ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
ஐயா கலைஞரே.தமிழினமா? ஈனப்பதவியா? கடைசியில் எதனை எழுதக் கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது, இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னியை ஆக்கிரமிப்பதான போரில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் 40 ஆயிரம் கோடி ரூபாய்களை செலவளித்திருப்பதாக பொருளியல் ஆயவாளரான திரு க.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வன்னியில் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே இத்தகவலை அவர் தெரிவித்தார். இவ்வளவு பெரிய தொகையை செலவளித்து படைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் அவர்களால் அவர்களின் திட்டத்திற்கேற்ப இடங்களை ஆக்கிரமிக்க முடியாதுள்ளது. பல மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற முயன்றும் சில கிலோ மீற்றர்களே அவர்களால் நகர முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகள் குறைந்த அளவிலான வளங்களுடனேயே தற்காப்புப் போரை நடத்தி வருகின்றனர். அவர்கள் கண்மூடித்தனமாக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. சிறிலங்காப் படையினருக்க…
-
- 7 replies
- 1.8k views
-
-
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனின் கடிதம் இக்கடிதத்தை படித்தபொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சிலகண்ணீர்த்துளிகள் பூமியில்விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர்11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒருமூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம்.
-
- 1 reply
- 920 views
-
-
இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை - கூறுகிறார் ஆனந்த சங்கரி: http://www.globaltamilnews.net/tamil_news....=2044&cat=1 இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை. செம்மணிப்படுகொலை போன்ற ஒருசில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தியுள்ளதாகவும் இனப்படுகொலை எனத் தெரிவிக்குமளவிற்கு வேறு சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வீ ஆனந்தசங்கரி யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் அதி பாதுகாப்புடன் தங்கியுள்ளார். இந்த நிலையில்; நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதன் போதே இந்தக்…
-
- 27 replies
- 3.1k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போர் நிறுத்தம் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டியது எனக் கூறியிருந்தேன். இந்நிலையில் போர் நிறுத்தத்திற்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே "இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்திவிட முடியும். இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உட்கார்ந்து பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்'' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இலங்கைப் பிரச்னைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. …
-
- 0 replies
- 826 views
-
-
தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி;களை கைது செய்ய கருணா அரசிடம் கோரிக்கை : கிழக்கில் தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களில் மாத்திரம் தமது கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் வன்முறையை நிறுத்த அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி, ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ள வேளையில், விடுதலைப்புலிகள் சிற்சில இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறான கொலைகளை செய்து வருவதால், க…
-
- 11 replies
- 2k views
-
-
நகைமுகன்...பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பெயர். தனித் தமிழர் சேனையின் நிறுவனர். பாரதீய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவர். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவரிடம் ஈழவிவகாரம் குறித்துப் பேசினோம்.அதிகாலை-க்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இங்கே:- "இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிடம் பிச்சை கேட்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது அச்சமில்லாத வாழ்க்கை. மற்றபடி நிவாரணம் எனும் பெயரில் பிச்சை கேட்கவில்லை. பழ.நெடுமாறன் சேகரித்த நிவாரணப் பொருட்களை மட்டும் ஏன் அங்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.? ஈழத் தமிழனின் பசி இப்பொழுதுதான் கருணாநிதிக்கு தெரிந்ததா?இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை தடுக்காமல், நிவாரணப் பொருட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியாவின் அழுத்தங்களுக்கு இணங்கி யுத்த நிறுத்தம் ஏற்படுமென்றால் அது கிழக்கு மாகாணத்தின் இயல்பு நிலையை முற்று முழுதாக பாதித்து விடும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியுமான பிள்ளையான் கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து இந்தியாவின் அதிகளவு கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. கிழக்கின் இயல்புநிலை குறித்தும் இந்தியத் தலைவர்கள் அதிகளவு அறிந்ததில்லை. மன்மோகன் சிங்கை சந்திக்க பல முயற்சிகளை மேற்கொண்டோம். இவற்றின் பின்னணியிலேயே யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இந்தியா வ…
-
- 9 replies
- 2k views
-
-
தெற்கில் இனந்தெரியாத குழுக்களினால் ஆபத்து - ஆசிய மனித உரிமை ஆணைக்குழு : இலங்கையின் தெற்கில் வாழும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய புத்திஜீவிகள் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இனந்தெரியாத குழுக்களின் ஆபத்துக்குள் சிக்கக்கூடும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஆணைக்குழு 'பாதுகாப்பு கண்காணிப்பு' என்ற பெயரில் மாற்று பாதுகாப்பு ஊடக தகவல் மையம் ஒன்றை ஸ்தாபித்து, யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட பின்னர் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீரவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் 'பிசாசுப் படை' என்ற பெயரிலான…
-
- 0 replies
- 791 views
-
-
வெலிகடைச் சிறைச்சாலையில் சிறு குழந்தைகளுடன் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி இருக்கும் பெண்களை கண்டு கண்ணீர் மல்கினோம் - மாவை சேனாதிராஜா: GTNற்கு வழங்கிய செவ்வி: http://www.globaltamilnews.net/tamil_news....=2037&cat=1 வெலிக்கடை மற்றும் அனுராதபுர சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். எவ்வித காரணமும் இன்றி தாங்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணைகள் நடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாங்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையென்பது சிங்களவர்களுக்கே உரித்தான நாடு - மிஸ்ஸக கமலஸ்ரீ தேரர் - கருத்துக் களம் - பேசுகிறார்கள் - ஒலிவடிவில் - பௌசர் - பாலகிருஸ்ணன் - பசீர் - ராமலிங்கம்: முஜிபூர் ரஹ்மான்:GTN ற்கு வழங்கிய செவ்விகள் இணைக்கப்பட்டுள்ளன: http://www.globaltamilnews.net/tamil_news....=2038&cat=1 இலங்கையென்பது சிங்களவர்களுக்கே உரித்தான நாடு - மிஸ்ஸக கமலஸ்ரீ தேரர் - கருத்துக் களம் - பேசுகிறார்கள் - ஒலிவடிவில் - பௌசர் - பாலகிருஸ்ணன் - பசீர் - ராமலிங்கம்: முஜிபூர் ரஹ்மான்: இலங்கையென்பது சிங்களவர்களுக்கே உரித்தான நாடு. இங்கு சிறுபான்மையினருக்கு உரிமை இல்லையென்பதைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புவதாக தேசிய சங்க சம்மேளனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் மிஸ்ஸக கமலஸ்ரீ தேரர் …
-
- 0 replies
- 999 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 514 views
-
-
தற்கொலை குண்டுதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார். வீரகேசரி இணையம் 11/10/2008 4:51:51 PM - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் இணைச் செயலாளின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடை தற்கொலை குண்டு தாரி இனங்காணப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தற்கொலை குண்டு தாரி புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 2k views
-
-
கருணாநிதியின் தவறுகளை வரலாறு மன்னிக்காது: பழ. நெடுமாறன் திங்கள்கிழமை, நவம்பர் 10, 2008 விழுப்புரம்: இலங்கை தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் தவறுகளை வரலாறு மன்னிக்காது என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் ஈழத்தமிழர் சிக்கலும், இந்தியாவும் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது: காங்கிரஸில் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன் காங்கிரஸ் வரலாறு தெரியாத தங்கபாலு, பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட முடியாது என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் அந்த கட்சியில் நானும் இருந்துள்ளேன் என்பதை தற்போது நினைக்கும் போது …
-
- 1 reply
- 924 views
-
-
கடற்புலி மாவீரர்களின் உயர்ந்த அர்ப்பணிப்புக்களினால் கடலிலே தமிழர்களுடைய வீரவரலாறு எழுதப்படுகின்றது என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார். வடமராட்சிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் டோறாக் கலமும் கூகர் படகும் மூழ்கடிக்கப்பட்டதில் வீரவரலாறான ஏழு கடற்கரும்புலி மாவீரர்களின் வீர வணக்க நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக சிறிலங்கா அரசும் அதன் படைகளும் விடுதலைப் புலிகள் தொடர்பான பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, கடற்புலிகள் கடலிலே வல்லமையை இழந்து விட்டார்கள் என்ற பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசு திட்டமிட்டு பரப்பி வந்தது. இந்நிலையில் கடலிலே தமது வல்லமைகள் பலமான நிலையிலேயே உள்ளது எ…
-
- 1 reply
- 1.7k views
-
-
தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்திருக்கும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றதுமான ஏழு பிரதான கேந்திர நிலையங்களைக் குறிவைத்து புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவினர் அவர்களிடமிருக்கும் சிலின் சிறியரக விமானங்கள் மூலமோ.... அல்லது பூச்சி மருந்து தெளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிறிய விமானங்கள் மூலமோ விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதையிட்டு ஏற்ற வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் எடுக்கப்படவேண்டிய அத்தியாவசியம் பற்றியும் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு அரசுக்கு அறிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் புலி…
-
- 1 reply
- 1.4k views
-
-
சென்னை 'போர் நிறுத்தம் செய்வது இலங்கையின் கடமை. இதனை இலங்கைக்கு தெரியப்படுத்தி அந்நாட்டை செயல்படவைப்பது மத்திய அரசின் பொறுப்பு' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை : 'இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்' என்று நான் கூறியிருந்தேன். தற்போது விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்துள்ளனர். இதற்கிடையே, 'மத்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்தி விடலாம்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இலங்கை அரசும், 'விடுதலைப்புலிகளும் பேச்சு வார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கிளிநொச்சி மாவட்டம் இன்னும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டு விடும் என்ற விமல் வீரவன்சவின் நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும்; இப்போதே தயாராகி விட்ட போஸ்டரையே படத்தில் காண்கிறீர்கள். கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினருக்கு தேசத்தின் நன்றியும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியே இதனை வெளியிட்டுள்ளது. போஷ்டரை பார்க்க......... http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதராக சமீபத்தில் இந்தியாவுக்குச் சென்று திரும்பியிருந்தார் பஸில் ராஜபக்ஷ. அவர் புதுடில்லி விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பி இருவாரங்களுக்கு மேல் கடந்துவிட்டது. ஆனால், பஸில் குழுவினருக்கும் இந்தியத் தலைவர்களுக்குமிடையில் என்னென்ன விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன என்ற விடயங்கள் இப்போதும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. அந்த வரிசையில் கடைசியாக கசிந்திருக்கின்ற விடயம் நோர்வே மத்தியஸ்தம் தொடர்பானது. மேற்படி சந்திப்பின்போது, இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் பணியை நோர்வே மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் என இந்தியா திட்டவட்டமாக இலங்கையிடம் தெரிவித்துவிட்டதாம். இலங்கை அரசக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அனுசரணையாளராக இந்தியா பணிய…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு மீண்டும் ஒரு தடவை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர். ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 400இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் இருபதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறீர்களா என்று கேட்டவாறு இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று தப்பிவந்தவர்கள் தெரிவித்தனர். இத்தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: இருவர் பலி [திங்கட்கிழமை, 10 நவம்பர் 2008, 11:02 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை - பன்குளம் பிரதான வீதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின் உந்துருளி அணி மீது நேற்று முன்நாள் சனிக்கிழமை காலை 6:10 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டன…
-
- 0 replies
- 799 views
-
-
இன்று மாலைதீவு செல்லும் மஹிந்த புதன், வியாழன் புதுடில்லியில் பேச்சு - அவரோடு முக்கிய விடயங்களை ஆராய்வதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றதாம் இந்தியா [10 நவம்பர் 2008, திங்கட்கிழமை 8:30 மு.ப இலங்கை] மாலைதீவில் நாளை நடைபெறும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கொழும்பிலிருந்து மாலைதீவுக்குப் புறப்படும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அங்கிருந்து புதுடில்லிக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை ஒட்டிய பல முக்கிய விடயங்கள் குறித்து எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அவருடன் பேசித் தீர்மானங்களை எடுப்பதற்காக, இந்திய அரசியல் தலைமை, அவரது வருகைக்காகக் காத்திருக்கின்றது எனப் பு…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் பெரும்பான்மை இனத்தவரின் கட்சிகள் [10 நவம்பர் 2008, திங்கட்கிழமை 9:15 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சிங்களப் பெரும்பான்மையினரின் இரண்டு பெரும் கட்சிகளுமே ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்’ என்று இப்பத்தியில் பல தடவைகள் நாம் குறிப்பிட்டு வந்துள்ளோம். வெளிவேஷத்துக்கு சில தரப்புகள் அவ்வப்போது பல இனங்களையும் அரவணைத்துத் தாராளமாக நடப்பவை போலத் தம்மைக் காட்டிக்கொண்டாலும், அவற்றின் அடி மனதுக்குள் பேரினவாத மேலாதிக்கமும், பௌத்த - சிங்களச் செருக்குமே ஊறிக் கிடக்கின்றன என்பதை இங்கு வெளிப்படையாக உணர்த்தி வந்திருக்கிறோம். ஏதோ, இப்போது ஆட்சியில் ஏறியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அணியினரும் மட்டுமே பேரினவாதிக…
-
- 0 replies
- 590 views
-
-
வான்புலிகளின் தாக்குதல் எதிரொலி: சிறிலங்காவில் 10 விழுக்காடு மின் தடை ஏற்படலாம் [திங்கட்கிழமை, 10 நவம்பர் 2008, 10:19 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலினால் 10 விழுக்காட்டினால் மின்தடை அதிகாரிக்கலாம் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலினால் மின்பிறப்பாக்கிகள் சேதமடைந்துள்ளன. இதனால் சிறிலங்கா முழுவதற்கும் 10 விழுக்காடு மின்தடை ஏற்படலாம் என சிறிலங்கா மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் உள்ள நீர் மின் நிலையங்க…
-
- 0 replies
- 716 views
-
-
கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப் போர் 09/11/2008 -------------------------------------------------------------------------------- விடுதலைப் புலிகள் மரபுவழியில் போரிடும் திறனை இழந்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் இப்போதும் அவர்கள் மரபுவழியிலான தற்காப்புச் சண்டைகளையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதை நிரூபிக்க வேறு ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை. அரசாங்கம் தரும் போர்க்கள நிலைவரப் புள்ளிவிபரங்களே போதும். மன்னாரின் வடபகுதியில் புலிகள் சண்டையின்றி பின் விலகிக் கொண்டபோது தான் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அவ்வாறு கூறியிருந்தார். அவரது கூற்று நூற…
-
- 6 replies
- 2.3k views
-