ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலை பகுதியில் சிறிலங்கா படையினரின் டறக் வாகனம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அமல்படுத்துவதே இலங்கை பிரச்சனைக்கு தீர்வு: on 30-12-2008 15:59 ராஜீவ்-ஜெயவர்த்தனே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் பேச்சுவார்த்தை மூலமுமே இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா கருதுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 'எனது கொழும்பு பயணம் எப்போது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பான குழு அளிக்கும் அறிக்கையை அமல்படுத்துவதே நீண்டகால இலங்கை பிரச்னைக்கு உறுதியான தீர்வாகும். இந்த பிரச்னையை ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க முடியாது. 1987ல் ராஜீவ் காந்தி - ஜெயவர்த…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் சந்திப் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் இன்று புதன்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் பரந்தனின் மேற்குப் புறத்திலிருந்து முன்நகர்ந்த படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 343 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் சந்திப் பகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று மோதல்கள் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கை வான்படையின் விமானங்கள் பரந்தன் முருகாணந்த பாடசாலைக்கு அருகாமையில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடத்திய வான் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டு 12 பேர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை இலங்கை நேரம் 8 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்தத் தாக்குதலில் 15 வயதுடைய நிர்மலன், 21 வயதுடைய எஸ். ராகுலன், 33 வயதுடைய செல்வராசா குலேந்திரன், 38 வயதுடைய ஜெயசூரி, 43 வயதுடைய சோமசுந்தரம் சந்திரகுமார், 43 வயதுடைய அன்னக்கொடி சந்திரமேரி, 49 வயதுடைய வெள்ளைச்சாமி அன்னக்கொடி, 51 வயதுடைய எஸ். பாலசுந்தரம், 52 வயதுடைய சுப்ரமணியம், 52 வயதுடைய சந்தரபோஸ், 58வயதுடைய றஞ்சிதமலர், 62 வயதுடைய சரவண…
-
- 0 replies
- 716 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 354 views
-
-
விடுதலைப்புலிகள் தலை நகரான கிளிநொச்சியை, பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26&க்குள் கைப்பற்றி விடுவோம் என அறிவித்துதான் யுத்தத்தை தொடங்கினார்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும். அவர்கள் கெடு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் புலிகளின் கோட்டையைப் பிடிக்க இயல வில்லை. கிளிநொச்சியில் உண்மையில் இப்பொழுது நிலவரம் எப்படி இருக்கிறது? அங்கிருக்கும் சிலருடன் பேசினோம். கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் சொல்கிறார். "கிளிநொச்சியை முற்றுகை யிட்டுள்ள இராணுவம் அதனைப் பிடித்தே தீருவதென்று நான்கு முனைகளில் இருந்தும் விடாப்பிடியாக கடுமையான யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கமும் வீ…
-
- 8 replies
- 3.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை பெருமளவில் அதிகரித்திருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அண்மையில் மலையகப் பகுதிகளிலும் கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேசங்களிலும் கடுமையான மழை காரணமாக உள்நாட்டு மரக்கறிச் செய்கை பாதிப்புக்குள்ளானதே இந்த விலையேற்றத்திற்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மலையகப் பகுதிகளிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மரக்கறிகளுடன் இரண்டொரு லொறிகள் மட்டுமே வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ தக்காளி 160 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளியின் விலை 80 ரூபாவாக இருந்தது.தற்போது இரு மடங்காக விலை அதிகரித்துக் காணப்படுகிறது. இதேவேளை, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 80 ரூபாவாகவும், லீக்ஸ் 10…
-
- 0 replies
- 557 views
-
-
தமிழக மக்களின் எழுச்சியானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுப் பதிவு- ஒரு ஊக்க சக்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 718 views
-
-
சிறிலங்காவில் எரிபொருட்களின் விலையை திடீரென மகிந்த ராஜபக்ச அரசு குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 752 views
-
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இந்த வருடம் மட்டும் சிறிலங்கா படைத்தரப்பில் 191 பேர் கொல்லப்பட்டுள்ளளதுடன் மேலும் 247 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 369 views
-
-
அதிகாரப் பகிர்வு குறித்த இலங்கையின் மெத்தனப் போக்கு ஏமாற்றமளிப்பதாக முகர்ஜீ விசனம்: தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்தப்படுத்தாத இலங்கையின் மெத்தனப் போக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார். அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உக்கிர மோதல்களினால் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு அதிகாரப் பகிர்வினை துரித கதியில் அமுல்படுத்துமாறு இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வகட்சிப் பேரவையினால் முன்மொழியப்படும் தீர்வுத் திட்டமே இறுதித் தீர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 4 replies
- 1.7k views
-
-
உல்லாச பயணிகள் சிறிலங்கா செல்வதை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டுக்குச் செல்வதாக இந்திய உல்லாச பயண சபையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
திருகோணமலை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை பிரதான கட்சிகள் நேற்று தாக்கல் செய்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 467 views
-
-
கிளிநொச்சிக் கனவில் தடுமாறும் அரசு - இதயச்சந்திரன். கிளிநொச்சி கனவில் தடுமாறும் அரசு - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 16:56 மணி தமிழீழம் [] வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு தடைசெய்யப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டு விட்டன.83இலும் 98 இலும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87இல், 2002 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தீவில் அப்பாவித் தமிழர்கள் மீது நாளாந்தம் எண்ணில்லா வான்குண்டுகளை வீசி படுகொலை செய்து வரும் சிறிலங்காவின் மகிந்த அரசு, பலஸ்தீன அப்பாவிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாகக் கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 709 views
-
-
லக்பிம" வார ஏட்டுக்கு தலைவர் பிரபாகரன் பிரத்தியேக பேட்டி எதுவும் வழங்கவில்லை: பா.நடேசன் மறுப்பு [திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2008, 09:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு நேற்று வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்” செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஞாயிறு ஏடான "லக்பிம" தனது நேற்றைய (28.12.2008) வெளியீட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தமக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக பேட்டி என ஒரு செய்தியை வெளியிட்டிர…
-
- 5 replies
- 2k views
-
-
வருடத்தின் இறுதிப்பகுதியில் களத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் விடுதலைப்புலிகளின் வலிந்த சமரானது படைத்தரப்புக்கு கசப்பான செய்தி வேல்ஸிலிருந்து அருஷ் உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடை பெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விடைபெற்று செல்கின்ற போதும் அது போரை அடுத்த வருடத்திற்கு விட்டு செல்கின்றது என்பதை மறுக்க முடியாது. வன்னிப் பகுதியின் முக்கிய நகரங்களான …
-
- 0 replies
- 2.7k views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவை கைப்பற்றும் இறுதிச் சமர் ஆரம்பம் * படைத்தரப்பு தெரிவிப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு களமுனைகளில் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வரும் படையினர், இவ்விரு நகர்களையும் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர்களை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதேநேரம், கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நோக்கி இரு முனைகளில் பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட படையினர் மீது, தாங்கள் நடத்திய தாக்குதலில் 68 படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்த அதேநேரம், முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் 31 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடைபெ…
-
- 0 replies
- 2.6k views
-
-
-
ஜனாதிபதி மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளாராம்: எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலான பொருளாதார சலுகைகளை வழங்க ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு சலுகைத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலை 2 ரூபாவினால் குறைப்பதற்கும், முச்சக்கர வண்டிகளுக்கான பெற்றோலுக்கு 20 ரூபா விலைக் கழிவு வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. டீசல் விலையும் மண்ணெண்ணையும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. லாப் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் 276 ரூபாவினாலும், ஷெல் எரிவாயு நிறுவனத்தின் சிலிண்டர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முகமாலைப் பகுதியில் 18 வயதான படைச் சிப்பாயின் சடலம் மீட்பு: யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முகமாலைப் பகுதியில் 18 வயதான படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகாமலையில் உள்ள இராணுவத்தினர் கொடிகாமம் காவற்துறையினருக்கு வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கூடிய இந்த சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. தென்மராட்சியின் வரணிப் பிரதேசத்தில் உள்ள 52 வது படைப்பிரிவின் முகாமில் இருந்து இந்த சிப்பாய் முகமாலை முன்னரங்கப் பகுதிக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் குறித்த விசாரணைகளை சாவகச்சேரி நீதவான் நடத்தியுள்ளார். சடலத்தை கொழும்பில் உள்ள நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம்; பிரேத பரிசோதனைகளுக்காக…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் - அப்பாவி மாணவர்களை விடுவிக்கக் கோரிக்கை: http://www.globaltamilnews.net/tamil_news....=4005&cat=1 கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழக சிங்கள மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட மாணவன் உள்ளிட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமது மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக…
-
- 0 replies
- 843 views
-