Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முறையற்ற மணல் அகழ்வு தொடர்பில் சுமந்திரன் நடவடிக்கை யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்ந்த இடம்களை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் நேற்று (09) நேரடியாக சென்று பார்வையிட்டார். அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பல்வேறு முறையற்ற மணல் அகழ்வு தொடர்பாக கருத்து வெளியிட்டார். யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் மகேஸ்வரி நிதியத்தால் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 ம் ஆண்டு வரை சுமார் பத்து இலட்சம் கியூப் மணல் மண்ணிற்க்கு அதிகமான மணல் மண் முறையற்ற விதத்தில் அகழப்பட்டு ஏற்றிச் செல…

  2. அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படையின் போக்குவரத்து கப்பல் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும். துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200 கடல் மைல் தூரத்திற்கு 600 தொன் உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும். இதன் சராசரி வேகம் மணிக்கு 25 கடல் மைல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பலுக்காக இந்த கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/248655

  3. லொத்தர் சபைக்கு வரலாற்றில் முதல் தடவையாக 3 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்ய முடிந்ததாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன கூறியுள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் வெற்றியாளர்களுக்கான நிதி காசோலை வழங்கும் பிரதான வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கோவிட் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சவால்களால் நாட்டின் தனியார் மற்றும் அரச துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. எனினும் அதனை அச்சமின்றி எதிர்கொண்டு சிறந்த நிர்வாகத்துடன் தேசிய லொத்தர் சபை தனது இலக்குகளை எட்டியுள்ளது. தேசிய லொத்தர் சபை புதுப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் DLB என புதிய வர்த்தக…

  4. இலங்கையில் நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலப்பதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதில், 300.30 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் சேகரிக்கப்படுவதாகவும், 632.12 பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலில் விடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு சூழலில் வீசப்படுகின்ற 419.47 மெற்றிக் டன் பிளாஸ்ரிக், எரிக்கப்படும் நிலையில், 38.48 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. மீள்சுழற்சி செய்யும் பிரதான நிறுவனங்களுக்கு உரிய முறையில் குறித்த கழிவுப் பொருட்கள் சென்றடையவில்லை என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, மீள்சுழற்சி செய்…

  5. மாகாண சபைகளின் அரசியல் அதிகார சபைக்கு சொந்தமான 207 சொகுசு வாகனங்களை தற்போது யார் பயன்படுத்துகிறார்கள்? என்பது தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பில் கணக்காய்வு கோருவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ், உரிய சொகுசு வாகனங்களை யார் பயன்படுத்துகிறார்கள், என்னென்ன கடமைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது தொடர்பான தகவல்களைக் கோருவதற்கு எம்பிக்கள் குழு தயாராகி வருகிறது. குறிப்பாக குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வாகனங்கள் இல்லாத சூழ்நிலையில் இந்த விடயம் பாரதூரமானது என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அரசாங…

  6. Published By: NANTHINI 09 APR, 2023 | 04:34 PM ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய…

  7. Published By: VISHNU 09 APR, 2023 | 05:35 PM வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த பகுதியில் தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வருவதுடன், குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அண்மித்ததா…

  8. சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு முல்லைத்தீவு கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினர் இந்த படகுப் போட்டியை இன்று(08) ஏற்பாடு செய்திருந்தனர். நந்திக்கடலில் நடைபெற்ற படகுப் போட்டியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.சிவமோகன் ஆரம்பித்து வைத்தார். பந்தய தூரம் ஒரு கிலோ மீற்றர் நிர்ணயிக்கப்பட்டதுடன் நன்னீர் மீன்பிடி சங்கங்களை சேர்ந்த 10 படகுப் போட்டியாளர்கள் பங்குபற்றினர். முத்தையன் கட்டு நன்னீர் மீன்பிடி சங்கம் முதலிரண்டு இடங்களையும் வற்றாப்பளை மீன்பிடி சங்கம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. https://thinakkural.lk/article/248575

  9. Published By: T. SARANYA 08 APR, 2023 | 04:09 PM (எம்.மனோசித்ரா) சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்தல் மற்றும் பல்வேறு துறைசார் பரிமாற்றங்கள் குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் - சிங்கள சித்தரைப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் நேற்று சனிக்கிழமை முன்னாள் பிரதமரை சீனத் தூதுவர் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத செயற்பாடுகள், போருக்குப் பின்னரான …

  10. Published By: RAJEEBAN 08 APR, 2023 | 02:19 PM ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்பது குறித்தும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பில் ரணில்விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்க தான் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனவும் அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார். நாடு சில மாதங்களிற்கு முன்னர் ஒப்பிடுகையில் சிறந்த நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி பொருளாதாரம் ஸ்திரநிலைக்கு திரும்பியதும் நான் அரசியல் கட்சிகளு…

  11. சாவகச்சேரியில் லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம் - யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் Published By: DIGITAL DESK 5 சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார் நேற்றிரவு (07 ) யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்து செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த …

  12. கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !! கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் …

  13. வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்!! வவுனியாவில் சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக வவுனியாவில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வவுனியாவில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பதிய மாக்ஸிஸ லெனினிச கட்சி என்பனவும் கலந்துகொள்ளவுள்ளது. தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், காணி ஆக்கிரமிப்புக்கள், தமிழர் பாரம்பரியங்களை அழிக்கும் செயற்பாடுகள் உட்பட அரசியல் தீர்வு விடயங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான க…

  14. Published By: NANTHINI 08 APR, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை கடற்பரப்பில் கடந்த 2019 ஏப்ரலில் 196.98 கிலோ ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 சந்தேக நபர்கள் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை கடந்த புதன்கிழமை (5)‍ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழு, சந்தேக நபர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டு தீர்ப்பை வெளியிட்டது. அத்தோடு இது குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எ…

  15. Published By: T. SARANYA 07 APR, 2023 | 04:10 PM இந்தியாவின் கடன் வசதியினூடாக சர்ச்சைக்குரிய மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்தமை தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவனாது (SC/FR 65/2023) நேற்றைய தினம் (06) வழக்கினை தொடர்வதற்கான அனுமதியுடன் (Leave-to-proceed) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் கடன் வசதியின் கீழ் Savorite Pharmaceuticals எனும் வரையறுத்த தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவ…

  16. மேற்கூரைகளுக்கு சூரியக் கலங்களை பொருத்தும் திட்டத்திற்கான அரச கட்டிடங்கள் மற்றும் மத வழிப்பாட்டுத் தளங்களை அடையாளம் காணும் பணி ஏப்ரல் 15 ஆம் திகதி நிறைவடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் . தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிநுட்பக் கல்லூரிகள், பாடசாலைகள், ஆயுதப்படை கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள், வழிப்பாட்டு தளங்கள் மற்றும் ஏனைய அரச கட்டிடங்கள் என்பன தொடர்பில் 90 வீதமான கணக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் …

  17. Published By: T. SARANYA 07 APR, 2023 | 03:51 PM யாழ்ப்பாண மக்கள் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றது என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிநடத்தலில் அப்பல்கலைக்கழக இளநிலை இறுதியாண்டு மாணவர் ஒருவர் நடாத்திய ஆய்விலையே இந்த விடயம் வெளிவந்துள்ளது. 2019 ஆண்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வாய்ப்புற்று நோயாளிகள் மற்றும் வாய்ப்புற்று நோய் மரணங்கள் என்பன யாழ்ப்பாணத்தில் அதிகம் பதிவாகியுள்ளன. அந்நிலையில் மாணவர் ஒருவர் அது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்தார். அதன் ஒரு கட்டமாக வெற்றிலை போடும் போது , அதனுட…

  18. இலங்கைக்கு புதிய இடம் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் உறுப்பினர்கள் 2024 முதல் 2028 வரையிலான நான்கு வருட காலத்திற்கு இலங்கையை ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்களின் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை நீக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, இலங்கை இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பெல்ஜியம், பொலிவியா, கொலம்பியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இவ்வருடம் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய நா…

    • 1 reply
    • 596 views
  19. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஐ.நா மனித உரிமை சாசனங்களுக்கமைய இயற்றப்படவில்லை – அம்பிகா சற்குணநாதன் April 7, 2023 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களுக்கோ சாசனங்களுக்கோ அமைய இயற்றப்படவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது…

  20. தமிழர் பகுதியில் பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்! Vhg ஏப்ரல் 07, 2023 இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் க…

  21. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 'சிறைச்சாலை நூலகம்' ; நாளை அங்குரார்ப்பணம்! Published By: Nanthini 07 Apr, 2023 | 12:08 PM “ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கமைய யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் நாளை (8) சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனது கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கப்பால், தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக…

  22. நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று, தமிழில் பெயர் வைக்கும் தம்பதியினருக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தினை சைவ மகா சபை பங்குனி உத்தர நாளான நேற்றைய தினம் (05) புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. அந்நிலையில் சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான சாந்தை பண்டதரிப்பை சார்ந்த கடம்பன் அசுவினி தம்பதியினர் ஐந்தாவது குழந்தையான சிவாத்மிகலனை பெற்றெடுத்தமைக்காக ஊக்க தொகை மற்றும் சத்துமா என்பன சைவ மகா சபை தலைவர் சண்முகத்தினத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 5 வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கொரோனா பொருளாதார நெருக்கடியால் சிறிது காலம் தடைப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நல்லுள்ளங்கள் சைவ அறப்பணி நிதிய வங்கி கணக்கு ஊடா…

  23. - யாழ் அஸீம் - தலை­முறை தலை­மு­றை­யாக வடக்கு மண்ணில் வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் மக்­க­ளி­டையே வலு­வான பிணைப்­புக்­களும், உற­வு­களும் தொடர்ந்து வந்­தி­ருக்­கின்­றன. மத ரீதி­யாக மட்டும் இவர்கள் வேறு­பட்­டாலும் வேற்­று­மைக்குள் ஒற்­று­மையை காட்டும் பல அம்­சங்கள் இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் காணப்­ப­டு­கின்­றன. திரு­ம­ணங்­களில் தாலி கட்­டுதல், மாலை­யி­டுதல், திரு­மணப் பந்­தி­முறை, சீதனம் போன்­றன யாழ் முஸ்லிம் மக்­க­ளிடம் காணப்­பட்ட, தமிழ் மக்­க­ளின் கலாச்­சாரப் பண்­பு­க­ளாகும். இத்­த­கைய நெருக்­க­மான உற­வு­களின் கார­ண­மா­கவே, தாயக மண்­ணி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட வேளை­யிலும், தமிழ் மக்கள் மீது எவ்­வித கசப்­பு­ணர்­வையும், பகை­மை­யையும் முஸ்­லிம்கள் கொண்­ட…

    • 3 replies
    • 834 views
  24. கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடந்த ஆண்டு இதேநேரம் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. 10 முதல் 12 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார தடையை எதிர்நோக்கி கடுமையான சிரமத்தை மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் சந்தித்திருந்தனர். எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பல கிலோமீற்றர் தொலைவிற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் காத்திருந்தார்கள். சுதந்திர இலங்கை என்றுமே எதிர்நோக்காத பாரிய பொருளாதார நெருக்கடியை, கடந்த ஆண்டு இதேகாலப் பகுதியில் நாடு…

  25. Published By: RAJEEBAN 06 APR, 2023 | 05:55 PM இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், கோவில் ஆகியவற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது. 1948ஆம் ஆண்டின் பின்னர் 1800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது. இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.