Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 446 views
  2. பெருமளவான படையினர் பலி 1,700 புலிகளே மீதமாக உள்ளனர்-இராணுவ தளபதி கூறுகிறார் வீரகேசரி நாளேடு 1/3/2009 9:07:09 AM - பயங்கரவாதத்திற்கு எதிராக வடக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்ட படைநடவடிக்கையின் போது பெருமளவான படையினர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஊனமுற்றும் உள்ளனர் என்று இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். புலனாய்வு பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் கடந்த இரு மாதங்களில் 1500 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதுடன் 1700 ற்கும் 1900 ற்கும் இடைப்பட்ட பயங்கரவாதிகளே மீதமிருக்கின்றனர். இவ்வாறான் நிலையில் படை நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு இவ்வருடம் முழுவதும் தேவைப்படாது என்றும் அவர் சொன்னார். கிளிநொச்சியை கைப்பற்றியது தொடர்பில் ஜ…

    • 0 replies
    • 2.3k views
  3. தமிழீழ விடுதலைப் புலிகளோடு தனியாக மோத வக்கில்லாத சிங்கள அரசு, இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையோடு ஒற்றையாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரிய வெற்றியாகாது; வெட்கக்கேடாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  4. வன்னியில் நாங்கள் யாரும் சிக்கவில்லை. மேலும் வன்னியில் இரண்டரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்பதும் தவறானது. நான்கு லட்சத்து ஆறுபதாயிரம் மக்கள் வாழ்கின்றனர் என்பது அரச அதிபர்களால் வெளியிடப்பட்டிருக்கின்ற புள்ளி விபரம் ஆகும் என்று பிபிசி தமிழோசைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 386 views
  5. கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா வெள்ளி, 02 ஜனவரி 2009, 03:15 மணி தமிழீழம் [] சிறீலங்கா இராணுவத்தின் தரைப்படைத்தளபதி கிளிநொச்சி நகரை தமது படையினர் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றிவிடுவர் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா படையினர் பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் கைப்பற்றியதன் பிற்பாடு இவரது இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இவர் பலதடவைகள் கிளிநொச்சியை தாம் கைப்பற்றுவோம் என காலகெடுக்களை விதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. pathivu

  6. சிறுபான்மை இனத்தின் இரத்த பிரியர்களான சிறிலங்காவின் தலைவர் , சிங்களப் படைகள், சிங்கள மக்களும் வன்னியில் தமிழர்களை உடல் சிதறி படுகொலை செய்யும் நிகழ்ச்சிகளை தென்பகுதியில் பட்டாசு வெடிக்க வைத்து கொண்டாடிவருகின்றனர். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்த 60 வது நிமிடத்தின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் நடாத்திய தாக்குதலில் 8பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கையில் நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில், மற்றும் முச்சக்கரவண்டிகளில்…

  7. போர் நடைபெறும் களங்களில் போரியல் ஒழுங்கு முறைமைகள் எனப் பலநடைமுறைகளைப் போரில் ஈடுபடும் நாடுகள் மேற்கொள்வது நடைமுறை. சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது இனவெறிப்போரை பல ஆண்டுகளாக நடத்திவரும் சிறிலங்கா இராணுவம் போர் நடைமுறைகள் பலவற்றையும் பல்வேறு சந்தர்பங்களிலும் மீறியுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேசங்களில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகள், கொத்தணிக்குண்டுகள், அமுக்கவெடிகள், மிதிவெடிகள் என தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்து யுத்த மரபுகளை மீறியுள்ளது சிறிலங்கா இராணுவம். போரில் மரணமடையும் போராளிகளை அவமரியாதை செய்வதிலும் அது தனது வக்ரபுத்தியைக் காட்டியது. அநுராதபுரத்தில் தாக்குதல் நிகழ்த்திய கரும்புலிப்போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் பொது மக்களுக…

  8. வீரகேசரி இணையம்- கிளிநொசியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் தற்போது தேசிய கொடி பறப்பதாக ஆளுங்கட்சி பேச்சாளர் அமைச்சர் மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.இது தேசிய ரீதியில் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியென அமைச்சர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் கிளிநொச்சி நகரினுள் தற்போது நுழைந்து அங்கே பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுளுகல்ல தெரிவித்துள்ளார். வீரகேசரி கொழும்பு பட்டாசு வெடிச்சத்தத்தினால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.

  9. அரசியல்தீர்வை அரசு முன்வைக்காவிடில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் புலிகளையே ஆதரிப்பர்: பிளேக் [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 06:50.03 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது; விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்க…

  10. விமானப்படை தலைமையகத்தில் குண்டு வெடிப்பு! தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் தற்போது பலர் காயம்! -அததெரண (பட்டாசு வெடிகள் ஓய்ந்தன)

  11. ஒருபோதும் முடிவுக்கு வராத அச்சத்துடன் வாழ்க்கை: சொந்த மண்ணிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழர் [ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:53.01 AM GMT +05:30 ] "நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்" இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து பீதியுடனும் சொந்த மண்ணிலிருந்து தப்பியோடுபவர்களாகவுமே உள்ளார்கள் என்று இலங்கைக்கு அண்மையில் வந்து விட்டு சென்றுள்ள இந்தியாவிலிருந்து வெளியாகும் "வீக்' சஞ்சிகையின் நிருபர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் சாய்ந்தமருது கிராமத்தில் நவம்பர் 23 ல் எமது வெள்ளைநிற வான் நிறுத்தப்பட்டபோது அங்குள்ளோர் எம்மை அச்சத்துடன் பார்த்தனர். உள்ளூர் வாசியான எனது நண்பர் "அவர் சென்னையிலிருந்து வந்திர…

    • 0 replies
    • 960 views
  12. அரங்க பேனரில் யாழ்பாண எதிர்கால நோக்கு என வேறு எழுதியுள்ளார்கள்

  13. துரோகக் கும்பல் தமிழகத்தில் ஊடுருவல் இலங்கையில் இராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களின் குழுக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்களை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி வருகிறது. அவர்களால் பிடித்துச் செல்லப்படும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழ் வணிகர்களை கடத்தி சித்திரவதை செய்து பணம் பறிக்கிறார்கள். அண்மையில் ராஜபக்சேவுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜானக பெரேரா என்பவரை கொலை செய்ததும் பிள்ளையான் குழுவே என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நிதிப்பொறுப்பாளரான சீலன் நான்கு சிங்கள உளவு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டிற்குள் ஊடுரு…

  14. இலங்கை போர்.. ஒரு பிளாஷ்பேக்! வெள்ளிக்கிழமை, ஜனவரி 2, 2009, 13:35 [iST] வன்னி: கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது. இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர். புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. கிளிநொச்சிக்கு முன்பாக பர…

  15. முல்லைத்தீவில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  16. சித்திரவதைகளில் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களை கடலில் வீசும் படையினர் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காப் படையினரால் படைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலர் நீண்டகாலப் படைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் போது இறக்கின்றவர்களை சிறிலங்காப் படையினர் கடற்படை படகுகளில் ஏற்றி கடலில் தூக்கி எறிவதாகவும் யாழில் உள்ள பொது அமைப்புக்கள் கண்டணம் வெளியிட்டுள்ளன. முன்னர் கொல்லப்படுபவர்களை செம்மணி போன்ற பகுதிகளில் புதைத்தமையால் சிறிலங்காவின் படுகொலைகள் அம்பலமாகியிருந்தது. இவ்வாறான நிகழ்வகளை எதிர்காலத்தில் தடுப்பதற்காகவே படையினர் உடல்களை கடலில் வீசி வருவத…

  17. இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை. இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் …

  18. தமிழர்கள் மட்டும் வடபகுதியில் இருப்பதனால்தான் புலிகள் திரும்ப திரும்ப நிமிர்ந்து எழுவார்கள். இதற்கு மகிந்த ஒரு தீட்டம் வகுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கொழும்பு மற்றும் தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வது போல யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்களை குடியேற்ற போகிறார்கள். இதற்காக நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களினுடைய வீடு, நிலங்கள் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

  19. ஐ.நா. பிரதிநிதியின் கடிதத்திற்கு கோத்தபாய பதில் அனுப்பமாட்டார்: அரசாங்கம் தெரிவிப்பு [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 02:30.26 AM GMT +05:30 ] ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான வோட்டர் கலீக் என்பவரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் பதில் அனுப்பமாட்டார் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் இடம்பெயர்கின்ற மக்கள் அல்லற்படுவதாகவும் அவர்கள் மீது அரசாங்கம் எவ்விதமான கரிசனையையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என்றும் அவர் மேலும் சொன்னார். மனித உரிமைகள் அமைச்சின்…

    • 0 replies
    • 1.7k views
  20. கரடிப்போகுச் சந்தி கைப்பற்றப்பட்டது - ராணுவம் பரந்தனைக் கைப்பற்றிய செயலணிப்படை 1, அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. கிளிநொச்சிக்கும் பரந்தனுக்கும் இடையில் உள்ள பகுதியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியதன் மூலம், கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தாம் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே பகுதியில் அமைந்திருந்ததாகக் கருதப்படும் "பேஸ் 93" எனப்படும் பெண்புலிகளின் முகாமையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகக் கூறும் ராணுவம், கடந்த 31 ஆந் தேதி மோதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல்.ஈலப்பிரேயன் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

    • 16 replies
    • 4.2k views
  21. நேற்று 01.01.2009 அன்று முரசுமோட்டையில் பொதுமக்கள் மீது சிறீலங்க வான்படையினர் நடாத்திய தாக்குதல் காட்சிப்பதிவு. http://www.yarl.com/videoclips/video/muras...ai20090101.html

  22. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் சீனத் தந்திரோபாயத்தின் ஓரங்கம் - அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கை இந்து சமுத்திரத்தில் பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அண்மித்ததாக தென்னிலங்கையில் நிர்மாணிக்கப்படும் துறைமுகமானது முக்கியமான வர்த்தக மார்க்கங்களை பாதுகாப்பதற்கும் செல்வாக்கை செலுத்துவதற்குமான சீனாவின் முயற்சியின் ஓரங்கமாக இருப்பதாக அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஒப்பந்தக்காரர்களால் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் வர்த்தக கப்பல் களஞ்சியங்களை உள்ளடக்கிய துறைமுகமானது அரசியல் ரீதியான அனுகூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வல்லமையை ஈட்டிக்கொள்வதற்குமான சீனாவின் "கோர்த்த முத்துக்கள்' என்று அழைக்கப்படும் தந்…

    • 0 replies
    • 1.7k views
  23. அம்பாறை மாவட்ட வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரின் தவறான துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 403 views
  24. வெள்ளைவானில் வந்தவர்களினால் இளம்பெண் கடத்தப்பட்டார்:வவுனியா பாரதிபுரத்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 1/2/2009 1:55:01 PM - வவுனியா பாரதிபுரத்தில் உறவினர்கள் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற இனந்தெரியாதவர்களினால் இளம்பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்திருக்கின்றார். பட்டப்பகல் வேளையில் நடைபெற்ற இந்தக் கடத்தல் சம்பவத்தினால் பாரதிபுரம் கிராமம் உட்பட அந்தப் பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை .பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட பெண் இருந்த வீட்டிற்கு வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி ரேணுகாதேவ…

  25. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை மற்றும் புளியம்போக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 622 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.