Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பிலிருந்து மக்களை வெளியேறக் கோரும் அரசு வன்னியிலிருப்பவர்களை அழைப்பது வேடிக்கை - மனோ எம்.பி. வீரகேசரி நாளேடு 9/14/2008 8:43:03 PM - கொழும்பில் காரணமின்றி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் வன்னியிலிருந்து மக்கள் வெளியேறி அரசாங்க பகுதிகளுக்கு வரவேண்டுமென கோருவது வேடிக்கை. அரசாங்கத்தின் இந்த இரட்டை வேடத்தினை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார். இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக மக்களை பலிக்கடாக்களாக்குவதை மக்கள் பிரதிநிதிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். கிள…

  2. கொழும்பு மாநகரசபையில் பாரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகரசபையுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சுமார் 500 மில்லியன் ரூபாவிற்கான கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வீதி திருத்தும் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய பிரதான பொருட்கள் கைவசம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சார்க் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக கொழும்பு மாநாகரசபைக்கு கிடைக்கப் பெற வேண்டிய பாரியளவு நிதி அரசாங்க நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே கொழும்பு மாநகரசபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி …

  3. கடந்த 60ஆண்டுகாலமாக தமிழினம் ஒவ்வொருவகையாக இன அழிப்புக்கு உட்பட்டு, உலகத்தின் சிறந்த இனமாகவும், அறிவுள்ள இனமாகவும் திகழவேண்டிய எம் தமிழினம் இன்று கொடுமையான இன அழிப்புக்குள் அகப்பட்டு இன்று அழிந்தவண்ணம் உள்ளது. இந்நிலை தொடருமானால் வரலாற்றில் தமிழினம் ஒன்று இருந்ததாக இருக்குமேஒழிய வாழ்ந்ததாக இருக்காது. அன்பார்ந்த உலகத்தமிழினமே இன்று சிங்கள் இனவெறி இராணுவம் பல நாட்டு வல்லரசுகளின் உதவியுடன் எமது தாய். தந்தை பிறந்த இடத்தை எல்லாம் கூறுபோட்டு, துடைத்தழித்தவண்ணம் , தாய்நிலத்தை அழிப்பதற்காய் முன்னேறி வருகின்றான். இன்று கிளிநொச்சியில் உள்ள மக்கள் எல்லாம் இடம்பெயர தொடங்கியுள்ளார்கள், திருமுறிகண்டிவரை இராணுவம் ஆக்கிரமித்து வந்துவிட்டான் எனவே ! தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் ஏதா…

  4. தமிழ்நாட்டில் பிரிவினைவாத கிளர்ச்சிய வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வை.கோ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக இலங்கை அராசங்கம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உடந்தையாக இருக்கின்றமை கண்டனத்திற்குரியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழர் மனதில் பிரிவினைவாதம் விதைக்கப்படும் எனவும்இ இந்த நிலைமை இந்தியாவின் இறமைக்கே குந்தகத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மதுரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது வை.கோ இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான கட்டவிழ்த்துவிடப்படும் யுத்தத்திற்கு இந்திய மத்திய அர…

  5. வைகோவின் அதிர்வுகள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> தொடரும்.....

  6. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகள் வன்னியில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கு இருந்தால், அந்நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்குரிய பாதுகாப்பிற்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்காது. அந்த நிறுவனங்களின் பணியாளர்களது பாதுகாப்புக்கு இனி எந்த உத்தரவாதமும் கிடையாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில வார இதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியில் அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டு வந்தன. அங்கு யுத்தம் தொடங்கியுள்ளதால் அப்பணிகளை அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்க முடியவில்லை. இந்த யுத்த நேரத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொட…

  7. கேகாலை றுவன்வெலவில் சிங்களவர் தமிழர் முறுகல்! ` கேகாலை மாவட்டம் றுவன்வெல நகரத்தில் உள்ள செஸ்ரர் போர்ட் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு அந்தப் பகுதியில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்படி தகராறில் குறித்த சிங்கள நபர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து நேற்றுக்காலை 10 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த பெருமளவிலான சிங்களவர் குழு ஒன்று அங்கு வாழும் தமிழர்களின் குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்தனர். இதனால், தமிழர் ஒருவர் படுகாயமடைந்து றுவென்வெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தாறுமாறாக கற்கள் வீசப்பட்டதால் தமிழர்கள் சில…

  8. இலங்கைத் தமிழ் மக்களுக்கான தமிழகத் தலைவர்களின் பணி 15.09.2008 வவுனியாவில் படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த செவ்வாயன்று நடத்திய அதிரடிப் பாய்ச்சல் தாக்குதல் நடவடிக்கையின்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இந்திய விமானப்படையின் இரு சார்ஜண்டுகள் காயமடைந்த விவகாரம், எதிர்பார்த்தபடியே தமிழக அரசியலில் ஒரு பெரும் சூட்டைக் கிளப்பியே இருக்கின்றது. இந்தியா, இலங்கைக்கு வழங்கிய "இந்திரா' ரக "ராடர்' களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இப்படிக் காயமடைந்தவர்கள் என்று இந்தியத் தூதரகம் சமாளிக்க முற்பட்டாலும் கூட புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இந்தியப் படைகளின் நேரடிப் பங்களிப்புப் பிரசன்னத்தை இச்சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கின்றத

  9. வன்னியிலிருந்து வெளியேறுவதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்கள் 3 வாரகாலம் அனுமதி கோரியிருந்ததாகவும், அவர்களுக்கான காலஅவகாசம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் செயற்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு கடந்த திங்கட்கிழமை அரசாங்கம் அறிவித்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், எனினும், தமது அலுவலகங்களை மூடிவிட்டு, உடமைகளுடன் வெளியேறுவதற்கு மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கப்படவேண்டுமென ஐ.நா. ஸ்தாபனங்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறினார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வெளியேற ஐ.நா.ஸ்தாபனங்கள் இணங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். “ஐக்கி…

  10. வன்னியி;ல தங்கியிருக்கும் எஞ்சிய தொண்டர் நிறுவனங்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. நிவாரணப்பணிகளை அரசு கவனித்துக் கொள்ளும் எனவும் ஒரு தொண்டர் அமைப்புக்கேனும் அரசு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது எனவும் கடுமையாக அரசு அறிவித்துள்ளது. வன்னியிலிருந்து அனைத்து தொண்டர் அமைப்புக்களும் வெளியேறி விட வேண்டுமென அரசு அறிவித்ததையடுத்து அங்குள் ளமக்கள் பெரும் அச்சம் கொண்ட நிலையில் வன்னியிலிருந்து ஐநா அமைப்புகள் வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வன்னியின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா அதிகாரிகள் ஐ.நா தலைமையகத்திற்கு அறிவித்து அங்கிருந…

  11. இது இங்கே இணைக்க படுவதுக்கு இந்த ஒரு பிரச்சாரத்தை அதிகமாக முன்னெடுத்த யாழ்கள வல்லுனர்களையே கேள்விக்கு உட்படுத்துவதாலாகும்... இதுக்கான அவர்களின் எதிர் பிரச்சாரமாக என்னதை திட்டமிட்டு வந்தார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும்... இதை ஏற்படுத்தி கொடுத்தவர்களும் அனுசரனை வளங்கியவர்களுமே இதன் பாதிப்புகளையும் ஏற்க வேண்டும்... கடந்த முறை விநாயகர் கோயில் உற்சவத்தின் போது " அடியார்களே நான் பசியாய் இருக்கிறேன்" எனும் உருக்கமான சுலோகம் அடங்கிய துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது... அதில் உடைக்கும் தேங்காய்களுக்கான பண்ணவிரையத்தையும், அதன்பின் பரீஸ் வீதிகளை சுத்த படுத்தும் வேலைக்கான பணம் கொடுப்பனவு விரையத்தையும் சேர்த்து வன்னி மக்களின் அவலத்தை காக்க உதவுங்கள் எனும் வேண்டுகோள் முன்…

  12. செப்டம்பர் 13,2008, ராமேஸ்வரம்: அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ஏற்றிச்சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால், இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கடலில் மூழ்கி பலியாயினர். சேலம், பழநி, திருவண்ணாமலை, கோவை, மானாமதுரை முகாம்களில் இருந்த ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 13 அகதிகள் செப்.,11 ம் தேதி காலை மண்டபம் வந்தனர். அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்வதற்காக மண்டபம் அண்ணாநகரைச் சேர்ந்த ஏஜென்ட் முருகனை சந்தித்தனர். இவர்களிடம் தலா ஆறாயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்ட முருகன், மண்டபம் தோனித்துறை கடற்கரையிலிருந்து, இரவு 9 மணிக்கு ஒரு நாட்டுப்படகில் 13 பேரையும் இலங்கைக்கு ஏற்றிச்சென்றார். இரவு முழுவதும் வழி தெரியாமல் நடுக்கடலில்…

  13. இலங்கை போர் முனையில் உள்ள இந்தியர்களை உடனடியாகத் திருப்பியழைக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது அணுகு முறையினை மாற்றவேண்டும். இதற்கான வலியுறுத்தல்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர். ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் இதுவரை மௌனமாக இருந்த தமிழக முதல்வர் இனியாவது மௌனத்தை கலைக்கவேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் நெல்லைக்கு வந்தார். …

  14. பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடு காரணமாகவே திருகோணமலைக் கடற்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களில் வவுனியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிஇ 7 நிமிடங்களுக்குள் வவுனியா வான்படைத் தளத்தின் ராடார் அமைந்திருக்கும் பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளிக் குழு பிரவேசித்துத் தாக்குதல்களை ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எறிகணை வீச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேநேரத்தில் வானத்தில் தோன்றிய செக் தயாரிப்பான சிலின் இசட்-143 விமானங்கள் குண்டுகளைப் போட்டதாக ஆய்வாளர் சம்பவத்தை விபரித்துள்ளார். இந்தத் த…

  15. கோயபல்ஸின் தத்துவமும் அரசின் பிரச்சாரங்களும் தாயகன் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துவரும் நிலையில் இருதரப்பு இழப்புகள் தொடர்பிலும் ஒவ்வொரு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இராணுவத்தினரின் இழப்புகள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதில் புலிகள் மிகவும் நிதானம் காட்டிவரும் அதேவேளை புலிகள் தொடர்பான இழப்புகள் குறித்து எவருமே நம்பமுடியாத தகவல்களை இராணுவத்தினர் வெளியிட்டு வருவதாக பலராலும் சுட்டிக் காட்டப்படுகிறது. புலிகள் தொடர்பில் இராணுவத்தினர் வெளியிட்டுவரும் தகவல்கள் பல முன்னுக்குப் பின் முரண்பட்டதாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. விடுதலைப் புலிகளை அழிக்க காலக்கெடுக்கள் விதித்தது முதல் புலிகளின் எண்ணிக்கை, அவர்கள…

  16. மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம் விதுரன் வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது மீண்டும் ப…

  17. கடந்த 09.09.2008 அதிகாலையில் விடுதலைப்புலிகள் வவுனியா இராணுவ கூட்டுத் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட இருபடைத்தாக்குதல் (தரைப்படை, விமானப்படை) இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள

  18. வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியிலிருந்து மூவர், தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோ

  19. படகு கவிழ்ந்ததில் 7 இலங்கை அகதிகள் கடலில் மூழ்கியுள்ளனர். வீரகேசரி இணையம் 9/14/2008 12:53:44 PM - Description 7 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து படகு மூலம் நாடு திரும்பிய வேளை படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை இவ்ர்கள் இந்தியாவிலிருந்து படகு மூலம் நாடு திரும்பிய சமயம் பாக்கு நீரிணை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய இவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

  20. நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்- பிரமிளா - தமிழரின் கடற்புலிகளும் - சிங்களக்கடற் படையும் பொருதும் சண்டை அரங்காகக் கடல் உள்ளது. காப்புகளோ! மறைவிடங்களோ! அற்ற திறந்த களமாக அது கிடக்கின்றது. வெற்றிபெறு! அல்லது மூழ்கிப்போ! என்பது போலத்தான் கடற்சண்டைகளின் போரியற்பரிமாணம் உள்ளது. வேரலைகளுக்கு ஈடுகொடுத்துச் சண்டையிடக்கூடிய கடற்கலங்கள் சிங்களக்கடற் படையிடமுண்டு ஆனால் சாதாரண படகுகளே கடற்புலிகளின் சண்டைக்கப்பல்களாகச் செயற்படுகின்றன. ஆழ்கடலில், பேரலைகளையும் சமாளித்தல் எதிரியின் கடற்கலங்களுடன் வெற்றிகரமாக மோதும் கடற்புலிகளின் சண்டை வரலாறு துணிகரமானது கடற்புலிகளின் படகுத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கரும்புலிப் படகுகள் எதிரிக்கு கிலி ஏற்படுத்தக்கூடியவை எதிரியி…

  21. வெளிநாட்டுப் பயணங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகளவு செலவு செய்துள்ளதாக ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வருடாந்தம் 30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம குறித்த நிதி ஒதுக்கீட்டை ஏற்கனவே செலவழித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரின் பயண செலவுகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்காக இதுவரையில் இவ்வளவு தொகை செலவிடப்படவில்லை என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரி…

  22. சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கோயிலாக்கண்டி வீதியில் கப்புத்து பிரதான இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் இருந்து நெல்லியடி காவற்துறையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (செப்12) மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் சாவகச்சேரி கல்வயல் பிரதேசத்தைச் சேர்ந்த 48வயதான பொன்னம்பலம் ஜெயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது மனைவி சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார். கடந்த செப் 8 ஆம் திகதி இரவு வீட்டுக்கு முன்னால் தனது குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத ஆயுதாரிகளினால் இவர் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் பணியகத்தில் முறைப்ப…

  23. கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களைப் படிப்படியாக உருவாக்குவதற்கு ஆளுங்கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சுற்றாடல் திட்டம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க சுற்றாடல் அமைச்சு முனைவதாக அவர் தெரிவித்துள்ளார். மிகவும் சொற்பளவில் காணப்பட்ட கிழக்கு சிங்கள மக்களின் விகிதாசாரம் தற்போது 30 வீதத்தை எட்டியுள்ளதாகவும்இ இதனை மேலும் அதிகாரிக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பி…

  24. வீரகேசரி நாளேடு 9/14/2008 5:36:10 PM - அவசியமான காரணங்கள் எதுவுமின்றி கொழும்பில் தங்கியிருப்போரை வெளியேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்படும் வரை பாதுகாப்பு தரப்பினரால் எவரும் வெளியேற்றப்படமாட்டார்கள். இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னரே அதற்கான நடவடிக்கைகள் மேடுற்கொள்ளப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். அவசியமான காரணங்கள் எதுவுமின்றி கொழும்பில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்களை வெளியேற்ற வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து கொழும்பின் சில பகுதிகளில் சுற்றிவளைப்புத் தேடுதல்களில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.