ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஐக்கிய அமெரிக்கத் தாராளம் வேறு இலங்கைப் பேரினவாதம் வேறு [07 நவம்பர் 2008, வெள்ளிக்கிழமை 10:05 மு.ப இலங்கை]/td> தத்தமது நாடுகளில் நிலவும் பின்புலமே, இலங்கையிலும் நிலவுகின்றது என்ற கற்பனைச் சிந்தனையில்தான் இலங்கை விடயங்களை மேற்குலகம் அணுகுகின்றது; அவதானிக்கின்றது. அத்தகைய பிழையான பார்வையில் இலங்கை விவகாரங்களை நோக்கி அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதனால் தான் தவறிழைக்கின்றன அந்த மேற்கு நாடுகள். இதுவே, இலங்கை இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தரப்பான ஈழத் தமிழர்களின் ஒரே ஆதங்கமாகும். இப்போதும் கூட, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ள கருத்தும், அவரும் இப்படித்தான் - தமது அமெரிக்க நாட்டின் பின்புலத்தில் நின்றபடி, அதே …
-
- 0 replies
- 879 views
-
-
மக்களை பொறியில் சிக்க வைக்கும் தந்திரேமாகவே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது – ஐ.தே.க: பட்ஜட் ஒரு பார்வை: http://www.globaltamilnews.net/tamil_news....=1921&cat=1 பொது மக்களை பொறியில் சிக்க வைக்கும் ஓர் தந்திரோபாயமாக இம்முறையை வரவு செலவுத் திட்டத்தை தாம் நோக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேசியவாதம் என்ற போர்வையில் மக்களை பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைக்கு இந்த வரவுசெலவுத் திட்டம் இட்டுச் செல்லும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. பொது மக்களின் பணத்தை சூட்சுமமான முறையில் கொள்ள…
-
- 0 replies
- 612 views
-
-
ஒபாமாவின் தெரிவு இனவாத கொள்கையாளர்களுக்கு ஓர் பாடமாக அமைந்துள்ளது – மனோ கணேசன்: பரக் ஒபாமா அமெரிக்காவின் பதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இனவாத கொள்கைகளில் மூழ்கியிருக்கும் உலகத் தலைவர்களுக்கு ஓர் பாடமாக அமைந்துள்ளதென மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்டகாலமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் தமிழ் பேசும் மக்கள் ஒபாமாவின் வெற்றியை எதிர்பார்ப்புடன் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று இலங்கையில் யுத்தம் இருள் நீங்கி சமாதான ஒளி படர வழியமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள இன சமூகங்கள் அனைத்திற்கும் ஓர் புதிய எதிர்பார்ப்பை ஒபாமாவின் வெற்றி ஏற்படுத்த…
-
- 0 replies
- 906 views
-
-
சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்களால் பூநகரி செம்மண்குன்று பகுதியில் வாழ்ந்தும் அடைக்கலம் அடைந்தும் இருந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மீண்டும் அவலப்பட்டு இடம்பெயர்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 574 views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரொருவர் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டம்: பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினரான அன்ட்றூ பில்லிங் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் கலந்து கொண்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறப்பினர் பில்லிங்கை கடுமையாக விமர்சித்திருந்தது. அன்ட்றூ பில்லிங் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒருவர் என இலங்கை சமாதான செயலகத்தின் தலைவர் ராஜீவ விஜேசிங்க குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியினது இணையத்தளத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். பயங்கரவாதப் பிட…
-
- 0 replies
- 975 views
-
-
சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்: கனிமொழி [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 09:22 மு.ப ஈழம்] [க.நித்தியா] போர் நிறுத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசை இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் என்று தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை வாழ்த்தி கனிமொழி உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது: சிங்கள மொழி என்று இலங்கையின் ஆட்சி மொழியாக மாற்றப்பட்டதோ, புத…
-
- 0 replies
- 501 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 09:21 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள இராஜகிரிய, பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் ஜந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இரு பிரதேசங்களிலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஜந்து தமிழ் இளைஞர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். வரவு-செலவு திட்டத்…
-
- 0 replies
- 505 views
-
-
ஒரு வாரத்தில் 11 துணை இராணுவக்குழுவினர் பலி [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 06:35 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிழக்கின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதல்களில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏறாவூர் பகுதியில் கடந்த புதன்கிழமை அமைந்திருந்த துணை இராணுவக்குழுவின் காரியாலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்ல…
-
- 0 replies
- 579 views
-
-
அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டோம் - இலங்கை ராணுவம் வியாழக்கிழமை, நவம்பர் 6, 2008 கொழும்பு: கிளிநொச்சியில் உள்ள முக்கிய நகரான அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அக்கரையான்குளம் முழுமையும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது. இதில் கிளிநொச்சியைச் சுற்றிலும் உள்ள முக்கிய பகுதிகள் பல, படிப்படியாக தங்கள் வசம் வந்து கொண்டிருப்பதாக ராணுவம் கூறி வருகிது. இந்த நிலையில், மிக மிக முக்கியமான பகுதியாக கருதப்படும் அக்கரையான்குளத்தை முழுமையாக மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 3 நாள் சண்டைக்குப் பின்னர் அக்கரையான்குளம் வீழ்ந்துள்ளதாகவு…
-
- 7 replies
- 2.7k views
-
-
புலிகளின் தாக்குதல் விமானமொன்று வவுனியாவில் சஞ்சரிப்பு : தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலகுரக விமானமொன்று நேற்றைய தினம் வவுனியா வான் பரப்பில் சஞ்சரித்ததாக ராடார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பிரிவினரின் ராடர் கட்டமைப்பில் குறித்த விமானத்தின் சஞ்சரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3.30 அளவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வவுனியா பிரதேசத்திற்கு குறித்த விமானம் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் விமானம் விண்ணுக்கு ஏவப்பட்டிருப்பதனை ராடார் மூலம் அறிந்து கொண்ட சில நிமிடங்களில் மன்னார், வெலிஓயா மற்றும் அனுராதபுர பகுதிகளில் உள்ள படை முகாம்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், குறித்த விமானம் சில நிமி…
-
- 12 replies
- 3.1k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலைஇ நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது. அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள் பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே …
-
- 5 replies
- 1.6k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்வதற்காக 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 40 மில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த வாரம் வெளியிட்ட தகவல் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 13 ஆயிரம் பேரை படையினர் கொன்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அரசாங்கம் 2004 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை போருக்காக 583 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியின் கூற்றுப்படி ஒரு புலி உறுப்பினருக்காக அரசாங்கம் 42 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
- 2 replies
- 1.9k views
-
-
ஒரே நாள் இரவில் குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. "நாங்கள் பேசியதில் தவறில்லை'' என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கிய…
-
- 16 replies
- 2.6k views
-
-
-
முரசொலி எனும் பத்திரிகை திமுகவின் சொந்த பத்திரிகையென்பதும் கலைரின் மேற்பார்வையில் வெளியாகிறது என்பதும் நமக்குத் தெரியும். அதில் ஜெயலலிதா மற்றும் பார்ப்பனர்களை சீண்ட புலிகளை இழுத்திருக்கிறார்கள். அவர்கள் எழுதுகிறார்கள் - சீமான் புலிகளுக்கு ஆதரவாக பேசினால் கைது செய்ய சொல்லும் ஜெயலலிதா விகடன் புலிகளை ஆதரித்தால் ஏன் கைது செய்யச் சொல்வதில்லை என கேட்டு பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார்கள். முழுவதும் வாசித்தால் காறித் துப்ப வேண்டும் போலிருக்கிறது. அவர்களின் அரசியலுக்கு நாம் பகடைக்காய்கள் என்பதை இனியேனும் புரிவோம். விடுதலைப் புலிகளும் - விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும்! ( முரசொலி 4-11-08 அன்று வந்த கட்டுரை ) இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல் களிழைக்கப்படும் ஒவ்வொரு கா…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் வலிந்த போர் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த தமிழ் உறவுகள் நலம் பெற வேண்டி யேர்மன் இந்து ஆலயங்களில் நாளை வெள்ளிக்கிழமை சிறப்புப் பிரார்த்தனைகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 946 views
-
-
http://answercenter.barackobama.com/cgi-bi...enduser/ask.php
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கையில் நீண்ட காலமாக நடைபெறும் யுத்தத்தை நிறுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி 6ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் மூன்றாம் கட்ட போராட்டத்தை மகளிர் விடுதலை இயக்கம் நடத்தியுள்ளது. இப்போராட்டத்தின் போது கனிமொழி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வீடியோ இணைப்பு .இது தொடர்பாக திருமாவளவன் முன்னர் ரயில் மறியல் போராட்டத்தின் போது கைதாகும் தருணத்தில் 4தமிழ்மீடியாவிற்கு வழங்கிய சிறப்புச்செவ்வி மீ்ள் இணைப்பு. இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நற்சோனை தலைமை தாங்கினார். இந்திய கம்னிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து 2ஆயிரம் பெண்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இலங்கையில் போரை நிறுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் " ஈவிரக்கமில்லா இனப்படுகொலை இந்திய அரசே! போரை நிறுத்து! ஈழத்தமிழர்களை காப்பாற்று என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வீதியில் பெரிய எழுத்துக்களினால் எழுதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.tamilseythi.com/tamilnaadu/pera...2008-11-06.html -இராஜா
-
- 0 replies
- 903 views
-
-
இலங்கை தமிழர்களின் படுகொலையைக் கண்டித்தும் இலங்கையில் உடனே போர் நிறுத்தம் ஏற்படவும் மத்திய – மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி! ஆர்ப்பாட்டம் ஒன்று பெரம்பலூர் மாவட்டம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் நடத்தப்பட்டது. மத்திய அரசே! இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து! இலங்கைக்கு அளித்து வரும் இராணுவ பொருளாதார உதவிகளை உடனே நிறுத்து! ஈழத்தமிழர்க்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை உடனே வழங்கிடு! ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் போரை உடனே நிறுத்திடு! என அங்கு வருகை தந்தவர்களினால் முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு இயக்குனர் ஆதி தமிழ்செல்வன் தலைமை எற்று நடத்தினார். http://www.tamilseythi.com/…
-
- 0 replies
- 756 views
-
-
''தனி ஈழம்தான் ஒரே தீர்வு!'' : ஆவேச மன்சூர்... ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட் டத்தில் உணர்ச்சிப் பெருக்கில் பேசப்போய் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் சட்ட நடவடிக் கைகளுக்கு உள்ளானார்கள். இதையடுத்து, நடிகர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் 'இந்திய இறையாண்மைக்கு பங்கம் வராமல்' பேசுமாறு சங்கத் தலைவர் சரத்குமார் நடிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார். இருந்தும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், தன் பாணியில் மனசில் பட்டதை போட்டுடைத்து பரபரப்பு கிளப்பியிருக்கிறார். ''அகிம்சைப் போராட்டத்தின் மூலம் மட்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிப்பாய் கலகம் என்கிற ஆயுதப் புரட்சி, …
-
- 9 replies
- 3.2k views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 17 replies
- 3.4k views
-
-
மலேசியாவில் இலங்கை தூதரகம் முன்னால், தமிழர் படுகொலையை கண்டித்து கண்டன மறியல்! சிங்கள பேரினவாதத்தால் இலங்கையில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கபடுவ
-
- 7 replies
- 1.3k views
-
-
பராக் ஒபாமா வருகிறார் பராக்! மாற்றம் ஏற்படுத்த வருகிறார் பராக்! [06 நவம்பர் 2008, வியாழக்கிழமை 7:40 மு.ப இலங்கை] கறுப்பு இன வம்சாவளியினரான பராக் ஒபாமாவை தமது நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்திருக்கின்றார்கள் வெள்ளையர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்க மக்கள். ஜனநாயக அரசியல் சமுதாயத்தில் இது ஒரு புதிய மாற்றம் மட்டும் அல்ல, பராக் ஒபாமா திரும்பத் திரும்பப் பிரகடனப்படுத்திய மாதிரி புதிய உலக மாற்றத்துக்கான அமெரிக்க மக்களின் அறைகூவலாகவும் அங்கீகாரமாகவும் கூட இது அமைகின்றது. 2000 ஆம் ஆண்டில் தெரியாமலும், 2004 ஆம் ஆண்டில் தெரிந்தும் தவறிழைத்த அமெரிக்க மக்கள், அந்தக் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்வது போல இந்தத் …
-
- 5 replies
- 2.2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி இந்திய நாடாளுமன்றம் முன்பு வரும் 14ஆம் தேதி மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து தனி ரயில் மூலம் 2,000 மாணவர்கள் செல்ல உள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசிய பொதுச்செயலாளர் விஜயேந்திர கேசரி நவம்பர் 4ந் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: http://farm4.static.flickr.com/3015/300719...d05e7cd.jpg?v=0 நாட்டைப் பாதிக்கும் முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ஆம் தேதியன்று டில்லியில் மாபெரும் ம…
-
- 0 replies
- 857 views
-