ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
புதுமுறிப்பில் படுகொலை செய்யப்பட்ட ஐவரின் வணக்க நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2008, 06:37 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கிளிநொச்சி புதுமுறிப்பில் நேற்று சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட கைக்குழந்தை உட்பட ஐவரின் வணக்க நிகழ்வு கிளிநொச்சி புதுமுறிப்பில் இன்று நடைபெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் மரியநாயகம் குருஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்களுக்கு உறவினர்கள் சுடரேற்றி மலர்மாலைகள் சூட்டினர். வணக்க உரைகளை ஆ.சந்தியோ, வன்னேரிக்களம் கிராம அலுவலர் சபாரட்ணம், கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குநர் அருட்திரு எட்மன் றெஜினோல்ட் அடிகளார், மன்னார் மாவட்ட தம…
-
- 3 replies
- 840 views
-
-
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு ரூபஸ்குளம் விசேட அதிரடிப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஸ்னைபர் தாக்குதலில் கமாண்டோ வீரர் கொல்லப்பட்டுள்ளார். ரூபஸ்குளம் பகுதி சோதனைச் சாவடிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மரமொன்றிலிருந்து குறித்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 1k views
-
-
எந்த சக்தி எதிர்த்தாலும் வடக்கை மீட்கும் அரசின் படை நடவடிக்கை நிறுத்தப்படாது பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வீரகேசரி நாளேடு 8/31/2008 5:14:50 PM - வடக்கை மீட்டெடுப்பதற்காக அரசு முன்னெடுத்து வரும் படை நடவடிக்கையை எந்தச் சக்தி எதிர்த்தாலும் நிறுத்தப் போவதில்லை என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். கல்கிரியாகம சிவில் பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் இரண்டரை மாத பயிற்சியினை முடித்து வெளியேறும் சிவில் பாதுகாப்புப் படையின் இரண்டாவது குழு வெளியேறும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது இராணுவ வீரர்கள் வீரதீரத்துடன் போர…
-
- 2 replies
- 843 views
-
-
புல்மோட்டை போகஸ்வௌப் பகுதியில் நுளைந்துள்ளதாகக் கூறப்படும் 60 விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைத் தேடி படையினர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மணலாறு பகுதியில் இடம்பெறும் மோதல்களை சீர்குலைக்கும் நோக்கில் இவர்கள் பதவிய பிரதேசத்தின் தெற்கில் அமைந்துள்ள இந்த பிரதேசத்திற்குள் நுளைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் இந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த பகுதிக்குள் சென்ற படையினர் இருவரும், சிவில் பாதுகாப்பு படையின் சிப்பாய் ஒருவரும் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அத்துடன் மூன்று படையினர் காயமடைந்தனர். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மரங்களில் இருந்தவாறு…
-
- 0 replies
- 1k views
-
-
கொட்டும் மழையை சாதகமாக பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் சுண்ணாகம் பகுதியில் 3 வீடுகளில். சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்கு மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுண்ணாகம், காளிகோயிலடியை சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு சென்று ,கதவை தட்டி படையினர் எனக்கூறி கதவை திறக்கசெய்த கொள்ளையர்கள் சுமார் மூண்று நிமிடத்தில் மின்னல் வேகமாக கொள்ளையிட்டு சென்றதாக அறியப்படுகிறது. http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 699 views
-
-
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம் வீரகேசரி இணையம் 8/31/2008 12:10:33 PM - வரலாற்று புகழ் மிக்க தெல்லிபழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் உற்சவம் இடம்பெற்றுள்ளன. எதிர்வரும் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வேட்டைத் திருவிழாவும் 10ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு சப்பறத்திருவிழாவும்,11 ம் திகதி வியாழக்கிழமை காலை மணிக்கு தேர்திருவிழாவும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மண்க்கு ஆவணி ஓணம் நாளில் தோர்தோற்சவம் இடம்பெறவுள்ளன. தினமும் காலை 7.00 மணிக்கு பூசையும் 8.00 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும் 9.00 மணி…
-
- 0 replies
- 670 views
-
-
சிங்களச் சிறைச்சாலைப் படுகொலைகள்- அன்பரசு - தமிழ் இலக்கியத்திலே நனவிடை தோய்தல் என்றால் பழையதை நினைவுகூரல் என்று பொருள். நாம் கட்டாயமாக முன்பு நடந்தவற்றை, நாம் கடந்து வந்தவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அது எமது போராட்டத்தை வலுப்படுத்தும். சிங்களப் பேரினவாதிகள் செய்த தமிழினப் படுகொலைகளை எண்ணித் துவண்டு போகாமல் எமது போராட்ட வலுவை உயர்த்த வேண்டும். அன்றைய தமிழ்மக்கள் சேவல் கூவ எழுந்தார்கள். இன்றைய தமிழ்மக்கள் செல் கூவ எழும்புகிறார்கள். எமது வாழ்வின் தன்மை மாறிவிட்டது. அதற்காக வருந்த வேண்டிய அவசியம் இல்லை. பழையது எமக்குப் புத்துணர்ச்சி ஊட்டும், தொடர்ந்து போராடும் வலுவைத்தரும். சென்ற மாதம் கறுப்பு ஜுலைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருட நிறைவை மனமுரு…
-
- 0 replies
- 843 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் அலரிமாளிகையை அண்மித்த உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் லொறிகள், பார ஊர்திகள், ஊர்வலங்கள், பேரணிகள், அரசியல் ஒன்று கூடல்கள் மற்றும் வாகனப் பேரணிகள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/
-
- 3 replies
- 1.1k views
-
-
திருகோணமலை கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தி விட்டு சென்ற விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்கள் இரணைமடு விமான ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டதாக விமானப் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தின் மீது, உடனடியாக தாக்குதல் ஜெட் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளங்களை விமானப்படையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் இவற்றைத் தவிர புதிய ஓடுதளம் எதுவும் வன்னியில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 7 replies
- 2.2k views
- 1 follower
-
-
சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத்தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய் இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்கு செல்லணேடியதொரு நிர்ப்பந்தத்தை சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்று உறுதியாக நம்பலாம் என ஈழநாதம் பிரதம் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஈழநாதம் வார இதழில் எழுதியுள்ள ‘வான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்’ என்ற தலைப்பிலான பத்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்த அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ கொலை முயற்சி வழக்கு எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் நிசந்த ஹப்புஆராச்சி முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றபோது குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் அறிக்கை ஒன்றை மன்றில் சமர்ப்பித்திருந்தனர். சம்பவ நேரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் வாகனத்துக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்து மரணமான விடுதலைப் புலி உறுப்பினர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்கொலையாளிக்கு உதவிய சந்தேகநபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர். இந்த விசாரணை தம்மால் தொடர்ந்தும் மேற…
-
- 0 replies
- 703 views
-
-
வன்னிமக்கள் எதிர்நோக்கவுள்ள அவலம் குறித்து அச்சமடைகிறேன்-கேசரி வார இதழுக்கான விசேட செவ்வியில் யாழ். ஆயர் தெரிவிப்பு வீரகேசரி வாரவெளியீடு 8/31/2008 8:26:42 AM - வன்னியில் மக்களுக்கு பாதுகாப்பானதோர் பகுதியென எதுவும் அற்றதோர் சூழல் உருவாகியிருப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கவலை தெரிவித்துள்ளதுடன் தொடரும் யுத்த நடவடிக்கைகள் காரணமாக அடுத்து வரும் காலங்களில் மக்கள் எதிர்கொள்ளவுள்ள அவலத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது பெரும் அச்சமாக இருப்பதாகவும் கூறுகின்றார். வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஆயர் மேற்கண்டவாறு தனது கவலையையும் அச்சத்தையும் தெரிவித்துள்ளார். ""இது தமிழ் மக்களது பிரச்சினை. தமிழ் மக்களுக்கு வரலாற்று ரீதியாக அநீதி இழைக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 567 views
-
-
வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணில் சடலம் மீட்பு ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் முகிலன்] வவுனியாவில் ஆண் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை காலை வவுனியா பண்டாரிக்குளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலம் வவுனியா பொது மருத்துவமனையில் இனம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=3292
-
- 0 replies
- 703 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்தவர்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு கூறி அரசாங்கம் விமானங்கள் மூலம் துண்டுப் பிரசுரங்களை வீசியபோதும் அங்கிருந்து மக்களின் வெளியேற்றத்தில் உடனடி மாற்றங்கள் எதுவும் தென்படவில்லையென பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். “துண்டுப் பிரசுரங்கள் விமானம் மூலம் வீசப்பட்டு ஒரு நாள் மாத்திரமே முடிவடைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களிலேயே அதிகரிக்கும்” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் பிடியிலிருக்கும் வன்னியை மீ…
-
- 0 replies
- 865 views
-
-
யாழ்ப்பாணம், புன்னாலையைச் சேர்ந்த 30 அகவையுடைய நாராயணசிங்கம் லோகநாதன், கொழும்பு தெஹிவளையில் கடந்த 17ஆம் நாள் முதல் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக கொழும்பு மக்கள் கண்காணிப்புக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் காணாமல் போனவரது சகோதரி லிஜயலக்சுமி முறையிடப்பட்டுள்ளது. தெஹிவளை, காலி வீதியில் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றை நடத்திவந்த நிலையில் இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 688 views
-
-
வேடிக்கை பார்க்கும் இந்தியத் தமிழர்கள் வேடிக்கை பார்க்கும் இந்தியத் தமிழர்கள் இந்தியா ஈழத்தமிழர்களின் குரல் வளையை நசிக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க எம் போன்ற இந்தியத் தமிழர்கள் பலர் என்றும் பின் நிற்கத் தவறுவதில்லை. நாளைய தமிழ் நாட்டுத் தமிழர்கள் தனி நாடு கேட்கக் கூடாது என்பதற்காக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடியோடு நசுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உண்டு. தமிழ் நாட்டில் (இந்தியாவில்) தமிழன் இல்லாது இருந்தால் ஈழத்தமிழர்க்கு இன்றைய அவலம் இந்தியாவால் திணிக்கப்பட்டிருக்காது. எமது அடிமைத்தனத்தை உறுதிப்படுத்த நித்தமும் சாகின்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியத் தமிழர்கள் ஆறுதலாக இல்லாவிட்டாலும் இடைஞ்சலாவது கொடுக்காமலிருக்கலாம். தம் இனத்தை…
-
- 7 replies
- 1.7k views
-
-
வடமத்திய மாகாணசபை மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள் ஆரம்பமாகிய போது அரசாங்கம் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது இராணுவத்தினர் துணுக்காய்ப் பிரதேசத்தை கைப்பற்றி விட்டார்கள் என்பதே அந்த தகவலாகும். எந்த நோக்கத்தோடு அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததோ அதற்கான பலன்களையும் அரசாங்கம் அறுவடை செய்திருந்தது. போரின் மனப்பான்மையுடன் வளர்த்துவிடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக வெற்றிச் செய்திகளை கொடுக்க வேண்டும் என்பது தற்போது அரசாங்கத்துக்கு இன்றியமையாததாகி விட்டது. தேர்தலின் போது தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் படை அதிகாரிகளை முன்னிறுத்தி இருந்தன. இந்த நிலையில் யாழ்குடநாட்டில் உள்ள படையினருக்கு மன்னாரில் இருந்து ஏ32 நெடுஞ்சாலை ஊடாக ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த வருடம், எரிவாயு சிலிண்டர்களின் விலையேற்றம் ஐந்து தடவைகள் அதிகரித்துள்ளது.வான்புலிகளி
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் பிரசாரத்தை முறியடித்த வான்புலிகள்: "லக்பிம" வார ஏடு [ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2008, 07:59 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] திருகோணமலை மீதான தாக்குதல் போர் தொடர்பான கணிப்பீட்டை முற்றாகவே மாற்றியிருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: திருகோணமலை நகரை பெரும் வெடியோசை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9:10 மணியளவில் அமைதியாக இருந்து அதிர வைத்தது. அதனை தொடர்ந்து வானத்தை நோக்கி சரமாரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வாண வேடிக்கைகள் போன்று வாணம் காட்சியளித்தது. …
-
- 0 replies
- 685 views
-
-
வன்னேரியை வல்வளைப்புச் செய்ய சிறிலங்காப் படையினர் நான்கு நாட்களாக மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத் தாக்குதல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 60-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 728 views
-
-
விஷேட அதிரடிப் படையினரால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரெனக் கூறப்படும் கண்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை அடையாளம் காட்டுவதற்காக அதிரடிப் படையினருடன் படகில் சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு ஆற்றில் குதித்து மரணமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது கிளைமோர் குண்டுகள் இரண்டு ரி56 ரக துப்பாக்கி, ரி56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 475 ரவைகள், அதற்கான 3 மகசீன்கள், 9.9 மில்லி மீற்றர் கைத்துப்பாக்கிக்குப்…
-
- 2 replies
- 2.3k views
-
-
-
சிறீலங்கா படையிலிருந்து தப்பியோடிய நிலையில், சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த 10 பேர் மீண்டும் தப்பிச்சென்றுள்ளனர். மீகதேன காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் நேற்று தப்பியோடிய நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமது படைகளைச் சேர்ந்த 14 ஆயிரம் உறுப்பினர்கள் தப்பியோடி இருப்பதாக, சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கடந்த வாரம் கொழும்பின் சண்டே லீடர் (Sunday Leader) பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 1 reply
- 823 views
-
-
இன அழிப்புப் போரின் ஒரு அங்கமே இப்படுகொலை - தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு சனி, 30 ஆகஸ்ட் 2008 [பதிவு நிருபர்] தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசாங்கம் மேற்கொண்டு வரும் இன அழிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு போரின் ஒரு அங்கமாகவே இக் கொடூரமும் அரங்கேற்றப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையின் முழுவடிவமும் வருமாறு… செ.கயேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30-08-2008 பொது மக்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் ஐந்து பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம். கிளிநொ…
-
- 0 replies
- 767 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் அனைத்துலக தொண்டு நிறுவனத்தின் போருட் வாகனத்தின் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 825 views
-