Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 03 Oct, 2025 | 05:25 PM புதிய ஒரு சட்டம் அமலுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் "செப்டம்பர் மாதம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித கேரத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒக்டோபர் மாதம் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தங்களது அரசின் நிலைப்பாடு என்ன” என கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என நாங்கள் எமது க…

  2. மட்டக்களப்பு முஸ்லீம் பகுதியில் உள்ள பிரதே செயலகம் ஒன்றில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வாணி விழா நிகழ்வு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் புரையோடிப் போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் இன்னும் களையப்படவில்லை. இலங்கையில் எத்தனை அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அரச திணைக்களங்களை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நீங்கியதாக தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்களங்களில் இன்னும் இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது. அங்குள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களால் நாடு முழுவதும் நடைபெறும் வாணி விழா நிகழ்வைக் கூட செய்யமுடியாத நிலை …

  3. மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்! மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயல் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் (2) காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக,மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துமன்னார் மாவட்டத்தை சேராத சில இளைஞர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் போராட்டக் காரர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், இதன்போது சிலர் தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுத்…

  4. மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்; ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன் இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வின் தீர்மானத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யும் அதேவேளை, இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஜெனீவாவில் எடுத்துரைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜெனீவாவுக்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அங்கு நடைபெற்ற…

  5. 03 Oct, 2025 | 10:15 AM சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை சேகரித்த வழிமுறையை நியாயப்படுத்த தவறினால் அல்லது முடியாவிட்டால், அவற்றை அரசு பறிமுதல் செய்ய முடியும். அதன்படி, சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கள் தொடர்பான சட்டபூர்வமான மூலங்களை நிரூபிக்க வேண…

  6. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன் October 3, 2025 உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இலங்கையில் தெற்…

  7. 02 Oct, 2025 | 07:56 PM மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த 3 பசு மாடுகளைத் திருடிச் சென்று அதில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு பசு மாட்டை வெட்டி இறைச்சியாக்கி சம்பவம் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் பசுவை திருடிச் சென்று விற்பனை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை (1) இரவு கைது செய்ததுடன் இரு மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் கடந்த மாதத்தில் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது. கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வாழ்வாதாரத்துக்காக உறுகாமத்தில…

  8. யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்! adminOctober 2, 2025 மகாத்மா காந்தியின் 156 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டி…

  9. யாழ்ப்பாணம் 53 நிமிடம் நேரம் முன் சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு! வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் படகுச் சவாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால், மூன்று மில்லியன் ரூபா நிதியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதனை ஏற்பாடு செய்த பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவித்துள்ளார். சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு!

  10. 02 Oct, 2025 | 04:51 PM மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (02) காலை 11.00 மணிக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளரிடம் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் வழங்கப்பட்டது. காற்றாலை மின் திட்டத்தை நிறுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு குழுவினர் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. ஆனால் காவல்துறையினர் அதைச் கட்டுப்படு…

  11. 02 Oct, 2025 | 06:51 PM வடக்கு ரயில் பாதையில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான ரயில் பிரிவில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ரயில் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிட்ட நேரத்தில் (காலை 06.40) பயணத்தை ஆரம்பித்து, வவுனியா (வவுனியாவில் முற்பகல் 11.35) வரை உரிய நேரத்தில் இயக்கப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தில் 02 மணி நேரம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின்னர், வவுனியா ரயில் நிலையத்தில் இரு…

  12. 02 Oct, 2025 | 05:41 PM (செ.சுபதர்ஷனி) 2012 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக கூறப்படும் ரக்பி வீரரின் மரணத்துடன் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தைக்காகவே நான் பேசுகிறேன். அரசியல்வாதிக்காகவோ எந்த ஒரு கட்சிக்காகவோ நான் பேச வரவில்லை. குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காண்பித்த சிசிரிவி காணொளியில் இருந்த நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார் என என பாதாள உலககுழுவை சேர்ந்தவர் என அறியப்படும் அருண ஷாந்த விதானகமகே எனும் “கஜ்ஜாவின் மகன் விதான…

  13. கொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பில் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 26 ஆண்டுகளாக கொழும்பு புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தினால் நடத்தப்படும் இக் கண்காட்சியில் சிங்கள மொழி நூல்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழ் மொழி படைப்பாளர்கள், தமிழ் பதிப்பாளர்கள், தமிழ் நுகர்வோர் பல்லாண்டுகளாக பெரும் பாரபட்சங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இவ்வாறான புத்தக கண்க…

  14. செம்மணி மனிதப் புதைகுழி: நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கருத்து தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதன்போது கூறினார்…

  15. ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்! October 2, 2025 ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது. தமிழ்ப் புலம்பெயரிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் அங்கு பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். 32 நாடுகளில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இலங்கையிலும் அந்த அமைப்பு தடைசெ…

    • 1 reply
    • 226 views
  16. ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி புதன், 01 அக்டோபர் 2025 06:51 PM யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கடல் பாசி உற்பத்தி மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்ற பெருநம்பிக்கை தனக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் முன்னெடுக்கப்படும் கடற்பாசி உற்பத்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் லக்ஸ்மன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி கடற்பாசி உற்பத்தி தொடர்பிலான பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளதாகவும் , அதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் , இந்த க…

    • 1 reply
    • 199 views
  17. முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! 02 Oct, 2025 | 09:54 AM கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை (01) பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். இதன்போது அப் பகுதியில் ஆபத்தான வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசார…

  18. முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள் 02 Oct, 2025 | 09:30 AM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையர்கட்டு வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (01) உரிய இடத்திற்கு நேரடியாகச்சென்று நிலமைகளை ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கெதிராக விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு வெள்ளப்பள்ளம் கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்…

  19. இலங்கையர்களில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம் 'எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் விரைவான திட்டமொன்று தேவை' என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது, வருடாந்தம் மது பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய 10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு பிரதான காரணங்களில் மது பாவனை முன்னனி காரணியாகும் என்று …

  20. வடக்கு, கிழக்குப் பாடசாலைகளை நவீனமயப்படுத்த 'நிப்பொன்` உதவி! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாட சாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான் நிப்பொன் மன்றம் உத்தரவாதமளித்துள்ளது. டோக்கியோவில் உள்ள நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவருக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நடந்தகலந்துரையாடலில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஆதரவை…

  21. மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு! மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு எதிராக பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். சனிக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டது. இந்ந…

  22. Published By: Digital Desk 1 02 Oct, 2025 | 09:56 AM யாழ். நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (01) மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடாத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள் வெளியாகவில்லை. பொது இடத்தில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதால் மக்கள் அச்ச நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இது குறித்து பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/226638

  23. நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில், நேற்று (01.10.2025) இக்குழுவின் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது, சுயாதீன சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சு, இதற்கான அடிப்படைக் கருத்துப் பத்திரத்தைத் தயாரித்த பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களைப் பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இக்கலந்துரையாடலில் உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட,…

  24. 01 Oct, 2025 | 03:58 PM (இராஜதுரை ஹஷான்) வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடக பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ராஜபக்ஷர்கள் இந்த அரசாங்கமும் …

  25. மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர். இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.