ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்து சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுர மாவட்ட சிவசேனா சார்பில் சென்னை திருவொற்றியூரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்பாவி தமிழ் மக்களை கொன்றுகுவித்து வரும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அரசிற்கு மறைமுகமாக ஆயுத உதவி அளித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதை வேடிக்கைப் பாத்து வரும் மாநில அரசைக் கண்டித்தும் சிவசேனாவின் மாநில செயலாளர் வீர ஸ்ரீ பி. கர்ணன்ஜி தலைமையில் சென்னை திருசொற்றியூர் நகராட்சி அலுவலகம் அருகில் இன்று ஒரு நாள் அடையாள கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
-
- 0 replies
- 766 views
-
-
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை பதவி விலகவில்லை: ரோஹித்த போகொல்லாகம: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ள போதிலும் எவரும் இதுவரை பதவியில் இருந்து விலகவில்லை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். பயங்கரவாத்தை ஒடுக்குவது தொடர்பில், இலங்கை, இந்தியாவுடன் மிக நெருங்கிய செயற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத்தை ஒழிப்பது அவசியம் என்பது குறித்தும், இலங்கையின் சகல பகுதிகளிலும் ஜனநாயகத்தை ஏற்படுததும் தேவை பற்றியும், முழுச் சர்வதேசத்திற்கும் தெளிவுப்படுத்தியுள்ளதாக போகொல்லாகம கூறியுள்ளார். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் பயங்கரவாதம…
-
- 5 replies
- 1.6k views
-
-
கோதபாய பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம் இலங்கை அரசாங்கத்தின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் உயர்வடைந்து செல்லும் நிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய பாகிஸ்தானுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நாளைய தினம் இஸ்லாமாபாத் நோக்கிச் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் கம்ரன் ரசுளன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தியாவினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்படலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது. …
-
- 1 reply
- 1.5k views
-
-
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள மீனகம் அலுவலகத்தினுள் திடீரென உட்புகுந்த கருணா குழுவினர் அங்கிருந்தவர்களை நையப்புடைத்த பின்னர் அலுவலகத்தை கைப்பற்றினர். இச்சம்பவம் நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. கருணா லண்டனில் கைது செய்யப்பட்டபின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கருணா குழு ஆதரவாளர்களும் பிள்ளையான் குழுவினரால் அம்பாறை மற்றும் வெலிகந்தை பகுதிகளுக்கு துரத்தப்பட்டமை தெரிந்ததே. மீண்டும் கருணா நாடு திரும்பியது மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றபின்னர் பல வகைகளிலும் தம்மால் கைவிட்டுப்போன மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுமுகமாக மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கைகளின் ஒரு அங்கமே மீனகம் அலுவலகம் கைப்பற்றல் எ…
-
- 1 reply
- 2.1k views
-
-
உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பேணுமாறு கருணா பிள்ளையானிற்கு அறிவுரை கூறியுள்ளாராம்: தமது உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பேணுமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவா கருணர், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கு அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் பிள்ளையானின் விசுவாசமான உறுப்பினர்கள் ஒழுக்க நெறிகளை மீறிச்செயற்படுவதாகவும், இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜெயம் மாஸ்டரினால் சில உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் இயக்க உறுப்பினர்களின் ஒழுக்க நெறிகளை பேணுவது தொடர்பில் முதலமைச்சர் பிள்ளையான் அதிக சிர…
-
- 3 replies
- 1.6k views
-
-
கொழும்பில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று இரவு 11- 11 அளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் இருந்தே இந்தக் குண்டு வெடித்துள்ளது. இதில்; 3 பேருந்துகள் மட்டுமே சேதங்களுக்கு உள்ளானதாகவும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் காவற்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 1.7k views
-
-
மனம் இருந்தால் மார்க்கமுண்டு... ராமேஸ்வரத்தில் நடக்கும் திரையுலக பேரணிக்கு தார்மீக ஆதரவுதான் என்று வெளிப்படையாக கூறிவிட்டது நடிகர் சங்கம். நவம்பர் 1 ந் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களாம். தினசரி மூன்று காட்சிகள் என்பது போல, இந்த விஷயமும் அரங்கு நிறைந்த இரண்டு காட்சிகள் போலிருக்கிறது. ராமேஸ்வரத்தில் ஒரு காட்சி. சென்னையில் இன்னொரு காட்சி. நெய்வேலி போராட்டத்தின்போது மறுநாளே சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ரஜினிக்கும் ஆதரவு தெரிவித்து ‘இரட்டை’ சந்தோஷத்தை அனுபவித்த நடிகர்கள், மக்களுக்கு வழங்கப் போகும் மற்றுமொரு ஷோதான் இது. ராமேஸ்வரத்தில் நடக்கும் பேரணியில் ஏன் கலந்து கொள்ளவில்லை? வேறென்ன..., நடைமுறை சிக்கல்கள்தானாம். “30 வது மாடியில் இருந்து குதித்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிப் படையெடுப்புக் குறித்து பிரகடனம் செய்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நாட்கணக்கில் காலம் குறித்த சிறிலங்காப் படைத்தரப்பின் தற்போதைய பேச்சு சற்றுக் குறைந்த ஸ்தாயிலே ஒலிப்பதாகவே கருதவேண்டியுள்ளது. கிளிநொச்சி நோக்கிய படைநகர்வு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சிக்கு நாலரைக் கிலோ மீற்றரில் உள்ளோம், மூன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம். இறுதியாக ஒன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம் எனக் கூறிக் கொண்டாலும் களமுனையில் குறிப்பிடத்தக்க தான மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. அவ்வாறு ஏதும் நிகழ்ந்திருக்குமானால், கிளிநொச்சி நோக்கியதான படைநகர்வு தீவிரம் பெற்றத…
-
- 0 replies
- 2.5k views
-
-
சிங்களர்கள் துணையோடு சேது திட்டத்தை எதிர்க்கும் தலைவர்கள்-கருணாநிதி திங்கள்கிழமை, அக்டோபர் 20, 2008 சென்னை: தமிழகம் வளம் பெருவதை விரும்பாத சிங்களவர்கள், தமிழகத்திலே உள்ள சிலரை வளைத்துப் போட்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை போட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை விமான நிலையம் எதிரே ரூ.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில், பல அமைச்சர்களுக்கு இந்த துறைக்கு இவர் தான் அமைச்சர் என்று அழைக்கப்படுகின்ற பட்டம் உண்டு. நம்முடைய அமைச்சர் தம்பி பாலு அந்தப் பட்டத்தைப் பெற்றவர் மாத்திரமல்ல. அந்தத் துறையைப் பற்றி ஆதியோடு அந்தமாக அனைத்தையும் புள்ளி விவரங்களோடு தெரிந்து வைத்திருக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரம சிங்கவை வேட்பாளராகவும் பொதுசன ஐக்கிய முன்னணி மகிந்த ராஜபக்சவை வேட்பாளராகவும் நிறுத்தியபோது, சந்திரிகா பண்டாரநாயக்க தமது ஆதரவை தமது கட்சி வேட்பாளரான ராஜபக்சவிற்கு வழங்காது, ரணில் விக்கிரமசிங்கவிற்கே வழங்கினார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறுபான்மையோரின் ஆதரவு இருப்பதால், இவரே சனாதிபதியாகத் தெரிவாவார் எனவும் ரணில் சனாதிபதியானால், தான் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக இருந்து இந்நாட்டின் அரசியல் பங்காளியாக இந்தியாவில் சோனியாவைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கலாம் என எண்ணியே செயற்பட்டார். சனாதிபதித் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் தமிழர்கள் வாக்களிக்காது பகிஸ்கரிப்புச் செய்ததால், மகிந்த ராஜபக்ச சனாதிபதிய…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது – மன்மோகனிடம் மகிந்த: இலங்கையில் இடம் பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள நிலையில் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அனுப்பவுள்ளார். உயர்மட்டத்தூதுக்குழு ஒன்று புதுடில்லி செல்லவுள்ளது. ஆனால் அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவில்லையென வெளிவிவகார செயலாளர் பாலிதகோகண தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரது இளைய சகோதரருமான பசில் ராஜபக்ஷவின் பெயரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் பெயரும் ஊடகங்களில் வெளியானது. ஆனால் யார் யார் செல்வது என்பது பற்றியோ எப்போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுவது தொடர்பாக புதுடில்லி மீது எதிர்ப்பலைகளை உருவாக்கும் விதத்தில் நாடாளவிய ரீதியில் பிரசாரங்ளை முடுக்கிவிட இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இலங்கை நிலைமைகள் குறித்து இந்தியா தொடர்ச்சியாக கடும் கவலை தெரிவித்து, அதனைச் சீர் செய்யுமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்காகாக இலங்கை அரசு இப்படியொரு தந்திரோபாயத்தை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது காணப்படும் நிலைமை குறித்தும் அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டுமென்பது பற்றியும் அரச தரப்பு பல சுற்று இரகசிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றது. பஷில் ராஜபக்ஷ் தலைமையில் புதுடில்லக்கு பிரதிநிதிகள் குழுவொன்று செல்லும் அதேவேளை, இலங்கையில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழருக்கு நியாயம் தேடிக் கொடுப் பதற்கான எழுச்சி - கிளர்ச்சி - தமிழகத்தில் பிரவாகம் எடுக்கத் தொடங்கியதுமே, தென்னிலங்கைச் சிங்க ளத்துக்காகக் காவடி தூக்கும் தமிழக சக்திகளும் தங் கள் பங்கு கைவரிசையை தம்பாட்டுக்கு ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் வழமைபோல, சென்னையி லிருந்து வெளியாகும் ‘த ஹிண்டு’ பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் என்.ராமும் தங்கள் பங்கு கைங்கரியத்தை ஒப்பேற்றத் தொடங்கி விட்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் எழுச்சிக் குரலை சகிக்க முடியாத ‘த ஹிண்டு’ பத்திரிகை ஒரு புறம் அந்த எழுச்சியை பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கிளர்ச்சி என்று காட்டி, அதனை அடக்குவதற்குக் கங்கணம் கட்டிப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது. மறுபுறத்தில், தென்னிலங்கை பௌத்த-ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேசிய இனபிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இல்லையேல் அதன் விளைவுகள் இரண்டு நாடுகளுக்குமே மிகவும் பாரதூரமானதாக அமைந்து விடும். என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். நியாயமான அணுகுமுறைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமைய ஆகியன இந்நாட்டை விட்டே ஓரங்கட்டப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினை விடயத்;தில் இந்தியாவின் தலையீடு குறித்து கேட்டபோNது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவா மேலும் கூறுகையில், இலங்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகள் என்ற பெயரில் காலங்கள் கடத்தபட்டுகின்றனவே தவிர நியாயமான தீ…
-
- 0 replies
- 844 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் அணி திரள்வோம் என்று ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் கூறியிருக்கின்றார். மேலும் அவரது அறிக்கையில் : முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒக்டோபர் 14ம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் மத்திய அரசு அவரின் குரலுக்கு செவிசாய்திருக்கிறது. குற்றுயிரும், குறை உயிருமாகக் கிடக்கின்ற ஈழத்தமிழருக்கு நிரந்தர விடியலை காணுகின்ற வகையில் கருணாநிதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவையொட்டி, ஒக்.21ம் திகதி மனிதச் சங்கிலி அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்ததுள்ளார். இந்த அணிவகுப்பில் 16 கோடி கைகளும் ஒரே நேரத்தில் 21ம் திகதி மாலை 3 மணிக்கு உயரட்டும். இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகள் புலிகளால் முறியடிப்பு [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 06:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலான பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வுகளை முடக்கியுள்ளனர். இதில் படையினருக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (17.10.08) தொடக்கம் இன்று திங்கட்கிழமை காலை வரை சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர். வான்படையின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள், கிபீர், மிக்-27 ரக வானூர்திகள், வெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த ஒரு மாதமாக தமிழத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சினை, அ.தி.மு.க.வுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது, என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் : இலங்கையில் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம் இருந்தது. இப்பிரச்சினையில், அரசியல் முக்கித்துவத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டம், எம்.பி.க்களின் ராஜினாமா மிரட்டல், பிரதமர் கருத்து என ஈழத்தமிழர் பிரச்சினை சூடுபிடித்து வருகிறது. இலங்கைப் பிரச்சினையில் தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் முரண்பட்ட கூட்டணிகள் இதில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆரம்ப காலம் முதல் விடுதலைப் புலிகளின் இந்திய சட்டத்தரணியாக …
-
- 1 reply
- 1.5k views
-
-
தேவைப்படும் ஏற்படும் போது தங்களது பதவிகளை துறக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயார் - இரா சம்பந்தன்: இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழகத்தில் திமுக வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம்: கவியரசு வைரமுத்து சூளுரை [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 04:56 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம் என்று பிரபல பாடலாசிரியர் கவியரசு வைரமுத்து சூளுரைத்துள்ளார். தமிழ்த் திரையுலகத்தினர் இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரமாண்ட பேரணியில் கவியரசு வைரமுத்து பேசியதாவது: இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும், மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆ…
-
- 0 replies
- 742 views
-
-
கோத்தபாய – பசில் இன்று இந்தியா பயணமாகின்றனர் - புதுடெல்லியில் அவசர சந்திப்புகள் ஏற்பாடு - இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு: ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று இந்தியா பயணமாகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதுடன் இதன் போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரச்சினைகள் குறித்து, நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், பசில், மற்றும் கோத்தபாய ஆகியோர் புதுடெல்லி செல்கின…
-
- 6 replies
- 1.9k views
-
-
மாவீரர்கள் காலத்தால் அழிக்க முடியாதவர்கள்
-
- 0 replies
- 1.4k views
-
-
புதுடில்லிக்கு செல்லும் உயர்மட்ட தூதுக்குழுவில் பசில், லலித் வீரதுங்க: பாலித கோகன்ன [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 01:41 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] இலங்கையில் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா ஆழ்ந்த கவலையை சிறிலங்காவிடம் வெளியிட்டுள்ள நிலையில், உயர்மட்ட தூதுக்குழுவொன்றை புதுடில்லிக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனுப்பவுள்ளார். புதுடில்லிக்கு உயர்மட்ட தூதுக்குழுவொன்று செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பான விபரங்கள் குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். ஆனால், அரச தலைவரின் ஆலோசகரும் இளை…
-
- 0 replies
- 648 views
-
-
நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் - ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது - செய்தி ஆய்வு: நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊட…
-
- 2 replies
- 1.2k views
-
-
'அதிகாரம் மிகவும் அசௌக்கியமான காரியங்களை எவ்வித கணக்கு வழக்குகளும் இன்றி செய்ய முனைகிறது", 'தண்டணையற்ற அதிகார துஸ்பிரயோகம், வனத்தின் சட்டமாகும்", 'ஆக்கிரமிப்பு யுத்தமே பிரதான சர்வதேச குற்றமாகும்". -- ராம்சி கிளாக், (முன்னாள் அமெரிக்கா சட்ட மா அதிபர்) பாரிஸ் - 23 செப்டம்பர் 2005 சட்டங்கள் சமூதயத்தை காப்பாற்றவும், சமத்துவம் நீதியின் தாயாகவும் உள்ளது. அதிகாரம் ஒரு போதும் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது. இவை ஜனநாயத்திற்கும் நீதிக்குமான சில முக்கிய விதிகள். இவ் விதிகள் சிறிலங்காவை பொறுத்த வரையில் எவ்வித நிலையில் உள்ளன? நாம் சிறிலங்காவினுடைய மனித உரிமைக்கான புள்ளி விபரங்களையும், பல விதப்பட்ட அறிக்கைகளையும் ஆராய்வோமானால் - ஐக்கிய நாடுகள் சபையின் வேறு பிரிவுக…
-
- 2 replies
- 1.2k views
-
-
டெல்லி: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது குறித்துப் பேசவும், நிலைமையை நேரில் கண்டறியவும் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இலங்கை பிரச்சனைக்கு சமரச தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டதோடு, அப்பாவி தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தினார். இதுகுறித்து நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம். …
-
- 0 replies
- 967 views
-