ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழினம் கலை, கலாச்சாரங்களை பேணியும், எம் இளம் சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகள், தொழில்களில் சிகரங்களை தொட்டு, இன்னொரு யூத இனமாக செழிப்புற முற்பட்டிருக்கும் இவ்வேளையில், எம் இனத்தை தாயகத்தில் காலம் காலமாக அழித்தொழித்து வரும் சிங்களம், புலம்பெயர் தேசங்களிலும் எம் இளைய தலை முறையினரின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சி கண்டு எரிச்சலுற்று, அவர்களின் எதிர்காலங்களை சூனியமாக்கும் முயற்சிகளில் ஈடுபட தொடங்கி இருக்கிறது. http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழர் படுகொலையை கண்டித்தும் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சார்பில் இன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 900 views
-
-
சிறிலங்கா படையினரின் தாக்குதல் உத்திகள் என்ன?: "லக்பிம" வார ஏடு கேள்வி [ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 05:59 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்கா படையினரின் தற்போதைய தாக்குதல் உத்திகள் என்ன என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: பரந்தன் சந்தியை கைப்பற்றுவது 58 ஆவது படையணியின் குறிக்கோள். அதன் பின்னர் 57 ஆவது படையணி கிளிநொச்சிக்கு தெற்குப்புறம் இருந்து நகர்ந்து கிளிநொச்சி நகரத்தை கைப்பற்றிய பின்னர் பரந்தன் சந்தியை அடைந்து 58 ஆவது படையணியுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். 57 ஆவது படையணி கிளிநொச்சியின் தெற்கு…
-
- 0 replies
- 968 views
-
-
புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதி தீர்வுக்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் [ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 07:38 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதித் தீர்வுக்கு வழிகாண இந்திய அரசு முயற்கிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான, வானூர்தி, தரைப்படைத் தாக்குதலை நிறுத்தி விட்டு, அமைதியான சூழ்நிலையை உருவாக்கி, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முயல வேண்டும் என்ற கோரிக்க…
-
- 0 replies
- 635 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் எப்பொழுதும் போர் நிறுத்தத்திற்கு தயாராகவே இருப்பதாக, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை பற்றி, அரசியல்துறைப் பொறுப்பாளரை தமிழ்நெட் இணையத்தளம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் செய்யுமாறு சிறீலங்கா அரசை மட்டும் கேட்க முடியாது எனவும், மறு தரப்பையும் (விடுதலைப் புலிகள்) கேட்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியும், மத்திய அரசும் கூறியிருந்தன. இதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலர் தா.பாண்டியன், விடுதலைப் புலிகள் ப…
-
- 1 reply
- 987 views
-
-
எதிர்காலப் போரும் கடற்புலிகளின் பலமும் வீரகேசரி வாரவெளியீடு 11/9/2008 6:01:21 PM - அண்மைக் காலத்தில் கடற்புலிகள் நடத்தியிருக்கின்ற இரண்டு தாக்குதல்கள் கடற்படையின் கவனத்தை வடக்கு நோக்கித் திருப்பியிருக்கின்றன. வடமேற்கு கடற்பரப்பின் மிகச் சிறிய பகுதியே புலிகளின் வசம் தற்போது இருக்கின்ற நிலையில் கடற்படையின் மீது புலிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்கள், தாம் பலவீனமைடைந்து விடவில்லை என்பதை வெளிப்படுத்த நடத்தப்பட்டவை என்றே கருதப்படுகிறது. மூன்றாம் கட்ட ஈழப்போருடன் ஒப்பிடும்போது நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்புலிகளின் வீச்சு குறைவாகவே இருந்துள்ளது. இதனை கடந்த கால புள்ளிவிபரங்களில் இருந்து தெளிவாக உணரமுடிகிறது. இந்தநிலையில்தான் கடற்புலிகளின் பலம் குறைந்து போய்விட…
-
- 0 replies
- 2.3k views
-
-
வெற்றிமனை மனநோயாளர் நிலையம் உருத்திரபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்துள்ளது. வீரகேசரி இணையம் 11/9/2008 12:10:34 PM - வன்னிப்பிரதேசத்தின் போர்ச்சூழல் காரணமாகவும், சமூகச் சூழல் காரணமாகவும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து வந்த வெற்றிமனை நிலையம் தர்மபுரத்தில் இருந்து தற்போது புதுக்குடியிருப்புக்கு இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்கள், எறிகணை வீச்சுக்கள் காரணமாக, நூற்றி ஐம்பத்திநான்கு பெண்கள் அடங்கிய இந்த வெற்றிமனை நிலையம் கிளிநொச்சியில் இருந்து தர்மபுரத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. எனினும் அந்தப் பகுதியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால், அங்கி…
-
- 0 replies
- 789 views
-
-
மனித உரிமை விசாரணைக் குழுவிலிருந்து 7 அமைப்புகள் விலகல் ஞாயிறு, 09 நவம்பர் 2008, 13:39 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவில் மனித உரிமை மீறல்களை கண்காணித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆணைக்குழுவிலிருந்து ஏழு அமைப்புகள் விலகியுள்ளன. தமது விலகல் கடிதத்தை கடந்த வியாழக்கிழமை இந்த ஏழு அமைப்புகளும் அனுப்பி அதன் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், மனித உரிமைகளுக்கான இல்லம், இன்போர்ம், சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை, இலங்கையின் தாய்மார் மற்றும் மகள்கள் சங்கம், ஜனநாயகத்துக்கான உரிமைகள், இலங்கை தேசிய சட்டத்தரணிகள் ஆணைக்குழு ஆகிய அமைப்புக்களே கண்காணிப்புப் பணியிலிருந்து விலகிக்கொண்டுள்ளன. 2006ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 738 views
-
-
2008 மாசித் திங்களிற்கு முன்னர்.. யுத்த நிறுத்த ஒப்பந்தந்தை முறிக்கும் முன்னரே யுத்த நிறுத்த காலத்தில் படைநடவடிக்கை எடுத்து கிழக்கு மாகாணம் முழுவதையும் கைப்பற்றி புலிகளற்ற கிழக்கில் செயற்கைத் தனமான அறிக்கை விடியலை ஏற்படுத்தி.. கேக் வெட்டிக் கொண்டாடிய சிறீலங்காச் சிங்களப் பேரினவாத அரசும் அதன் அருவருடி ஆயுதக்கும்பல்களும் இன்று கிழக்கில் புலிகள் வளர்ந்துவிட்டனராம் என்று அறிக்கை சமர்ப்பித்திருப்பதோடு கடந்த இரண்டு மாதங்களில் கிழக்கில் - தெந்தமிழீழத்தில் துரோகக் கும்பல்கள் மற்றும் சிங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே இந்த நிலையை சமாளிக்க சிறீலங்கா சிங்களப் பேரினவாதப்படைகளுடன் இணைந்து தாம் செயற்பட இருப்…
-
- 6 replies
- 3.4k views
-
-
நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தெரிந்து பல காரியங்களை செய்கிறார் என்றால், யாருக்கும் தெரியாமலும் பல உதவிகளை செய்து வருகிறார். தற்போது சென்னை நடிகர் சங்கத்தில்... இலங்கை தமிழர்களுக்காக நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அமைக்கப்பட்ட மேடை அலங்காரம்... சேர், ஒலி பெருக்கி என ஒட்டுமொத்த செலவையும் ரீத்தீஷே ஏற்றுள்ளார்.இதன் மொத்த செலவு மூன்று லட்சத்திற்கும் மேல். அதேபோல சென்னை சாலிகிராமத்தில் செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடத்திய உண்ணாவிரதப் பந்தல் மற்றும் மேடைக்கான மொத்த செலவையும் இவரே ஏற்றுள்ளார். இதுபற்றி மீடியாக்காரர்கள் கேட்க, அனைவரின் ஒத்துழைப்போடுதான் செய்தோம் என்றதோடு வெளியேயும் இதுபற்றி மூச்சு விடவில்லையாம். நன்றி : தமிழ்யாகூ(ம…
-
- 3 replies
- 2k views
-
-
ஈழ மண்ணில் தமிழனின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. தமிழனின் குடிசைகள் எரிக்கப்படுகிறது. தமிழ்க் குழந்தைகளின் கழுத்து அறுக்கப்படுகிறது. தமிழர்வாழ் பகுதியில் ஏவுகணை இறக்கப்படுகிறது! தமிழா ஒன்றுபடு! ஓங்கி குரல்கொடு! பற்றி எரிகிறது ஈழதேசம் - ஆயுதம் வழங்கி பற்றவைக்கிறதோ இந்திய தேசம்...! என பல வாசகங்களுடன் தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் சுவரொட்டிகள் பொது மக்களினால் ஒட்டப்பட்டுள்ளது. படம் உள்ளே http://www.tamilseythi.com/tamilnaadu/pera...2008-11-09.html - இராஜா தமிழகம்
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறினார். மதுரை ஆதீனம் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 10-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசும், இந்திய அரசும் ஒன்று கூடி இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுத்து செயல்படுத்தினால் தான் அங்கு அமைதியை காண முடியும். தமிழ் ஈழ மக்கள் அமைதியாக வாழ தனிநாடு ஒதுக்கி கொடுக்க வேண்டும். அப்படி தமிழ் ஈழ மக்களுக்கு தனி நாடு கிடைத்தால் தான் அவர்கள் நல்வாழ்வு பெற முடியும். அந்த தனி தமிழ் ஈழத்தை விடுதலை புலிகளால் தான் பெ…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவதற்காக 2000 தொன் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவை சங்க நிர்வாகியிடம் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். இலங்கையில் இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிதியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் 80 ஆயிரம் பேருக்கு வழங்குவதற்காக துணி வகைகள், அரிசி, பருப்பு, சீனி, மருந்து பொருட்கள், தேயிலை, சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, ஆடைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் 80 ஆயிரம் பொதிகள் தயாரிக்கப்பட்டன. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கொழும்பு ஒருங்கிணைப்பாளர்…
-
- 15 replies
- 1.7k views
-
-
சென்னை: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களது கடற்படைக்கு இதில் தொடர்பில்லை என்று இலங்கை துணைத் தூதரகம் மறுத்துள்ளது. நவம்பர் 7ம் தேதி கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு மீனவர் காயமடைந்தார். இலங்கை கடற்படைதான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை இணை இயக்குநர் தில்லை கோவிந்தன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சம்பவ விவரம், ஏற்பட்ட பாதிப்பு, துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணங்க…
-
- 0 replies
- 959 views
-
-
அமெரிக்கத் தேர்தலும் வன்னிக்களமுனையும் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._001&mode=1 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நிலைமை பரிதாபகரமாக உள்ளது http://epaper.virakesari.lk/ArticleImage.a..._006&mode=1 எதிர்காலப் போரும் கடற்புலிகளின் பலமும் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._002&mode=1 கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப்போர் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._001&mode=1
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான, விமான-தலைப்படைத் தக்குதலை நிறுத்தி விட்டு, அமைதியான சூழ்நிலையை உருவாக்கி, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முயல வேண்டும் என்ற கோரிக்கையை, இலங்கை அரசுக்கு, இந்திய மக்களின் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்துமாறு கோரி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இயக்கம் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே! தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்திலும் போரை நிறுத்த வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக ஏற்று அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றின. ஆனால், போர் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் கொல்லப்படுவது நீடிக்கிறது. இந்திய அரசு போர் நிறுத்தம் குறித்து இலங்கையுடன் பேசவே இல்லை என இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இதன் தொடர்பா…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 11/9/2008 1:18:17 PM - கிளிநொச்சியில் விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இன்று விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். பரந்தன் சந்தி மேற்கேயுள்ள கடற்புலிகளின் கட்டளை நிலையம் மீதும் பூனேரி தென்கிழக்கேயுள்ள விடுதலை புலிகளின் ஆட்டிலறி ஏவும் மையம் மீதும் இன்று 12.50 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் வான் தக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை தெரிய வரவில்லை
-
- 0 replies
- 831 views
-
-
அண்மித்து வரும் மாவீரர் நாளால் சிறிலங்கா படைத்தரப்பு கலக்கம்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 06:15 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] மாவீரர் நாள் நெருங்கி வருவதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் போரை தொடங்கலாம் என்ற கலகத்தில் சிறிலங்கா படைத்தரப்பு உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடா்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது போர்முனையில் இருந்து ஒரு வெற்றிச் செய்தியையும் அறிவிப்பது என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டம் இரண்டாவது தடவையாக கடந்த வாரமும் வெற்றி பெறவில்லை. நிதியமைச்சரும், ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கை அரச படையினர் கிளிநொச்சியில் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகள் பாரிய அழிவுகளுக்கு வழிகோலும் என பிரபல ஆங்கில இணையதளமொன்று எதிர்வு கூறியுள்ளது. அரசாங்க தகவல்களின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களில் 1098 படைவீரர்கள் கொல்லப்பட்டும், 8,281 படைவீரர்கள் காயமடைந்துமுள்ளனர். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான எதிர்ப்பை படையினர் சந்திக்கவில்லை எனவும், கிளிநொச்சி நகரை அண்மிக்கும் வேளையில் விடுதலைப் புலிகள் முழு பலம் கொண்டு பதில் தாக்குதல் மேற்கொள்வர் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களின் போது உயிரிழப்புக்கள், காயமடைவோர் எண்ணிக்கை, காணாமல் போவோர் எண்ணிக்கை போன்றவற்றை வெளியிடாது அரசாங்கம் யுத்தத்தின் யதார்த்த நிலையை மூடிமறைத்துள்ளதெனத் தெரிவிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
மதுரை திருமங்கலம் தொகுதி சட்டசபை மதிமுக உறுப்பினர் வீர. இளவரசன் இன்று மதுரையில் மரணமடைந்தார். மதுரை திருமங்கலம் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீர. இளவரசன். 47 வயதான அவருக்கு சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் இன்று காலை பத்தரை மணியளவில் வீர. இளவரசன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, அவருடன் சேர்த்து கைதானவர் வீர. இளவரசன். வைகோ கைதாக காரணமான திருமங்கலம் பொதுக் கூட்டத்…
-
- 11 replies
- 2k views
-
-
யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டங்கள் தொடரும்? [09 - November - 2008] தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா "ஈழத் தமிழர் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த அங்கு உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்திய இராணுவ உதவிகள் வாபஸ் பெறப்படுவதுடன் எந்தவித இராணுவ உதவியும் அளிக்கக்கூடாது என்றும் ஒலித்த தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காதது பெரும் அதிருப்தி அளித்திருக்கிறது. இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை தமிழக மக்கள் ஏற்காததன் அறிகுறியே, நாடெங்கும் இன்று தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்கள். இப்போராட்டடங்களை பல்வேறு கட்டமாக, பரவலாகத் தொடர, தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் ஒன்றுகூடித் தயாராக இருக்கின்றன" என்று தமிழீழ வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா தோணிக்கல் தனியார் கல்வி நிலையத்தில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம் வீரகேசரி இணையம் 11/9/2008 9:27:50 AM - வவுனியா தோணிக்கல் தனியார் கல்வி நிலையத்தில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம். குண்டு பொருத்திய போது வெடித்திருக்கலாம் என சந்தேகம். வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குண்டு ஒன்றைப் பொருத்திக்கொண்டிருந்தபோ
-
- 0 replies
- 622 views
-
-
சார்ந்த பராக் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதால் உலகெங்கும் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு விடிவு ஏற்பட்டுள்ளது போன்றதொரு பரப்புரை மேலெழுந்துள்ளது. ஒபாமாவைத் தெரிவு செய்த பெரும்பான்மையானோர், வெள்ளையின அமெரிக்கர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.அதலபாதாளத்தை நோக்கி கிடுகிடுவென வீழ்ச்சியுறும் அமெரிக்கப் பொருளாதாரமும் ஜோர்ஜ் புஷ்ஷின் ஆக்கிரமிப்பு போர் வெறிக் கொள்கையும் ஒபாமாவின் வெற்றிக்கு ஊக்கிகளாக விளங்கியதை புரிந்து கொள்ளலாம்.ஜனவரி 20ஆம் திகதி அதிபராகப் பதவியேற்கும் ஒபாமா, அடுத்துவரும் நான்கு ஆண்டு கால ஆட்சியில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் ஏராளம். முதலில் கனிமவளச் சுரண்டலிற்காக ஆபிரிக்காவில் பாரிய முதலீடுகளைக் குவிக்கும் சீனாவை எதிர்கொள்ள வேண்…
-
- 0 replies
- 928 views
-
-
கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பினர் 72 மணிநேர கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 533 views
-
-
தமிழக அரசியல் கட்சிகள் ஈழத்தில் தமிழர்களின் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்களோ, அதேயளவு தமிழர்களின் சுய உரிமை போரின் தன்மையையும், கடந்த கால நிகழ்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் ஈழ தமிழருக்கு ஒரு நிரந்தரமான, சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை தமிழகத்தால் பெற்றுக் கொடுக்க முடியும். தமிழக தலைவர்களுக்குத் தெரியாததல்ல, இருந்தாலும் சிங்கள இனவெறி அரசின் பொய்பிரசார போர் உலகின் கண்களுக்கு பல உண்மைகளை மறைத்துவிட்டது. சிங்களத்தின் தன்னிச்சையான, தமிழருக்கு எதிரான போரையும், வரலாறையும் மறைத்து புலிகளும் போர் நிறுத்த வேண்டும் என்று சொல்வது "மத்திய கொள்கை வகுப்பு கூட்டத்தின்" தமிழக எழுச்சியை நீர்த்துப்போகும் படி செய்யும் தந்திரமே. தமிழர் தரப்பில் புலிகள்…
-
- 0 replies
- 785 views
-