ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் ஈழத் தமிழர் துயரங்களை வெளிப்படுத்தும் காயக்கட்டு ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 617 views
-
-
நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர்: நடிகர் கமல்ஹாசன் [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:18 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர். வாஞ்சிநாதன் உட்பட பலரும் அந்த வரிசையில் சேர்ந்தவர்கள்தான். அதனால் போராடுபவர்கள் யார் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும் என்று பிரபல நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசி விடக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. உள்ளதைச் சொன்னாலே கோபித்துக்கொள்ளும் இந்த உலகில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும் தமிழக திரையுலக நடிகர்- நடிகைகள் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 944 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் நாடகம் நடத்தும் அந்நாட்டு அதிபர் ராஜபச்சேவை மத்திய மாநில அரசுகள் தட்டிக்கேட்காதது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று ஈழத்தமிழர்களுக்காக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நடிகர்கள் ராதாரவி, சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களுடன் இணைந்து நான் 1983ம் ஆண்டு முதல் என்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம், கவர்னர் மாளிகை முன்பு போராட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் சிங்கள தூதரகத்திற்கு சென்றது போன்று பல்வேறு வகைகளில் இலங்கை தமிழர்களுக்காக போராடி இருக்கிறேன். …
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் முக்கிய மையமாக இலங்கை விளங்குகிறது. வெளிநாடுகளுக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பும், முக்கிய மையத்தளமாக இலங்கை விளங்குவதாக அமரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமரிக்க தூதரகத்தின்,உதவி சிரேஸ்ட அதிகாரி, ஜேம்ஸ் ஆர் மூர் இந்த கருத்தை நேற்று வெளியிட்டார். இவ்வாறாக சட்டவிரோத நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, மனித உரிமைகள் முழுமையாக பாதிக்கப்படவுள்ளன. அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்களும் முழுமையாக பாதிக்கப்படுவதாக மூர் குறிப்பிட்டுள்ளார். புள்ளிவிரபங்களின் படி இலங்கையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்காக 13 நிறுவனங்கள் இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.wtrfm.com/sub1…
-
- 0 replies
- 799 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார??. இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் முயற்சியில் நாம் இன்னும் வெற்றிபெற முடியவில்லை. அங்க தமிழர்கள் கொல்லப்படும்போதும், தமிழ்ப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும்போதும் பொங்கி எழும் நமது உணர்வுகள் உடனே அடங்கி விடுகின்றன. கடந்த மாதம் நடந்துள்ள நிகழ்வுகளும் அப்படித்தான். 14ஆம் தேதி கோட்டையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்த…
-
- 0 replies
- 934 views
-
-
ஆயித்தியமலையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல் [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 06:30 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயித்தியமலைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ஆயித்தியமலை ஆறாம் கட்டைப் பகுதி மருத்துவமனையில் முகாம் அமைத்திருக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று சனிக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் முகாமில…
-
- 0 replies
- 756 views
-
-
சென்னை அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.அதுதான் அந்நாட்டுக்கும் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும். இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும். இலங்…
-
- 0 replies
- 2.4k views
-
-
இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து நடிகர், நடிகைகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் இன்று சற்று முன்னர் தொடங்கியது. நடிகர்,நடிகையர் குவியத் தொடங்கி உள்ளனர். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 19-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினர் பங்கேற்ற கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள இயலாதவர்கள், தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். கமல், ரஜினி: அதன்படி …
-
- 15 replies
- 4.8k views
-
-
கிழக்கு மகாணச சபை முதலமைச்சர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீரகேசரி இணையம் 10/31/2008 9:22:19 AM - கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சென்ற வாகனம் கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி சென்ற வேளை இன்று காலை 9.00 மணியளவில் .விபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தவாகனம் லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.எனினும் முதலமைச்சரிற்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
-
- 9 replies
- 1.9k views
-
-
எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார். பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின…
-
- 8 replies
- 1.9k views
-
-
மன்னார் தள்ளாடி மற்றும் கொழும்பு களனிதிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 40 நிமிட இடைவெளியில் வான் புலிகள் துல்லியமான தாக்குதல் நடத்திய போதிலும், வான் புலிகளது வானூர்திகளில் ஒன்றுகூட சிறீலங்கா வான் படையினர், மற்றும் ஏனைய இடங்களிலுள்ள வான்காப்பு பொறிமுறைக்குள் சிக்கவில்லை எனவும், கண்காணிப்புத் திரையில் பதியப்படவில்லை எனவும் சிறீலங்கா படைத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவினால் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் வலுக்கொண்ட முப்பரிமாண கண்காணிப்புக் கருவியான இந்திரா ராடரில்கூட வான் புலிகளின் வானூர்திகளின் அசைவுகள் பதியப்படவில்லை எனும் கருத்தை சிறீலங்கா வான் படையின் பெயர் குறிப்பிட்ட விரும்பாத உயரதிகாரி அதிகார் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். பறப்பை மேற்கொள…
-
- 22 replies
- 4.8k views
-
-
தமிழக முதல்வர் டாக்டர் திரு.மு.கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்! கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தமிழகத்தில், ஈழம் பேசு பொரு ளாகியிருக்கிறது. எண்பதுகளில் தொடங்கிய உணர் வலைகள், இடையில் போடப்பட்ட அணையை உடைத்து மீண்டும் கிளர்ந்திருக்கிறது. ஈழத்தில் அன்றாடம் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகும் மக்களின் துயர் பற்றிப் பேசினாலே, அது புலிகளைப் பற்றிய பேச்சாக மாற்றப்பட்டு, ஈழம் குறித்த பேச் சையே தடுத்துவிட வேண்டும் என்ற உங்கள் கூட்டணி நண்பர்களான காங்கிரஸ்காரர்களின் கவலை புரிகிறது. ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு இந்தியாவே மௌனசாட்சியாக இருக்கிறது என்ற ஜெயலலிதாவின் அறிக்கையின் விளைவாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினீர்கள். 'இரு வார காலத்துக்குள் போர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
புதுடில்லியின் வார்த்தையை நம்பி ஈழத்தமிழரைக் கைவிட்ட கலைஞர் [01 நவம்பர் 2008, சனிக்கிழமை 7:20 மு.ப இலங்கை] இந்திராகாந்தி இருந்த காலத்தின் நிலை இன்று மாறிவிட்டது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அவ்வளவு அக்கறை கொள்ளமுடியாது என்றும் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளின் உதவியுடனும் படை பலத்துடனம் இலங்கை இயங்குவதைத் தடுக்கும் முறையில் ஆயுதங்கள் வழங்குவதையோ, அரச படைகளுக்குப் பயிற்சி வழங்குவதையோ அல்லது இலங்கையின் பாதுகாப்பு நலனுக்காக குறைந்த வட்டியில் நிதி வழங்குவதையோ எவரும் குறைகூற முடியாதென்று அவர் கூறியமை மட்டுமல்ல, இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு ஒரு விளையாட்டுத் தளமாக ஆக்குவதற்கு இடமளிக்கவும் ஆகாது…
-
- 0 replies
- 1k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்: ஒரு இராசதந்திரப் போராளி நவம்பர் 2, 2007. ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத நாட்களுள் அதுவும் ஒன்று. அன்றுதான் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா விமானப்படையின் கோழைத்தனமான தாக்குதலுக்குப் பலியான நாள். சமாதானம் என தான் பேசுவது உதட்டளவில் மாத்திரமே என்பதை சிங்கள தேசம் மீண்டுமொருமுறை நிரூபித்த நாள். அப்படி நடந்திருக்காது. இது பொய்யான செய்தியாகவே இருக்கும் என நினைத்து தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் நம்ப மறுத்த நாள். அன்றைய நாள் உலகெங்கும் வழக்கம் போலவே விடிந்தது. ஆனால், ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமே துயரத்தோடு விடிந்தது. தமிழ்ச்ச…
-
- 0 replies
- 904 views
-
-
தலையாட்டிகளின் உதவியுடன் திருமலையில் ஏழு இளைஞர்கள் கைது [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:13 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏழு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தரைப்படையினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய பாரிய சுற்றிவளைப்பு தேடுதலில் முகமூடி அணிந்த தலையாட்டிகளின் உதவியுடன் இந்த ஏழு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தேடுதல் சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கும் அதிகமானனோர் மீது விசாரணைகள் இடம்பெற்றன. அதேவேளை, திருகோணமலை மாவட்டம் திருக்கோவிலில் கடந்த இரண்டு நாட்களில் மூன்று தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா …
-
- 0 replies
- 560 views
-
-
இந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும்இ வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள். உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் ஹசுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவேஇ அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும…
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது. எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும். கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப…
-
- 0 replies
- 790 views
-
-
விடுதலைப்புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன – ராமன் : ஒக்.28ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளின் வான்படைப்பிரிவு வடக்கில் இராணுவ இலக்கு ஒன்றின் மீதும் தெற்கில் கொழும்பில் பொருளாதார இலக்கு ஒன்றின் மீதும் 90 நிமிட இடைவெளியில் தாக்குதல் நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளின் வான்படைப்பிரிவு 2007 மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்தது முதல் ஒக்.28 வரை ஏழு வான்படைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. போர்க்களச் செய்திகளைத் தரும் புலிகளுக்காதரவான ஆங்கில மொழி இணையத்தளமான தமிழ்நெற் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் போர்முனைச் செய்திகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஒக்.28ஆம் திகதி விடுதலைப்புலிகளி…
-
- 10 replies
- 3.3k views
-
-
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சேதமடைந்த கப்பலிலிருந்து பொருள்கள் இறக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. ஒக்டோபர் 22ஆம் திகதி அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற றுகுணு மற்றும் நிமல்லவ ஆகிய சரக்குக் கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தக் கப்பலில் நிமல்லவ கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடலில் மூழ்கிய கப்பல் கடற்படையினரால் கரைக்கு இழுத்துவரப்பட்டு அதிலிருந்த பொருள்கள் இறக்கப்பட்டிருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்த சீமெந்து உள்ளிட்ட பொருள்கள் இறக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இடமொன்றில் வைக்கப்பட்டிருப்பதா…
-
- 3 replies
- 1.8k views
-
-
மேலே படத்தில காணப்படுபவர் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத். இவர் 2006ம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போய் இருந்தார். இவர் போல் பல ஆயிரம் பேர்.. இது எத்தனை ஆயிரம் என்று கடத்தியவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் இப்படி கடத்தப்பட்டு காணாமல் போவதற்கு புது வியாக்கியானம் கொடுத்து இருக்கிறார் டொரண்டோவில் இருக்கும் இனவாத சிறீ லங்கா தூதுவர் பந்துல செயசேகர. இவர் கூறுகின்றார் இப்படி காணாமல் போனவர்களில் ஒருவர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதை தாம் கண்டு பிடித்து இருக்கின்றோமாம். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கொழும்பில் எந்த தற்கொலை தாக்குதலில் இடுப்பில் குண்டைக் கட்டிக்கொண்டு இறங்கினார் என்பது பற்றி எதுவித தகவலும் அவர் தெரிவிக்கவில்லை. கனடாவில் இரு…
-
- 12 replies
- 2.9k views
-
-
தமிழ் இனப்படுகொலைகளை நிராகரித்து பத்திரிகைகளுக்கு கருத்துத் தெரிவித்துள்ள இந்தியாவின் ஜனதாக் கட்சித் தலைவன் சுப்பிரமணிய சுவாமியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்புக்கான சட்டதரணி புரூஸ் பெய்ன் சவால் விடுத்துள்ளார். புரூஸ் பெய்னனின் சவால் அறிவிப்பு தொலைநகல் மற்றும் கடுகதி தபால் மூலமாக சுவாமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தச்சவாலை சுவாமி ஏற்றுக் கொண்டால் விவாதத்தை நடத்த இடமளிக்க பிரிடிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பி.பி.சி) ஆர்வமாக இருக்கின்றதா? என்பதுகுறித்து அறிய பி.பி.சி யுடன் இனப் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது. சுவாமி தன்னுடன் இது தொடர்பாக தொடர்பு கொள்ள முடியும் என்று புரூஸ் பெயன்…
-
- 7 replies
- 2.3k views
-
-
கொழும்பு: இலங்கையில், அந்நாட்டு ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, அந்தப்பகுதியில் இருந்து ராணுவம் பின்வாங்கியது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும்மோதல்கள் நடைபெற்று வருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. வன்னி பகுதியில் உள்ள விளாங்குளத்தில் ராணுவத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதலை நடத்திபடியே முன்னேறினர். அப்போது, புலிகளும், ராணுவத்தினருக்கு எதிராக பீரங்கி தாக்குதலை நடத்தினர். இதில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், ராணுவத்திடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை புலிகள் கைப்பற்றினர…
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கையில் ராணுவத்திற்கும்இ விடுதலைப்புலிகளுக்குமிடையே உச்சகட்டப் போர் நடந்து கொண்டிருக்கஇ இங்கே பிரிவினைவாதம் பேசியதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் கைது செய்யப்படுகிறார்! தொடர்ந்து இயக்குநர்கள் சீமான்இ அமீர். சென்னையில் தி.மு.க.வின் மனிதச் சங்கிலி. ஈழத்தமிழர்களின் பிரச்னையில் நமது மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறையைப் பற்றி தனக்கேயுரிய அதிரடி ஸ்டைலில் ஆவேசப்படுகிறார் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். ஹஹஉலகத்தமிழர் களின் இதயங்களில் ஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த கலைஞர் கருணாநிதி இன்றைக்கு அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். அவர் தலை யிலிருந்த தமிழினத் தலைவர்இ என்ற தங்க மகுடம் கழன்று கீழே விழுந்துவிட்டது! தன் வயதான காலத்தில் சரிந்து போன செல்வாக்கை சரிப…
-
- 0 replies
- 779 views
-
-
டெல்லியில் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்கும் மாநாடு வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். அப்போது, இந்தியத் தலைவர்கள் ராஜபக்சேவுடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிபர் ராஜபக்சே சந்திப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். http://tamil.webdunia.com/newsworld/news/i...081101005_1.htm
-
- 3 replies
- 1.6k views
-