ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
காணாமற் போனோர் அலுவலகம் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு! நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இங்கு சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்…
-
- 0 replies
- 290 views
-
-
Published By: RAJEEBAN 10 JUN, 2023 | 09:42 AM விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கான நீண்ட பேட்டியொன்றின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார் அனுபவம் மிக்க அரசியல்வாதியொருவர் சமீபத்தில் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்தார் என்ற கேள்விக்கு என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் என தெரியவில்லை என மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/157383
-
- 3 replies
- 381 views
- 1 follower
-
-
லங்கா பிரிமியர் லீக் தொடருக்கு முழுமையான ஆதரவு – லைக்கா நிறுவன ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரன் உறுதியளிப்பு லைக்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரனை லங்கா பிரிமியர் லீக்கினை ஒழுங்கமைக்கும் IPG குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இந்த ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான தனது முழுமையான ஆதரவை அல்லிராஜா சுபாஸ்கரன் உறுதிப்படுத்தியுள்ளார். அல்லிராஜா சுபாஸ்கரன் கிரிக்கெட் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கிற்கு நிபந்தனையற்ற ஆதரவாளராக இருந்துள்ளார் என்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மகத்தான ஆதரவும் லங்கா பிரீமியர் லீக்கின் வளர்ச்சி…
-
- 14 replies
- 780 views
-
-
Published By: VISHNU 09 JUN, 2023 | 08:03 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரட்சி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு …
-
- 8 replies
- 390 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUN, 2023 | 09:04 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2015 - 2020க்கு இடைப்பட்ட காலங்களில் நாட்டுக்கு 24 இலட்சத்து 98 ஆயிரத்து 714 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் நாட்டில் 5 பேருக்கு ஒருவர் வாகனம் கொள்வனவு செய்துள்ளனர் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை நாட்டுக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என பிரேம்நாத் சீ தொலவத்த எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
யாழ். விவசாயியால் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு! வெங்காயச் செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். குறித்த விவசாயி லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களைக் குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார். இதனூடாக வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை நடுகை செய்து வெற்றி கண்டுள்ளார். இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக…
-
- 4 replies
- 544 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (09) காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்…
-
- 3 replies
- 393 views
-
-
09 JUN, 2023 | 08:27 PM வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் வெள்ளிக்கிழமை (09.06) தெரிவித்துள்ளனர். இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 பாலியல் தொழிலாளர்களும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத…
-
- 1 reply
- 299 views
- 1 follower
-
-
கடந்த 3 வருடங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயினை அழிப்பது தொடர்பில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கான இடம் இல்லாத காரணத்தால் ஹெரோயின் கையிருப்பு சேகரிக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவில் தெரிவித்துள்ளார். இந்த ஹெரோயின் கையிருப்புகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடியும் என்றும், ஆனால் அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்பு இன்னமும் அப்படியே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 22 MAY, 2023 | 11:09 AM போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட சீன பயணியை இராஜாங்க அருந்திக பெர்ணாண்டோ தலையிட்டு விடுதலை செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமானநிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார். 18ம் திகதி கொழும்பு விமானந…
-
- 24 replies
- 948 views
- 1 follower
-
-
Published By: VISHNU 09 JUN, 2023 | 02:42 PM வடமாகாணசபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் உள்ளக கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கொண்டு செல்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவ…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
08 JUN, 2023 | 09:44 PM யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஹெரோயின் போதை பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்திய வேளை மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் எனவும் , ஏற்கனவே போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் ,…
-
- 2 replies
- 508 views
- 1 follower
-
-
கூட்டமைப்பு மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கிறார்களாம்! written by adminJune 8, 2023 தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (08.06.23) மீண்டுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (08.06.23) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. https://globaltamilnews.net/2023/191664/
-
- 13 replies
- 815 views
- 1 follower
-
-
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைந்த நபரால் பரபரப்பு! கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 1 reply
- 245 views
-
-
தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் சிக்கினர் Published By: Vishnu 09 Jun, 2023 | 10:18 AM மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை (8) கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட புவ…
-
- 0 replies
- 243 views
-
-
இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்! மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு 2போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மே 29 ஆம் திகதி, குறித்த சீன நாட்டவரை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இதேவேளை அவரை சீன…
-
- 0 replies
- 323 views
-
-
வாகரையில் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி Published By: Vishnu 09 Jun, 2023 | 10:43 AM சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு வாகரை பிரதேசத்தில் இடம்பெறும் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி வியாழக்கிழமை (8) வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கண்டனப் பேரணியில் வாகரை பிரதேசத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் கலந்துகொண்டனர். வியாழக்கிழமை (8) காலை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன…
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அரசாங்கமும் RM Parks Incம் கையெழுத்திட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளை அடுத்து, இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் ஒன்றிற்காக ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc.க்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்ததையடுத்து, இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க ஏன…
-
- 1 reply
- 263 views
- 1 follower
-
-
Published By: VISHNU 08 JUN, 2023 | 05:30 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளினால், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னேற்றத்தினால், இந்தியாவிலிருந்து பாதுகாப்பு தொடர்பான வன்பொருள் கொள்முதலானது புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு கருத்தரங்கு மற்றும் இருநாட்டு உற்பத்தி பொருட்கள் கண்காட்…
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் : கஜேந்திரகுமார்! தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொடர்ந்து இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது இன வன்முறைகளை பிரயோகித்து வருகின்ற முப்படைகளிலும் இந்த பொலிசாரும் உள்ளடங்குகின்றனர். ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற…
-
- 2 replies
- 257 views
-
-
Published By: VISHNU 08 JUN, 2023 | 12:43 PM வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றுடன் 2300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகள், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வழங்குவதற்கும் இலங்கையின் அவசர அபிவிருத்தி நிதியுதவி தேவைகளை விரிவுபடுத்துகிறது என ADB தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/257423
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
புத்தளம் நகரில் பல காகங்கள் இறந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காகங்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. புத்தளம் நகரின் வானா வீதி ஏரிக்கு அருகில் நேற்று (07) காலை முதல் காகங்கள் இறந்து வருகின்றன. இது தொடர்பில் புத்தளம் மாநகர சபைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறந்த காக்கைகளின் உடல் உறுப்புகளை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ள புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. https://thinakkural.lk/article/257442
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 JUN, 2023 | 04:07 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர். அதன் போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/157278
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
சூரிய சக்தியில் இயங்கும் இயந்திர படகு written by adminJune 4, 2023 சூரிய மின்னாற்றலில் (சோலார்) இயங்கும் இயந்திரபடகு வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் சக்தியை கொண்டு, மின்சாரத்தை பெற்றுக்கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக இயந்திரத்தினைக் கொண்டு இயங்கும் மீன்பிடிப்படகு வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மணிவாசகம் என்பவரது முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது கடல் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எரி…
-
- 8 replies
- 593 views
-