ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143652 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கம் ஜேர்மனி நாட்டு தூதுவரை அழைத்து விசாரணைகளை நடத்திய 24 மணி நேரத்தில் ஜேர்மனி அரசாங்கம் தனது நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அண்மையில் படுகொலை செய்யப்பட்ட "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி நிகழ்வின் போது சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் வீத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கோபமடைந்த சிறிலங்கா அரசாங்கம், அவரை அழைத்து தனது கண்டணத்தை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் ரி.பி.மதுவேகெடராவை ஜேர்மனி நாட்டின் வெளிவிவகார அலுவலகம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் விச…
-
- 8 replies
- 1.9k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மாலை முடித்துக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நான்காவது நாளாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள தமிழ் இளையோர்கள் நடத்திய அடையாள உண்ணாநிலை போராட்டம் நிறைவுபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட சிவசங்கர மேனன் மறுப்பு திகதி: 18.01.2009 // தமிழீழம் // [சோழன்] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இன்று காலை சென்னை வழியாக நாடு திரும்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார். அவர்கள் போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசியதாக தகவல் இல்லை. அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, இரு நாட்டு உறவுகள் என வழக்கமான பேச்சுவார்த்தைகளே நடந்ததாகத் தெரிகிறது. இரு தரப்பு பொருளாதார உறவுகள், இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைமை ஆகியவை குறித்தே பேசப்பட்டதாக சிறிலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்…
-
- 5 replies
- 1.3k views
-
-
இறுதிப் போர் யாருக்கு சாதகம்? [18 - January - 2009] விதுரன் முல்லைத்தீவில் இறுதிப்போரில் படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் குவிக்கப்பட்டுள்ள படையினர் ஆங்காங்கே பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல்களால் பின்னடைவையும் சந்திக்கின்றனர். தங்களது சகல வளங்களையும் திரட்டி முல்லைத்தீவை குறிவைத்துள்ள படையினருக்கு புலிகளின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இதுவரை காலமும் பின்வாங்கிய புலிகளின் பதில் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது குறித்தும் படையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். வன்னிப் போரில் படையினரின் கையே ஆரம்பம் முதல் ஓங்கியுள்ளது. வன்னியில் பெரும்பாலான…
-
- 10 replies
- 3.1k views
-
-
மல்லிகைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் பலி வீரகேசரி இணையம் 1/18/2009 12:07:24 PM - திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவில் நேற்றிரவு இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் உழவு இயந்திரமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை பதுங்கியிருந்த நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற் கொள்ளப்டப்டதாக கூறப்படுகின்றது. கொல்லப்டப்டடவர்களில் ஏனைய இருவரும் சிவிலியன்கள் என்றும் இந்த சம்பவத்தில் மற்றுமொரு சிவிலியன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்
-
- 0 replies
- 776 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வன்னியில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ள எமது மக்களின் நிலையை உலகின் கவனத்திற்கு கொணரும் வகையிலான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் முன்னனெடுக்கப்பட்ட வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுமாம் - சரத்பொன்சேகா சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கென அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டார். கடந்த வருடம் இதே போன்றதொரு ஒன்று கூடலின் போதுஇ எனது பதவிக் காலத்துக்குள் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு இதை …
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா.வில் முறையிட வெளிநாட்டு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை தமிழர்களைக் காக்க இனி இந்திய மத்திய அரசை நம்ப முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைதாகி கோவை சிறையில் இருக்கும் திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமைக் கட்சிப் பொதுச் செயலர் மணியரசன் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; தேச விரோதமாகப் பேசியதாகவும், கலவரத்தை தூண்டியதாகவும் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை செய்யாமலேயே முதல் …
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
முல்லைத்தீவு மீது எறிகணைத்தாக்குதல்- 4 பொதுமக்கள் பலி – 11 பேர் காயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதி மீது நேற்று சனிக்கிழமை படையினர் நடத்திய கொரூர எறிகணைத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 சிறுவர்கள் உட்பட 11பேர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின
-
- 0 replies
- 496 views
-
-
யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டக்குழு கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் மற்றும் விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்காவின் யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டத் தளபதிகள் குழுவிற்கும் யு.எஸ். எயிட் உயர்மட்டக்குழுவிற்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. திருகோணமலையில் கிழக்கு மாகாணப் பிரதம செயலகத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் அவரின் சிரேஷ்ட ஆலோசகர…
-
- 0 replies
- 708 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வீர மரணம் அடையவும் தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வாழ்த்தி அவர் பேசுகையில், இலங்கை பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனையே அல்ல. ஆனால், இந்திய அரசுக்கு மனமில்லை. தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர். நிலவுக்கு சந்த்ராயன் விண்கலத்தை அனுப்புகின்றனர். ஒரு ஏவுகணையை இலங்கையை நோக்கி திருப்பி நிறுத்தினால் போதும். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடும். ஆனால், இதை யார் செய்வது?. முல்லைத் தீவில் அடைக்கம் புகுந்துள்ள லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை …
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரிய நூற்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளதாக லண்டனில் உள்ள வழக்கறிஞர் நிசான் பரஞ் சோதி கேசரி வார இதழுக்கு நேற்றுத் தெரிவித்தார். இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மொத்தமாக 140பேர் அடங்குவதாக தெரிவித்த அவர் இவர்கள் அனைவரும் பிரித்தானியாவிலிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அங்கிருந்து சார்ட்டட் விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரித்தானியா போன்று பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தத்தம் நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை துரித கதியில் மேற்கொண…
-
- 4 replies
- 1.5k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக்கும் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த்தும் இப் போது கொழும்பு அரசியல் மட்டத்தில் அடிக்கடி சர்ச்சைகளைச் சந்தித்து வருகின்றனர். இருவருமே இப்போது பொது நிகழ்வுகளில் பங்கேற்கின்ற போது வலியுறுத்தி வருகின்ற ஒரு விடயம் இலங்கை அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வு ஒன்றை முன் வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இராணுவ ரீதியில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்றும் அரசியல் தீர்வு காணு மாறும் வலியுறுத்தும் வெளிநாட்டுத் தூதுவர்க ளும், இராஜதந்திரிகளும் தென்னிலங்கை அரசி யலில் வெறுப்போடு நோக்கப்படுகின்றனர். அரசாங்கத்தின் இராணுவத் தீர்வு முனைப் புக்கு ஆதரவு வழங்குவோர் அல்லது அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்போர் தேச…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில், சண்டை நிறுத்தம் ஏற்பட இந்தியப் பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாக உண்ணாநிலை இருந்து வருகிறார். அவர் உண்ணாநிலை இருந்து வரும் மறைமலை நகருக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்த இராமதாஸ், அவரது உடல் நலம் கருதி உண்ணாநிலையைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். இன்று அவர் தனது உண்ணாநிலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகத்தான் இங்கு வந்தேன். ஆனால், இன்று போய் நாளை வா என்கிற வகையில் அவர் என்னிடம் பேசியிருக்கிறார். நாளையாவது அவர் உண்ணாநிலையை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் இராமதாஸ் வலியுறுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா…
-
- 0 replies
- 803 views
-
-
மகிந்த பணம் கேட்டு வர உள்ளாரா? அமெரிக்காவில் 2-3 வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட தொடங்கிய பொருளாதார நெ ருக்கடி உலகில் பாரிய சிக்கலை உருவாக்கியிள்ளது. தமிழின அழிப்பையே தொழிலாகக் கொண்டுள்ள மகிந்தரும் "மாசி 4ம் திகதி" தொடக்கம் புலம் பெயர்ந்த "சிறிலங்கரிடம்" 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்டு வர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முதலீடு செய்பவர்களுக்கு "சிங்கள் அரசின் உறிதல் பத்திரம் (பொண்ட்)" வழங்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் முன்பு வெளினாட்டு வங்கிகள்க்கு விற்ற இனவாத அரசு அவர்கள் சிங்கள அரசின் திருப்பி கட்டக்கூடிய வலு குறைக்கப்பட்ட நிலையில் "தமிழின அழிப்பின் வெற்றியை" மூலதனமாக்கி மக்களை முட்டாளாக்க வெளிக்கிட்டுள்ளது. அ) அன்னிய நாட்டு செலாவாணி: வெளினாட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 346 views
-
-
தமிழர்களை கொன்று குவித்தால் ஏவுகணை வீசுவோம் என்று இந்தியா மிரட்டக்கூடாதா?: தா.பாண்டியன் கேள்வி [சனிக்கிழமை, 17 சனவரி 2009, 11:28 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து கொன்று குவித்தால் ஏவுகணை வீசுவோம் என்று இந்தியா பூச்சாண்டி காட்டினாலே போதும், அங்குள்ள சிங்களவன் இந்தளவுக்கு ஆட்டம் காட்டுவானா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் போரை நிறுத்த இந்திய மத்திய அரசை வலியுறுத்தி மூன்றாவது நாளாக உண்ணாநிலை இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் க…
-
- 2 replies
- 886 views
-
-
தமிழர் போராட்டத்தில் பிரபாகரனின் பங்கு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Prominent Tamil Civil Socity Activist Shanthi Sachchithanandan speaks about Prabakaran's role in the Tamil National Struggle
-
- 0 replies
- 1.9k views
-
-
திருகோணமலை மாவட்டம் மல்லிகைத்தீவு பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 3 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 321 views
-
-
கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சந்திரகாந்தன் குழுவினரை அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீட அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
எமக்காக தன் உயிரை பணயம் வைத்து, இந்திய அரசின் கண்களை திறக்க முயற்சிக்கும் திருமாவின் உண்ணாவிரதப் போரட்டத்திற்கு எமது கோடி நன்றிகள். இவரின் போரட்டமானது உலக தமிழர்களின் உணர்வுகளை மேலும் பற்றி எரிய வைத்துள்ளது. நாமும் இவருடன் சேர்ந்து போராடுவோம். தமிழர்கள் உள்ள எல்லா இடங்களிலும் கவன ஈர்ப்பு போரட்டம் ஓயாமல் ஒலிக்க வேண்டும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
வன்னியின் மனித அவலத்தை தடுத்து நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளரிடம் கடிதமூலம் கோரிக்கை [ சனிக்கிழமை, 17 சனவரி 2009, 03:53.19 PM GMT +05:30 ] வன்னியில் இடம்பெறுகின்ற போரை உடனடியாக தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பலியாவதை தடுக்கவேண்டும் என வன்னியில் உள்ள கத்தோலிக்க மற்றும் ஏனைய மதகுருமார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன்னிடம் கடிதம் கோரிக்கை விடுத்துள்ளனர். நடைமுறை போர் இலங்கையில் தமிழர்களின் நியாயாதிக்கத்தையும், சமவுரிமையையும் மறுக்கும் வகையில் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். போர் காரணமாக இடப்பெயர்வுகள் தொடர்கின்றன. இந்தநிலையில் சுமார் 5 இலட்சம் மக்கள் முல்லைத்தீவில் மாத்திரம் தஞ்சமடைந்துள்ளனர். ஜெனீவா உடன்படிக்கையி…
-
- 0 replies
- 453 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் ஜேர்மனி நாட்டு தூதுவரை அழைத்து விசாரணைகளை நடத்திய 24 மணி நேரத்தில் ஜேர்மனி அரசாங்கம் தனது நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-