ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை இன்று வியாழக்கிழமை அவசரமாக புதுடில்லிக்கு அழைத்துள்ள இந்திய அரசாங்கம், வன்னி நிலைமைகள் தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனைகளை நடத்தியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலை தொடர்பாக ஆராய்வதற்கு சிறிலங்காவுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்த போதும் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாக நம்பியார் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது அங்கு பலத்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
தாயகத்தில் தமிழ் உறவுகளுக்கு எதிராக உச்சத்ததை அடைந்துள்ள உக்கிரமான மனிதப் பேரவலத்தை நிறுத்த உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் இன்று மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐ.நாவிற்கு உரிமையில்லை: இலங்கை அரசாங்கம் [ வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கு எவ்வித உரிமையும் இல்லை என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் பிரித்தானிய காலனித்துவத்திற்கு அடிமைப்பட்ட ஓர் நாடு அல்ல எனவும், இறையாண்மையுடைய ஓர் நாடு எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரித்தானிய பிரதிநிதி டெஸ் பிரவுன் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதி அலவென்தோ வுல்ப் உள்ளிட்டோருக்கு இடையில் மூடிய கதவு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளமை தொடர்பாகவே…
-
- 2 replies
- 930 views
-
-
மக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும்: நியூசிலாந்து [ வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களினது பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கம் பேர் நிறுத்தமொன்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்யூலி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் செவி சாய்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த சூனிய பிரத…
-
- 0 replies
- 646 views
-
-
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 22 தமிழர்கள் நீர்கொழும்பில் கைது [ வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] சட்டவிரோதமான முறையில் நீர்கொழும்பு கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 22 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல ஒருவரிடம் தலா ஐந்து லட்சம் ரூபா அறவிடப்பட்டுள்ளது.காவற்துறை உயரதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடன் இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவம் இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்த இரண்டு விசேட காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்…
-
- 0 replies
- 497 views
-
-
பசில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் [ வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் தீவிர எதிர்ப்பலை கிளம்பியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பசில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் எனவும், அவரது விஜயம் குறித்த இறுதித் திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மனிதாபிமான நிலவரம் மற்றும் யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்களது பாதுகாப்பு குறித்து இந்த சந்திப்பில் முக…
-
- 2 replies
- 559 views
-
-
பெருமளவிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கி இடம் பெயர்ந்து [பிரித்தானிய நேரம் : April 22nd, 2009 at 21:06] இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மாறாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நகர்கின்றதாக அறியப்படகின்றது. வலைஞர்மடத்தில் தங்கியிருந்த மக்கள் இப்பொழுது முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பிரிவின் பேச்சாளர் இளம்பருதி தெரிவிக்கையில் இன்னும் 200,000 மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதாகக் கூறியுள்ளார். அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அவசரக்கூட்டம் ஒன்றை தனது மந்திரிகளுடனும் அதிகாரிகளுடனும் கூட்டி இலங…
-
- 0 replies
- 1.4k views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டனுடன் இணைந்து நிவாரண பணியாற்ற பிரான்ஸ் முயற்சி திகதி: 23.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டனுடன் இணைந்து கூட்டாக நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க நாம் முயற்சிக்கின்றோம் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் வானொலிப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டுடன் கலந்தாராய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில் கடந்த இருநாட்களில் 60 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறி இருப்பதாக நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. நிவாரணப்…
-
- 0 replies
- 555 views
-
-
தமிழர் தாயகத்தில் உடனடிப் போர் நிறுத்தம், அங்கே அல்லற்படும் மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்ரல் 13 ஆம் நாள் தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்த சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாநிலைப் போராட்டம் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று முற்பகல் 11:30 நிமிடத்துக்கு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 308 views
-
-
தயவு செய்து கை ஒப்பம் இடுங்கள்..... குறைந்தது இருபத்தைந்து ஆயிரம் கை ஒப்பம் தேவை........ http://www.PetitionOnline.com/oguav96/ நன்றி; ஈழமகான்
-
- 1 reply
- 1.3k views
-
-
நவசமசமாயக் கட்சியை தமிழர் நாம் ஆதரிப்போம்: தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ் திகதி: 23.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] இலங்கையில் பேரினவாதத்திற்கு எதிராக பல இன்னல்களுக்கு இடையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பல ஆண்டுகாலமாக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பவர்கள் கலாநிதி விக்ரமபாகு கருணரட்னவின் நவ சமசமாயக்கட்சி (N.S.S.P) யினர். இவர்கள் பல ஆண்டுகளாக அனைத்து இடதுசாரிக் கட்சிகளையும் இணைத்து தமிழர்களுக்கு தாயகவுரிமை உண்டென்று வலியுருத்தி வருகின்றனர். எதிர்வரும் தேர்தலில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் அனைவரும் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமையை வலியுறுத்தும் அரசியல் கட்சியான நவசம சமாயக் கட்சியின் வேட்பாளருக்கு தங்கள் வாக்குகளை அழித்து ஆதரவு வழங்கும்படி புலம்பெயர்வாழ…
-
- 1 reply
- 696 views
-
-
ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு வீரகேசரி நாளேடு 4/22/2009 9:19:48 AM - மனித அழிவுகளும் அவலங்களும் இல்லாத ஒரு சமாதான தேசத்தை உருவாக்கவும், அமைதி, அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்பனவற்றை எமது மக்கள் நடைமுறையில் அனுபவித்து மகிழ உதவ வேண்டும் என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இன ரீதியாகவும், கல்வி மற்றும் வறுமை ரீதியாகவும் உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கி அவற்றை உறுதிப்படுத்தும் முகமாக சுவிஸ் ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருக…
-
- 4 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 287 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் கியூடெக் கரித்தாஸ் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை வசந்தசீலன் அடிகளார் உட்பட 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 87 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் கியூடெக் கரித்தாஸ் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை வசந்தசீலன் அடிகளார் உட்பட 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
வீரகேசரி நாளேடு - பயங்கரவாதத்தை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஒருசில மணித்தியாலங்களே இருக்கின்றன. இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்ப்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்க்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம் நடத்த எமக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்துறை மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், அதிகாரிகளுடனான சந்திப்பு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சிறிய பிரதேசத்திற்குள் எமத…
-
- 7 replies
- 1.5k views
-
-
மனிதாபிமானச் சேவைகளுக்கும் அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்குமான மிகப்பெரிய தேவை ஒன்று அங்கு (இலங்கையில்) இருக்கின்றது. இனப் பிரச்சனைக்குப் பொருத்தமான - சரியான - தீர்வு காணப்பட வேண்டும் எனில் - அதற்கான கலந்துரையாடல்களில் போரிடுபவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் ஹிலறி கிளின்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 591 views
-
-
சென்னை, ஏப். 22: இலங்கைப் பிரச்னையில் இந்தியா மாபெரும் தவறிழைத்து விட்டது என்று "வாழும் கலை அமைப்பின்' நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு, அந்நாட்டு அரசு வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் அமைத்துக் கொடுத்த முகாம்களில் வசிக்கும் மக்களைச் சந்தித்தேன். அவர்களுக்குத் துணிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினேன். மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் அங்கு போக வேண்டும். மனிதனாகப் போக முடியாது. அரசியல்வாதிகள் சுயநலத்துடன் செயல்படுகின்றனர். அவர்கள் ஈழத்தமிழர்களை கைவிட்டுவிட்டார்கள். ஆனால், ஆன்மிகவாதிகள் அவர்களைக் கைவிடவில்லை. கைவிட்டுவிட்ட இந்தியா: இந்தியா தங்களை கைவிட்டுவிட்டதாக ஈழத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
வன்னியில் உள்ள தமிழ்மக்களை காப்பாற்றுவதற்கான கோரிக்கைககள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்பாக உயிர்விடுவதை தவிர வேறு வழியில்லை என்று சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஜேர்மனியில் முன்னெடுக்கப்பட்டுவந்த உண்ணாநிலைப் போராட்டம் அங்குள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகள் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 305 views
-
-
அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்! என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம். ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே ஒலிவாங்கியை பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள். இயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். ”ஈழத்துக்காக நாங்கள் புதிதாகக் குரல் கொடுக்கவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து எங்களைத் தொடர்புகொண்ட …
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் சிறிலங்கா படையினரின் அதிகளவிலான கடற்படை படகுகள் இன்று வியாழக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து மருத்துவமனையில் மருத்துவத்திற்குச் சேர்த்துள்ளனர். காலை நேரத்தில் தங்களை கைது செய்ய வந்த காவல்துறையினருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்கள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் மருந்துகள் ஏதுமின்றி மணித்தியாலத்திற்கு ஒருவர் என உயிரிழக்கும் அவலநிலை நிலவுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 304 views
-
-
நாசமா போன நம்பியாரின் கதையை கேட்டு ஐநா பாதுகாப்பு சபை புலிகளை ஆயுதத்தை வைத்து விட்டு சரணடயட்டாம்;மக்களே பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள். நாங்கள் பயங்கரவதியாம்; சகலரும் உடனடியாக கவன ஈர்ப்பினை உச்சகட்டமாக முன்னெடுங்கள்; அல்லது ஸ்ரீ லங்கா இனவெறி அரசு தலைவிரித்து ஆடபோகிறது. இன்னும் பல்லாயிரம் மக்களை நாம் பலிகொடுக்க வேண்டிவரும். எங்கள் பலமே எமக்கு உதவி. உலகிலே வாழ் எட்டு கோடி தமிழரும் எங்கள் பலம் என்ன என்பதை உலகிற்கு கட்டும் நேரம் வந்துவிட்டது. சர்வதேசமே எட்டு கோடி மக்களையும் நீதான் பயங்கரவாதியாக மாற்றி கொண்டிருக்கிறாய். உலக தமிழினமே வாழின் மனத்துடன் வாழ்வோம் இல்லை மறவரை மாள்வோம் இந்த கன்றாவியையும் ஒருக்கா கேளுங்கோ
-
- 4 replies
- 2k views
-
-
Singhalese write their comments. http://www.guardian.co.uk/commentisfree/20...t?commentpage=1
-
- 2 replies
- 827 views
-