ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இன்று நடைபெற்றுவரும் பொதுவேலை நிறுத்தப் போராட்டத்திற்கு உதவிய வணிகர்கள், தொழிலாளர்கள், தொழில் உரிமையாளாகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், திரைத்துறையினர் மற்றும் பல்வேறு துறையினருக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும்: தமிழக அரசின் மிரட்டல், எச்சரிக்கை மற்றும் ஆளும் கட்சியினரின் அதிகார மிரட்டல்கள் ஆகியவற்றை மீறித்தான் பொது வேலைநிறுத்தப் போராட்டம் அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் வெற்றிகரமாகவும் நடத்துள்ளது. இது ஈழத்தமிழர் பிரச்சினையில் மக்களின் ஒட்டுமொத்தமான கொதிப்பின வெளிப்பாடாகும். இந்த உண்மையை உணர்ந்து தமிழக அரசும், இந்திய அரசும் உடனடியாக…
-
- 0 replies
- 823 views
-
-
புதுக்குடியிருப்பு மருத்துவ மனை மீது தாக்குதல் நடத்த வேண்டாம் - கிலரி கிளின்ரன், இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் வலியுறுத்து ! மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை நோக்கியோ அல்லது அதன் அயலில் இருந்தோ தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க பாதுகாப்புச் செய்லாளர் திருமதி கிளரி கிளின்ரனும், இங்கிலாந்து பாதுகாபுச் செயலர் டேவிட் மில்லிபாண்டும் கேட்டுக்கொண்டுள்ளனர். Hillary Clinton, David Miliband urge to halt attacks on PTK hospital, Safe Zone [TamilNet, Wednesday, 04 February 2009, 10:06 GMT] US Secretary of State Hillary Rodham Clinton and British Foreign Secretary David Miliband on Tuesday jointly…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாகர்கோவிலில் ராஜபக்சே உருவபொம்மையை எரித்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாகர்கோவில் கோர்ட் வளாகத்தில், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ராஜபக்சேவின் உருவபொம்மையையும், இலங்கை அரசின் தேசியக் கொடியையும் எரித்தனர். இதையடுத்து உருவபொம்மை எரிப்பு சம்பவவத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. nakkheeran
-
- 0 replies
- 764 views
-
-
சிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்று வருகின்றது. சில இடங்களில் தமிழக காவல்துறையினரால் கைதுகளும் நடைபெற்று வருவதாக "தமிழ்செய்தி" நிருபர் தெரிவித்தார். தமிழகம் பெரம்பலூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு போராட்டத்திற்கு வியாபாரிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருவதாகவும், பெரம்பலூரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் ஏதிலிகள் மூகாமில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். செய்தி: இ.ராஜா http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2009-02-04.html
-
- 0 replies
- 615 views
-
-
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் பெருவெற்றி பெற்றிருக்கின்றது. காவல்துறையினரின் அச்றுத்தலைப் பொருட்படுத்தாமல் சென்னை தொடக்கம் தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூர் வரை அனைத்துப் பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரனை கட்சியிலிருந்து நீக்க தமிழ் மக்கள் விடுதலை புலிகள் செயற்குழு தீர்மானம் வீரகேசரி இணையம் 2/4/2009 12:06:40 PM - பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரனை தமது கட்சியிலிருந்து நீக்குவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியைச் சேர்ந்த எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.கட்சியின் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு அவர் இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ்வறிக்கை
-
- 0 replies
- 734 views
-
-
-
வன்னியில் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. மக்கள் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையின் வரலாற்றில் இப்போதுதான் மிகப்பெரிய மனிதப் படுகொலை நடைபெற்று வருகின்றது. ஊடக அடக்குமுறை காரணமாக இவை வெளிவருவதில்லை. பாதுகாப்பு வலயம் என்று முல்லைத்தீவில் இலங்கை அரச இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட யுத்தசூனியப் பகுதிக்குள் மக்களை உள்வர வைத்து அதற்குள் பலத்த எறிகணைத் தாக்குதலை நடத்தி பாரிய இனப் படுகொலையை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளுள் எறிகணைத் தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டபோது, ‘பாதுகாப்பு வலயப்பகுதி இருக்கும்போது ஏன் இந்தமக்கள் புதுக்குடியிருப்பில் நின்றார்கள்’ எனக் கேள்வி கேட்ட இலங்கைப் பாதுகாப்புப் பேச்சாளர…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒபாமா ராஜதந்திர ரீதியில் ராஜபக்சேவுக்கு சொல்லாமல் சொல்கிறார்..... அவர் ராஜபக்சேக்கு எழுதிய தன்னுடைய மடலில் கூறியதாவது .... சுதந்திர தினத்தை, தேசிய நாளாக கொண்டாடும் இலங்கை வாழ் மக்களுக்கும், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எம்மிரு நாடுகளுக்கிடையில் உள்ள இடையறாத நட்பினை எங்கள் நாடு மதிப்பளிக்கிறது. ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் அகியவற்றில், அமெரிக்காவுடன் ஒத்த கருத்துடைய தோழமை நாடான இலங்கையில் நடைபெறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன்னேற்றம் காணப்படும் என நான் நம்புகிறேன். போரினால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கை முழுவதையும் வருங்காலத்தில் அம…
-
- 9 replies
- 1.1k views
-
-
பெர்லின் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தை சிலர் தாக்கினர். இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தூதர்களை, இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபாயா ராஜபக்சே கடுமையாக விமர்சித்திருந்தார். தமிழர்கள் மீதான தாக்குதலை மிகைப்படுத்திப் பேசக் கூடாது, ராணுவத் தாக்குதலை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காட்டக் கூடாது. மீறி நடந்தால் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தூதர்களையும், சிஎன்என் போன்ற வெளிநாட்டு டிவி நிறுவனங்களின் ஊழியர்களையும் இலங்கையை விட்டு துரத்தியடிப்போம் என அவர் மிரட்டியிருந்தார். பெர்லின் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. இதையடுத்து தூதரகத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 846 views
-
-
மக்களின் சுதந்திரமான நடமாட்டம் தடுக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஆகாயத்தில் எல்லையின்றி பறக்கும் பறவைகள், தெருவோர நாய்கள் கூட உள்நுழைய முடியாதவாறு மிகவும் இறுக்கமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் சிறிலங்காவின் 61 ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 557 views
-
-
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி, ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவை சந்திக்கச் சென்றபோது கைகளைக் குலுக்கி “நீங்களே உலக நாயகன்” என வாழ்த்தியுள்ளார். பதிலுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் காலத்தில் பொதுமக்களுக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மோதல்களில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அகாசி, அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் கொண்டுசெல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வன்னி மோதல்களில் பொதுமக்களுக்கென பாதுகாப்புப் பிரதேசத்தை…
-
- 12 replies
- 1.9k views
- 1 follower
-
-
வன்னியில் தமிழ் மக்களை இன அழிப்புச் செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தினர் சிறிலங்காவின் சுதந்திர நாளை கொண்டாடும் வகையில் யாழ்ப்பாணத்தில் சிறிலங்காவின் சிங்கக் டியை ஏற்ற வேண்டும் என்று அங்குள்ள மக்களுக்கு கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 521 views
-
-
விடுதலைப்புலிகளை போரை நிறுத்துமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே கோரிக்கை பிபிசி யில் வெளிவந்துள்ள செய்தியின் சாரம் அமேரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே,ஜப்பான் ஆகிய நாடுகள் விடுதலைப்புலிகளை போரை நிறுத்தி, ஆயுதத்தை கைவிட்டு அரசியல் கட்சியாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. Sri Lanka Tigers urged to end war The US, EU, Japan and Norway have urged Sri Lanka's Tamil Tiger rebels to lay down their arms and discuss ending hostilities with the government. The nations said there only remained a short time before the Tigers lost the territory still under their control. Both sides "should recognise that further loss of life - of civil…
-
- 57 replies
- 5.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஓங்கிக்குரல் கொடுக்கவும் மெளனித்திருக்கும் உலகைத் தட்டி எழுப்பவும் நாளை வியாழக்கிழமை (05.02.09) காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-
-
தமிழ் மக்கள் தமது இறைமை சிங்கள தேசத்திடம் தாரை வார்க்கப்பட்ட 61 ஆவது ஆண்டு நிறைவை கவலையுடனும், அவமானத்துடனும் நினைவு கூருகின்றனர் என சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கொடி இத்தீவில் இறக்கப்பட்டு சிங்கக் கொடி உத்தியோகபூர்வ தேசியக் கொடியாக ஏற்றப்பட்டு இன்றுடன் அறுபத்தியொரு ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இலங்கையின் தேசியக் கொடியாக வாளேந்திய சிங்கம் நிர்ணயிக்கப்பட்ட போதே அந்தக் கொடி அமைப்பைத் தமிழர்கள் எதிர்த்தார்கள்; அதிருப்தி வெளியிட்டார்கள். ஆனால் ஜனநாயகத்தின் சிறப்பியல்பு அல்லது மாண்பு என்று போற்றப்படும் "பெரும்பான்மையினரின் தீர்மானமே முடிவு" என்ற கேலிக்கூத்துக் கோட்பாட்டின் கீழ், இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான சிங்களவர்களின் "சிங்கக் கொடித் தெரிவு" சிறுபான்மையினரான தமிழர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய முடிவாக வல்வந்தமாகத் திணிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை "பெரும்பான்மையினரின் முடிவே நீதி" என்ற …
-
- 0 replies
- 591 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகளை (எரிகுண்டுகளை) பீரங்கிகள் மூலம் ஏவி வருகின்றது போல அப்பிரதேசங்களை அவதானிக்கும் போது தெரிவதாக அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 522 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்கு வைத்து கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினர் கடுமையான பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் சிறிலங்கா தாக்குதல்களில் படுகாயமடையும் வன்னி மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழலை ஏற்படுத்தி, தனது இனப் படுகொலை போரை விரிவுபடுத்துகின்றது சிறிலங்கா. அதேசமயம், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நடத்தும் இந்த தொடர் தாக்குதலை, அது ஒரு இராணுவ இலக்கு என்று நியாயப்படுத்தி இருக்கின்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 493 views
-
-
அனைத்துலக ரீதியில் பொதுமக்களுக்கு எதிராக அதிகம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியில் சிறிலங்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 488 views
-
-
போர்க்கால அனைத்துலக விதிகளை சிறிலங்கா மீறுகிறது: நோர்வே அதிகாரி குற்றச்சாட்டு [புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 07:15 மு.ப ஈழம்] [காவலூர் கவிதன்] போர்க்கால அனைத்துலக சட்டவிதிகளை சிறிலங்கா அரசாங்கம் மீறி வருவதாக நோர்வே நாடாளுமன்ற வெளிவிவகார அலுவல்களுக்கான அமைப்பின் பிரதித் தலைவர் மாரித் நைபாக் குற்றம் சாட்டியுள்ளார். நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான இவர், இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கவனத்தில் கொள்ளுமாறு நோர்வேயில் செயற்படும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களையும் கோரியுள்ளார். சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மிக அதிகபட்ச அழுத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, அந்நாட்டு அரசாங்கத்தின் உச்சக்க…
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கையில் சிறிலங்கா படையினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்பாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள தாம்பரத்தில் சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 8 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் தங்களுடைய விசாவை பதிவு செய்ய சேலையூர் காவல் நிலையத்துக்கு சென்றதால் சிறிலங்கா வான்படையினருக்கு இந்தியா பயிற்சி வழங்குவது மீண்டும் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 546 views
-
-
கடந்த இரு நாட்களாக CNN தொலைக்காட்ச்சி தொடர்ந்து இலங்கை பிரச்சினைகளுக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி கொண்டு இருக்கிறது... (( என்ன நாசமோ யாமறியேன்)) அவர்கள் கைகளில் TRO வாயிலாக கிடைத்த காணொளியை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறார்கள்... தொடர்ந்தும் அவைகளுக்கு இலங்கை அதிகாரிகளால் பொய்யான புனைகதைகள் எல்லாம் காரணமாக சொல்லபடுகிறது... அவர்களை சிங்களவர்கள் குழப்பாது இருக்க உண்மை விபரங்களை மின்னஞ்சல் செய்து உதவுங்கள்... சில காண் ஒளிப்படங்கள்... இது பழயது எண்டாலும்
-
- 14 replies
- 2.2k views
-
-
இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அறவழிப்போராட்டங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியவையா? அல்லது தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களின் பிரச்சாரத்திற்கு ஒத்துப்போகின்றனவா? இப்போது வரும் ஆக்கங்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஸ்ரீலங்கா உட்பட உலகநாடுகள் எல்லாம் எதை எதிர்பார்த்தார்களோ அதற்குத்தான் நாமும் முன்னுரிமை கொடுப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு தோன்றியுள்ளது. அதாவது எமது மக்களின் இன்றைய அவலத்தை நான் புரியாதவனுமல்ல, உணராதவனுமல்ல ஆனால் மக்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தும் எதிர்த்தரப்பின் செயல்பாடுகளில் தான் நாங்களும் இப்போது ஈடுபடுகின்றமாதிரி தோன்றுகி…
-
- 27 replies
- 5.5k views
-