ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
இந்தியாவை சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை இருநாடுகளுக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்-தினமணி நாளேடு வலியுறுத்தல் வீரகேசரி நாளேடு 8/20/2008 8:34:09 AM - இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்தியா மற்றும் இலங்கைக்கு பொதுவாக்கப்பட வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட
-
- 1 reply
- 778 views
-
-
ஊடகங்களுக்கு எதிரான அரச அடக்குமுறையின் ஒரு குறியீடாக விளங்குபவர் அமைச்சர் மேர்வின் சில்வா. இந்த நாட்டின் சட்டமியற்றும் உயர்சபை எனப் போற்றப்படும் நாடாளுமன்றத்துக்குள் அவர் நடந்துகொள்ளும் நாகரிகம் பிரசித்தமானது. காவியுடை தரித்துஇ நாடாளுமன்றப் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வந்த சங்கைக்குரிய பிக்கு ஒருவரை நாடாளுமன்றத்துக்குள் வைத்தே மேர்வின் சில்வா உட்பட்ட அரசுத் தரப்புக் குழுவினர் சூழ்ந்துகொண்டு அநாகரிகமாக நையப்புடைத்து நடத்திய விதமும் தமது மர்மஸ்தானம் நசுக்கப்பட்டதால் ஏற்பட்ட கொடூர நோவுக்காக அந்தப் பிக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை எடுக்கும் அளவுக்கு நேர்ந்த அவலமும் இந்த இலங்கைத் தீவின் சட்டமியற்றும் சபையின் அங்கத்தவர்களின் "பெருமை' பேசும் விடயங்களாகும். …
-
- 0 replies
- 1k views
-
-
பொலிஸ் கொன்ஸ்டபிள் கொட்டாஞ்சேனையில் வெட்டிக் கொலை வீரகேசரி இணையம் 8/20/2008 10:46:19 AM - கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியிலுள்ள ரட்ணம் மைதானத்திற்கு அருகில் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத கும்பலொன்று இவரது கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 1.1k views
-
-
போர்வெறி கொண்ட அரசு வடபகுதியில் மேற்கோண்டுவரும் மோதல்கள் விரைவில் நல்லதோர் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். இடதுசாரி முன்னணியின் வடமத்திய மாகாணசபைக்கான தேர்தற் பிரசாரக் கூட்டம் அநுராதபுரம் ஐம்பது கடைத்தொகுதிப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-கண்டியைக் கைப்பற்ற வெள்ளையர்கள் முயன்றபோது கண்டிய மக்மள் நகரைக் காலி செய்துவிட்டு காட்டுப் பகுதிகளில் பதுங்கிக் கொண்டனர். எதிர்ப்பு இல்லையே என எண்ணிய வெள்ளையர்படை கண்டிக்குள் உல்லாசமாகப் பிரவேசித்தது. இரண்டு தினங்கள் கழித்து கண்டிய மக்கள் உக்கிர தாக்குதல் தொடுத்தனர். வெள்ளையர்படை சின்னாபின்னம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்குச் சிகிச்சையளிப்பதற்காக யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் விஷேட தனிப் பிரிவொன்றை ஏற்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். படையினருக்குத் தேவையான வைத்தியர்களின் குறைபாடு குறித்து ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சுகாதர அமைச்சுக்குப் பணித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுகாதர அமைச்சின் முக்கியஸ்தர்களுடனான மாநாட்டின் போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், வடபகுதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்து வகைகள், வைத்திய உப…
-
- 0 replies
- 549 views
-
-
தென்றல் தொலைக்காட்சியில் வன்னியின் மனிதாபிமான அவலம் பற்றிய நிகழ்வு ஒன்று இன்றைய இரவுச் செய்திகளிற்கு பின்னர் நடைபெறுமாம்.
-
- 1 reply
- 1k views
-
-
வீரகேசரி நாளேடு - வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்கு சிகிச் சையளிப்பதற்காக வடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தனிப் பிரிவொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். படையினருக்கு தேவையான வைத்தியர்களின் குறைபாடு குறித்து ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சுகாதர அமைச்சுக்கு பணித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுகாதர அமைச்சின் முக்கியஸ்தர்களுடனான மாநாட்டின் போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், வடபகுதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்து வகைகள், வைத்திய உபகரணங்கள் உட்பட குறைபா…
-
- 1 reply
- 834 views
-
-
யாழ் தென்மராட்சி நாவற்குழி சிறிலங்காப் படையினரின் சோதனைச்சாவடியில்வைத்து வியாபாரி ஒருவர் நேற்று காலை 10.00 மணியளவில் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். கண்ணையா உதயன் (42) அரியாலை என்ற ஐஸ்பழ வியாபாரியே படையினரால் தாக்கப்பட்டவராவார். செய்தி
-
- 0 replies
- 636 views
-
-
சிறிலங்காப்படையினரின் தாக்குதல்களால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் பத்தாயிரம் வரையான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என கிளிநொச்சி வலையக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு பூநகரியின் வடக்குப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகள் பூநகரியின் தெற்குப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தன. தற்பொழுது பூநகரி கல்விக்கோட்டத்தில் உள்ள 19 பாடசாலைகள் முழுமையாக இடம்பெயர்ந்துள்ளன. இதனால் 6500 வரையான மாணவர்களும் இடம்பெயர்ந்துள்ளனர். இதனைவிட கிளிநொச்சி கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட வன்னேரிக்குளம்இ nஐயபுரம்இ ஐயனார்புரம்இ அக்கராயன் ஆகிய பாடசாலைகளின் இடப்பெயர்வால் 3500 வரையான மாணவர்கள் என பத்தாயிரம் வரையான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் தவணைக்…
-
- 0 replies
- 620 views
-
-
இடம்பெற்றுவரும் மேதலினால் வன்னியில் தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொடுமையால் துன்பப்படும் மக்களின் துயரங்களைப்போக்க சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் பொது அமைப்புக்களும் உடனடியாக முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வன்னிப் பெருநிலப்பரப்பை கைப்பற்றும் நோக்கோடு இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் போரின் காரணமாக சாதாரண போர் நடவடிக்கைகளோடு நேரடித் தொடர்பு அற்ற பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகவுள்ளது. நிச்சயமற்ற இருப்பு நிலையோடும் மிரட்சியும் அச்சமும் கலந்த வாழ்வோடும் வறுமையோடும் போராடும் …
-
- 0 replies
- 659 views
-
-
சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள் -ப.தெய்வீகன்- வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை உணரக்கூடியதாக உள்ளது. போகிற போக்கில் கிளிநொச்சியும் படையினர் வசம் போய் விடுமா? புலிகளின் தற்காப்பு நிலைக்கு ஒரு வரையறை வேண்டாமா? படையினரின் அறிக்கைப்படி இந்த வருடத்துக்குள் புலிகளை அழித்து விடுவார்களா? - இப்படி பல்வேறு சந்தேகங்கள் இந்த அதிருப்தியாளர்கள் மத்தியில் முளைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் வெற்றிகரமான தாக்குதல்கள் நடந்து முடிந்த பின்னர் வென்…
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ் முகாமாலையில் முன்னரங்கில் நேற்று மாலை 5:30 முதல் அரை மணி நேரத்திற்கு இடம்பெற்ற எறிகணை மோதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு படை உறுப்பினர் பலாலி படைத்துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். நாகர்கோவில் முன்னரங்கில் காலை 8:30 அளவில் இடம்பெற்ற எறிகணை மோதலில் தமது தரப்பில் மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்று மாலை நாகர்கோவிலில் விடுதலைப் புலிகளின் பொறி வெடிகளில் சிக்கிய படையினரில் 6 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறவித்துள்ளது. http://isoorya.blogspot.com/2008/08/9.html
-
- 0 replies
- 745 views
-
-
முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீள இணைந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 994 views
-
-
வன்னியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்களை வவுனியாவிற்கு கொண்டு வந்து இராணுவத்திடம் கைய்யளிக்குமாறு அரசாங்கம் பணிப்பு? தென்றல் இரவுச் செய்தி
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பில் இரு தமிழ்குடும்பஸ்தர் கடத்தப்பட்டனர். 19.08.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பின் இரு பகுதியில் தமிழர் இருவர் வெள்ளைவான் கும்பலினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியிளவில் வத்தளை குணுப்பிட்டிய சந்திக்கிடைப்பட்ட ஜயந்திமாவத்தையில் வைத்து கிறிதோதரன் பிரன்ஸிஸ் (49) என்பவரின் வீட்டுக்கு வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் இவரைக் கடத்திச்சென்றதாக கடத்தப்பட்டவரின் மனைவியால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு புதுச்செட்டித்தெரு பகுதியில் இதே நாள் அதிகாலை பொலிஸ் சீருடையில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை கடத்திச்சென்றுள்ளனர். கடத்தப்பட்டவர் செல்வராசா பாலகுமார் (33) என்ற குடும்பஸ்தரே இ…
-
- 0 replies
- 685 views
-
-
வி.புலிகளின் இராணுவபேச்சாளர் திரு இராசையா இளந்திரையன் அவர்களுடனான நேர்காணல் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 3.5k views
-
-
பிரான்சில் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு" நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்நாள் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 674 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ருவான்வெல்ல பிரதேச கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படும் என்ற உறுதிமொழியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டதக கூறப்படுகிறது. ருவான்வெல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பளரின் ஆலோசனைக்கு அமைய தோட்டங்களில் இருந்து இந்த மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர்களை ஏற்றிச் செல்ல இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் உறுதியளிக்கப்பட்டவாறு உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள், சுதந்திரக்கட்சியின் சார்பில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை தூ…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரான்சில் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாற்று" நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்நாள் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 593 views
-
-
திருகோணமலை மூதூரில் ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா தரைப்படைகள் அங்கிருந்து வன்னிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. வன்னியில் படைகளுக்கு ஏற்பட்டுவரும் இழப்புகள் காரணமாக உருவாகியுள்ள ஆளணி வெற்றிடத்தை இடை நிரப்பு செய்வதற்காகவே இந்த படை நகர்த்தல் இடம்பெற்றுள்ளது. தரைப்படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, சிறீலங்கா கடற் படையினர் மூதூரை ஆக்கிரமித்துள்ளனர். http://isoorya.blogspot.com/2008/08/blog-post_1094.html
-
- 4 replies
- 2.6k views
-
-
திருமாவுடன் தொடர்புபடுத்த முயன்றார்கள் -கைதான விடுதலைப்புலி பகீர் வாக்குமூலம் புலிகளின் முக்கிய தளபதி தமிழகத்தில் கைது!' என்ற செய்தி, கடந்த ஒரு வாரமாக பயங்கர பரபரப்பை எழுப்பி வருகிறது. `கடந்த 30-ம்தேதி தமிழக கியூ பிராஞ்ச் போலீஸால் கைது செய்யப்பட்ட அந்த விடுதலைப்புலி தளபதிக்கு `தம்பியண்ணா', `டேனியல்', `இளங்கதிர்' என்று பல்வேறு நாமகரணங்கள் உள்ளன. கடற்புலிகள் அமைப்பின் தலைவர் சூசைக்கு இவர் மிக நெருங்கிய நண்பர். புலிகளின் ஆயுதக்கடத்தல் பிரிவின் தலைவர் இவர். புலிகளுக்கு குண்டுகள் செய்வதற்கு வசதியாக சைக்கிள் பால்ரஸ்கள், இரண்டாயிரம் கிலோ அலுமினியக் கட்டிகள், வெடிகுண்டு மூலப் பொருட்கள் ஆகியவற்றை புதுக்கோட்டை கடற்கரைப் பகுதியில் இருந்து கடத்த முயன்றவர் இவர்' என்று பல்வேறு தக…
-
- 9 replies
- 2.6k views
-
-
இன்று எமது இராணுவ வீரர்கள் பெறக்கரிய வெற்றிகளை குவித்து இந்தத் தேசத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வெற்றி பெறுகின்றார்கள் என்றால் அந்த வெற்றிக்கு பின்புலத்தே நின்று அவர்களை கௌரவித்து அவர்களை உற்சாகமூட்டி கேட்பதெல்லாவற்றையும் வழங்கி கொண்டிருந்த எந்த அரசாங்கமோ தலைவர்களோ செய்யாதவற்றை இன்று எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களும் எமது அரசாங்கமும் செய்துள்ளது. எனவே வெற்றியின் உச்சத்தில் உள்ள எமது படையினர் இந்த இரண்டு மாகாணசபைத் தேர்தல்களின் முன்னரே கிளிநொச்சியை கைப்பற்றி சொல்லத்தக்க செய்தியை கொண்டுவருவர் என சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். குருவிட்ட பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
8/19/2008 3:36:41 PM - எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமத்திய மற்றும் சப்ரகமுவமாகாண சபை தேர்தல்களில் அரசு மக்களை பயமுறுத்தி வாக்குகளை பெற முயல்கிறது.ஆனால் சப்ரகமுவ மாகாண மக்கள் இதை அனைத்தையு பொறுமையுடன் அவதானித்து கொண்டு இதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.மக்களது சுதந்திரமான வாக்களிக்கும் உரிமையை அரசு தடுத்து நிறுத்த முயல்கிறது.அனுராதபுரம் பிரதேசங்களில் காணப்படும் மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஆகிய வற்றுக்கு சொந்தமான சுற்றுலா விடுதிகள் அரசு ஆதரவாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என ஜே.வி.பியின் வடமத்திய மாகாண வேட்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். தேர்தல் செலவினங்கள் மக்களின் மேல் சுமத்தப்படுகின்றது அதைபோல் பெற்றோல் போன்ற ஏனைய செலவினங்களும் மக்…
-
- 0 replies
- 503 views
-
-
வடபகுதியில் உணவுப் பொருட்களுக்கோ, அத்தியாவசியப் பொருட்களுக்கோ எந்தவிதமான தட்டுப்பாடும் கிடையாதெனத்தெரிவித்த இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச உள்நாட்டு ஊடகங்கள் சிலவற்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மரங்களுக்கடியில் வசிப்பதாகக்கூறிய செய்தியில் உண்மை எதுவும் கிடையாதெனவும் கூறினார். அதேசமயம் வட பகுதிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றரை மாதங்களுக்குப் போதுமான தொகை கையிருப்பில் இருப்பதாகவும் வடக்கு மீட்கப்பட்டதும் முழுமையான இயல்பு நிலையை உடனடியாக கொண்டுவர முடியுமெனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை மாலை இடர் முகாமைத்து…
-
- 0 replies
- 726 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரைத் துடைப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைதிப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஒன்றுகூடிய பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் 15 நிமிடம் அமைதிப் (மெளனம்) பிரார்த்தனையை மேற்கொண்டனர். யுத்த முன்னெடுப்புகளால் வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களுக்கு அனைத்துலக மற்றும் உள்ளுர் தன்னார்வ நிறுவனங்கள் உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த அமைதிப் பிரார்த்தனையின் ஈடுபட்டுள்ளனர். இதேநேரம் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையி…
-
- 0 replies
- 632 views
-