத்தின்போது, ராஜபக்சேவை பாராட்டிப் பேசிய வக்கீலுக்கு தர்ம அடி கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ரஜினிகாந்த் என்பவர் தலைமையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அழுகிய முட்டைகளால் அபிஷேகம் நடந்ததும் அடி, உதை விழுந்ததும் அதன் பிறகு நடந்த அமளி, துமளியும் நாடறிந்தது. இந் நிலையில் ரஜினிகாந்த் தலைமையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். ஒவ்வொரு வக்கீலாக பேசிக் கொண்டிருந்தனர். சிவானந்தம் என்ற வக்கீல் …
-
- 5 replies
- 2.1k views
-
-
தே.பா.சட்டதில் இருந்து கொளத்தூர் மணி விடுதலை பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார். நன்றி:நக்கீரன்
-
- 3 replies
- 949 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை: சிதம்பரத்துக்கு ராஜா கண்டனம் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்துவிட்டதாக சிதம்பரம் அறிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்டுள்ள தகவல். இலங்கை அரசு முமுமையாக போரை நிறுத்திவிடவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள். தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதாக இலங்கை அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றுதான் கூறியிருக்கிறது. சிதம்பரம் இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் விதத்தில் பேச கூடாது. இலங்கை அரசின் அறிவிப்பை போர் நிறுத்தம் என மிகைப்படுத்தி சொல்லக் கூடாது என்றார். நன்றி ...........நக்கீரன் …
-
- 2 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, 27, ஏப்ரல் 2009 (16:2 IST) தேவையில்லாமல் தலையிட வேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்துக்கு ராஜபக்சே தம்பி கண்டனம் இலங்கை அதிபர் ராஜ பக்சேவின் தம்பியும், பாதுகாப்பு துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே கூறியதாவது: அமெரிக்கா, இங்கி லாந்து ஆகிய நாடுகள் தேவை இல்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிடுகின்றன. விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதே அரசின் முக்கிய நோக்கம். அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளின் நிலைப்பாடுகளை ஏற்று எங்களால் செயல்பட முடியாது. அவர்களின் கோரிக்கையையும் ஏற்க முடியாது. எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்து கொள்கிறோம். இந்த பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் அனாவசிய தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். நக்கீரன்
-
- 1 reply
- 1.3k views
-
-
ரத்தம்கசியும் இதயத்துடன் சொல்கிறேன்--------: ஒபாமாவுக்கு வைகோ கடிதம் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வைகோ அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு: பெறுநர்: மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்கள், அமெரிக்க குடியரசுத் தலைவர், வெள்ளை மாளிகை, வாசிங்ரன். அமெரிக்க குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம். இந்தியாவிலும், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்து கோடி தமிழர்கள் சார்பிலும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச இ…
-
- 0 replies
- 709 views
-
-
போர்ப் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆபத்தான நிலைமையில் இருப்பதால், விடுதலைப் புலிகளுடனான போரில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தம்முடைய உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இன்று வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
வீரகேசரி இணையம் 4/27/2009 2:22:43 PM - யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 2 replies
- 1.1k views
-
-
இராணுவம் மேற்கொள்ளும் பாரிய தாக்கியழிக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், ஆபத்தான நிலைமையிலுள்ள மக்கள் போர்ப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு வசதியாக உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும், ராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிச் செயலக இயக்குநர் புலிதேவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று பிற்பகல் 12.50 மணியளவில் (போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த நேரம் 12.30 மணி) முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் க…
-
- 0 replies
- 825 views
-
-
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். உண்ணாவிரத்தை கைவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலைஞரிடம் டெலிபோனில் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையில் இன்று அவசர கூட்டம் கூடவுள்ளது. இதில் போர் நிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7496 முன்னமே எடுக்கப்பட்ட முடிவுக்கு என்னத்துக்கு ஒரு கலந்தாலோசனை
-
- 9 replies
- 2k views
-