ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த ஒரேவொரு சிங்கள மொழி பாடசாலை 33 வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று (27) மாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் 1990ஆம் ஆண்டு இந்த பாடசாலை மூடப்பட்டது. மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பாடசாலையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திறந்து வைக்கவுள்ளார். https://thinakkural.lk/article/250955
-
- 3 replies
- 766 views
- 1 follower
-
-
06 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து கலந்துரையாடிய போது, ஜனாதிபதி இதனை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹர…
-
- 2 replies
- 664 views
-
-
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்! கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இலங்கைக்கு பெருந்தொகை நட்டஈடு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த டொலர் தொகை பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜ…
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கை அதிபர் சேவையின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அமைச்சின் ஆலோசகராக இருந்த பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் ஐந்து நிபுணர்களைக் கொண்ட குழு ஏற்கனவே தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. அனைத்து அதிபர்கள் சங்கங்களும் தங்களது முன்மொழிவுகளை முன்வைக்க மே 9ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 15 முதல் தொழிற்சங்க அமைப்புகளுடன் நேர்காணல் நடத்தி நிபுணர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கவும், மாகாண வலய அலுவலகங்கள் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சென்ற…
-
- 0 replies
- 465 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 APR, 2023 | 03:31 PM இலங்கையின் பொருளாதாரத்திற்கு தசாப்தகாலமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள விடயங்களிற்கு தீர்வைகாண்பதற்கான சீர்திருத்தங்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என இலங்கையின் மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. 2022ம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையிலேயே இலங்கை மத்திய வங்கியின் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த ஏழு தசாப்தகாலமாக பாதித்துள்ள கட்டமைப்பு இடையூறுகளிற்கு தீர்வை காண்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை இலங்கை அரசாங்கமும் மத்திய வங்கியும் அனைத்து பங்குதாரர்களும் வழங்கவேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீர்திருத…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 27 APR, 2023 | 02:47 PM (எம்.வை.எம்.சியாம்) கடந்த வருடத்தை விட இவ்வருடம் கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மனித நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 143 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவற்றுள் 37 மரணங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், 27 மரணங்கள் மின்சாரம் தாக்கியதாலும், 6 மரணங்கள் உணவு விஷமாகியமை உள்ளிட்ட காரணங்களாலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ள…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 27 APR, 2023 | 01:35 PM நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அனைவரும் பொதுவான தீர்வுகளை காண வேண்டும், இல்லையேல் நாட்டை மூடிவிட்டு வெளிநாடு செல்வதே நல்லது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நூல் ஒன்றின் வெளியீட்டு விழா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கொழும்பில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/153910
-
- 0 replies
- 566 views
- 1 follower
-
-
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் வெற்றி - தமிழ் அரசியல் கட்சிகள் Published By: T. Saranya 26 Apr, 2023 | 10:08 AM இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை (25) முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றிவரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு, இலங்கை அரசாங்கம் தமிழ் மக…
-
- 1 reply
- 339 views
-
-
குருந்தூர் மலை வழக்கு இன்று நீதிமன்றில் ; சட்டத்தரணிகள் அரசியல் வாதிகளுக்கு அகத்தி அடிகளார் கோரிக்கை! Published By: T. Saranya 27 Apr, 2023 | 10:45 AM குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்ததாவது, 1.பிடுங்ககப்பட்ட திரி…
-
- 0 replies
- 422 views
-
-
Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 11:12 AM கொழும்பு, பேலியகொடயிலுள்ள களஞ்சியம் ஒன்றில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று 'குஷ்' என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை இன்று (25) கைப்பற்றியுள்ளது. இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில் மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர். குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்படடிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்…
-
- 12 replies
- 882 views
- 1 follower
-
-
அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பந்துல! அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாணய நிதியத்தின் ஆரம்ப நிபந்தனைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமானது சர்வதேச கடன்களுக்கான வட்டியை செலுத்தக் கூடிய திட்டமிடலை சமர்ப்பிப்பதாகும். இதன் மூலம் பொருளாதாரத்தில் …
-
- 1 reply
- 512 views
-
-
50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் C.I.T யிடம்! இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில், விசாரணை கோட்டை பொலிஸாரிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கியின் நிதியியல் திணைக்கள அத்தியட்சகர் ஏ.ஆர். தயானந்தா, கடந்த 11ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார். நவீன தொழில்நுட்ப ப…
-
- 3 replies
- 718 views
-
-
கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது ? - கடற்படையினர் கச்சதீவையும் விட்டுவைக்கவில்லை என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன் Published By: VISHNU 23 MAR, 2023 | 03:52 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் வீட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள். அந்த சிலையை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது. பொருளாதார மீட்சியில் இருந்து …
-
- 17 replies
- 694 views
- 2 followers
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 09:23 PM அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்டக்குழி குளத்தை மண் நிரவி குளத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட வரை பிரதேச செயலாளர் வி.பாபகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள இந்து மயானத்துக்கு எதிராகவுள்ள கண்டக்குழி குளத்திலிருந்து அந்தபகுதி விவசாயிகள் வயல் நிலங்களுக்கு நீரை பெற்றுவருவதுடன் கால்நடைகளும் அந்த குளத்து நீரை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த கால யுத்த சூழல் காலத்தில் அந்த பகுதியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 10:03 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 75 ஆண்டுகால ஜனநாயக மற்றும் இறையான்மை உறுதிப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பகிரப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களை மறுத்துள்ளார். 'ஒன்பது - மறைக்கப்பட்ட கதை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச 'அரகலய' ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 591 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 09:49 PM (எம்.ஆர்.எம்.வசீ்ம். இராஜதுரை ஹஷான்) முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. மாற்றுவழியை யாரும் முன்வைக்கவும் இல்லை. அத்துடன் தேசிய கடன் மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்பிற்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்த…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 09:40 PM யாழ்நகர் பகுதியில் உள்ள சில கடைகளிற்கு காலாவதி திகதி கடந்த சோடா போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்து, காலாவதி திகதியை அழித்து விநியோகஸ்தர் ஒருவரினால் இன்று (26) விநியோகிக்கப்பட்டுள்ளதாக, யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்க பெற்றது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் யாழ்நகர் கடைகளில் எழுமாறாக பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது காலாவதி திகதி கடந்த சோடாப்போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்தும் மற்றும் காலாவதி திகதியை அழித்தும் சோடாப்போத்தல்கள் கடைகளிற்கு விநியோகம் செய்யப்பட்டமை பொது சுகாதார பரிசோதகர்களால் க…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 04:29 PM (எம்.ஆர்.எம்.வசீ்ம். இராஜதுரை ஹஷான்) தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் .மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் உள்ளடங்கும் தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கோரிக்கை முன்வைத்த போதும், மார்ச் மாதத…
-
- 1 reply
- 183 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 26 APR, 2023 | 01:07 PM காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமியொருவர் அதிகளவு பரசிட்டமோல் வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். உடுவெல்ல, உடுஹெந்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஷாமலி தருஷி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இவர் பாடசாலையொன்றில் 2ஆம் தரத்தில் கல்வி கற்றவராவார். கம்பளை பிரதேச வைத்தியசாலையில் இரண்டு தடவைகள் சிறுமியின் பெற்றோர் மருந்தை பெற்றுள்ளனர். இருப்பினும், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவுக்குப் பதிலாக வைத்தியசாலையின் மருந்தகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயது வந்தோருக்கான டோஸ் குழந்தைக்கு வழங்கப்பட்…
-
- 2 replies
- 765 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 26 APR, 2023 | 04:20 PM யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பி திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக நீர் இறைக்கும் மோட்டர் திருட்டும் இடம் பெறுவதாக தந்தை செல்வா சதுக்க பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். இதேவேளை, 75 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர்கள் 3 தடவைக்கு மேல் திருடப்பட்டுள்ளதாகவும், திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும…
-
- 1 reply
- 568 views
- 1 follower
-
-
இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநிதிகள் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதற்கமைய, சுமார் 1.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவண பத்திரத்தில் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். https://thinakkural.lk/article/250836
-
- 2 replies
- 675 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 26 APR, 2023 | 02:30 PM பல்வேறு பதவி நிலைகளில் உள்ள நபர்களின் தேசிய அடையாள அட்டை, சம்பள விபர பட்டியல் சேவைக்கான சான்றிதழ்களையும் பயன்படுத்தி வங்கி கடனட்டைகளை (Credit Card) பெற்று பல இலட்சம் ரூபாய்கள் பண மோசடி செய்த நபர் ஒருவரை கம்பளை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் கைது செய்துள்ளனர். இதன்போது கம்பளை தெல்பிட்டிய வத்தேஹேனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். நாவாலப்பிட்டி இங்குறு ஓய புகையிரத நிலைய அதிபரின் விபரங்களை வைத்து நாவலப்பிட்டி பிரதேச வங்கி ஒன்றில் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான கடனட்டையினை பெறுவதற்கு சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (25) முயற்சித்துள்ள…
-
- 0 replies
- 488 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 APR, 2023 | 09:51 AM ஐடிஎன்னின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் பாலியல் துன்புறுத்தல்களிற்குள்ளானமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பொதுமுகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐடிஎன்னின் தலைவர் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரியை நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசதொலைக்காட்சியொன்றின் பெண் ஊடகவியலாளர் பாலியல்துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்;துள்ளது. …
-
- 2 replies
- 457 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்திற்கு நீராடச்சென்ற சந்தர்ப்பத்தில் சகோதரர்கள் இருவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 மற்றும் 16 வயதான சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://thinakkural.lk/article/250854
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 26 APR, 2023 | 03:25 PM யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் அருகில் இரத்த வங்கி அல்லது இரத்த தான முகாம்களை அமைத்து, இரத்த தானம் செய்வதற்கும், குருதி சேகரிப்பில் ஈடுபடவும் முன்வருமாறு கோரப்பட்டுள்ளது. குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கியினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், இது குறித்து தகவல்களை பெறவும், அறிவிக்கவும் 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இருக்கவ…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-