ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
கிழக்கு எம்.பிகளுக்கு அழைப்பில்லையேல் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிப்போம் – தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை என்றால் அவருடன் இடம்பெறவுள்ள சந்திப்பை வடக்கு எம்.பிக்கள் புறக்கணிப்பர் என தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பங்காளி கட்சிகள் மற்றும் இதர தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். 11ம் 12ம் 13ம் திகதிகளில் அதிகாரப் பரவலாக்கல், வடக்கிலுள்ள பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தம…
-
- 0 replies
- 252 views
-
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம் யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்ற முடியாது.” – இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டி…
-
- 29 replies
- 1.8k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2023 | 03:19 PM தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று சனிக்கிழமை காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து ந…
-
- 2 replies
- 362 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2023 | 04:27 PM (எம்.நியூட்டன்) கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது. சிங்கள பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடிற்கு எதிரான இப் போராட்டத்திற்கு தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந…
-
- 13 replies
- 676 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2023 | 04:13 PM (எம்.நியூட்டன்) வலிகாமம் வடக்கு வசாவிளன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. எவ்வித அனுமதியும் இன்றி இந்த வைத்தியசாலை கட்டப்பட்டு வருகிறது என வலிவடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ச.சஜிவன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலி வடக்கு தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் பிரதேச சபைக்கூட்டத்தில் கலந்துரையாடி அதனை நிறுத்த வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதேபோல் வசாவிளான் பகுதியில் 245 கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ வைத்தியசாலை கட்டப்பட்டு வருகின்றது.…
-
- 2 replies
- 207 views
- 1 follower
-
-
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் அவர்கள் வழமையை விட அதிகமாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னேஹக்க தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களை விட கடந்த சில மாதங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சடுதியாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெளிப்படையாக கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாலும், அரச சேவைக்கு புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்ளாத அரசா…
-
- 0 replies
- 605 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 06 MAY, 2023 | 02:35 PM ரஷ்ய வரலாற்றின் வெற்றி நாள் கடந்த வியாழக்கிழமை (4) கொழும்பு பொது நூலக வளாகத்தில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது பிரபல ரஷ்ய திரைப்பட நட்சத்திரமான சோஸ்லான் ஃபிடரோவ் மற்றும் தேசிய முன்னணி தன்னார்வலர் அலியோனா போஸ்டோவலோவா ஆகியோரால் தேசபக்தி திட்டமான 'தி ஃபிளேம் ஒஃப் மெமரி'யின் ஒரு பகுதியாக சுடர் கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்டது. இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாபெரும் தேசபக்தி போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், ரஷ்யர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இது மிகவும் சிறப்பான …
-
- 3 replies
- 714 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 10:25 AM (எம்.மனோசித்ரா) நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் மற்றும் அதன் வினைத்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர , ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மின்சக்தி துறையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் , மின் உற்பத்தி நிறுவனங்களாக மேம…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளது. ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நன்கொடையின் கீழ், நாட்டில் புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிவாரணம் அளிப்பதாகவும், அதற்காக ஈரான் மக்களுக்கும் ஈரான் …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவிக்கு பசில் ராஜபக்ஷ ?? – கட்சிக்குள் முரண்பாடு மே தினக் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவிற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து பொதுஜன பெரமுனவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக காட்சிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பதாகையில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பசில் ராஜபக்ஷவின் படம் காட்டப்பட்டிருந்தது. இதனை கட்சியின் நன்மதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக கருதுவதால், இந்த விடயம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் ஆட்சேபணைகள் எழுப்பப்பட்டுள்ளன. முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கோட்டாபய ராஜபக்சவின் படம் விளம்பரப்படுத்தப்பட்ட போதும் அவர் …
-
- 0 replies
- 276 views
-
-
போலி நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது. 12 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்று யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக ஆணையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த நபர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்ப…
-
- 0 replies
- 366 views
-
-
நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு அதிகரிப்பு! நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பானது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.2 வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் இறுதியில் 2.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை இது எட்டியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் வெளிநாட்டு நாணய கையிருப்பு 2.69 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த சொத்து கையிருப்பில் சீன மக்கள் வங்கி பரிவர்த்தனை முறை மூலம் வழங்கிய 1.4 பில்லியன் ட…
-
- 0 replies
- 325 views
-
-
4 ஆளுநர்களை இராஜினாமா செய்ய அறிவுறுத்தல் 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/4-ஆளுநர்களை-இராஜினாமா-செய்ய-அறிவுறுத்தல்/150-316807
-
- 10 replies
- 939 views
-
-
Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 11:13 AM யாழ்பாணம் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் வெள்ளிக்கிழமை (05) இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது. இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர். இதில் முக்கிய வீதிகளிலும் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், நடன ஆற்றுக்கைகள், கவியங்கங்கள், சொற் பொழிவுகள், புகைக்குண்டு ஏற்றல், வான வேடிக்கைகள் இடம்பெற்று இன்று அதிகாலையில் முத்துமாரி அம்மன்,சமேதராக ஆலயத்தின் வந்தடைந்தனர். …
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 05 MAY, 2023 | 05:06 PM (நா.தனுஜா) நிதிசார் வசதிகளை இலகுவாக அணுகுவதற்கு ஏதுவான முறையில் இலங்கையை மீளவகைப்படுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித்தலைவர் ஷிக்ஸின் சென்னிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கைவிடுத்துள்ளார். தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் கடந்த 2 - 5 ஆம் திகதிவரை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கியஸ்த்தர்கள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர…
-
- 1 reply
- 252 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 10:18 AM (எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைப்போன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பாரிய விடயங்கள் எதுவும் இல்லை. உலகில் ஏனைய நாடுகளில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு நிகரான சட்டமூலமே தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சட்டமூலத்தில் ஒரு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே …
-
- 1 reply
- 233 views
- 1 follower
-
-
வடக்கில் 3 இடங்களில் முதலீட்டு வலயங்கள் வடக்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள் அமைப்பதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம். அங்கே முதலீட்டு வலயம் அமைக்க உத்தேசித்துள்ளோம். கிளிநொச்சியில் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலும், மாங்குளத்தில் 400 ஏக்…
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 MAY, 2023 | 05:37 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து உரையாடவுள்ளோம் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். எதுல் கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, …
-
- 8 replies
- 778 views
- 1 follower
-
-
அனைத்து மாகாணங்களுக்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான உரிமம் (eRL) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், புதிய வாகன வருமான உரிமத்தைப் பெறுவதுடன், தற்போதுள்ள வருமான உரிமத்தை (ஈஆர்எல்) புதுப்பிக்கும் வசதியும் கொண்டு உள்ளது. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மற்றும் ஒன்லைன் முறையின் மூலம் உரிமத்தைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகளை கிரெடி…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAY, 2023 | 02:49 PM வட மாகாணத்தில் சீனாவின் உதவி திட்டத்தில் கடற் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண மக்களுக்காக சீன அரசிடம் இருந்து சுமார் 1500 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெறவுள்ள நிலையில் குறித்த நிதியுதவியில் அரிசி, கடற்தொழிலாளர்களுக்கு வலை மற்றும் வீடுகள் பெற்றுக…
-
- 1 reply
- 573 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAY, 2023 | 02:03 PM யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பருத்தித்துறையில் இருந்து நேற்று வியாழக்கிழமை, முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்க்கவென பெண்ணும், இரண்டு ஆண்களும் கீரிமலை பகுதிக்கு வந்துள்ளனர். கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்த…
-
- 5 replies
- 760 views
- 1 follower
-
-
முன்னறிவிப்பு இன்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதேவேளை பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டது. ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தமையினால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என மருத்துவமனையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/25…
-
- 0 replies
- 565 views
- 1 follower
-
-
இலங்கையின் வனவிலங்கு வளங்களை நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கு பயன்படுத்த முடியும் என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கிரித்தலையில் நேற்று வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தால், நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்கு வளங்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும். உலகில் மிகச் சிலரே எமது நாட்டைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும், மிகச் சிலரே எமது நாட்டின் அழகை அறிவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உலகின் பெரும்பாலான நாடுகளிலுள்ள மக்கள் குளிர் காலநிலையால் க…
-
- 3 replies
- 586 views
- 1 follower
-
-
தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம் தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடகங்களை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை இராணுவத்தினருடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறான பல்வேறு அத்துமீறல்களை அரச படைகளும், அரசும் தொடர்ந்து வண்ணமே உள்ளன. இந்த லட்சணத்திலே இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம…
-
- 2 replies
- 498 views
-
-
Published By: T. SARANYA 05 MAY, 2023 | 12:57 PM வவுனியா பூவரசங்குளம் பகுதியில் தன்னால் தந்தை அவமானப்படுவதை தாங்க முடியாமல் மாணவன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபே…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-