ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கையில் தடைசெய்வது தொடர்பாக இலங்கையின் அமைச்சரவை இன்று மாலை (30.12.2008)ஆராய்வதாக ஏ எப் பி செய்திசேவை தெரிவித்துள்ளது.இன்று இடம்பெறும் கூட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் விசேட அமைச்சவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறும் என எ.எப்.பி தெரிவித்துள்ளது. விரிவான செய்தி....விரைவில் http://www.tamilseythi.com/srilanka/breaki...2008-12-30.html
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் அவலப்படும் மக்களின் நிலைமையை நேரில் அறிய ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன இன்று செவ்வாய்க்கிழமை அங்கு விஜயம் மேற்கொள்கிறார். அங்கு அல்லற்படும் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவே இன்று தான் அங்கு செல்கிறார் என அவர் தெரிவித்தார். தமது விஜயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தனது விஜயம் குறித்து அவர் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளவை வருமாறு:- இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், மனித உரிமைகள் பாது…
-
- 1 reply
- 1.2k views
-
-
'நான் இவனுக்கு சரியான பாடமொன்று கற்பிக்கின்றேன்' ஜனாதிபதி - பிரதம நீதியரசருடன் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வி : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி கண்டுள்ளதாக ட்ரான்ஸ் கல்ப் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ' நான் இவனுக்கு சரியான பாடமொன்று கற்பிக்கின்றேன்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், பிரதம நீதியரசருக்கும் இடையிலான முறுகலை தீர்க்க சில அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்திற்கும், நீதிமன்ற அதிகாரத்திற்கும் இடையில் ஏற்பட்டு…
-
- 0 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் வன்னி நடவடிக்கையில் 10 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர், 25 ஆயிரம் படையினர் காயமடைந்தனர். [செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30, 2008] வன்னி நடவடிக்கைகளில் 10 ஆயிரம் சிறிலங்கா படையினர் உயிரிளந்துள்ளனர். இவைதவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் மிக அதிகம். எனவே தற்போது படைப்பலத்தை தக்கவைப்பதற்கு அரசு பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப் படை நடவடிக்கை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரையிலும் 10 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 25 ஆயிரத்துக்கு மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரம்பேர் உறுப்புக்களை இளந்துள்ளனர். இந்தக்காலப்பகுதியில் 25 ஆயிரத…
-
- 6 replies
- 4.4k views
-
-
மாலைதீவின் புதிய ஜனாதிபதி இலங்கை வரவுள்ளார் வீரகேசரி இணையம் 12/30/2008 2:43:28 PM - மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் நசீத் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இலங்கை வரவுள்ள மொஹமட் நசீத், மாலைதீவின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். ஜனவரி மாதம் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி, இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகக் கலந்த…
-
- 1 reply
- 799 views
-
-
சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம். எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார். மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண…
-
- 8 replies
- 2.1k views
- 1 follower
-
-
மன்னார், முருங்கன் ஓயாவில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். முருங்கன் ஓயாவில் சட்ட விரோதமாக மண் அகழ்ந்து கொண்டிருந்த நால்வர் கொண்ட குழு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டார். மூவர் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடமம்பெற்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 971 views
-
-
சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடைவிதிக்க மகிந்த ராஜபக்ச தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு கப்பல்கள் கடந்த சில வாரங்களில் ஆயுதங்களையும் மருத்துவ உபகரணங்களையும் தரையிறக்கியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு ஆய்வு இணையத்தளம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
கிழக்கின் உதயத்தைப் போல் வடக்கிலும் வசந்தத்தை ஏற்படுத்துவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 483 views
-
-
சிறிலங்காவின் தனியார் வங்கிகளில் பணத்தை வைப்பு செய்வதற்கு மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 489 views
-
-
வீரகேசரி இணையம் 12/29/2008 2:17:53 PM - விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் கைது செய்துவிடுமென அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டியில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
- 27 replies
- 4.9k views
- 1 follower
-
-
சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதுடன் பொதுமக்களின் வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
களமுனைகளில் சிங்களப் படை முடங்கி சாவுக்குழிக்குள் அகப்பட்டு யோயுள்ளது திகதி: 30.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] எமது மண்ணை வல்வளைப்புச் செய்து கிளிநொச்சி, முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய சிங்களப் படைகள் எமது களமுனைப் போராளிகளின் வீரமிகு தாக்குதல்களால் களமுனைகளில் மூச்சடங்கி சாவுக்குழிக்குள் அகப்பட்டுப் போயுள்ளனர். இவ்வாறு வடமராட்சி கிழக்குக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் நேற்று முன்தினம் கரைச்சி வடக்கு, பூநகரி, வடமராட்சி கிழக்கு, மாந்தை மேற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற…
-
- 0 replies
- 3.2k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் வெலிக்கந்தைக்கு விஜயம் செவ்வாய், 30 டிசம்பர் 2008, 08:48 மணி தமிழீழம் [செதியாளர் மகான்] வடமத்திய மாகாணமான பொலநறுவை மாவட்டத்தின் எல்லைக்கிராமமான வெலிக்கந்தை பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர். நேற்று திங்கக்கிழமை காலையில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சு உயர் மட்ட குழு, மற்றும் படை உயர் அதிகாரிகள் வெலிக்கந்தை பகுதியில் தற்போதைய சூழ்நிலை தொடர்பாகவும் மட்டக்களப்பின் எல்லைக்கிராமங்களில் இடம்பெற்று வரும் போர்; நடவடிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இடம…
-
- 0 replies
- 1.1k views
-
-
தாக்குதல்களுக்கு இலக்காகும் காஸாவும் கிளிநொச்சியும் [30 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 11:05 மு.ப இலங்கை] பாலஸ்தீன தேசம் மீது மிகக் குரூரமான தாக்குதல்களை கொடூரமாக ஆரம்பித்திருக்கின்றது இஸ்ரேல். மத்திய கிழக்கில், பாலஸ்தீன மக்களைத் துரத்தியடித்து, ஆக்கிரமித்த பிரதேசத்திலே இஸ்ரேல் தேசம் உருவாகிய பின்னர் - இந்த அறுபது ஆண்டு காலத்திலே - மிக மோசமான இரத்தக் காட்டாறு ஓடிய நாட்களாக கடந்த ஓரிரு தினங்கள் அமைந்திருக்கின்றன. நேற்று முன்தினம் மாத்திரம் நூற்றுக்கு மேற்பட்ட பறப்புகளை மேற்கொண்டு, காஸா முனை மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மாரி பொழிந்ததில் குறைந்தபட்சம் முந்நூறு பேர் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் அங்கங்கள், அவயவங்களை இழந்து படுகாயமடைந…
-
- 0 replies
- 1.7k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்காக களமிறக்கப்பட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் இரு அணிகளை வழிமறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கியுள்ளனர். இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 555 views
-
-
கிளிநொச்சி மருத்துவமனை பகுதி அண்மைக்காலமாக சிறிலங்கா வான் மற்றும் தரைப் படையினரின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது தொடர்பாக "புதினம்" ஆய்வுப் பிரிவிடம் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள், இத்தாக்குதல் தொடர்பான விபரங்கள் தெளிவான முறையில் ஆவணப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 686 views
-
-
குடாநாட்டில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி பதவி காலத்தில் 2000 பேர் காணவில்லை.பெரும்பாலான காணாமல் போதல்களில் பாதுகாப்புத் தரப்பினரின் நேரடித் தொடர்புகள் குறித்து எழுத்து மூல சாட்சிகள் உள்ளன. மேலும் வாசிக்க http://www.pathivu.com/news/1079/34/2000/d,view.aspx
-
- 1 reply
- 1.5k views
-
-
இரணைமடு தாக்குதலில் டாங்கியை பயன்படுத்திய புலிகள் [செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2008, 06:02 மு.ப ஈழம்] [பி.கெளரி] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் முன்னரண் பகுதிகள் மீதான தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் டாங்கியை பயன்படுத்தியுள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலின் போது ரி-55 ரக டாங்கியை பயன்படுத்தியுள்ளனர். இரணைமடுவின் வடக்குப் பகுதியில் 57-4 ஆவது பிரிகேட்டின் இரு பற்றலியன்கள் நிலைகொண்டிருந்தன. இவர்களின் பாதுகாப்பு நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் சிறப்ப…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஈழத் தமிழரைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு துணை போகும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகிற சனவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார் அவரை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் நடத்துவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதனை இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பெரியார்திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார் என எமது தமிழ்செய்தி நிருபர் தெரிவித்தார். http://www.tamilseythi.com/tamilnaadu/kovai-2008-12-29.html -தமிழ்செய்தி நிருபர்
-
- 2 replies
- 1.9k views
- 1 follower
-
-
கடலூரில் டிசம்பர்-28 ந் தேதி மீனவர் எழுச்சிநாள் விழா நடத்தப்பட்டது. மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் இரா.மங்கையர் செல்வன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மீனவர் சங்கப் பொறுப்பாளர்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். * இந்திய அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதானத் தடையை உடனடியாக நீக்க வேண்டும். * சிங்கள அரசுக்கு செய்து வரும் ஆயுத உதவி, நிதியுதவி, போர்ப் பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழக மீனவர்கள் மற்றும் தமிழீழத்திற்கு ஆதரவான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. " இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் கம்யூனிஸ்ட்" சிங்காரவேலரின் பிறந்தநாளன்று தமிழீழ ஆதர…
-
- 1 reply
- 2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் மேலும் ஒரு சிறுவர் சிப்பாய் பலி முல்லைத்தீவு நகரை நோக்கி நேற்று அதிகாலை சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய முறியடிப்புச் சமரில் 68ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல படையினர் படுகாயங்களுக்குள்ளாகினர். இந்த தாக்குதலின்போது பலதரப்பட்ட படையப்பொருட்களும் 16 படைச் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பலர் சிறுவர் படையினராக இருந்துள்ளனர். அதில் ஒருவர் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய போரில் ஈடுபடுத்த முடியாத 17 வயதானவர் (26.06.1991இல் பிறந்தவர்) என அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்து தெரியவந்துள்ளது. அவரது பெயர் ராஜபக்ச மொகட்டகே …
-
- 1 reply
- 1.9k views
-
-
மின்மாற்றிக்கு அருகில் சிறிய குண்டுவெடிப்பு இரத்மலானையில் சம்பவம் வீரகேசரி நாளேடு 12/29/2008 10:48:30 PM - இரத்மலானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழுமடம சந்தியிலுள்ள மின்மாற்றிக்கு அருகில் சிறிய குண்டொன்று வெடித்துள்ளது. இதனால், மின்மாற்றிக்கு எவ்விதமான தேசமும் ஏற்படவில்லை. எனினு, மின்மாற்றியைத் தாங்கி நின்ற கொங்கிறீட் தூண்களின் ஒன்று சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மின்மாற்றியைத் தாங்கிநின்ற தூண் ஒன்றின் அடியே சேதமாகியுள்ளது. சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மின்மாற்றியை இலக்குவைத்துப் பொருத்துவதற்கு அல்லது வேறு இடத்திற்குக் கடத…
-
- 0 replies
- 882 views
-
-
மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்த்தை தெரிவிக்கும் சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு சமர் ஆய்வுப் பிரிவின் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளன. களமுனையில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் பாவலன் தலைமையில் இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரை சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஏற்ற, மாவீரர் ஈகச்சுடரை கட்டளைத் தளபதி கேணல் பானு ஏற்றினார். மலர்மாலையை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் சூட்டினார். மலர்வணக்…
-
- 0 replies
- 3.6k views
-