ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட வலியுறுத்தியும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமது நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் இன்று திங்கட்கிழமை மாலை மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
"விமானத் தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்களை ஒருபோதும் சிதைக்க முடியாது' [06 - October - 2008] விமானத் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது படைத்துறை வல்லுநர்களின் கருத்து. ஆனால், விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. எனவே, இது அவர்களுக்கு பொருந்தப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "லக்பிம' ஆங்கில வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது வான் தாக்குதல் கொள்கை வகுப்பாளர்களான கேணல் ஜோன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜானக பெரெரா கொலையடுத்து அனுராதபுரத்தில் சுற்றிவளைப்பு தேடுதல் [திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 08:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தினையடுத்து அனுராதபுரத்தில் சுற்றிவளைப்பு தேடுதல்கள் இடம்பெற்றன. இன்று திங்கட்கிழமை காலை முதல் பிற்பகல் வரை காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் மலையக தமிழ் இளைஞர்கள் ஏழு பேர் கைதாகியுள்ளனர். அனுராதபுரம் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மலையக இளைஞர்களே கைதானதா…
-
- 0 replies
- 861 views
-
-
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாரென தோதல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானியில் இது பற்றி அவர் அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நியமன எம்.பி யான எச்.எம். வசந்த சமரசிங்க இராஜினாமாச் செய்துள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணா அம்மான், சமூக சேவகைள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சரும், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததார். http://www.tamilseythi.com/srilanka…
-
- 0 replies
- 1.7k views
-
-
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து இலங்கை கடற்படை தாக்கியது. அதனால் ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அங்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது சர்வதேச கடல் பகுதியில் இந்திய, இலங்கை கூட்டுப்படை ரோந்துப் பணி மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், கூட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
26 தமிழர்கள் பிரச்சினையில் - கருணாநிதியின் பாராமுகம் தொடக்கத்திலிருந்து நடந்தவை என்ன? - பழ. நெடுமாறன் அனைத்துலக பொது மன்னிப்பக மும் மக்கள் சுதந்திரத்திற்கான ஒன்றிய மும் இணைந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின் வருமாறு கூறியுள்ளன: இந்தியச் சிறைச்சாலைகளில் சுமார் 400 பேர் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சுமார் 140 பேர்களாகும். இந்த மரண தண்ட னைகளில் மிகப் பெரும்பான்மை யானவை சூழ்நிலை சாட்சியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டவை. 1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இந்திய உச்சநீதிமன்றம் பரிசீலித்து தீர்ப்புரைத்த மரணதண்டனை வழக்குகளை அனைத்…
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்தியப் பிரதமருக்கான தந்திகள் குவிகின்றன- மருத்துவர் இராமதாஸ்- தொல். திருமாவளவனும் ஆதரவு [திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 06:51 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில், தமிழர்கள் மீதான இராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகள் அனுப்புமாறு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பேர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகள் அனுப்பி வருகின்றனர். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பிரதமருக்கு தந்திகளை அனுப்பினார்கள். இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக…
-
- 1 reply
- 1k views
-
-
"ஈழத்தமிழர் பிரச்சினையில்” முகத் தீர்வு கண்டு அவர்களைப் பாதுகாக்க இந்திய மத்திய அரசு” விரைந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தில், இதுவரை நடந்த விரும்பத்தகாத செயல்களையெல்லாம் மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல், மரணத்தின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழர்களை இந்திய மத்திய அர” காப்பாற்ற வேண்டும்.' இவ்வாறு அவசர வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பாக இதனை மத்திய அர” கவனத்துக்கு எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவை வருமாறு இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணு வத்தினரின் தாக்குத…
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னி முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடையும் அதிகளவான இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இவ்வாறு அனுமதிக்கப்படும் இராணுவத்தினர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் போதுமான வைத்தியர்கள் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் தட்டுப்பாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெரும் எண்ணிக்கையான காயமடைந்த இராணுவத்தினர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடையும் இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமத…
-
- 0 replies
- 2k views
-
-
கொடுமைகளுக்குக் கூட்டாளியாகி தவறிழைக்கும் கலைஞர் கருணாநிதி 06.10.2008 "குமுதம்' பத்திரிகையில் பிரபல இலக்கியவாதி ஒருவர் ஒரு முக்கிய கேள்வியை தமிழக முதல்வரைப் பார்த்து எழுப்பியிருந்தார். "கலைஞர் கருணாநிதி' என்ற பெயரில் உள்ளபடி அவரிடம் "கலை' இருக்கிறது. "நிதி'யும் தாராளமாக அவரிடம் உள்ளது. "கருணை' மட்டும் எங்குள்ளது? என்ற சாரப்பட அந்தக் கேள்வி அமைந்தது. அந்தக் கேள்வியை நியாயப்படுத்தும்படிதான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்னும் இன்றும் இத்தகைய பழுத்த அரசியல் அனுபவத்தின் பின்னரும் கூட நடந்து கொள்கின்றார் என்பதுதான் வேதனை தருகின்றது. தமிழக அரசியலில் இவ்வளவு நீண்ட காலம் தாக்குப்பிடித்து, அதிகாரத்தில் இருந்து வருபவர் அவர். பல வீழ்ச்சிகளுக்குப் பின்னரும் அச…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் செல்லலாமா? இலங்கையில் நடைபெற்று வரும் போரில் சிங்களப் படைக்கு உதவியாக இந்தியப் படைவீரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என இந்திய இராணுவத்தின் துணைத் தலைமை தளபதியான மிலன் லலித் குமார் கூறியுள்ளார். மண்டபத்தில் இந்து செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: இலங்கைக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் அவ்வப்போது செல்கிறார்கள். சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு திரும்பிவிடுகிறார்கள். இலங்கையில் ராடார் சாதனங்களை இயக்கிய இரண்டு இந்திய இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. காயமடைந்தவர்கள் ஒருவேளை சிவிலியன்களாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். …
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழப் போர்க்களம் உண்மை நிலவரம் என்ன? - பழ. நெடுமாறன் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள வன்னிப் பகுதி கிளி நொச்சி ஆகியவற்றைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கடந்த பல மாதங்களாக சிங்களப் படை பல்வேறு முனைகளில் படை நகர்வுகளைச் செய்து வருகிறது. இதையொட்டி சிங்கள இராணுவம் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் புலிகள் பின்வாங்குவதாகவும் விரைவில் கிளிநொச்சி கைப்பற்றப்படும் என்றும் சிங்கள அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்ட தாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இவற்றில் உண்மை என்ன? என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர். வன்னிப் பகுதியில் வாழும் மக்களை அகதிகளாக விரட்டியடித்து அவர்களின் மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையி…
-
- 0 replies
- 2.7k views
-
-
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்தியப் பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வ…
-
- 7 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,419 குடும்பங்கள் காவல்நிலையங்களில் பதிவு [திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 07:00 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் மேல்மாகாணத்தில் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,419 தமிழ்க் குடும்பங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்துள்ளன. கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் சிறப்பாக அமைக்கப்பட்ட அலுவலகங்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை சென்ற தமிழ் மக்கள் மேல் மாகாணத்தில் வசிப்பதற்கான காரணங்களை தெரிவித்து தம்மை பதிவு செய்து கொண்டனர். 1,419 குடும்பங்களைச் சேர்ந்த 4,049 பேர் பதிவுசெய்து கொண்டதாக மூத்த காவல்துறை அத்தியட்சகரும் காவல்துறை ஊடக பேச்சாளருமான றஞ்சித் குணசேகர தெரிவித்தார். பதிவு நடவடிக்கைகள் இன்று காலை 8:00 மணி முதல் …
-
- 0 replies
- 556 views
-
-
கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வடக்கிலிருந்து தப்பி ஓடும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின் சன்டே அப்சர்வர் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. நகருக்குள் நுழைய இன்னும் 2 கிலோமீட்டர் தூரமே பாக்கி உள்ளது. எனவே நீண்ட காலத்திற்கு தனது மறைவிடத்தில் பிரபாகரன் பதுங்கியிருக்க முடியாது. தனது போராட்டத்தை பிரபாகரன் இனியாவது கைவிட வேண்டும். ராணுவத்துடன் இனியும் அவர்களால் போரிட முடியாது. இதை அவர் உணர வேண்டும். அவர் தப்பி ஓடக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாது. அவர் தப்பிச் செல…
-
- 5 replies
- 3.5k views
- 1 follower
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அழைத்துவருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியிலிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு அங்குள்ள மக்களை அரசாங்கம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தபோதும், எவரும் அங்கிருந்து வெளியேறாததால், மக்களை வெளியில் அழைத்துவருவதற்கான போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்திருப்பதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் வன்னியிலிருந்து வெளியேற விரும்பினாலும், விடுதலைப் புலிகளால் வழங்கப்படும் போரூந்து சேவைகளையே பொதுமக்கள் ந…
-
- 5 replies
- 1.4k views
-
-
பாவப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பாரத மாதாவின் பதில்தான் என்ன? - இந்திய அரசுக்கு எதிராக மிக முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள். இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழரின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.'' என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகள் வெறும் வாய்ச் சொற்களே தவிர வேறெதுவும் இல்லை என்றுதான் தமிழ்மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு நேரடியாகவே இந்தியா மீது குற்றப்பத்திரம் வாசித்துள்ளார்கள் புலிகள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்' சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் இப்படி அப்பட்டமாக இந்தியாவைக் குறை கூறியிருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இலங்கையில் போர் நிறுத்தப…
-
- 0 replies
- 1k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே! தமிழர் தாயகப் பகுதிகள் மீது முற்று முழுதான இராணுவ, பொருளாதார யுத்தத்தை ஏற்படுத்தி தமிழர் பலத்தை சிதறடித்து அவர்;களை தனக்கு கீழ்படியும் ஒரு இனக்குழுவாக மாற்றுவதற்கான முழுமுயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் மீண்டுமொருமுறை வரிந்து கட்டியிறங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக சிங்கள இராணுவ இயந்திரத்தை அப்பாவி தமிழ்பொதுமக்கள்மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிட்டு அவர்களை பால், வயது வேறுபாடின்றி கொன்றொழித்து வருகின்றது. அண்மைய செஞ்சோலை, அல்லைப்பிட்டி, மூதூர் மற்றும் மன்னார் படுகொலைகள் சிறிலங்கா அரசின் இந்த இலக்கை அடைவதற்கானதொரு வழிமுறையே. அதன் அடுத்தகட்டமாக தமிழர் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினிபோட்டு இனப்படுகொலை செய்வதை குறியாகக் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாட்டாளி மக்கள் கட்சி, இலங்கை அரசை கண்டித்து, சென்னை இலங்கை தூதரகம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விடியோ காட்சி http://www.tamilnewscenter.com/video/tn/ev.../pmkprotest.mpg பிரத்தியேக புகைப்படம் காண... http://www.tamilnewscenter.com/photo/tn/ev.../slprotest.html
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடல்ல. இங்கு வாழும் தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் அனைவருக்கும் சொந்தமான நாடாகும். இன ரீதியாக சிந்திக்காது இலங்கையர்கள் என நாம் சிந்திக்க வேண்டும். கிளிநொச்சி மீதான படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கின்றன என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள இலங்கை இஸ்லாமிய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற, குறைந்த வருமானம் பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியர்கள் தாம் எந்த இனம் என்பதை…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரத்தியேக ஒளிப்பதிவுக் காட்சி : "நாங்கள் (இலங்கை கடற்படை) தமிழக மீனவர்களை சுட்டுவிட்டு, நாங்கள் விடுதலை புலிகள் மீது பழி போடுவோம்" - இலங்கை சிறையிலிருந்து மனிதம் அமைப்பின் உதவியுடன் மீண்டு வந்த தமிழக மீனவர்கள் http://www.tamilnewscenter.com/video/tn/ev...t/fishermen.mpg
-
- 0 replies
- 2.4k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட பொறிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 649 views
-
-
இந்திய - சிறிலங்கா அரசுகளின் கூட்டுச்சதியில் வீரச்சாவைத்தழுவிய லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, வணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 917 views
-
-
'சிறிலங்கா சிங்களபவுத்தநாடு, தமிழர்களே உங்களுக்கு இங்கு உரிமை இல்லை' என்று அண்மையில் சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்தால் சிங்களத்துடன் ஒட்டி இருந்து கொண்டு, சிங்களம் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப் போகிறது என்ற பசப்பு வார்த்தைகளை வீசியபடி, தமிழின ஒழிப்பிற்கு சிங்களத்துக்கு துணை போகும் தமிழ் ஒட்டுக்குழுக்கள், தங்களை "மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி இருப்பதாக தெரிவித்திருக்கின்றன. சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்துக்கள் எந்த ஒரு மானமுள்ள ஈழத்தமிழனையும் அதிர்ச்சிக்கோ அல்லது ஆச்சரியத்திற்கோ கொண்டு செல்லவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழன் சிங்கள இனவெறி மிருகங்களிடமிருந்…
-
- 2 replies
- 2.6k views
-
-
வன்னியில் தொடர்ச்சியாக மனிதாபிமான பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இரண்டு முகவர் நிறுவனங்களுக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் யூ.என்.எச்.சீ.ஆர். ஆகிய அமைப்புக்களிடமே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. வன்னியில் தொடர்ச்சியாக பணியாற்றுவதனால் தமது பணியாளர்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கக் கூடும் என குறித்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆரம்பத்தில் வன்னியிலிருந்து இடம் நகருமாறு அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இடம்பெயர் மக்களின் உணவு விநியோகத்தை சீராக மேற்கொள்ள உலக உணவுத் திட்டம் மற்றும் யூ.என்.எச்.சீ.ஆர். ஆகிய அமைப்புக்கள் வன்னியில் தங…
-
- 1 reply
- 1.2k views
-