ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு: காவற்துறை அதிகாரி உட்பட இருவர் பலி; காவல்துறையினர் உட்பட 11 பேர் காயம் [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 02:50.30 AM GMT +05:30 ] மட்டக்களப்பு தலைமை காவற்துறை நிலையத்திற்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காவற்துறை அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தாகவும் காவல்துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந் பொது மகன் ஒருவர், ச…
-
- 0 replies
- 804 views
-
-
-
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த 120 பக்தர்கள், நாடு திரும்ப வேண்டிய விமானத்தை தவற விட்டதால், கொழும்பு செல்ல முடியாமல் சென்னையில் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு இருமுடி கட்டி கேரளாவுக்கு சென்றனர். குருசாமி ரவிசாமி என்பவரின் தலைமையில் இந்தத் தமிழ் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டனர். ஐயப்ப தரிசனத்தை சிறப்பாக முடித்து விட்டு கடந்த 18ம் தேதி காலை பத்தரை மணி விமானத்தில் கொழும்பு திரும்ப முன்பதிவு செய்திருந்தனர். திட்டமிட்டபடி 17ம் தேதி திருச்சி வந்த அவர்கள் அங்கிருந்து பஸ்ஸைப் பிடித்து சென்னை வந்தனர். ஆனால் அன்றைய தினம் விழுப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தனது நாட்டையும் மக்களையும் விட்டு வெளியேறும் நோக்கமற்றவர் என இந்தியாவின் முன்னாள் இராணுவ புலனாய்வு துறை அதிகாரியான ஹரிகரன் தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா இராணுவ தளபதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்று தெரிவித்த கருத்து தொடர்பிலேயே ஹரிகரன் இந்த பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ளார் தனது போராட்டத்தை கைவிட்டு வெளியேறும் மனோபாவம் பிரபாகரனுக்கு கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சி என்பது பிரபாகரன் என்ற ஒரு தனிமனிதனை மையப்படுத்தியதாகவே நிகழ்ந்துள்ளதாக பிரபாகரனின் வாழ்கை வரலாற்றை எழுதிய இந்திய ஊடகவியலாளர் நாரணசுவாமி தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள்…
-
- 1 reply
- 2.8k views
-
-
பிரபாகரனை பிடித்தே தீருவோம்: இலங்கை அரசாங்கம் சூளுரை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி கூறியுள்ள, இலங்கை பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்ல, முல்லைத்தீவில் முழுவீச்சில் புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் இராணுவம் அதன் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீரும் என்று கூறியிருக்கிறார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிர மடைந்திருப்பதால் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு விட்டன. தற்போது அவர்கள் முல்லைத்தீவில் மட்டுமே இருப்பதால் அங்கு அவர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. முல்லைத்தீவில் 50 ஆயிரம் …
-
- 10 replies
- 2k views
-
-
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு முழக்கங்கள் எழுப்பினர். சென்னையில் லயோலா கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு அமைதியான முறையில் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
-
-
சிங்களவர்-தமிழர்களுக்கு இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி: விமல் வீரவன்ச [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 03:08.15 AM GMT +05:30 ] சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது படையினர் மற்றும் பொதுமக்கள் பெரும் உள ரீதியான தாக்கங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நிறுவனங்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நூலக கேந்திர மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட வடக்கு பிரதேச…
-
- 0 replies
- 2.1k views
-
-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையே நடைபெற்ற நேரடி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றத்தை தலையிடக் கோரிக்கை [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 04:28.50 AM GMT +05:30 ] இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றம் தலையிட்டு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் கோரியுள்ளார். சர்வதேச மத்தியஸ்தர்கள் கவுன்ஸில் இயக்குநர்களில் ஒருவராகவுள்ள எஸ்.பிரபாகரன் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு:- இலங்கைத் தமிழர்களை முற்றிலுமாக அழிக்கும் விதத்தில் அந்நாட்டு அரசு போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற மனிதப் படுகொலைகளை உலகில் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இலங்கையில் இயல்பு நிலை திரும்ப உலகநாடுகள் முயன்று வருகின்றன. சர்வதேச மத்திய…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
இரண்டாம் உலக மகா யுதத்தின் போது ஜேர்மனியல் நடைபெற்ற படுகொலைகளை போன்ற இன அழிப்பு நடவடிக்கைகள் எவையும் இலங்கையில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அரசமைப்பிற்கு இணையான ஒரு தீர்வு திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டில் இருந்து எழும் தமிழீழ ஆதரவுக் குரல்களை இல்லாதொழிக்க முடியும் என்றும் தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்காத உரிமைகள் எதனையும் இலங்கையில் வாழுத் தமிழர்கள் அனுபவிக்க…
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழின அழிப்பினைத் தீவிரப்படுத்துவதற்காக சிங்கள அரசாங்கம் மருத்துவ சேவைகளையும் தற்போது கையில் எடுத்துச் செயற்படுகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 647 views
-
-
வீரகேசரி இணையம் - மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் சார்ஜனொருவரும் பொதுமகனொருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் காவலரண் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படடிருந்த சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு தூர இயக்கி கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட பொதுமகன் சின்ன உப்போடையைச் சேர்ந்த முற்சக்கர வண்டிச் சாரதியான வல்லிபுரம்(வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் வழமை போல் பாடசலையில் மாணவர்களை விட்டு விட்டு பெற்றோல் நிரப்புவதற்காக அருகிலுள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு சென்றபோது இ…
-
- 0 replies
- 879 views
-
-
வீரகேசரி நாளேடு - இந்தியா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பாராளுமன்ற சம்பிரதாயங்களை ஆராய்வது அவசியமானது. எனினும் பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரைக்கு இடையில் பாடல் ஒலிக்கின்றது என்று ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ஐ.தே.க.வினால் திகதி குறிப்பிடாமல் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்றைய பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்காமை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்ச்சைக்கு மத்தியில் எழுந்த ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை தேடி அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசி…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - தமிழக சட்ட சபையில் இன்று சகல கட்சிகளும் இலங்கைப் பிரச்சினை குறித்து குரல் எழுப்பும் என தெரிவிக்கப்படுகிறது. தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. ஆண்டில் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. தமிழகத்தில் கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திருமங்கலம் இடைத் தேர்தலை சந்தித்த சூட்டுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் இலங்கைப் பிரச்சினையை சகல கட்சிகளுமே அவரவர் கோணத்தில் எழுப்பவுள்ளன. திருமாவளவன் விவகாரத்தை வைத்து தி.மு.க. வை காங்கிரஸே நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கூட்டணியை விட்டு விலகியிருந்தாலும் திருமாவளவன் விஷயத்தில் மட்டும் தி.மு.க. வுக்கு பா.ம.க. துணை நிற்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் சிறிலங்கா படை புலனாய்வாளர்களால் இன்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 366 views
-
-
இலங்கையில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு இனியும் காலந்தாழ்த்தாது மேற்கொண்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தவாறு நாளும் வதைப்படும் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசு கேட்டுக்கொள்கிறது என்று தமிழ்நாடு ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 415 views
-
-
இலங்கையின் இன்றைய நிலை! 'பாய்வதற்கே பதுங்கல்...' 'ஒரு கண்துடைப்பு நாடகம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை காட்டுவதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனனும், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் மிக அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர்!' - இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கடந்த 16-ம் தேதி இலங்கைக்குப் போனது குறித்து இப்படி ஆத்திரமும், ஆதங்கமுமாகச் சொல்கின்றன இலங்கைத் தமிழர் கட்சிகள். இந்த விஜயம் பற்றி இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் வட்டாரத்தில் பேசினோம். ''அதிபர் மகிந்தாவின் சகோதரர்கள் பசிலும், கோத்தபயவும்தான் தமிழர்களுக்கு எதிரான நடவடிக் கைகளைத் தற்போது வேகமாக முடுக்கிவிடுபவர்கள். மேன…
-
- 0 replies
- 1.9k views
-
-
அடிமைப்படுகிறதா தமிழினம்? இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தும்வரை தமிழகமே ஸ்தம்பிக்கும் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும்!'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாசு அறிவித்துள்ள நிலையில், ஈழத்தமிழர் பிரச்னை புதிய எழுச்சியைப் பெற்றிருக்கிறது. மருத்துவ வாகனங்கள், பால் வண்டிகள் தவிர வேறு எதுவும் இயங்க முடியாத ஒரு போராட்டமாக அது இருக்கும் என்றும், அதற்கு முதல்வர் கலைஞர் உள்ளிட்ட அரசியல் தலை வர்கள் ஆதரவு தரவேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கிறார். இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஈழப்பிரச்னை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்ட பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தபோது, மேற்கண்ட அறிவிப்பை ராமதாஸ் முன்மொழிந்திருக்கிறார். பா.ம.க. முன்னின்று…
-
- 0 replies
- 884 views
-
-
தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசத்தை அன்னியனுக்கு தாரைவார்க்கும் சிறிலங்கா புதன், 21 ஜனவரி 2009, 07:05 மணி தமிழீழம் [செய்தியாளர் நிலாமகன்] தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான திருகோணமலையில் அமெரிக்காவின் ஏவுகணை கவசத் திட்டத்திற்கு தாரைவார்க்கும் சிறிலங்கா அரசு பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கை மட்டுமே அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும் கிழக்கு மாகாண பாடசாலைகளைப் புனரமைக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவே அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் கொணண்ட் சிறிலங்காவுக்கு பயணம…
-
- 0 replies
- 836 views
-
-
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் முச்சக்கர வாகன சாரதி ஒருவருமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அரச தலைவர் பராக் ஒபாமாவின் ஆட்சி, முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என ஓபாமாவுக்கான தமிழர்களும், ஹில்லாறிக்கான தமிழர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-