ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஆளுநர் பதவி நீக்கப்பட்ட விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்கின்றார் வடக்கு முன்னாள் ஆளுநர் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யும் உத்தரவு தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு பலகாலமாக அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளதால் இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஆளுநர் ஜனாதிபதியை சந்திக்கும் வரை அது தொடர்பில் விளக்கமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பதவி விலகுவதற்கு முன்னர் வழங்கிய சேவைகளுக்காக பல்வேறு தரப்பினருக்கு செலுத்த வேண்ட…
-
- 5 replies
- 462 views
-
-
இரு வாரங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை !! இம் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இம்மாதத்தில் மட்டும் இதுவரை 36,100 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவ்வாறு வந்த சுற்றுலா பயணிகளில் இந்தியர்களே அதிகம் என்றும் மொத்தமாக 9 ஆயிரத்து 323 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து 3,686 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 2,523 பேரும், ஜேர்மனியில் இருந்து 2,…
-
- 0 replies
- 482 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கம் ! 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கான தடையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முற்றாக நீக்கியுள்ளார். இந்நிலையில் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைக்கவும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். 2022 மேமாதம் இடம்பெற்ற பதிவான வன்முறை மற்றும்…
-
- 1 reply
- 257 views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலையாளிகளை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்த்தை முன்னிட்டு இன்று, அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், திருமதி சிவாஜிலிங்கம் மறறும் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இங்கு மேலும் உரையாற்றிய எம் கே சிவாஜிலிங்கம் “இலங்கையின் அரச படைகளினாலும், சி…
-
- 0 replies
- 384 views
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 05:26 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கைது! யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https:/…
-
- 0 replies
- 227 views
-
-
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு! போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினையும் வழங்கியுள்ளார். இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்றயதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த போதகர் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவரது இந்த செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் கிறிஸ்தவ அடிப்படைவாத கும்பல் மிக…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்! வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அதன்படி இன்று (புதன்கிழமை) வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும்…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
மனநோய்களுக்கான பத்துக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் வைத்தியசாலைகளில் இல்லை என அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார் . இது ஒரு தீவிர சமூக ஆபத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார். . தொடர்ந்து மனநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருந்து தட்டுப்பாடு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பது கடுமையான சமூக அவலமாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். உடல் நோய்கள் மட்டுமின்றி மனநோய்களிலும் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார். இவ்வாறான மருந்துகளுக்கு அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிக்காததால் இநிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது அரசாங்கத்தால் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை எனவும…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 16 MAY, 2023 | 04:57 PM 2022 இல் இலங்கையில் மதசிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டார்கள் என அமெரிக்கா மதசுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகள் மோதலுக்கு பிந்தைய நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு பகுதியாக இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களை மதித்து அவர்களை அரவணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர் என அமெரிக்க இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மதசிறுபான்மை குழுக்களை சேர்ந்தவர்களை துன்புறுத்தல் அவர்களிற்கு எதிரான பாரபட்சம் குறித்த கரிசனைகைளை தெரிவிப்பதற்காக தூதரக மற்று…
-
- 3 replies
- 354 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 05:07 PM மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை (16) மதியமளவில் மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்புரிமை அமைப்பான அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் மே 18 நினைவேந்தல் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டம் கிராமத்தில் குறித்த நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் இதனை அகம் மனிதாபிமான வள நிலைய உத்திய…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
சிவலிங்கம் ஆரூரனுக்கு விடுதலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க …
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 03:08 PM ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் அமைந்துள்ள சின்னசாளம்பன் கிராமத்தில் கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தில் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய இரு மாணவிகளை இலக்கு வைத்தே குறித்த சம்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடித்து வீடு திரும்பும் போது இரு வாகனங்கள் தம்மை பின்தாெடர்ந்ததாகவும் அதில் க…
-
- 3 replies
- 324 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 12:25 PM மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் பெரிய கரிசல் பகுதியைச் சேர்ந்த எம்.ஜலீல் (வயது-25) என தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் உள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது குறி…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், மேலும் 07 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் 06 மாவட்டங்களில் 1744 குடும்பங்களைச் சேர்ந்த 6564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் 73 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது. அக்குரஸ்ஸ, பாவன்வெல்ல பகுதியில் வௌ்ளத்தினால் சேர்ந்த கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ள பஹல அத்துரலிய பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கிங் மற்ற…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 12:48 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரச திணைக்களத்தின் தென் மற்றும் மத்திய ஆசிய பணியகத்தின் பிரதி உதவி செயலாளர் அப்ரீன் அக்டரிற்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்வுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது பிரதி உதவி செயலாளர் அமைச்சரி…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
இலங்கையில் முதலாவது அணுமின் நிலையம் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 2032 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை அறிவித்துள்ளது இலங்கை அணுசக்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது இதேவேளை ஒட்டு வேலை (Welding) மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் இந்தக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கொரிய…
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
கண்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரம் : இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை !! இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிறுவனத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும், மருந்தை கொள்வனவு செய்த முகவர்களிடமும் இதனை அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நோயாளர்களின் அவல நிலை குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், சில சமயங்களில் தர குறைபாடுகள…
-
- 0 replies
- 171 views
-
-
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயற்பாடுகள் இடைநிறுத்தம்-காஞ்சன விஜயசேகர! நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி கட்டமைப்பை 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார் இதன்படி எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த கட்டமைப்பு செயலிழக்க செய்யப்படவுள்ளது. மேலும் குறித்த காலப்பகுதியில் நாட்டில் மின்சார தடையை ஏற்படுத்தாது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1331886
-
- 4 replies
- 368 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்: சரத் சூளுரை “போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் “வடக்கு – கிழக்கில் உறவுகள் என்ற போர்வையில் புலிப் பயங்கரவாதிகளை ஆண்டுதோறும் ஒரு தரப்பினர் பகிரங்கமாக நினைவேந்தி வருகின்றனர். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு – கிழக்கில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்வ…
-
- 8 replies
- 840 views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் பணிபுரியும் தமிழ் பெண்கள் வீதிக்கிறங்கி போராட்டம் முல்லைத்தீவு – கொக்காவில் இராணுவ முகாமில் பணிபுரியும் தமிழ் பெண்கள் தற்போது வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். கொக்காவில் இராணுவ முகாமில் இருந்து வவுனியா இராணுவ முகாமுக்கு செல்லும் படியாக அறிவித்தல் கிடைத்துள்ள நிலையில், அங்கு தம்மால் செல்ல முடியாதெனத் தெரிவித்தே இப்போராட்டம் இடம்பெறுகிறது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் தமிழ் பிள்ளைகள். மொத்தமாக 104 பேர் இருக்கின்றோம். 2012 இல் இருந்து இந்த முகாமில் தான் நாங்கள் கடமை புரிகிறோம். எங்களை வேலைக்கு எடுக்கும்போது கிளிநொச்சியில் தான் வேலை என்று எடுத்தார்கள். ஆரம்பத்தில் எங…
-
- 0 replies
- 251 views
-
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை மு.தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால்கஞ்சியினை பெற்று குடித்தனர். வீதி போக்கு வரத்து பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும்புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிந்தன…
-
- 4 replies
- 618 views
-
-
அதிகாரப்பரவலாக்கம் குறித்த பேச்சில் இணக்கமில்லை : புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து கூட்டமைப்பு வலியுறுத்தல் Published By: Vishnu 16 May, 2023 | 10:20 AM (நா.தனுஜா) தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்புக்கும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவுக்குவந்தது. இப்பேச்சுவார்த…
-
- 3 replies
- 226 views
- 1 follower
-
-
முக்கிய ஆதாரங்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று வெளியிடவுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை அறிவிப்பு 15 May, 2023 | 04:35 PM இலங்கையின் வட, கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் பெரும்பான்மையாகத் தமிழர்களே வாழ்ந்தனர் என்பதை மறுதலிக்கமுடியாதபடி நிரூபிப்பதற்கான ஆதாரங்களை நாம் திரட்டியிருக்கின்றோம். அவற்றை எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வெளியிடவிருக்கின்றோம் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வீ.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே ரவிக்குமார் இவ்விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார். …
-
- 1 reply
- 153 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 15 MAY, 2023 | 04:56 PM நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் உள்ள சங்கிலியன் தோரண வாயிலானது யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல், அவற்றை பாதுகாத்து, எமது எதிர்கால சந்ததியினருக்கு அச்சின்னங்களை ஒப்படைக்கவேண்டிய தார்மீகக் கடமையுணர்வோடு யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் (JAFFNA HERITAGE CENTER) முன்னெடுக்கப்படும் முதலாவது செயற்றிட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 247 views
- 1 follower
-