ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மட்டக்களப்பில் இன்று கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்த துணைப்படைக் கருணா குழு உறுப்பினர்கள், மக்களை பலவந்தமாக இழுத்துச் செல்வதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈழத்தமிழ் மக்களிற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள ஆதரவுக் குரல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துணைப்படைக் கருணா குழுவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் கண்டனப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், சிறீலங்கா படையினரது உதவியுடன் துணைப்படைக் குழுவினர் ஆயுத முனையில் மக்களை இழுத்துச் சென்றுள்ளனர். மக்களை இழுத்துச் செல்ல ஊர்தி செலுத்துனர்கள் தமது ஊர்திகளை வழங்க மறுத்த …
-
- 8 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 504 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
தாயகத்தில் தமிழ் உறவுகள் சிறிலங்கா படைகளின் கொலைவெறி தாக்குதலால் செத்தொழிந்து வரும் அவலத்தை கண்டித்து அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கவன ஈர்ப்பு ஊர்வலம் எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சனிக்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 406 views
-
-
தாயகத்தில் தமிழ் உறவுகள் சிறிலங்கா படைகளின் கொலைவெறி தாக்குதலால் செத்தொழிந்துவரும் அவலத்தை கண்டித்து அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கவனஈர்ப்பு ஊர்வலம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி சனிக்கிழமை மெல்பேர்னில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 472 views
-
-
நாளுக்கு நாள் கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரளித்து வரும் கருணா, பிள்ளையான் தலைமையிலான ஆயுத குழுக்கள், இன்று தமிழக அரசிற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக சிறிலங்கா அரசால் தூண்டிவிடப்பட்ட நிலையில் ஆயுதமுனையில் மக்களை பலவந்தமாக இழுத்துச் சென்று ஆர்ப்பாட்டம் எனும் நாடகத்தில் பங்கு பெற வைக்கப்பட்டிருப்பதாக த.வி.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ச.சந்திரநேரு விசனம் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மிக கொடூரமான இனவழிப்பு போரையும், மனித உரிமை மீறல்களையும் தடுப்பதற்கு தமிழக தலைவர்கள் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வரும் இந்நிலையில், கிழக்கில் இயங்கும் சிறிலங்கா அரசின் அடிவருடிகளான ஆயுதக்குழுக்கள், தமது சுகபோக வாழ்க்கைக்கு ஏதாவத…
-
- 1 reply
- 868 views
-
-
மனிதசங்கிலிக்கு மேலும் பெருமை சேர்த்தது மழை தான் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதிலில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- கொட்டும் மழையிலும் மனிதச் சங்கிலி பெரு வெற்றி பெற்றதைப் பற்றி? பதில்:- மனிதச் சங்கிலிக்கு மேலும் பெருமை சேர்த்தது மழை தான்; அதனால் "மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்'' என்போம். 21-ந் தேதி மனித சங்கிலி நடத்துவதாக இருந்து பெரு மழை காரணமாக அதனை ஒத்திவைக்க நேர்ந்தபோது, 24-ந் தேதியும் மழை பெய்தால் என்ன செய்வது, தீபாவளி நெருங்கிவிடுமே என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன. அதைப் போலவே 24-ந் தேதி சரியாக 3 மணிக்கு பெருமழை நகரெங்கும் கொட்டியது. எனினும், அந்தக் கொட்டும் மழையிலும் தமிழர்கள்…
-
- 0 replies
- 811 views
-
-
உணர்ச்சிவசப்பட்டு பேசுவது தவிர்க்க முடியாதது என்றும் இயக்குனர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி அணிவகுப்பு மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. சென்னையில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு தாம்பரத்தையும், செங்கல்பட்டு நகரையும் தாண்டி நீண்டு நின்றதில் இருந்து இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காக்க வேண்டும் என்ற உணர்வு தாயகத்து தமிழர்களிடம் பட்டுப் போய்விடவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. இந்த அணிவகுப்பில் கண்ட இன உணர்வு ஒருபுறம் மெய்சிலிர…
-
- 0 replies
- 776 views
-
-
புதுடெல்லி \ சென்னை (ஏஜென்சி) இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்தியா வந்துள்ள அந்நாட்டு தூதுவருடன் நடத்திய பேச்சு விவரங்களை கருணாநிதியிடம் எடுத்துரைப்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை சென்னை வருகிறார். நேற்றிரவு டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகரும், அவரது சகோதரருமான பாசில் ராஜபக்சே, இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தமிழர்கள் நலனைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது அவர் விளக்கியதாக தெரிகிறது. மேலும் தற்போதையப் போரினால…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாய்க்கும் குரங்கிற்கும் பகை என யாராவது சொல்ல முடியுமா? அன்பும் நட்பும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. பகையான நாயும் குரங்கும் கூட நண்பர்களாகி விட்டன.விலங்குகளை கண்டாவது மனிதர்கள் திருந்தட்டும். அரிய படம் பதிவான இடம் தமிழகத்தில் உள்ள பெரம்பலூர். படம் உள்ளே இருக்கு..... இந்த மிருகங்களுக்கு இருக்கிற ஒற்றுமை,தமிழகத்தில இருக்கிற சில மனிதர்களுக்கு இல்லை! http://www.tamilseythi.com/tamilnaadu/pera...2008-10-26.html -தமிழ்செய்தி நிருபர் இராஜா
-
- 3 replies
- 1.4k views
-
-
வன்னியில் அக்கராயன்குளம் மற்றும் இரணைமடு நோக்கிய பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் கடும் சமர் நடைபெற்று வருவதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. அக்கராயன்குளத்திற்கு கிழக்கேயும் மேற்கேயும் நிலை கொண்டுள்ள 57 ஆவது படையணியினர் மேலும் தங்கள் முன்னேற்ற நடவடிக்கையை ஆரம்பித்தபோது கடும் மோதல் வெடித்தது. அக்கராயன்குளம் பகுதியில் இரு இடங்களில் மோதல்கள் நடைபெற்ற அதேநேரம், அக்கராயன்குளத்திற்கு வடகிழக்கேயும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதேநேரம், கிளிநொச்சி யுத்த முனையில் கிழக்குப்புறமாக நிலைகொண்டுள்ள 57 ஆவது படையணியினர் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரணைமடு நோக்கிய முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டியதாக படையினர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வைகோ கைது: கலைஞரின் உபாயம்! [26 - October - 2008] அபிஜித் சமீபகாலமாக தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ அனுதாப எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருந்த தமிழகத்தின் பார்ப்பன சக்திகள் சென்றவாரம் வைகோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உசாரடைந்துள்ளன. தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையான பிரதான சக்தி இந்தப் பார்ப்பனியமே என்பது 1930 களிலேயே தந்தை பெரியாரால் உணரப்பட்டது. அதனால் தான் "பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பைக் கொல்லாதே; பார்ப்பனனைக்கொல்" எனப் பெரியார் கூறி இருந்தார். பிராமணரான ஜெயலலிதாவை ஆட்சிக்கதிரையில் நிரந்தரமாக இருத்தி அழகு பார்ப்பதே இந்தப்பார்ப்பனியத்தின் இலட்சியம். துக்ளக் ஆசிரியர் சோ,சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா மற்றும் பிராமணப் பத்திரிகை…
-
- 1 reply
- 1.4k views
-
-
சென்னை (ஏஜென்சி) இலங்கை பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டு தலைவரும்இ அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இன்று பகல் 12 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது இலங்கை பிரச்சனை குறித்தும் தற்போதுள்ள சூழ்நிலைகள் குறித்தும் மத்திய அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் கூறியதோடு, இன்று பிற்பகலில் மேலும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
டெல்லியில் பிரணாப்-ராஜபக்சே தம்பி சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008 டெல்லி: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பி பாஸில் ராஜபக்சே இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். இருவரும் மூத்த அதிகாரிகள் புடைசூழ டெல்லி செளத் பிளாக்கில் உள்ள ளியுறவுத்துறை கட்டடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக பாஸில் தலைமையிலான குழு நேற்றிரவு டெல்லி வந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்டுள்ள சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்களை குண்டு வீசி கொன்று வருகிறது. இதனால் சுமார் 2.5 லட்சம் தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறி காடுகளிலும் சாலைகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, மருந்துகளையும் …
-
- 1 reply
- 733 views
-
-
இலங்கையில் தனி தமிழ்ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தியுள்ள விடுத லைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலி களின்நிர்வாகத்தலை நகரமான கிளிநொச்சியை குறி வைத்து இலங்கை விமானப்படை தினமும் குண்டு களை வீசுகிறது. விடுதலைப்புலிகள் மீதுள்ள கோபத்தில் கண் மூடித்தனமாக சிங்கள ராணுவம் சரமாரியாக குண்டு வீசுவதால் அப்பாவி ஈழத் தமிழர்கள் கடும் பாதிப் புக்குள்ளாகி இருக் கிறார்கள். சுமார் 2 லட்சம் பேர் வீடு களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். காடுகளில் தஞ்சம் அடைந்துள்ள சுமார் 1 லட்சம் பேர் உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் பரிதாபமாக நிலையில் தவித்துக்கொண் டிருக்கிறார்கள். அந்த அப…
-
- 1 reply
- 2k views
-
-
காத்தான்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் வீரகேசரி இணையம் 10/26/2008 12:28:19 PM - மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் ஒன்றில் 5 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
- 0 replies
- 625 views
-
-
வணக்கம், இந்தக்கடிதம் தற்செயலாக சிக்குப்பட்டது கூகிளில். சிங்களவன் களிண்ட ஏதோ மனித உரிமை அமைப்பு இணையத்தில இந்த மிரட்டல் கடிதத்தின் பிரதி காணப்படுகின்றது. இதை வாசிக்க அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. Bob Rae அவர்கள் தாயக பிரச்சனை பற்றிய பரந்த அறிவை கொண்டவர். சமாதான பேச்சு வார்த்தைகளில் இவரது பங்கும் இருந்தது. இந்தக்கடிதம் மனித உரிமை அமைப்பு என்ற போர்வையினுள் மறைந்து இருக்கின்ற சிங்கள இனவாதிகள் எத்தனை விதமாக எல்லாம் மிரட்டல் தொடக்கம் தினமும் வகை வகையாக பிரச்சாரம் செய்கின்றார்கள் என்பதற்கும் ஆதரமாக இருக்கின்றது. எம்மவர்கள் யாராவது இப்படி பிரச்சாரம் செய்கின்றார்களா? இனவாத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்த மனித உரிமை அமைப்பு Unity and Human Rights for Sri Lanka…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பி போராட்டங்கள் நடத்த ஏற்பாடு வீரகேசரி இணையம் 10/26/2008 11:06:46 AM - ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எதிர் போராட்டங்களையும் பேரணிகளையும் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜே.வி.பிமற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள கிராமங்களில் வீடுவீடாக சென்று விளக்கமளித்து வரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களினால் ஸ்ரீலங்காவின் இறைமைக்கு ஆபத்து என்று கூறிவருவதுடன் அதற்கு எதிராக சிங்கள மக்கள எழுச்சியடைய வேண்டும் எனவும் பிரசாரம் செய்து வருகின்றனர். அரசியல் கட்சிவேறுபாடுகள…
-
- 0 replies
- 528 views
-
-
அதிகரிக்கும் இந்திய எதிர்ப்பு [26 - October - 2008] தாயகன் இலங்கை மீதான இந்தியாவின் தலையீடு கள், நெருக்கடிகள் தொடர்பில் கருத்துக்கள், கண்டனங்கள் தெரிவிப்பதில் அடக்கி வாசிக்கும் அரசாங்கம் மறுபுறத்தே தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விட்டுள்ளதுடன் இதற்காக சில தமிழ்த் தரப்புக்களையும் பயன்படுத்துகின்றது. இந்தியாவுடனான உறவில் தமிழகம் வேண்டாம் மத்திய அரசே வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே செயற்பட்டுவரும் இலங்கையரசாங்கம் மத்திய அரசுக்கெதிராக இலங்கையில் எதிர்ப்புணர்வுகள் வெளிக் கிளம்பிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தும் அதே வேளை தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கொடும்பாவியை எரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வார பாராளுமன்ற அமர்வின் போது இந…
-
- 0 replies
- 1k views
-
-
எவரை எவர் வெல்லுவாரோ? [26 - October - 2008] விதுரன் வன்னிப்போர் நிறுத்தப்படாது. அதனை நிறுத்த இலங்கை அரசு தயாரில்லையென்பதுடன் அதனை நிறுத்துமாறு கோர இந்திய அரசும் தயாரில்லை. தமிழகத்திலிருந்து வரும் பாரிய அழுத்தங்களை விட இலங்கை அரசுடன் நட்புறவைப் பேணவே இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டுவதால், வன்னிப் போரை தொடருமாறு இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆசி கூறியுள்ளது. அதை விட இலங்கைப் படையினருக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கவும் தமிழகத்திலிருந்து வரும் அழுத் தங்களால் இலங்கை அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுதைத் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசு தயாராகிவிட்டது. வன்னிப்போரில் மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாக்கி வருவதாக இலங்கை அரசு கூறுவதை இந்திய அரசும் கூறமுற்படுகிறது.…
-
- 0 replies
- 968 views
-
-
அரசியலுக்கு அப்பாற்பட்டு கரங்களை இணைப்போம்; இலங்கை தமிழர்களை இனப்படுகொலையில் இருந்து மீட்போம் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணையதளம் வாயிலாக தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணையதளத்தின் வாயிலாக தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து வருகிறார். இதில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:- தாய்த் தமிழகம் ஓரணியில் கைகோர்த்து நின்ற காட்சி இந்தியத் தலைநகரை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது. உலகத் தமிழர்களின் நெஞ்சில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இனப் படுகொலையிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கை இலங்கைத் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை ஏற்பட்டிருப்பதற்கு காரணம், தலைவர் கருணாநிதி எடுத்து வ…
-
- 0 replies
- 893 views
-
-
ஈழத் தமிழ் மக்களுக்காக ஒன்றுபடுவீ்ர் தமிழகத்தீரே! [26 ஒக்டோபர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:40 மு.ப இலங்கை] ஈழத்தமிழர்களின் பிரச்சினையால் கொதித்துப் போய் இருக்கின்றது தாய்த்தமிழகம். தமிழகத்தின் எழுச்சியும் கிளர்ச்சியும் தங்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அந்த எதிர்பார்ப்பைப் பயனற்றதாக்கிவிடும் செயற் பாட்டில் தமிழகத்தின் ஈழ ஆதரவுச்சக்திகள் ஈடுபட்டு விடக்கூடாது என்பதுதான் ஈழத்தமிழர்களின் இன்றைய - பிரதான - கோரிக்கையாகும். தமிழக அரசியல் கட்சிகள் இடையேயான கொள் ளைக் கோட்பாட்டுப் பிரச்சினைகளை, அரசியல் போட்டா போட்டிகளை, உள்வீட்டுக் கழுத்தறுப்புக்களை பதம் …
-
- 0 replies
- 659 views
-
-
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுமா? என்ற கேள்வி இப்போது எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் மேடையாகட்டும், ஊடக வட்டாரங்களாகட்டும், பொது நிகழ்வுகள், சமூக விழாக்கள் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத் தான். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் இந்தக் கேள்வி வலுப்பெற்றிருக்கிறது. 1987இல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அடுத்து, தனது படைகளை அனுப்பியது இந்தியா. 1990ஆம் ஆண்டு படைகளை விலக்கிக் கொண்ட இந்தியா, 1991இல் ராஜீவ்காந்தி படுகொலையை அடுத்து இலங்கை விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற கொள்கை ரீதியான முடிவை எடுத்திருந்தது. காலப்போக்கில் இந்த தலையிடாக் கொள்கை, இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியாக உதவி செய்வது என்ற நிலைக்கு மாற்றமடைந்தத…
-
- 0 replies
- 760 views
-
-
தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களை கண்டித்து பேரணிகளை நடத்துவதற்கு ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து சிங்கள மக்களை ஒன்றுதிரட்டி வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 538 views
-
-
தென்னாசியாவின் மையசக்தியாக மாற்றமடையும் ஈழப்போராட்டம் சி.இதயச்சந்திரன் உலக மயமாக்கிகளுடன், அணுசக்தி ஒப்பந்தம் ஊடாக புதிய நட்புறவொன்றை இந்தியா உருவாக்கியுள்ளது.தமது இனத்துவ தேசியத்தை பேணியவாறு, சந்தைக் களமாகத் திகழும் வளர்ச்சியடையாத நாடுகளின் பூர்வீக தேசிய இனத்துவ விழுமியங்களை சிதைக்க வேண்டிய தேவையும் இவ்வுலக மயமாக்கலின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கிறது. தமக்குச் சாதகமான பிராந்தியங்களில் பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்வதும் புதிய வல்லாதிக்கத் தலைமை உருவாகும் பிராந்தியத்தில் அவ்வகையான விடுதலைப் போராட்டங்களை நிராகரிப்பதும் பொதுவான நடைமுறைத் தந்திரோபாயமாக இருக்கிறது.மேற்குலக ஆதிக்க வட்டத்துள் முரண்பட்டு …
-
- 0 replies
- 645 views
-