ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
மும்பையில் இடம்பெற்ற தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் கண்டிக்கவில்லை என தமிழ்நாட்டின் தமிழர் விரோத ஆங்கில ஏடான இந்து (The Hindu) நாழிதழ் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் புதிய தமிழர் கண்ணோட்டம் இதழில் பதிலிறுக்கப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர்நாள் உரையில் மும்பை தாக்குதல் கண்டிக்கப்படவில்லை எனவும், அல்லது பின்னரேனும் கண்டித்திருக்கலாம் என்றும் இந்து நாழிதழ் கடந்த முதலாம் நாள் ஆசிரியர் தலையங்கள் தீட்டி விசமப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தது. அனைத்துலக விடயங்களில் விடுதலைப் புலிகள் ஆதரவை, அல்லது கண்டனத்தை தெரிவிப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் தமிழர் கண்ணோட்டம், அவ்வாறு கண்டனம் தெரிவித்திருந்தால்கூட, இந்தியாவை ஏமாற்ற …
-
- 21 replies
- 3.6k views
-
-
தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.2k views
-
-
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர சுட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த மூத்த அமைச்சர் கரு ஜெயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 759 views
-
-
கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்! [தமிழ் இளையோர் அமைப்பு - கனடா] www.pathivu.com இலங்கை அரசாங்கம் கொத்தணிக் குண்டுகள் பாவிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நேரத்தில் அனைத்துலக சமூகத்திடம் இந்த கொடூர குண்டுகளை தடை செய்யுமாறும், கனடா அரசாங்கத்தை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து, இலங்கைக்கும் அதற்கு இக்குண்டுகளை வழங்கும் நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து இக்குண்டுத் தயாரிப்பை முடிவுக்கு கொண்டுவருமாறும் கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர். இதுகுறித்து அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:- கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்! டிசம்பர் 03, 2008 மனித உரிமைகள் நெரு…
-
- 0 replies
- 770 views
-
-
தன்மானமும் இனப்பற்றும் கொண்டவர்கள் இன்றைய இறுதி வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது – மனோ: www.globaltamilnews.com உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் தோட்டத் தொழிலாளர்களை பட்டினி போட்டு அழிக்கும் இந்த அரசாங்கம் பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து வடகிழக்கிலே தமிழர்களை அழிக்கின்றது. எனவே, தன்மானமும் இனப்பற்றும் கொண்ட எந்தவொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியும் இன்றைய இறுதி வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இன்றைய இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மனோ தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இன்று …
-
- 0 replies
- 714 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது – ஐ.தே.க: www.globaltamilnews.com ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், யுத்தத்தை முன்னிலைப்படுத்தி பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டி சபையில் பிரேரணை ஒன்றினைக் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று திங்கட்கிழமை நம்பிக்கையில்லாப், பிரேரணையையும் சமர்ப்பிக்கவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடனேயே அரசாங்கத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது …
-
- 0 replies
- 545 views
-
-
http://www.tamilkathir.com/news/594/75//d,video.aspx
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளின் கோரிக்கைகளை கேட்கமாட்டாது என்றும் விடுதலைப் புலிகளுடன் கொழும்பு போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 432 views
-
-
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே பெற்றோலியம் மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சுப் பதவியில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதமாகவும் அந்த அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷவிற்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அமைச்சர் பெளசி பாராளுமன்றத்தில் அண்மையி…
-
- 0 replies
- 640 views
-
-
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் நவம்பர் மாதத்தில் மட்டும் 60 பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் ஜனநாயகத்தை நிறுவினால் திடீர் திடீரென சுற்றிவளைப்புகளை மேற்கொள்வது ஏன்? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான தங்கேஸ்வரி கேள்வி எழுப்பினார். கிழக்கில் படுகொலை, கடத்தல்கள், கைதுகள் அதிகரித்துள்ளன. வன்னியில் கொத்தணி குண்டுகள் வீசப்படுவதுடன் அதற்கு எதிரான ஒப்பந்தமொன்றும் சர்வதேச ரீதியில் கைச்சாத்திடப்படுவதாக அறிகின்றேன் எனவும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 21 அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்…
-
- 0 replies
- 516 views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியினால் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 364 views
-
-
தமிழக தலைவர்களை சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விமர்சித்திருப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 449 views
-
-
அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அம்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கும். அதுவே அவற்றின் சிறப்பு. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்லும்; பிரமிக்கவைக்கும். அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் செல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்கும். அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த …
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கையின் இராஜதந்திரத்தினுள் அடங்கிப் போன இந்தியா சத்திரியன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரப்போகிறார். போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவே அவர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்துக்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அப்படி அவர் வந்தாலும் போர் நிலையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுமா என்ற கேள்வி பலரிடமும் காணப்படுகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தங…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளின் கடற்பாதைகள் இப்போது தம்வசம் என்கிறார் கடற்படைத் தளபதி [07 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:25 மு.ப இலங்கை] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தப்பிச் செல்லமுடியாத வாறு கடற்பாதைகளைக் கடற்படை யினர் பலப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வஸந்த கரனகொட. கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட் டியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளமை வரு மாறு:- விடுலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தப்பிச் செல்வதற்கு எந்த இடமும் வசதியாக இல்லை. விடுதலைப் புலிகளின் கடற்பகுதியின் கட்டுப்பாட்டை இப்போது கடற்படையி னர் தம்வசமாக்கியுள்ளதே இதற்குக் கார ணம் - என்றார் அவர்.
-
- 12 replies
- 3.5k views
- 1 follower
-
-
இந்தியாவின் அழுத்தத்தை சிங்கள மக்கள் விரும்பவில்லை - சிங்கள பத்திரிகைகள் ஞாயிறு, 07 டிசம்பர் 2008, 13:59 மணி தமிழீழம் [தாயகன்] போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தால், அதனை சிங்கள மக்கள் விரும்ப மாட்டார்கள் என, தென்னிலங்கை சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டு கட்சிகளின் அழுத்தம் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறீலங்காவிற்கு அனுப்ப இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணக்கம் தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் இந்தியாவின் அழுத்தத்திற்கு எதிராகசிங்கள இனவாதக் கட்சிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன், சிங்களப் பத்திரிகைகளும் எதிராக எழுதி வருகின்றன.
-
- 1 reply
- 1k views
-
-
வன்னிப் படை நடவடிக்கை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த வேளை கடந்த வாரம் வடபகுதி முழுவதும் பருவமழை என்றும் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்து மிகப்பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை மேலும் இடம்பெயரச் செய்து அல்லல்பட வைத்துவிட்டது. வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற கடும் மழைக்கு மத்தியிலும் படைநடவடிக்கையானது ஓய்ந்துவிடவில்லை என்பதற்கு வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமானத் தாக்குதல்களும், வன்னியின் மூன்று புறமும் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுத் தாக்குதல்களும் சான்றாகின்றன. இவ்வாறு இடைவிடாத மழையும், படைநடவடிக்கையும் வன்னி மக்களை என்றும் இல்லாத அளவிற்கு மிக மோசமாக பாதித்திருக்கின்றது. பருவ காலத்திற்கேற்ற பயிர்ச…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்களின் கவிதைப் பேராட்டம்--புகைப்படம் இணைப்பு http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பு துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தல் வீரகேசரி வாரவெளியீடு 12/7/2008 10:35:26 AM - கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தை தாக்குவதற்காக புலிகளின் பதினைந்து பேரைக் கொண்ட அணி ஒன்று கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்புப் பொறுப்பு கடற்படையினரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினருக்கு மேலதிகமாக வெள்ளிக்கிழமையில் இருந்து விசேட அதிரடிப்படையினரும் இராணுவ கமாண்டோ அணியினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர பத்து மோட்டார் சைக்கிள் …
-
- 1 reply
- 844 views
-
-
சுவிற்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியையும் அனைத்துலக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூா்த்தி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 543 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விமான நிலைய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் - இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் GTNக்கு வழங்கிய விசேட செவ்வி: http://www.globaltamilnews.net/tamil_news....=3060&cat=1 கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியல்வு அதிகாரிகள் தன்னை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று காலை இந்தியா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்றதாகவும் இதன் போது, குடிவரவு குடியகல்வு அதிகரிகள் தன்னை நாட்டில் இருந்து செல்ல அனுமதிக்க முடியாது என கூறியதாகவும் …
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கையின் இனக்குழுமச் சதுரங்கம் அடுத்த காய் நகர்த்தல்கள் யாவை? [07 - December - 2008] பீஷ்மர் * கருணாநிதி-மன்மோகன் சிங்-ராஜபக்ஷ கிளிநொச்சியை நோக்கிய அரசுப் படை நடத்துகையின் வெற்றி விபரங்கள் பற்றி தென் இலங்கைக்குச் சொல்லப்பட்டவை இந்தியாவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி அத?ல் பிரtப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்ற மன்மோகன் சிங் கூற்று இந்தப் பிரச்சினையில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய முன்னணி என்ற ஜே.வி.பி, ஹெல உறுமய கூட்டு சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கை எதிர்பார்த்தபடி இந்தியாவைத் தாக்குகின்றது. இலங்கைஇந்திய சதுரங்கத்தில் காய்நகர்த்தல்கள் ஒரு மிகவும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு அல்லது அரசாங்க நிலைப் …
-
- 1 reply
- 1.4k views
-
-
S Lanka rebels 'in fierce fight' Sri Lanka says there have been heavy clashes between its forces and the Tamil Tigers in a battle to take the key rebel stronghold of Kilinochchi. The defence ministry says the latest fighting began before dawn, with the Tamil Tigers launching a counter-attack on troops. But the military says it drove them off with artillery and rocket launchers, and inflicted heavy casualties. The Tigers have not commented and there are no independent accounts. A statement from the defence ministry also said that Sri Lankan air force jets had bombed Tiger positions north of Kilinochchi on Saturday. Kilinochchi…
-
- 26 replies
- 5.9k views
- 1 follower
-
-
இரண்டு மாதங்களில் இரு தடவைகள் கொக்காவில்லை இராணுவம் கைப்பற்றியுள்ளது கடந்த இரண்டு மாதங்களில் இரு தடவைகள் கொக்காவில் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி கொக்காவில் பகுதி கைப்பற்றப்பட்டதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாகவும், அதே இடம் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ம் திகதி கைப்பற்றப்பட்டுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அநேக சந்தர்ப்பங்களில் யுத்தம் தொடர்பான உண்மையான தகவல்களை அரசாங்கம் வெளியிடுவதில்லை எனவும், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான சம…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை கடுமையான சோதனை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-