ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம் மீது சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சிறார்கள் உட்பட பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்த கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கல்லாறு நாதன் குடியிருப்பு மீதே மிகையொலி கிபீர் ரக வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இன்று சனிக்கிழமை அதிகாலை 1:35 அளவில் மக்கள் நித்திரையில் இருந்தபோது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி செய்தியாளர் தெரிவித்தார். தருமபுரம் மருத்துவமனையின் தகவலின் அடிப்படையில் இதுவரை …
-
- 3 replies
- 827 views
-
-
விடுத்லைச்சிறுத்தைகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஈழத்தமிழர்களின் நலன்கருதி மாநாட்டினை டிசம்பர் 14ம் தேதிக்கு சென்னையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தேதியே இறுதி அறிவாப்பாகவும் இதனை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாதென்றும், இந்த மாநாடு நடப்பதினால் ஏற்படும் எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டார். மேலும் இந்த மாநாட்டின் மூலம் நாங்கள் தனித்தமிழீதை அங்கீகரிக்கின்றோம். தனித்த்மிழீழத்தில் தமிழர்களுக்கு ஆட்சி அமைக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை நாங்கள் கூறப்போகின்றோம். மேலும் தமிழர் தாயகமான தமிழீழத்தில் சிங்களப்படைகள் தற்போது ஆக்கிரமித்த்துள்ளன. சிங்கள்ப்படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருத்து விலகிவிட வேண்டு…
-
- 6 replies
- 1.6k views
-
-
கர்நாடக மாநிலத்தில் ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம்: புலமைப்பித்தனும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பு http://www.puthinam.com/full.php?22KoZcc2t...4A2e2FLO3b35GCe இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டத்தில் கவிஞர் புலமைப்பித்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். பெங்களுர் தமிழ்ச் சங்கம் சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 நிமிடத்துக்கு திருவள்ளுவர் அரங்கில் இப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் "ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை" எனும் தலைப்பில் தமிழக சட்ட சபை முன்னாள் துணைத் தலைவர் கவிஞர் புதுமைப்பித்தன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றவுள்ளார். தமிழ்த்…
-
- 0 replies
- 497 views
-
-
அம்பாறையில் புத்திக்கூர்மையற்ற இளைஞன் மீது அதிரடிப் படையினர் தாக்குதல் சனி, 29 நவம்பர் 2008, 12:31 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை சோதனைச் சாவடி ஊடாக கஞ்சிகுடிச்சாறு நோக்கி சென்ற புத்தி கூர்மையற்ற இளைஞன் ஒருவனை விசேட அதிரடிப்படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்வம் தொடர்பாக தெரியவருவதாவதுநேற்று முந்தினம் வியாழக்கிழமை தம்பட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது தங்கவடிவேல் ஜெகநாதன் என்ற இளைஞன் கஞ்சிகுடிச்சானாறு நோக்கி சென்ற போது அவரை சோதனைக்குட்படுத்திய விசேட அதிரடிப் படையினர் அவரிடம் எங்கு செல்லப்போகிறீர் என வினாவிய போது நான் மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற போகின்றேன் என்று கூறியதுடன் அவ்விடத்திலே கடும…
-
- 0 replies
- 440 views
-
-
யுத்தத்திற்கு செலவிடுவது ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் அல்ல என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனக்குக் கிடைத்த தகவல்களின்படி அண்மையில் 9 ஆயிரம் படையினர் மோதல்களில் உயிரிழந்ததாகவும் எனினும் அரசாங்கத்தின் ஊடகங்களும் அரசாங்கத்திற்கு ஒத்து ஊதும் ஊடகங்களும் படையினருக்கு சிறு சேதமே ஏற்பட்டதாக கூறுவதாகவும் விக்கிரமபாகு கூறியுள்ளார். இந்த யுத்தத்திற்குச் செலவிடப்படும் பணம் ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் இல்லை என்பதன் காரணமாகத்தான் யுத்தத்தில் ஏற்படும் விபரங்களை வெளியிடுமாறு கோருவதாகவும் மக்களுக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 2 replies
- 1k views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்க…
-
- 0 replies
- 620 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளை நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் 50 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு பிராந்திய சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 466 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவனும் முதியவருமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 305 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-
-
கொழும்பின் கடற்பரப்பில் குண்டுச் சத்தங்கள் - மக்கள் பீதி - இது வழமையான பயிற்சி என்பது பின்னர் தெளிவு: http://www.globaltamilnews.net/tamil_news....d=2759&cat= கொழும்பு கடற்பரப்பில் கொழும்பு துறைமுகப் பகுதிக்கு அப்பால் இன்று அதிகாலை முதல் கடும் குண்டுச் சத்தங்கள் கேட்டன. சுமார் அரை மணிநேரமாக தொடர்ச்சியாகக் கேட்ட இந்தக் குண்டுச் சத்தங்கள், மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் கொழும்பு நகரின் கரையோரப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதல் ஏதும் நடைபெறுகிறதோ என்ற அச்சத்துடன் மக்கள் பீதியுடன் கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று கடலைப் பார்த்தபடி இருந்தனர். எனினும், பின்னர் இது கடற்படையினரின் வழமையான பயிற்சி நடவடிக்கை என்று தெரியவந்தது.
-
- 2 replies
- 1.2k views
-
-
ஊடகங்கள் மீதான கடுமையான அடக்குமுறைகள் கடந்த 3 வருடங்களில் அரங்கேறி உள்ளன - கயந்த கருணாதிலக: ஊடகங்கள் மீது தாக்குதல், தீ வைத்தல் ஊடகவியலாளர்களை கைது செய்தல், கடத்தல், கொலை செய்தல் தாக்குதல் நடத்துதல் இவையெல்லாம் மூன்று வருடங்களில் அரங்கேறியுள்ளதுடன் ஊடக உண்மைக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் கைவிலங்கிடப்பட்டுள்ளது என்று ஐ.தே.க.வின் எம்.பி.யான கயந்த கருணாதிலக தெரிவித்தார். http://www.globaltamilnews.net/tamil_news....=2753&cat=1
-
- 1 reply
- 646 views
-
-
சிறிலங்கா அரசு இழப்புக்களை முடி மறைக்கின்றது அரசு: உலக சோசலிச இணைய அமைப்பு போரில் ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வரும் தகவல்கள் மிகவும் குறைவானதுஇ ஆனால் இழப்புக்கள் அதிகம் என உலக சோசலிச இணைய அமைப்பு தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. சிறிலங்கா படையினரையும்இ அவர்களின் குடும்பத்தவர்களையும் களமுனைகளுக்கு வெளியே கடந்த இரு வாரங்கள் உலக சோசலிச இணைய அமைப்பு (வுhந றுழசடன ளுழஉயைடளைவ றுநடி ளுவைந - றுளுறுளு) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியது. சிறிலங்கா இராணுவமும் அதற்கு ஆதரவான குழுக்களும் பழிவாங்கும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற காரணத்தினால் அவர்களின் பெயர்கள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன என உலக சோசலிச இணைய அமைப்பு ஆய்வு…
-
- 1 reply
- 898 views
-
-
கிழக்கு விடுவிக்கப்பட்டுள்ளது - ஜனநாயகம் என்ற போர்வையில் பொதுமக்களின் உரிமைகளை அரசு பறித்துள்ளது - அமிர்தீன்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2757&cat= கிழக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று பெருமிதமாக கூறிக்கொள்ளும் அரசு ஜனநாயகம் என்ற போர்வையில் பொதுமக்களின் உரிமைகளை பறித்துள்ளது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி வெள்ளைத்தம்பி அமிர்தீன் தெரிவித்துள்ளார். மட்டு. மாவட்டத்தில் மட்டும் ஒரே இரவில் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்த அவர் சுற்றிவளைப்புகள் மூலம் பொது மக்களை மணித்தியாலக் கணக்கில் காவற்துறை நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் காக்க வைக்கின்றனர்…
-
- 1 reply
- 583 views
-
-
சிறீலங்கா அரசு வெற்றிச் செய்திகள் கொண்ட கனவுலகில் வாழந்து வருவதாக, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது வருடாந்த மாவீரர்நாள் உரையில் குறிப்பிட்டிருப்பதாக, BBC தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றவுள்ளோம் என சிறீலங்கா படைகள் கூறிக்கொண்டிருந்த நிலையில், வருடாந்த உரையை ஆற்றியுள்ள தேசியத் தலைவர் அவர்கள், சிங்களம் தனது கனவுலகில் இருந்து விரைவில் மீளும் எனக் கூறியதையும் BBC குறிப்பிட்டுள்ளது. உரை இடம்பெறுவதற்கு முன்னதாக புலிகளின்குரல் வானொலியின் ஒலிபரப்புக் கோபுரங்கள் தம்மால் தகர்க்கப்பட்டுள்ளதாக, சிறீலங்கா வான்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாகக்கூ
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு நடைமுறைக்கு வந்துள்ள இந்த ஊரடங்குச் சட்டம் மாலைவரை தொடரும் என பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது. மாவட்டத்தில் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளைக் கைது செய்யும் நோக்குடன் இந்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை அறிவித்துள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ்ப் பகுதிகளிலும் மக்களின் நடமாட்டத்தை காவற்துறையினர் கட்டுப்படுத்தி உள்ளனர். நன்றி : GTM
-
- 1 reply
- 876 views
-
-
லீடர் திரைப்படத்தை திரையிட தணிக்கை சபை அனுமதி மறுப்பு - ஐந்து ஊடகங்களின் கூட்டமைப்பு கண்டனம்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2760&cat= லீடர் என்கிற திரைப்படத்தை தணிக்கை சபை திரையிட அனுமதிக்காமல் இடைநிறுத்தி வைத்திருப்பதை ஐந்து ஊடகங்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்திரைப்படத்தை பிரபலமான நடிகரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கா நெறியாள்கை செய்துள்ளார். இப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தையும் அவரே ஏற்றிருந்தார். இத்திரைப்படம் இலங்கை அரசியலிலுள்ள ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த அவலங்களை காட்சிப்படுத்தியிருந்தது. அரசியல்வாதிகள் மற்றும் அவதூறுகள் பற்றிய ஒரு நகைச்சுவை இசைப்பாடலுடன்; படம் ஆரம்பமாகின்றது. பிரபல…
-
- 0 replies
- 721 views
-
-
கண்டி மற்றும் கொழும்பில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் 80 தமிழர்கள் கைது - அம்பாறையில் 12 பேர் கைது: கண்டி மற்றும் கொழும்பு ஆகிய பிரதான நகரங்களில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையின் போது சுமார் 80 தமிழ்ச் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும், காவற்துறையினரும்; இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.globaltamilnews.net/tamil_news....=2749&cat=1
-
- 0 replies
- 606 views
-
-
சிவிலியன்களுக்கு நிவாரணங்களை வழங்க தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்: http://www.globaltamilnews.net/tamil_news....=2748&cat=1 வன்னியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு நிவாரணங்களை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட ஏனைய தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. தாழமுக்க நிலையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான சிவிலியன்களுக்கு இதன் மூலம் நிவாரணங்களை வழங்க முடியும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அனுபவம் மிக்கதும், பக்கச்சார்பற்றதுமான சில தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அரச…
-
- 0 replies
- 578 views
-
-
மட்டக்களப்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 31ம் திகதிக்கும் நொவம்பர் மாதம் 27 ம் திகதி நள்ளிரவுக்கும் வரையான காலப்பகுதியில் 22 சிவிலயன்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு காவற்துறை உத்தியோகத்தரும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் ஒரு காவற்துறை உத்தியோகத்தரும் காமயடைந்துள்ளார். மேலும் 3 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 96 மணி நேரத்திற்குள் மட்டும் மட்டக்களப்பில 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 3 பேர் கடத்தப்பட்டும் உள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 3 replies
- 939 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் கொலைச் சம்பவங்களைக் கண்டித்து மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் மட்டு நகரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழ் ஆரம்பமாகியது. இதில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எட்வின் கிருஷ்ணராஜா, ஆர்.துரைரட்ணம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருப்பதாக எமது மட்டக்களப்புச் செய்தியாளர் அறியத்தருகிறார். மாலை வரை நடைபெறவிருக்கும் இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாகாண முதலம…
-
- 8 replies
- 1.4k views
-
-
போரில் ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வரும் தகவல்கள் மிகவும் குறைவானது, ஆனால் இழப்புக்கள் அதிகம் என உலக சோசலிச இணைய அமைப்பு தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 682 views
-
-
மலையகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வழும் தலவாக்ககொல, நுவரெலியா, ஹற்றன், நோவூட், கொட்டகல ஆகிய இடங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதலில் 22 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 514 views
-
-
போரில் ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வரும் தகவல்கள் மிகவும் குறைவானது, ஆனால் இழப்புக்கள் அதிகம் என உலக சோசலிச இணைய அமைப்பு தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 522 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் கெரில்லா யுத்தத்தை நடத்தும் அபாயம் உள்ளதாக தலைப்பிட்டு பிரான்ஸ் செய்திச்சேவை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி விபுல் பொட்டேஜேவின் கருத்தாகவும் பிரான்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி நகரமும் படையினரின் கட்டுப்பாட்டில் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையை அடுத்தும்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரையை அடுத்துமே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா யுத்தத்தை முன்னெடுத்தால் அது பாரிய சேதங்களை கொண்டு வரும் என அந்த செய்திச் சேவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
வட தமிழீழம்.. தென் தமிழீழம் எங்கனும் கடந்த சில நாட்களாக விடாது மழை கொட்டி வருவதால் வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் திருமலை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. வன்னியில் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மழையாலும் இடம்பெயர்ந்து சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று யாழ்ப்பாணம் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருமலை மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் மக்கள் வெள்ளத்துக்கு அஞ்சி இடம்பெயர்ந்துள்ளனர். தமிழீழ மக்களை இயற்கை அனர்த்தத்தில் இருந்து காக்க தேவையான உதவிகளை நல்க வேண்டிய கடமை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களுக்கு உண்டு. http://www.tamil…
-
- 41 replies
- 5.4k views
-