ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
தாயகத்தில் வாழும் மக்களை சிங்கள அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பிலிருந்து பாதுகாக்குமாறு கோரி பிரான்சில் எதிர்வரும் சனிக்கிழமை (13.12.08) மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 402 views
-
-
சிறிலங்காவின் இரண்டு மாகாண சபைகள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 559 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரவாணிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள். தமிழகமெங்கிலும் இருந்து 800 அரவாணிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரணநிதியாக வழங்கினார்கள். கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘’திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.…
-
- 1 reply
- 785 views
-
-
புதுச்சேரி வி-5 குழு ஓவியர்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் சார்பில் ஈழத்தமிழர் நிவாரண நிதிக்காக வீதியோர ஓவியக் கண்காட்சி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இரண்டு நாட்கள் (6,7-12-2008) நடைபெற்றது. கண்காட்சிக்கு ஓவியர் தனசேகர் தலைமைத் தாங்கினார். ஓவியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஓவியர்கள் எழிலரசன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவுத் தெரிவித்தனர். கண்காட்சியில் இளம் ஓவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் காண்காட்சிக்கு வருவோர்களின் முகபாவங்களை ஓவியர்கள் உடனுக்குடன் வரைந்தும் அதன்மூலம் தொகை ஈட்டினர். ஓவிய விற்பனை மற்றும் ஓவியம் வரைந்ததின் மூலம் கிடைக்கும் நிதியை ஈழ…
-
- 0 replies
- 619 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தாயும் அவரது ஒன்பது வயதான மகனும் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 611 views
-
-
தமிழர் போராட்டத்தை அடக்க கச்சை கட்டி நிற்கும் சிங்களம் [08 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:25 மு.ப இலங்கை பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படமாட்டோம் என நாடாளுமன்றத்தில் செய்துகொண்ட தமது சத்தியப்பிரமாணத்துக்கும், அரசமைப்புக்கும் எதிராகச் செயற்பட்டார்கள் என்று தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத்துறையினர் தாக்கல் செய்த முதனிலை அறிக்கையை (b report) ஒட்டித் தாம் கடந்த வெள்ளியன்று காலை விடுத்த உத்தரவை அன்று மாலையே வாபஸ் பெற்றுக்கொண்டு விட்டார் கொழும்பு பிரதம நீதிவான். மட்டக்களப்பு எம்.பிக்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், யாழ். மாவட்ட எம்.பிக்களான செல்வராஜா கஜேந்திரன…
-
- 1 reply
- 1.1k views
-
-
படையினர் இலக்கையடைய முடியாது புலிகள் போட்டுள்ள தடைகள்: - முகர்ஜியின் வருகை எதற்காக? -விதுரன்- (தினக்குரல்) [Monday, 2008-12-08 03:35:35] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜ?திபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சந்தித்தபோது ஏற் படாத யுத்த நிறுத்தம், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரtப் முகர்ஜியின் இலங்கை விஜயத்துடன் ஏற்பட்டுவிடுமா? தமிழக முதல்வர் கருtநிதியையும் தமிழகத் தலை வர்களையும் சமாளிக்கும் அதேநேரம் பிரtப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய இன்னொரு தேவையும் இந்தியாவுக்கு உண்டு. அது இலங்கைத் தமிழர் நலன் சார்ந்ததல்ல. இந்தியாவின் நலன் சார்ந்ததென்பதால் இலங்கைப் பிரச் சினையை பயன்படுத்தி இந்தியா தனது நலன்சார் விடயம் குறித்து கவனம் செலுத்தவுள்ளது. இலங்கையில்…
-
- 1 reply
- 3.2k views
-
-
எம்.பி.க்களின் நடமாடும் சுதந்திரம் மீறப்படுவது இது முதற்றடவையல்ல - சபையில் சம்பந்தன் எம்.பி. விசனம் வீரகேசரி நாளேடு 12/8/2008 9:57:04 PM - பாராளுமன்ற உறுப்பினர்களின் நடமாடும் சுதந்திரம் மீறப்படுதல் இது முதல் தடவையல்ல என்பதுடன் கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தின் போதும் எமது எம்.பி.க்களை சபைக்கு வர முடியாத வகையில் தடுத்து நிறுத்தினர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் எம்.பி. யுமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான பா. அரியநேத்திரன் சபையில் இன்று திங்கட்கிழமை சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றியதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது…
-
- 0 replies
- 564 views
-
-
இந்தியாவின் தூதுவராக இலங்கை வரும் அமைச்சர் தொடர்பில் நான் ஒரு மாத காலத்திற்கு முன்னரே அழைப்பினை விடுத்தேன். அவர் அந்த அழைப்பினை ஏற்றுத்தான் இலங்கை வருகிறார். வெளிவிவகார அமைச்சின் புதிய காரியாலயத் திறப்பு வைபவத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது : இன்று வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர் மற்றும் வெளிநாட்டுத் தகவல்கைள் அறிந்து கொள்ள விரும்பும் எம்மவர்களிடையே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இந்தக் காரியாலயம் ஒரு கேந்திர நிலையமாக இருக்கும். இன்று 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாட்டில் வாழ்க…
-
- 0 replies
- 650 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவா் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 686 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரவாணிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தமிழகமெங்கிலும் இருந்து 800 அரவாணிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரணநிதியாக வழங்குகிறார்கள். கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘’திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை பாராளுமன்றம் நாளை மறுதினம் கலைக்கப்படும்? இலங்கைப் பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று கலைக்கப்படும் என்ற ஊகங்கள் நேற்று அரசியல் தரப்புகளில் பேசப்பட்டன. ஆயினும் இந்த ஊகத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ எவரும் முன்வரவில்லை. எனவே ஜனாதிபதி தமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நல்ல நாளாக சோதிடர்களால் கூறப்பட்டுள்ள எதிர்வரும் செவ்வாய்க்கிழமையை கருத்திற்கொண்டே இந்த ஊகம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊகங்களின் அடிப்படையில் நாளை மறுநாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை நடைபெறவுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் வ…
-
- 12 replies
- 2.6k views
-
-
குமுதம் ரிப்போட்டர் 11.12.2008ல் திரு.சோலை 'பயங்கரவாத கோரமுகம்' என்ற தலைப்பில் மும்பாயில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய கருத்துக்களை எழுதும் போது இவ்வாறு கேட்டிருக்கிறார். விடுதலைப்புலி களுக்கு வெங்காயம் போகிறதா வெடிகுண்டு போகிறதா என்பதனை இராமேஸ்வரம் கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணித்து வருகிறது. அதேபோல கராச்சியிலிருந்து மும்பை வரையுள்ள கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணிக்கவில்லையா? விடுதலைப்புலிகளின் மையங்களை இந்திய செயற்கைக்கோள் துல்லியமாகப் படம்பிடித்துத் தருகிறது. அந்தப் படங்கள் சிங்கள ராணுவத்திற்குச் சென்று சேருகின்றன. அதே போல் அரபிக் கடல் அலை அடிக்கும் நமது கடற்கரையை செயற்கைக் கோள்கள் படம் பிடிப்பது இல்லையா? இதே குமுதம் ரிப்போட்டரில் வந்த வம்பான…
-
- 5 replies
- 1.8k views
-
-
2009ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று அரசாங்கத்தில் இணைந்துகொண்ட மாற்றுக் குழுவினர், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வது பற்றி ஆராய்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியைக் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற கரு ஜெயசூரியாவுக்கு வழங்கப்பட்டால் அதற்குத் தான் ஆதரவு வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறியிருந்தார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணை…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கில் முன்னெடுக்கப்படும் போர் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி இப்போது தலை தூக்கியிருக்கிறது. ஒரு புறத்தில் இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று கூறிக்கொண்டே, மறுபுறத்தில் போரை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஐ.தே.க. இறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசாங்கத் தரப்பில் இருந்து "போர் தொடர்பான உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிப்பீர்களா?' என்று சவால் விடப்பட்டது. ஆனால் அதற்கு ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமான பதில் எதையும் கொடுக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, தமது கட்சி போர…
-
- 3 replies
- 927 views
-
-
தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் 'சியால்த்' உணர்ந்து சொன்னது போல, "இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" அது போல "இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள், பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணி…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரின் தரைப்படைத் தளபதியுமான சரத் பொன்சேகாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இந்தியாவிலிருந்து சிறிலங்கா தூதுவரை வெளியேற்ற வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 417 views
-
-
தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது - இராணுவ தளபதி தமிழ்நாட்டு “அரசியல் ஜோக்கர்கள்” இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை காங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் அரச செய்திதாளான சண்டே ஒப்சேவருக்கு செவ்வியளித்துள்ள அவர், இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான அக்கறையை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்தில் நெடுமாறன் மற்றும் வை கோ போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கிடைக்கும் வருமானங்கள் குறைந்து விடும் என்றும் …
-
- 22 replies
- 3.5k views
-
-
மும்பையில் இடம்பெற்ற தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் கண்டிக்கவில்லை என தமிழ்நாட்டின் தமிழர் விரோத ஆங்கில ஏடான இந்து (The Hindu) நாழிதழ் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் புதிய தமிழர் கண்ணோட்டம் இதழில் பதிலிறுக்கப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர்நாள் உரையில் மும்பை தாக்குதல் கண்டிக்கப்படவில்லை எனவும், அல்லது பின்னரேனும் கண்டித்திருக்கலாம் என்றும் இந்து நாழிதழ் கடந்த முதலாம் நாள் ஆசிரியர் தலையங்கள் தீட்டி விசமப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தது. அனைத்துலக விடயங்களில் விடுதலைப் புலிகள் ஆதரவை, அல்லது கண்டனத்தை தெரிவிப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் தமிழர் கண்ணோட்டம், அவ்வாறு கண்டனம் தெரிவித்திருந்தால்கூட, இந்தியாவை ஏமாற்ற …
-
- 21 replies
- 3.5k views
-
-
தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.2k views
-
-
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர சுட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த மூத்த அமைச்சர் கரு ஜெயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 756 views
-
-
கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்! [தமிழ் இளையோர் அமைப்பு - கனடா] www.pathivu.com இலங்கை அரசாங்கம் கொத்தணிக் குண்டுகள் பாவிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நேரத்தில் அனைத்துலக சமூகத்திடம் இந்த கொடூர குண்டுகளை தடை செய்யுமாறும், கனடா அரசாங்கத்தை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து, இலங்கைக்கும் அதற்கு இக்குண்டுகளை வழங்கும் நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து இக்குண்டுத் தயாரிப்பை முடிவுக்கு கொண்டுவருமாறும் கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர். இதுகுறித்து அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:- கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்! டிசம்பர் 03, 2008 மனித உரிமைகள் நெரு…
-
- 0 replies
- 765 views
-
-
தன்மானமும் இனப்பற்றும் கொண்டவர்கள் இன்றைய இறுதி வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது – மனோ: www.globaltamilnews.com உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் தோட்டத் தொழிலாளர்களை பட்டினி போட்டு அழிக்கும் இந்த அரசாங்கம் பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து வடகிழக்கிலே தமிழர்களை அழிக்கின்றது. எனவே, தன்மானமும் இனப்பற்றும் கொண்ட எந்தவொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியும் இன்றைய இறுதி வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இன்றைய இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மனோ தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இன்று …
-
- 0 replies
- 709 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது – ஐ.தே.க: www.globaltamilnews.com ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், யுத்தத்தை முன்னிலைப்படுத்தி பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டி சபையில் பிரேரணை ஒன்றினைக் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று திங்கட்கிழமை நம்பிக்கையில்லாப், பிரேரணையையும் சமர்ப்பிக்கவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடனேயே அரசாங்கத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது …
-
- 0 replies
- 540 views
-