ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
ஈழத்தில் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும், தமிழ்ப் பெண்களின் மரணத்திற்கும் மன்மோகன் சிங் அரசும், தமிழக அரசும் தான் முழுப் பொறுப்பு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம் என்று பேசிய வைகோவும், தனி ஈழம் போல தனித் தமிழ்நாடும் விரைவில் உருவாகும் என்று பேசிய கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு காவல் நீடிப்பு தேவையில்லை, விசாரணை முடிந்துவிட்டது என தமிழக அரசு கூறிவிட்டதையடுத்து நீதிமன்றம் நேற்று இவர்களை விடுவித்தது. நீதிமன்ற வாசலில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில், நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. ஈழத் தமிழர்களை பாது…
-
- 0 replies
- 795 views
-
-
இலங்கை விவகாரத்தில் தன்னை அனைத்துத் தரப்பினரும் குறை கூறுவதால் மன வருத்தம் அடைந்த முதல்வர் கருணாநிதி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மூத்த திமுக தலைவர்களும் அமைச்சர்களும் கோட்டைக்கு விரைந்து அவரை சமாதானப்படுத்தினர். முதல்வர் இராஜினாமா செய்தியால் நேற்று கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது. இராஜினாமா கடிதத்தை அவர் எழுதிவிட்டதாக தகவல் வந்ததையடுத்து திமுக அமைச்சர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோட்டைக்கு ஓடி வந்தனர். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கட்சிகள் ஒன்று திரள மறுப்பதோடு, தன்னையே குறை கூறி வருவதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட…
-
- 6 replies
- 2.4k views
-
-
ஐக்கிய அமெரிக்கத் தாராளம் வேறு இலங்கைப் பேரினவாதம் வேறு [07 நவம்பர் 2008, வெள்ளிக்கிழமை 10:05 மு.ப இலங்கை]/td> தத்தமது நாடுகளில் நிலவும் பின்புலமே, இலங்கையிலும் நிலவுகின்றது என்ற கற்பனைச் சிந்தனையில்தான் இலங்கை விடயங்களை மேற்குலகம் அணுகுகின்றது; அவதானிக்கின்றது. அத்தகைய பிழையான பார்வையில் இலங்கை விவகாரங்களை நோக்கி அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதனால் தான் தவறிழைக்கின்றன அந்த மேற்கு நாடுகள். இதுவே, இலங்கை இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தரப்பான ஈழத் தமிழர்களின் ஒரே ஆதங்கமாகும். இப்போதும் கூட, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ள கருத்தும், அவரும் இப்படித்தான் - தமது அமெரிக்க நாட்டின் பின்புலத்தில் நின்றபடி, அதே …
-
- 0 replies
- 884 views
-
-
மக்களை பொறியில் சிக்க வைக்கும் தந்திரேமாகவே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது – ஐ.தே.க: பட்ஜட் ஒரு பார்வை: http://www.globaltamilnews.net/tamil_news....=1921&cat=1 பொது மக்களை பொறியில் சிக்க வைக்கும் ஓர் தந்திரோபாயமாக இம்முறையை வரவு செலவுத் திட்டத்தை தாம் நோக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேசியவாதம் என்ற போர்வையில் மக்களை பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைக்கு இந்த வரவுசெலவுத் திட்டம் இட்டுச் செல்லும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. பொது மக்களின் பணத்தை சூட்சுமமான முறையில் கொள்ள…
-
- 0 replies
- 617 views
-
-
ஒபாமாவின் தெரிவு இனவாத கொள்கையாளர்களுக்கு ஓர் பாடமாக அமைந்துள்ளது – மனோ கணேசன்: பரக் ஒபாமா அமெரிக்காவின் பதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இனவாத கொள்கைகளில் மூழ்கியிருக்கும் உலகத் தலைவர்களுக்கு ஓர் பாடமாக அமைந்துள்ளதென மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்டகாலமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் தமிழ் பேசும் மக்கள் ஒபாமாவின் வெற்றியை எதிர்பார்ப்புடன் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று இலங்கையில் யுத்தம் இருள் நீங்கி சமாதான ஒளி படர வழியமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள இன சமூகங்கள் அனைத்திற்கும் ஓர் புதிய எதிர்பார்ப்பை ஒபாமாவின் வெற்றி ஏற்படுத்த…
-
- 0 replies
- 911 views
-
-
சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்களால் பூநகரி செம்மண்குன்று பகுதியில் வாழ்ந்தும் அடைக்கலம் அடைந்தும் இருந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மீண்டும் அவலப்பட்டு இடம்பெயர்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
கிழக்கு மக்களுக்கு பயனுள்ள வரவு செலவுத் திட்டம்-விநாயகமூர்த்தி முரளிதரன் வீரகேசரி இணையம் - பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாணத்துக்கு மிகவும் பயனுள்ள ஒரு வரவு செலவுத் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். அரசாங்கத்தின் 4ஆவது வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. இவ்வாறு கூறினார். மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கு இவ்வரவு செலவுத் திட்டத்த…
-
- 31 replies
- 3.5k views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரொருவர் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டம்: பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினரான அன்ட்றூ பில்லிங் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் கலந்து கொண்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறப்பினர் பில்லிங்கை கடுமையாக விமர்சித்திருந்தது. அன்ட்றூ பில்லிங் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒருவர் என இலங்கை சமாதான செயலகத்தின் தலைவர் ராஜீவ விஜேசிங்க குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியினது இணையத்தளத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். பயங்கரவாதப் பிட…
-
- 0 replies
- 980 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 09:21 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள இராஜகிரிய, பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் ஜந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இரு பிரதேசங்களிலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஜந்து தமிழ் இளைஞர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். வரவு-செலவு திட்டத்…
-
- 0 replies
- 510 views
-
-
சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்: கனிமொழி [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 09:22 மு.ப ஈழம்] [க.நித்தியா] போர் நிறுத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசை இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் என்று தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை வாழ்த்தி கனிமொழி உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது: சிங்கள மொழி என்று இலங்கையின் ஆட்சி மொழியாக மாற்றப்பட்டதோ, புத…
-
- 0 replies
- 505 views
-
-
ஒரு வாரத்தில் 11 துணை இராணுவக்குழுவினர் பலி [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 06:35 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிழக்கின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதல்களில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏறாவூர் பகுதியில் கடந்த புதன்கிழமை அமைந்திருந்த துணை இராணுவக்குழுவின் காரியாலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்ல…
-
- 0 replies
- 582 views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் ரூபா. (4 வது இணைப்பு) ஜனாதிபதியின் தமிழ் உரையினை இங்கு கேட்கலாம் ) நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் 2009 ஆண்டில் அரசாங்கத்தின் முழு வருமானம்,855 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 779 பில்லியன் ரூபா வரி அறவீடுகள் மூலம் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் முழு செலவு ஆயிரத்து 191.67 பில்லியன் ரூபாவாகும், இதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. துண்டு விழும் தொகையை ஈடு செய்ய 123.02 பில்லியன் ரூபா வெளிநாடுகளில் இருந்தும் 183.13 பில்லியன் …
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கையில் நீண்ட காலமாக நடைபெறும் யுத்தத்தை நிறுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி 6ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் மூன்றாம் கட்ட போராட்டத்தை மகளிர் விடுதலை இயக்கம் நடத்தியுள்ளது. இப்போராட்டத்தின் போது கனிமொழி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வீடியோ இணைப்பு .இது தொடர்பாக திருமாவளவன் முன்னர் ரயில் மறியல் போராட்டத்தின் போது கைதாகும் தருணத்தில் 4தமிழ்மீடியாவிற்கு வழங்கிய சிறப்புச்செவ்வி மீ்ள் இணைப்பு. இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நற்சோனை தலைமை தாங்கினார். இந்திய கம்னிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து 2ஆயிரம் பெண்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இலங்கையில் போரை நிறுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் " ஈவிரக்கமில்லா இனப்படுகொலை இந்திய அரசே! போரை நிறுத்து! ஈழத்தமிழர்களை காப்பாற்று என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வீதியில் பெரிய எழுத்துக்களினால் எழுதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.tamilseythi.com/tamilnaadu/pera...2008-11-06.html -இராஜா
-
- 0 replies
- 908 views
-
-
இலங்கை தமிழர்களின் படுகொலையைக் கண்டித்தும் இலங்கையில் உடனே போர் நிறுத்தம் ஏற்படவும் மத்திய – மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி! ஆர்ப்பாட்டம் ஒன்று பெரம்பலூர் மாவட்டம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் நடத்தப்பட்டது. மத்திய அரசே! இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து! இலங்கைக்கு அளித்து வரும் இராணுவ பொருளாதார உதவிகளை உடனே நிறுத்து! ஈழத்தமிழர்க்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை உடனே வழங்கிடு! ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் போரை உடனே நிறுத்திடு! என அங்கு வருகை தந்தவர்களினால் முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு இயக்குனர் ஆதி தமிழ்செல்வன் தலைமை எற்று நடத்தினார். http://www.tamilseythi.com/…
-
- 0 replies
- 761 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் வலிந்த போர் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த தமிழ் உறவுகள் நலம் பெற வேண்டி யேர்மன் இந்து ஆலயங்களில் நாளை வெள்ளிக்கிழமை சிறப்புப் பிரார்த்தனைகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 953 views
-
-
ராமேசுவரம், நவ. 6- இலங்கையில் ராணுவத் திற்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பகுதியை சுற்றி வளைத்து கைப்பற்றும் நோக்கத்தில் வான்வழியாகவும், தரை வழியாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வரு கின்றனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போரில் காயம் அடையும் விடுதலைப் புலிகள் ராமேசுவரத்துக்கு அகதிகள் போர்வையில் ஊடுருவலாம் என்று கருதப் படுகிறது. மேலும் ராமேசுவரத்தில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் தமிழக மீனவர் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க இந்திய…
-
- 8 replies
- 3.5k views
-
-
http://answercenter.barackobama.com/cgi-bi...enduser/ask.php
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி இந்திய நாடாளுமன்றம் முன்பு வரும் 14ஆம் தேதி மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து தனி ரயில் மூலம் 2,000 மாணவர்கள் செல்ல உள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசிய பொதுச்செயலாளர் விஜயேந்திர கேசரி நவம்பர் 4ந் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: http://farm4.static.flickr.com/3015/300719...d05e7cd.jpg?v=0 நாட்டைப் பாதிக்கும் முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ஆம் தேதியன்று டில்லியில் மாபெரும் ம…
-
- 0 replies
- 861 views
-
-
மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச்சேர்ந்து தமிழினத்தை கொன்று குவிக்கும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங்கை கண்டித்து சென்னை ஆவடியில் இடதுசாரி அமைப்புக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 465 views
-
-
விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் அணியினர் உண்ணாநிலைப் போராட்டம் [வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 07:35 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் படுகொலையைக் கண்டித்து தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியினர் சார்பில் சென்னையில் இன்று வியாழக்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். புதினம்
-
- 0 replies
- 581 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக 2 ஆயிரம் தொன் நிவாரணப் பொருட்கள்: செஞ்சிலுவைச் சங்கத்திடம் தமிழக முதல்வர் கையளிப்பு [வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 07:41 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களுக்காக 2 ஆயிரம் தொன் நிவாரணப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று வியாழக்கிழமை கையளித்தார். இதனைப் பெற்றுக்கொண்ட அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி, இந்த நிவாரணப் பொருட்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புதினம்
-
- 2 replies
- 965 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்…
-
- 11 replies
- 3.8k views
-
-
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தை அவர் தீவிரமாக ஆதரித்துப் பேசுவதற்கு எதிராக, காவல்துறையிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடும் அடுத்தகட்ட முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் நாம் திருமாவளவனைச் சந்தித்தோம்... விடுதலைப் புலிகளை நீங்கள் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறீர்கள். அதனால் உங்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது பற்றி? ``கைது, சிறை ஆகியவற்றிற்கு அஞ்சி நியாயத்தைப் பேசத் தவறினால் மனிதனாக இருப்பதில் பொருள் இல்லை. கொடுமையைக் கண்டு கும…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரே நாள் இரவில் குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. "நாங்கள் பேசியதில் தவறில்லை'' என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கிய…
-
- 16 replies
- 2.6k views
-