Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி வான்னேரிக்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்நகர்வை மேற்கொண்ட படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுவருவதாகவும் இதில் படையினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை பெரும் பின்புல சூட்டாதரவுடனும் ஹெலிகொப்டரின் தாக்குதல் உதவியுடனும் பெருமளவா படையினர் முன்நகர்வை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதல் பிரிவினர் வழிமறிப்பபு தாக்குதலில் ஈடுபட பெரும் போர் வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருக்…

  2. அம்பாறை உடும்பன்குள வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 931 views
  3. யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 754 views
  4. பிரிவினைச் சிந்தனைக்கு வலுவூட்டும் பயணக் கெடுபிடி நடைமுறை 03.09.2008 யாழ். மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குப் பொதுமக்கள் சென்று வருவதற்கான பயண அனுமதி தொடர்பாக இராணுவத் தரப்பினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள், கெடுபிடிகளை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி கடுமையாக எதிர்த்திருக்கின்றார். இந்தக் கெடுபிடி ஏற்பாடு இரண்டு விதங்களில் மோசமான நடவடிக்கை என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதியும், செப்டெம்பர் முதலாம் திகதியும் தாம் அனுப்பி வைத்துள்ள இரு கடிதங்களில் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  5. மன்னாரில் முட்டைக்கு தட்டுப்பாடு வீரகேசரி இணையம் 9/3/2008 5:11:23 PM - மன்னாரில் கடத்த பல தினங்களாக முட்டைக்குப் பாரிய தட்டுப்பாட்டு நிலவி வருகின்றது மன்னாரில் முட்டை எப்போதும் 10 ரூபா முதல் 12 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது. கடைசியாக ரூபா 17 வரை முட்டை விற்பனை செய்யப்பட்டது . இந்த நிலையில் சில தினங்களாக மன்னாரில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில் மதவாச்சி சோதனைச்சாவடியில் ஏற்பட்டுள்ள சோதனை நெருக்கடிகளின் காரணமாகவும் கோழி உற்பத்தி குறைந்துள்ளமையினாலுமே மன்னாரில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்துள்ளனர்

  6. Started by Tamilmagan,

    FEIN: A genocide inquiry ?

  7. முல்லைத்தீவு கரையோர மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் குண்டுத்தாக்குதல் [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 07:06 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கரையோரப்பகுதி மக்கள் குடியிருப்புக்களை அண்டிய கடற்கரைப்பகுதி மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் கரைவலை வாடி ஒன்று சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று புதன்கிழமை முற்பகல் 9:30 மணிக்கு நடத்திய தாக்குதலில் அன்ரனி என்பவரின் கரைவலை வாடி சேதமடைந்தது. இதேவேளை மணலாறில் இருந்து சிறிலங்கா படையினர் இன்று செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் 15 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. புதினம்

    • 0 replies
    • 583 views
  8. கைப்பற்றப்பட்ட படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 05:54 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்காராயன் பகுதியில் நடைபெற்ற மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. நாச்சிக்குடா மோதலில் 7 உடலங்களும் வன்னேரி அக்கராயனில் 21 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. புதினம்

  9. போர்க்குற்றவியல் அடிப்படையில் கண்காணிக்கப்படும் இலங்கை [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 07:36 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] இலங்கையில் இடம்பெற்று வரும் போரை போர்க்குற்றமாக அவதானிப்பதில் அமெரிக்கா அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் அரச இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் போரை அமெரிக்க அரசாங்கம், போர்க்குற்றமாக அவதானித்து வருகின்றது. இந்த போரியல் குற்றங்களின் அடிப்படையில் இலங்கை, டார்பர், உகண்டா, கொங்கோ ஜனநாயக குடியரசு, பர்மா, தீமோர் – லெஸ்ரி அகிய நாடுகளில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அமெரிக்க அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. போரியல் குற்றத்திற்கான இந்த அலுவலக…

  10. கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் தமிழர்கள் தனித்து இலக்குவைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டிருக்கும் அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பயங்கரவாதத் தாக்குதல்களாலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். “இது ஒன்றும் ரோஜா படுக்கையல்ல. சில சிக்கல்களுக்கும் முகம்கொடுக்கவேண்டியிருக்கு

  11. மட்டக்களப்பு நகரிலும் நாவற்குடா வாவிக்கரையிலும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மிகவும் பழுதடைந்த நிலையில் இரு இளைஞர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இவையிரண்டிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. நாவற்குடாவில் சடலம் கரையொதுங்கியது பற்றி காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்னர் இறந்த ஒருவருடைய சடலமே இதுவெனப் பொலிஸார் தெரிவித்தனர். இதேநேரம் நேற்றுக்காலை மட்டு. நகரில் பற்பொடிக் கொம்பனிக்கு அருகிலுள்ள வாவிக்கரையில் கரையொதுங்கிய இளைஞரின் சடலம் பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சடலம…

  12. இலங்கைப் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியுள்ள மக்களுக்கான பாதுகாப்பை ஐ.நா வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் எதுவும் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை எனவும் அவ்வாறு வழங்கப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்னவும், அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் தெரிவித்திருக்கின்ற கருத்துக்கள் பொய்யானவை எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐ.நா சபை முதலில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அதன் பின்னர் உணவுப் பொருட்கள் குறிப்…

  13. தமிழர் புனர்வாழ்வு கழகத்தை புனர்வாழ்வு பணிகளில் ஈடுபடுத்தாமை குறித்து, அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் கிரிப்த் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கலாநிதி ஈ ஏ செல்வநாதன், அதிருப்தி வெளியிட்டுள்ளார். மலேசிய கோலாலம்பூரில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி சனிக்கிழமை முடிவடைந்த இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான ஆய்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அவுஸ்திரரேலிய தமிழர்கள் இலங்கயின் வடக்குகிழக்கில் உள்ள தமது உறவுகளுக்கு உதவுவதற்காக நிதியுதவிகளை வழங்கிவருகின்றனர். இந்தநிலையி;ல் அந்த உதவிகள், அந்த மக்களுக்கு உரிய வகையில் கிடைக்கவேண்டியது அவசியமாகும்;. அதனால் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு இலங்கை அரசாங்கம் தன்னார்வு பணிகளில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்…

  14. தெய்யத்தகண்டிய பிரதேசத்தின் சோனானிகம இராணுவ முகாமில் உள்ள 280 படையினர் திடீர் சுகவீனமுற்றமை தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் காவற்துறையினர், முகாமுக்கு உணவை விநியோகிக்கும் நபரைக் கைதுசெய்து விசாரணை நடத்தவுள்ளனர். படையினர் உட்கொண்ட காலை உணவில் சயனைட் கலந்திருந்தமையினால், அவர்கள் சுகவீனமடைந்தாக விசாரணைகளில் தெரியவந்தது. இதனையடுத்து முகாமுக்கு உணவு விநியோகிக்கும் நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அம்பாறை சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் ஆனந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ரகசிய காவற்துறையின் சிறப்பு அதிகாரிகள், சோனானிகம முகாமுக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எனினும் உணவில் சயனைட் எப்படிக் …

  15. வன்னியின் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் ஒன்றான மல்லாவியை மக்களும் விடுதலைப்புலிகளும் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து படையினர் கைப்பற்றியுள்ளதாகப் படைத்தரப்பு அறிவித்துள்ளது. பலமான நிலக்கீழ் அறைகள், பிரதான மருத்துவமனை மற்றும் விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் பல அங்கு காணப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளதுடன்.. மல்லாவி - துணுக்காய் வீதியும் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அதேவேளை இராணுவம் ஏ9 சாலையில் இருந்து மாங்குளம் - மல்லாவி வீதியில் 13 கிலோமீற்றர்கள் தொலைவில் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது..! Army moves into Mallavi town The Army yesterday moved into the strategically important Mall…

  16. சிறிலங்கா படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியுள்ள மக்களுக்கான பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 473 views
  17. இலங்கையில் பரவலாக மக்கள் காணாமல் போகின்றனர்: அனைத்துலக மன்னிப்புச் சபை [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 07:45 மு.ப ஈழம்] [பி.கெளரி] இலங்கையில் பலவந்தமாக காணாமல் போவோரின் தொகை பரந்த அளவில் அதிகரித்து வருவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. காணாமல் போவோர் தொடர்பான அனைத்துலக நினைவு நாளை முன்னிட்டு அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் மக்கள் பரந்தளவில் பெருமளவாக காணாமல் போகின்றனர். கடந்த 18 மாதங்களில் பல நுற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பான செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு மாதங்களில் 22 பேர் காணாமல்…

    • 0 replies
    • 492 views
  18. மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்குச் சென்ற சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் மீது அப்பகுதிப் பெண்கள் கடுமையான தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டு காணமல் போனவர்களின் தாய்மாரும்இ மனைவிமாருமே பிள்ளையான் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். பொதுநிகழ்வொன்றுக்காக அங்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலில் பிள்ளையானின் முன்பாக வந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மகன் ஆகியோர் எங்கே எனக் கேள்வி எழுப்பினார்கள். தன்னுடைய மகள் பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டதாகவும்இ கணவர் பிள்ளையான் குழுவால் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்ட பெண…

  19. நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு உடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  20. ரீ.சீ.பி. தமிழ்த் தொலைக்காட்சி சேவையை ரத்து செய்ய ஆசியா செட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஹொங்கொங்கை மையமாகக் கொண்டு இயங்கும் ஆசியா செட் தொலைதொடர்பு நிறுவனம் தமது செய்மதியூடாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட ரீ.சீ.பி தமிழ்த் தொலைக்காட்சி சேவையை ரத்து செய்துள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு குறித்த தொலைக்காட்சி சேவையூடாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ரீ.;சீ.பி. தமிழ்த் தொலைக்காட்சி சேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிகழ்ச்சிகளையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும…

  21. உகந்தையில் சுற்றுக்காவல் படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 படையினர் பலி; ஆயுதங்கள் மீட்பு [செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2008, 07:20 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை - அம்பாந்தோட்டை எல்லைப்பகுதியான உகந்தையில் சன்னியாசிமலையடி பிரதேசத்தில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். படையினரின் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்ததாவது: இன்று பிற்பகல் விடுதலைப் புலிகள் நடத்திய இந்த அதிரடித்த…

    • 0 replies
    • 879 views
  22. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வீதி வலையமைப்பு ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமால் குமாரகே தெரிவித்துள்ளார். 15வது சார்க் மாநாட்டில், பேக்குவரத்தினூடாக பிராந்திய நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்தல் எனும் தீர்மானத்திற்கமைய, இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில், இந்தியாவிடம் இது தொடர்பான திட்டவரைபினை இலங்கை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். "இரு நாடுகளுக்குமிடையில் படகு சேவையினை ஆரம்பிப்பது குறித்து இலங்கை ஏற்கனவே முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இதுகுறித்தும், இருநாடுகளினதும் அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவார்கள்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ள…

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிலைகளிலிருந்து பின்வாங்கி வருகின்ற போதிலும் அவர்களது போரியல் பலம் தொடர்ந்தும் அரச படையினரை அச்சுறுத்தி வருவதாக புளும்பேர்க் இணையத்தளம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருகோணமலைக் கடற்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் மூலம் இது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அரச படையினருடனான மோதல்களின் போது எதிர்காலத்தில் அதிகளவான வான் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளக்கூடும் என இலங்கையின் மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தார்சை மேற்கோள்காட்டி குறித்த இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 10,000 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் எஞ்சியிருப்பதாகவும், சுமார் …

  24. திருமலை வான்தாக்குதல் புலப்படுத்துவதென்ன. கடந்த இரவு இடம்பெற்ற திருமலை வான் தாக்குதல்கள் பற்றிய சேதியை முதன் முதலில் சிங்கப்பூரில் வாழும் ஒரு இலங்கை ஊடகத்துறை நண்பர் மூலமே அறிந்தேன். அதைத்தொடர்ந்து தமிழக ஊடகத்துறையில் உள்ள நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கிடைத்த தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண் டனர். உண்மையில் உலகத் தமிழர் பலரும் இச்செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். திருமலைக் குண்டுத்தாக்குதல் பற்றிய சேதியின் முக்கியமான தகவல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் அல்ல. சிறுரக விமானங்களை தாக்குதல்களுக்கு பயன்படுத்தவும் பின்னர் அவற்றைப் பத்திரமாக களத்துக்கு எடுத்துச் செல்லவுமான இராணுவப் புவியியல் போராளிகளின் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதுதான் உலகிற்க்கு யதார்த்த நநிலம…

    • 37 replies
    • 6.8k views
  25. தெய்யத்தகண்டிய சோனானிகம இராணுவ முகாமில் உள்ள படையினர் திடீரென சுகவீனமடைந்தமைக்கான காரணம் அவர்கள் உண்ட உணவில் சயனைட் கலந்திருந்தமையே என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனை அரச இரசாயன பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக மூத்த காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படையினர் உட்கொண்ட மீனில் அந்த சயனைட் கலந்திருந்ததாகவும் சமைப்பதற்கு முன்னர் அந்த மீனில் சயனைட் கலக்கப்பட்டிருந்தாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படையினர் உட்கொண்ட மீனில் சயனைட்டைக் கலந்தது யார் அது எங்கு கலக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட ரகசிய காவற்துறைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.