Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் பலி! யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் மயிலிட்டியை சேர்ந்த 35 வயதுடைய வசந்த் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி, வீதியில் விழுந்தவேளை, அதே வீதியில் வந்த கொண்டிருந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் யூடியூப் தளமொன்றில் தன் நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த திறமையான ஒரு கலைஞன் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரி…

  2. தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக செல்வம் எம்.பி பொலிஸில் முறைப்பாடு! தமக்கு வெளிநாட்டில் இருந்து உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காவல்துறையில் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு, யாழ்ப்பாண காவல்துறையின் கணினிக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தாம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தினார். இதேவேளை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்று…

  3. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை(5) புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ள…

  4. வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் adminNovember 3, 2025 வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை, இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைக் காரியாலம் இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது அரசியல் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக அல்லது அதனுடைய வகிபா…

  5. 04 Nov, 2025 | 09:36 AM வட்ஸ்அப் வழியாக பணம் கோருவது தொடர்பான முறைபாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுபோன்ற முறைபாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ. ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/229431

  6. 03 Nov, 2025 | 05:34 PM சமூக ஊடக செயற்பாட்டாளரும், யூடியூபரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான சாலிய டி.ரணவக்க (Saliya Ranawaka) தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் போல் நடித்து மக்களை ஏமாற்றியதாக அவரது I4 பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்றவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஜீப் வாகனத்தில் பயணம் செய்யும் நேரடி காணொளி வெளியிட்டுள்ளார், அதில் அரசியல் காரணங்களுக்காக தான் கைது செய்யப்பட்டதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. 'சிங்கள' அமைப்பின் முன்னாள் செயற்பாட்டா…

  7. பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவி…

  8. செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ? செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணி ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டதில் அது 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியை இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழியில் இருந்து காலணி ஒன்று மீட்கப்பட்டது. அதில் 39ரூபாய் 90 சதம் என விலை காணப்பட்டது. அதன் அடிப்படையில் குறித்த காலணி நிறுவனத்திடம் மேற்கொள்ளபட்ட விசராணையில் அக்காலணி 1985ஆம் ஆண்டு – 1995ஆம் ஆண்டு கால பகுதியில் சந்தையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டத…

  9. 03 Nov, 2025 | 02:59 PM செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய கு…

  10. அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது. எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த 31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451865

  11. யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு! செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞானந்த தேரர் தெரிவித்தார். கடந்த 01.11.2025 அன்று யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது எனவும் பயங்க…

  12. 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது! 03 Nov, 2025 | 03:25 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (01) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் இரண்டு டிங்கி படகுகளுடன் கைதசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைக…

  13. 03 Nov, 2025 | 04:27 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு க…

  14. 03 Nov, 2025 | 06:00 PM மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் ஞாயிற்றுக்கிழமை (2) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார். பொலிஸ் குழு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதன்போது 34 வயதுடைய பிரபல வர்த்தகரிடமிருந்து 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர், அந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின், அங்கிருந்த பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து, கைது செய்யப்பட்டவரை அழைத்துச்செல்ல விடாமல், பொலிஸாரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அ…

  15. Published By: Digital Desk 3 31 Oct, 2025 | 11:42 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் , இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர். அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து, நிர்வாகத்தினர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதனை அடுத்…

  16. கிளிநொச்சயில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நி…

  17. போதைப்பொருள் வியாபாரிகள் , பாவனையாளர்களால் அல்லப்படும் திருநெல்வேலிச் சந்தை adminNovember 3, 2025 யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் போதைப்பொருள் பாவனையாளர்களால் சந்தைக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது திருநெல்வேலி சந்தையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை , சந்தைக்குள் சனநெருக்கடி மிகுந்த நேரம் இளைஞன் ஒருவர் கடும் போதையில் தனது ஆடைகளை களைந்து , சந்தை வியாபரிகள் மற்றும் மக்களுடன் தகாத வார்த்தைகளால் பேசி வம்பிழுத்துக்கொண்டும் , வியாபாரங்களும் இடையூறு விளைவித்த வண்ணம் இருந்துள்ளார். அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற…

  18. பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது! பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் பிக்கு ஒருவரை அச்சுறுத்தி, வாய்மொழியாக திட்டிய சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், குறித்த பெண் பிக்குவை வாய்மொழியாக திட்டுவதையும் அச்சுறுத்துவதையும் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலப்பிட்டி பகுதியில் நேற்று (02) இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் 58 மற்றும் 67 வயதுடையவர்கள், அவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் இன்று (03) வெலிசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். …

  19. 01 Nov, 2025 | 04:51 PM ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் வெள்ளவத்தை ரோயல் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்­பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (31) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் வைத்தியர் கீதா ஹரிப்பிரியா ஆகியோரின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. (படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/229242

  20. மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு 02 Nov, 2025 | 04:46 PM மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின் தலைமையகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். மாவீரர் வாரத்தை முன்னிட்டு குறித்த கட்சியை தேசிய அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, கட்சியின் தலைமைச் செயலகத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடை…

  21. தமிழ் - முஸ்லிம் நட்புறவை கட்டி எழுப்புது பற்றி கலந்துரையாடல் 02 Nov, 2025 | 03:01 PM வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்றது. வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக குறித்த கலந்துரையாடலில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல், வடக்கில் இருந்து வெளியேற்ற முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களிடம் நல்லதொரு உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் இரு தரப்பினரும் உறவை வளர்துக்கொள்ள இதய சுத்த…

    • 3 replies
    • 263 views
  22. 31 Oct, 2025 | 04:40 PM திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறத…

  23. Nov 2, 2025 - 08:08 PM வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் (03) கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச் சுட்டியானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhhtfzno01cyqplp5a1j2ogs

  24. சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனந்தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார் ரவிகரன் எம்.பி; நவம்பரில் 304பேருக்கு நியமனம் வழங்கப்படுமென - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதில் Published By: Digital Desk 3 23 Oct, 2025 | 05:34 PM பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 2009, 2010, 2011ஆகிய கல்வியாண்டுகளில் ஆயுர்வேத, சித்த மற்றும், யுனானி ஆகிய சுதேச மருத்துவத்துறைகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் 304பேரை ஆரம்…

  25. மட்டக்களப்பு நெடியகல்மலை பகுதியில் பொலன்னறுவையிலிருந்து வந்து பிக்குமார் விகாகரை அமைத்து வருகின்றார்கள் - ஸ்ரீநேசன் எம்.பி SayanolipavanNovember 2, 2025 தற்போது நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்கள் நேரடியாக எம்மிடம் விடயங்ளைத் தெரிவித்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் அமைந்துள்ளது நெடியகல் மலை எனும் பிரதேசமாகும். அங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பால் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அந்த 15 கிலோமீற்றருக்கு அப்பாலிருப்பது பொலன்னறுவை மாவட்டமாகும். அப்பகுதிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.