ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142870 topics in this forum
-
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 591 views
-
-
போராட்டத்தின் தேவையை ஏனைய இனங்கள் மத்தியில் கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி * ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் பாலகிருஷ்ணன் எஸ்.இரட்ணம் தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் விடுதலை அமைப்புகளால் தமிழ் மக்கள் மத்தியில் முன் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு அதன் அவசியத்தை ஏனைய இனங்களிடையே கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி கண்டுள்ளதாக அரச மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பான ஆய்வாளரும் ஆலோசகருமான எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இலங்கையின் தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் ஒரு வரலாற்றுப் பார்வை 19482007 ஆய்வு நூல் வெளியீட்டு விழா கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் ப…
-
- 0 replies
- 1k views
-
-
கிளஸ்டர் (Cluster) குண்டு பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 100-க்கும் அதிகமான உலக நாடுகள் சைச்சாத்திடவுள்ள மாநாடு நாளை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசாங்கம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது கடந்த சனிக்கிழமை இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை உட்பட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு சிறுவா்கள் உள்ளிட்ட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக கிளஸ்டர் குண்டு உள்ளது எனும் பின்னணியிலேயே 100-க்கும் அதிகமான உலக நாடுகள் இதன் பாவனைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன. …
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு பிரச்சாரப்பயணம் நேற்று [1-12-2008] கோவையில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் கழக அநைப்பளார் நா.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் உமேஷ்,தி.க.சம்பத் முன்னிலை வகிக்க ராசக்குமார் வரவேற்றுப் பேசினார். படங்கள் இணைப்பு http://www.tamilseythi.com/
-
- 1 reply
- 987 views
-
-
மன்னார் மாவட்டத்துக்கான மின்சாரக் கோபுரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் மன்னாருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்திலுள்ள சுமார் 7000ற்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய வெள்ளப்பெருக்குக் காரணமாக மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் வங்காலைக்கு அருகிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள மன்னாருக்கான பிரதான மின்சார விநியோகக் கோபுரம் வெள்ளத்தால் சரிந்து விழ்ந்துள்ளது. அந்தப் பகுதி சதுப்பு நிலம் என்பதால் அங்கு இன்னமும் நீர் தேங்கியிருப்பதாக மின்சாரசபை அறிவித்திருப்பதாக எமது மன்னார் செய்தியாளர் அறியத்தருகிறார். இதனால், முள்ளிக்குளம் பகுதியிலிருந்து பிரதான வீதி வழியாக புதிய மின்சாரக் கம்பங்களை அமைத்…
-
- 0 replies
- 614 views
-
-
(தமிழகம் ஒரு பார்வை) பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news....d=2890&cat= இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக விடுதலைச் சிறுதைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான இந்த குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி டெல்லியில், பிரதமரை சந்திக்கவுள்ளனர். காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் முடித்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே…
-
- 0 replies
- 1.2k views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமை அறிமுகம்: www.globaltamilnews.com கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்க ஏற்படக் கூடிய சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக விமான நிலைய முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.5k views
-
-
மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2894&cat=1 மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் கேரதீவப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கச்சதீவு சாளந்த மண்மேட்டுப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நான்கு இராணுவத்தினர் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் கேரதீவுப் பகுதியில் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்த அறிக்கையை சாவகச்சேரிப் பொலிஸார்இ சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எஸ்.பி.நிஷாந்த, பி.பி.ஏ.பெரேரா, எச்.எம்.ஏ.பண்டார, ஆர்.எம்.அபயர்வத்தன ஆகிய நான்கு இரா…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் வதை முகாமில் குண்டுவெடிப்பு! படையினர் ஒருவர் பலி! செவ்வாய், 02 டிசம்பர் 2008, 16:18 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] யாழ் ஊரெழுப் பகுதியில் அமைந்துள்ள வதை முகாமில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை காலை படை உறுப்பினரது கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில் ஒருவர் அந்த இடத்திலேயே பலியானதுடன், அருகில் நின்றிருந்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். pathivu
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகில் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தி சிறீலங்கா வான் படையினர் வன்னியில் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பாக உலக நாடுகள் எவையும் எந்தவித கண்டனத்தையும் இதுவரை தெரிவிக்காது மெளனமாக இருப்பது தமிழ் மக்களை பாரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 29ஆம் நாள் அதிகாலை 1:45 அளவில் மக்கள் நித்/திரையில் இருந்தபோது கிளிநொச்சி கல்லாறு நாதன் குடியிருப்பு, மற்றும் ராணிமைந்தன் குடியிருப்புக்கள் மீது சிறீலங்கா வான் படையினர் 16 குண்டுகளை வீசியிருந்தனர். இதன்போது பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 19 பேர் படுகாயமடைந்திருந்தனர். ரஸ்யத் தயாரிப்பான OFAB-500 ரக கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்வது பற்றி 100 நாடுகள் நாளை மறுநாள் புதன்கிழமை ஒஸ்லோவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.tamiloosai.com/index.php?option...4&Itemid=68
-
- 0 replies
- 1.5k views
-
-
மாவீரர் நாள் உரையினை புலிகளின் குரல் வானொலி நேரடி ஒலிபரப்பில் கேட்கலாம்
-
- 25 replies
- 8.3k views
-
-
முல்லைத்தீவு வெள்ள அனர்த்தம் - 3 பேர் மரணம் 3 பேர் காயம் - 14216 பேர் இடப்பெயர்வு - GA இமெல்டா சுகுமார்: http://www.globaltamilnews.net/tamil_news....=2887&cat=1 முல்லைத்தீவு மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 3 பொது மக்கள் கொல்லப்பட்டும் 3 பொது மக்கள் காயம் அடைந்தும் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தள்ளார். அத்துடன் 4330 குடும்பங்களைச் சேர்ந்த 14216 பேர் தொடர்நதும் இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது விசேட செவ்வியை ஒலிவடிவில் கேட்கலாம்.
-
- 0 replies
- 645 views
-
-
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்கத் திட்டம் - ஜே.வி.பி எதிர்ப்பு : www.globaltamilnews.com இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்கல்வி அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த பல்கலைக்கழகங்கள் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உயர்கல்வியைத் தொடர வெளிநாடு செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் பாரியளவு நிதி வெளிச் செல்வதாகவும், வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கக் கூடிய வகையிலான திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு ஜே.வி.பி கடும் எ…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 56,552 வீடுகள் அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி அரச செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 483 views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் திகதி: 30.11.2008 // தமிழீழம் // ] - எழுதியவர் மலைமகள் இது பாலியாறு போர் முன்னரங்கு. வெள்ளாங்குளத்திலிருந்து இலுப்பைக்கடவைக்குப் போகும் வீதியில் வலது முன்புறம் ஈழமங்கையும் அமர்வாணமும் தமது அணிகளைச் சிறு குழுக்களாகப் பிரித்துச் சிங்களப் படையினருக்குத் தொந்தரவு கொடுக்கும் நோக்கில் ஆங்காங்கே நிலைப்படுத்தியிருந்தனர். தொந்தரவு கொடுத்துக் கொண்டுமிருந்தனர். வீதிக்கு இடப்புறம் வேலை முடிவடையாமல் குறையில் நின்ற போர் முன்னரங்கில் தங்கநிலாவோடு அன்புமணியும் அணியினரும் நின்றனர். அன்று நெடுஞ்சாலையிலிருந்து இடப்புறம் உள்நோக்கிய திசையை நோக்கி போர் முன்னரங்கு வழியாகத் தங்கநிலா போய்க் கொண்டிருந்தார். காலையில் நடக்கத் தொடங்கியவர் இடம் பார்த்துவிட்டு, தன் …
-
- 0 replies
- 1k views
-
-
1918ம் ஆண்டுக்குப் பின்னர் நிசா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பலமாக பாதிப்பை வட தமிழீழம் கண்டுள்ள நிலையில் குறிப்பாக வன்னி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைக் கூட அனுப்ப விடாது சிறீலங்கா அரசு தடுத்து வருவதை சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துச் சாடியுள்ளது. Flood-hit Sri Lankans 'need help' Tens of thousands of people in flooded areas of northern Sri Lanka are without adequate shelter and need help now, the Human Rights Watch campaign group says. It has called on the government to immediately lift a ban imposed in September which stops humanitarian agencies from going to conflict areas. But the authorities say that flood …
-
- 5 replies
- 1.9k views
-
-
வீரகேசரி இணையம் - எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது. பாதுகாப்பற்ற பாலியல் உறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிக்கப்பட்டும், சுமார் 200 பேர் வரை மரணித்துமுள்ளனர். இது விபரம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தெரிவித்தார். ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம…
-
- 0 replies
- 544 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஆறு வயது மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 414 views
-
-
தமிழீழ தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு மலேசியாவில் உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
தமிழக மக்களால் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் வன்னிக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 553 views
-
-
எந்த நாடும் கட்டளையிட முடியாது - அமைச்சர் மஹிந்த சமரசிங்க: http://www.globaltamilnews.net/tamil_news....=2864&cat=1 வன்னியில் வாழ்கின்ற மக்களும் இலங்கை மக்களே. அவர்களுக்குத் தேவையானதை மேற்கொளவதோடு பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. எந்த நாடும் தமக்கு கட்டளையிட முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய அவர் 'எந்த நாடும் எமக்கு கட்டளையிட முடியாது. எமது மக்களுக்கு நாமே பொருட்களை அனுப்பி வைப்போம் 700 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. நாளாந்தம் அனுப்பி வைக்கப்படுகின்ற பொருட்கள் தொடர்பில் எதனையும் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதம் ஒழிக்கப்படும் என்னும் போர்வையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது – துரைரட்ணம்: http://www.globaltamilnews.net/tamil_news....=2865&cat=1 கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் படுகொலைகளை நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண பிரதி காவற்துறை மா அதிபர் ஆகியோரிடம் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் முதல்வருக்கும் பிரதி காவற்துறைமா அதிபருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் கீழ் செயற்படும் வகையில் ஜனாதிபதியினால் பிரதி காவற்துறைமா அதிபரொருவர் நியமிக்கப்பட்ட…
-
- 0 replies
- 601 views
-
-
தமிழர்கள் தமது பூர்வீக மண்ணில் வாழ்வதற்கு உரிமை உண்டு அவர்கள் நாட்டில் சமமாக வாழ்வார்கள் அல்லது தனித்து வாழவார்கள் - இரா சம்பந்தன்: http://www.globaltamilnews.net/tamil_news....=2862&cat=1 கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில் அங்கு நாள்தோறும் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழர்களின் பூர்வீக மண்ணில் வாழும் உரிமை தமிழருக்கு உண்டு. அந்த வகையில் தமிழர்கள் நாட்டில் சமமாக வாழ்வார்கள் அல்லது தனித்து வாழவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதேச நியமங்களை ஏற…
-
- 0 replies
- 569 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் பாடசாலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சிறுமியொருவர் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 775 views
-