ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
கொட்டும்மழை வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வுகளுக்கும் மத்தியிலும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகளை மக்கள் உணர்வெழுச்சியோடு கடைப்பிடித்துவருகின்றனர். மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் மாவீரர் நிகழ்வுகளுக்கான ஆயத்த வேலைகளை பொது மக்கள் பூர்த்திசெய்துள்ளனர். நாளை இடம்பெறவுள்ள மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கான சகல முன்னேற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாளை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மக்கள் தங்கள் அவலங்களை மறந்து தயார் நிலையில் உள்ளனர். www.sankathi.com
-
- 0 replies
- 609 views
-
-
இன்று காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான செய்திகள் சகல ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன. ஆனால் இந்தக்கொலைபற்றிய திடுக்கிடும் தகவலொன்றை இப்பொழுது தருகின்றோம். மட்டக்களப்பு நகருக்குள் ஊடுருவியுள்ள சுமார் நுற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினரை தேடியழிக்கும் முகமாக கடந்த 4 மாதங்களுக்கு முன் மட்டக்களப்பிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலராலும், புளொட் உறுப்பினர்கள் சிலரைக் கொண்டும் ஒரு மோட்டார் படையணி அமைக்கப்பட்டது. கறுப்பு நிற 6 அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட இந்தப் படையணியில் இருவர் வீதமாக 12 பேர் …
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982 முதல் 31.10.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இவர்களில் 17,305 ஆண் மாவீரர்களும், 4809 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர். 2008ம் ஆண்டு இதுவரை 1974 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர்கள் மதிக்களிக்கப்பட்டு வருகின்றனர். வட்டக்கச்சி கோட்டத்திற்குட்பட்ட மாவடி வட்டத்தில் மதிப்பளிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை இர…
-
- 37 replies
- 6.7k views
- 1 follower
-
-
இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள குருவாயுரப்பன் கிருஷ்ணர் ஆலயத்தில் சடங்கு செய்து தமிழர்களைக் கொன்ற பாவம் தீர்க்கும் மகிந்த. செய்த செய்யப்போற பாவங்களுக்கு சனிபகவானிடம் தமிழ்நாட்டில் வைத்துப் பரிகாரம் தேடும் ரணில். (ஒரு பக்கம் கலைஞர் ரணிலுக்கு கறுப்புப் பூனைகளும் கொடுத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சுனாமி காலத்து உழுத்துப் போன அரசியையும் ஈழத்தமிழர்களுக்கு பொது செய்கிறார்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்..!) கிளிநொச்சியில் கோவில் மீது குண்டு போடும் கொழும்பில் கோவில் சிலையைத் தகர்க்கும் நயினையில் கோவில் தேரை எரிக்கும் சிங்கள பெளத்த பேரினவாதிகள் இந்தியாவில்.. அதே கோவில்களில் பாவமன்னிப்பு அளிக்கப்படுகின்றனர். அதுவும் கருப்புப் பூனைகள் பாதுகாப்புடன். http://www.t…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு" என்ற தலைப்பில் புதுச்சேரியில் கருத்தரங்கு நடந்தது. இதில் இயக்குனர்களான பாரதிராஜா, வி. சேகர், செல்வமணி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது:- மனித இனம் அழிந்து கொண்டுள்ளது. நீ இறையாண்மையைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாய்.புலியைக் காப்பாற்ற பாம்பும் கழுதைகளும் தேவையில்லை. ஈ. வெ.ரா. இருந்தால் பாம்பை அடையாளம் காட்டியிருப்பார்.புலிக்கு இடைஞ்சல் பண்ணாதே. இலங்கைத் தமிழர்கள் தற்காத்துக் கொள்வதற்காக போரிட்டுக் கொண்டுள்ளனர். பிரபாகரனின் பெயரைச் சொல்லாதே என்கின்றனர். ஓர் இனத்தை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியவன் வீரமானவன் அவனது பெயரை உச்சரிக்கக்கூடாது. ஒரு வ…
-
- 1 reply
- 1k views
-
-
அண்மைய இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி சிறிலங்கா தனது அன்னியச் செலவணியில் இருந்து 1,000 மில்லியன் ரூபாய்களை ஏழு வாரத்திற்குள் இழந்துள்ளது.சிறிலங்காவின் அன்னியச் செலவணிக் கையிருப்பானாது கடந்த ஏழு வாரங்களில் 3.4 பில்லியன் டொலர்களில் இருந்து 2.4 பில்லியன் டொலர்களாகக் குறைந்து உள்ளது.சிறிலங்கா அரசானாது சிறிலங்கா நாணயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் டொலர்களை விற்று சிறிலங்கா ரூபாய் ஆக்கியது.இதன் மூலமும் அரச கடன் முறிகளை வாங்கியோர் அவற்றை மீளப் பெற்றமையும் ,அன்னிய முதலீட்டாளார் தமது முதலீடுகளைத் திரும்பப் பெற்றமையும் மேலும் நிலமையைச் சிக்கல் ஆக்கி உள்ளது. மேற்குலகம் பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் இவ் வேளையில் சிறிலங்காவின் ஆடை உற்பத்தி ,தேயிலை ,ரப்பர் என்பனவற்றின…
-
- 3 replies
- 1.8k views
-
-
‘கிழக்கு மீட்பின்’ சீத்துவம்! [26 நவம்பர் 2008, புதன்கிழமை 9:05 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகத்தின் மையப்பூமியான வன்னிப் பெரு நிலப்பரப்பின் மீது கொடூர யுத்தம் ஒன்றை ஏவிவிட்டிருக்கும் இலங்கை அரசு, அதனைப் ‘பயங்கரவாதிகளான’ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்று ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல’ கதை விடுகின்றது. இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்தால் இலங்கையின் சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு பெரும் மனிதப் பேரவலம் வன்னியில் நேர்ந்திருக்கின்றது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கும் இந்த யுத்தத்தினால் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழ்ப்…
-
- 0 replies
- 773 views
-
-
குஞ்சுப்பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கைப்பற்றப்பட்ட படையினரின் ஏழு உடலங்களும் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 458 views
-
-
தமிழக கிராமப்புற மக்களின் கொந்தளிப்பை ரணிலுக்கு எதிரான மறியல் காட்டுகின்றது -சிங்காரவேலன்- ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை போக்க வேண்டிய அரசியல் தீவிரம் தமிழக அடித்தள கிராமங்களில் மிகவும் கூடுதலாகி வருகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் ஒதுங்கிய, ஊடகங்களின் கருத்துக்கள் கூட போய்ச்சேர முடியாத கிராமங்களிலும் பெரும் எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு பொதுமக்களின் போராட்டம் எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கிராமத்து மக்கள் எத்தகைய எழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு அண்மையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கிராமத்து மக்கள் கோபத்துடன் தொடர் மறி…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் 8 பேரை ஆஜராகுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு [ புதன்கிழமை, 26 நவம்பர் 2008, 02:04.27 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதிசேரித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் 8 உறுப்பினர்களை எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கி 2006 ஆம் ஆண்டு செய்த முறைப்பாட்டுக்கு இணங்க இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி முல்லைத்தீவை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவேந்தர், மட்டக்களப்பை சேர்ந்த சமுத்திரன் முருகேசு, கிளிநொச்சியை சேர்ந்த காந்…
-
- 0 replies
- 725 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவரும் முப்படைகளின் பிரதம தளபதியுமான மகிந்த ராஜபக்ச தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எட்டு மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெறும் நிலையை அடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 501 views
-
-
கிழக்கில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன: மனித உரிமைகள் கண்காணிப்பகம் [புதன்கிழமை, 26 நவம்பர் 2008, 03:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிழக்கு மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கிழக்கில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்தில் படுகொலைகள், கடத்தல்கள் என்பன அதிகரித்து வருகின்றன. எமது விசாரணகளில் கடந்த செப்ரெம்பர் மாதம் தொடக்கம்…
-
- 0 replies
- 383 views
-
-
வரவு-செலவு திட்டத்திற்கு பின்னர் மாகாண சபை தேர்தல்கள்: மகிந்த [புதன்கிழமை, 26 நவம்பர் 2008, 03:37 மு.ப ஈழம்] [பி.கெளரி] வரவு-செலவு திட்டத்தை தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளதால் அதற்கு தயாராகுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் தனது கட்சியின் தேர்தல் இணைப்பாளர்களை கேட்டுள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது: வரவு-செலவு திட்டத்தின் பின்னர் மேற்கு, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசு தயாராகி வருகின்றது. இந்த மாகாண சபைகள் டிசம்பர் 18 ஆம் நாள் கலைக்கப்படும் என மகிந்த தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடன் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போதே மகிந்த இதனை தெரிவித்தார். …
-
- 0 replies
- 436 views
-
-
வட போர்முனையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவான மண்டபம் முரசுமோட்டையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 478 views
-
-
தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாளுக்கான எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்று தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
யாழில் அண்மையில் இபிடிபியால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊர்வலத்தை துப்பாகியுடன் ஒழுங்கு படுத்தும் ஒரு இபிடிபி துணை இராணுவக் குழுவின் ஆயுதாரியின் படம்.
-
- 31 replies
- 5k views
-
-
சிறிலங்காவின் சிங்கள புராதன நகரமான அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நான்கு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 604 views
-
-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் லண்டனை சென்றடைந்துள்ளார். தமிழ்பேசும் அனைத்துலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்துவதில், சென்னையிலுள்ள சிறீலங்காவின் துணைத் தூதரகம் உட்பட சில தீய சக்திகள் முற்பட்டிருந்ததாக வைகோ குற்றம் சாட்டினார். நேற்று வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், இதற்கு முன்னர் நோர்வே மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற போதிலும் இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். லண்டன் சென்றுள்ள வைகோ அங்கு நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் நி…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழிழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் நிகழ்வுகளின் முதல்நாள் நிகழ்வு ஆரம்பம் திகதி: 25.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] தமிழிழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் நிகழ்வுகளின் முதல்நாள் நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றல் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களில் ஓழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வு நடைபெற்றது. கடும் மழை பெய்து கொண்டிருக்கின்ற வேளைகளிலும் பொது மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். சங்கதி
-
- 1 reply
- 1.1k views
-
-
"புலிகளின் பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிக்க முடியும் என்று கூறும் ஜனாதிபதி எதற்காக ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அமைதிப் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றார்? அரசின் நிலைப்பாடு அடிக்கடி இவ்வாறு மாறுவதற்கான காரணம் என்ன?" - இவ்வாறு ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:- வடக்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட சில இடங்களைப் புலிகள் மீண்டும் கைப்பற்றிவிட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த யுத்தத்தை மூன்று மாதங்களில் முடிப்போம், நான்கு மாதங்களில் முடிப்போம் என்று அரசு சொல்லலாம். அது சாத்தியமல்ல.…
-
- 1 reply
- 997 views
-
-
ஈழத்தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய பொதுவுடமைக்கட்சி அறிவித்திருந்த நாடுதழுவிய மறியல் போராட்டம் இன்று 25-11-2008 செவ்வாய் காலை 11 மணிக்கு திருப்பூரில் மாநகராட்சு அலுவலகம் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது . படங்கள்,மேலதிக செய்திகள் உள்ளே........ http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 606 views
-
-
சென்னை இலங்கை பிரச்னை தொடர்பாக வரும் 4 ஆம் தேதி கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்திப்பது என்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இலங்கை விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்தும்இ இதுவரை மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தமிழக எம்பி-க்கள் ராஜினாமா செய…
-
- 2 replies
- 851 views
-
-
உண்டியல் பணத்தை இலங்கை தமிழர் நிதிக்கு வழங்கிய மாணவி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் ஏ.கே.எஸ்., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ராமலட்சுமி பாரதி உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவர் உண்டியலில் சிறுகசிறுக சேமித்து வைத்திருந்த 494 ரூபாயை, ஆசிரியர் உதவியுடன் "டிடி' எடுத்து இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக , தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டிக்கு தபாலில் அனுப்பிவைத்தார். முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பெற்றோர் தந்த ரூபாயை வீணாக செலவழிக்காமல் சேமித்து அதை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கிய "மனிதாபிமானமிக்க' ராமலட்சுமி பாரதிக்கு கலெக்டர், ஆசிரியர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேல…
-
- 12 replies
- 2.4k views
-
-
ளுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் இலங்கை நேரப்படி இரவு 7.30க்கும் 8 மணிக்கும் இடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேச ஓய்வு பெற்ற கிராம சேவகர் அவரது மகன் மற்றும் அவரது மாமியார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் மற்றும் ஒருவர் சுடப்;பட்டதாக தகவல்கள் வெளியாகிய போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் மட்டக்களப்பு வவுணதீவுப்பகுதியிலிருந்து இன்று இலங்கை நேரம் மாலை 5.30 மணிக்குப் பின் காவற்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 3 சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 898 views
-
-
தமிழீழ தேசிய தலைவருக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 54 ஆவது பிறந்த தின வாழத்துக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "உலகத் தமிழரின் வேதனையும் மறுபுறம் பல எதிர்பார்ப்புகளும் நிறைந்த ஆண்டாக 2008 ஆம் ஆண்டு இருக்கின்றது. ஒரு புதிய அகவையில் கால் பதிக்கும் எமது தேசியத் தலைவருக்கு தென் தமிழீழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சார்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மடி கொடுத்த அன்னை தலைவைத்து சாயவும் தமிழருக்கு என்று ஒரு இடம் இல்லை என்பதனையும் உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் வேதனைப்படுவதனை அனைத்துலகமும்…
-
- 0 replies
- 1.4k views
-