ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
- யாழ் அஸீம் - தலைமுறை தலைமுறையாக வடக்கு மண்ணில் வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் மக்களிடையே வலுவான பிணைப்புக்களும், உறவுகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. மத ரீதியாக மட்டும் இவர்கள் வேறுபட்டாலும் வேற்றுமைக்குள் ஒற்றுமையை காட்டும் பல அம்சங்கள் இரு தரப்பினரிடையேயும் காணப்படுகின்றன. திருமணங்களில் தாலி கட்டுதல், மாலையிடுதல், திருமணப் பந்திமுறை, சீதனம் போன்றன யாழ் முஸ்லிம் மக்களிடம் காணப்பட்ட, தமிழ் மக்களின் கலாச்சாரப் பண்புகளாகும். இத்தகைய நெருக்கமான உறவுகளின் காரணமாகவே, தாயக மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட வேளையிலும், தமிழ் மக்கள் மீது எவ்வித கசப்புணர்வையும், பகைமையையும் முஸ்லிம்கள் கொண்ட…
-
- 3 replies
- 833 views
-
-
Published By: T. SARANYA 08 APR, 2023 | 04:09 PM (எம்.மனோசித்ரா) சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்தல் மற்றும் பல்வேறு துறைசார் பரிமாற்றங்கள் குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் - சிங்கள சித்தரைப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் நேற்று சனிக்கிழமை முன்னாள் பிரதமரை சீனத் தூதுவர் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத செயற்பாடுகள், போருக்குப் பின்னரான …
-
- 2 replies
- 260 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 'சிறைச்சாலை நூலகம்' ; நாளை அங்குரார்ப்பணம்! Published By: Nanthini 07 Apr, 2023 | 12:08 PM “ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கமைய யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் நாளை (8) சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனது கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கப்பால், தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக…
-
- 2 replies
- 609 views
- 1 follower
-
-
சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு முல்லைத்தீவு கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினர் இந்த படகுப் போட்டியை இன்று(08) ஏற்பாடு செய்திருந்தனர். நந்திக்கடலில் நடைபெற்ற படகுப் போட்டியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.சிவமோகன் ஆரம்பித்து வைத்தார். பந்தய தூரம் ஒரு கிலோ மீற்றர் நிர்ணயிக்கப்பட்டதுடன் நன்னீர் மீன்பிடி சங்கங்களை சேர்ந்த 10 படகுப் போட்டியாளர்கள் பங்குபற்றினர். முத்தையன் கட்டு நன்னீர் மீன்பிடி சங்கம் முதலிரண்டு இடங்களையும் வற்றாப்பளை மீன்பிடி சங்கம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. https://thinakkural.lk/article/248575
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 02 APR, 2023 | 03:50 PM (எம்.நியூட்டன்) யாழ். இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் இணைந்து முற்றுகையிட்டதில் 13 சிறுவர்கள் இன்று (2) முற்பகல் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபையொன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முற்றுகையிடப்பட்டு, 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுவர்கள் இல்லத்த…
-
- 5 replies
- 940 views
- 1 follower
-
-
சர்வ தேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு! By kugen ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள க. பத்மநாபாவின் சிலையினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன்; திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந. சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு: இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானிய ஏகாதிப…
-
- 8 replies
- 1.2k views
-
-
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்! Vhg ஏப்ரல் 01, 2023 வவுனியா - தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் உடன்பிறந்த சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு ச…
-
- 26 replies
- 2.1k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 08 APR, 2023 | 02:19 PM ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்பது குறித்தும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பில் ரணில்விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்க தான் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனவும் அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார். நாடு சில மாதங்களிற்கு முன்னர் ஒப்பிடுகையில் சிறந்த நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி பொருளாதாரம் ஸ்திரநிலைக்கு திரும்பியதும் நான் அரசியல் கட்சிகளு…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்!! வவுனியாவில் சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக வவுனியாவில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வவுனியாவில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பதிய மாக்ஸிஸ லெனினிச கட்சி என்பனவும் கலந்துகொள்ளவுள்ளது. தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், காணி ஆக்கிரமிப்புக்கள், தமிழர் பாரம்பரியங்களை அழிக்கும் செயற்பாடுகள் உட்பட அரசியல் தீர்வு விடயங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான க…
-
- 0 replies
- 582 views
-
-
தமிழர் பகுதியில் பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்! Vhg ஏப்ரல் 07, 2023 இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் க…
-
- 11 replies
- 1.2k views
- 2 followers
-
-
நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று, தமிழில் பெயர் வைக்கும் தம்பதியினருக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தினை சைவ மகா சபை பங்குனி உத்தர நாளான நேற்றைய தினம் (05) புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. அந்நிலையில் சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான சாந்தை பண்டதரிப்பை சார்ந்த கடம்பன் அசுவினி தம்பதியினர் ஐந்தாவது குழந்தையான சிவாத்மிகலனை பெற்றெடுத்தமைக்காக ஊக்க தொகை மற்றும் சத்துமா என்பன சைவ மகா சபை தலைவர் சண்முகத்தினத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 5 வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கொரோனா பொருளாதார நெருக்கடியால் சிறிது காலம் தடைப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நல்லுள்ளங்கள் சைவ அறப்பணி நிதிய வங்கி கணக்கு ஊடா…
-
- 5 replies
- 876 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 07 APR, 2023 | 04:10 PM இந்தியாவின் கடன் வசதியினூடாக சர்ச்சைக்குரிய மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்தமை தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவனாது (SC/FR 65/2023) நேற்றைய தினம் (06) வழக்கினை தொடர்வதற்கான அனுமதியுடன் (Leave-to-proceed) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் கடன் வசதியின் கீழ் Savorite Pharmaceuticals எனும் வரையறுத்த தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவ…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
மேற்கூரைகளுக்கு சூரியக் கலங்களை பொருத்தும் திட்டத்திற்கான அரச கட்டிடங்கள் மற்றும் மத வழிப்பாட்டுத் தளங்களை அடையாளம் காணும் பணி ஏப்ரல் 15 ஆம் திகதி நிறைவடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் . தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிநுட்பக் கல்லூரிகள், பாடசாலைகள், ஆயுதப்படை கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள், வழிப்பாட்டு தளங்கள் மற்றும் ஏனைய அரச கட்டிடங்கள் என்பன தொடர்பில் 90 வீதமான கணக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் …
-
- 1 reply
- 620 views
- 1 follower
-
-
இலங்கைக்கு புதிய இடம் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் உறுப்பினர்கள் 2024 முதல் 2028 வரையிலான நான்கு வருட காலத்திற்கு இலங்கையை ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்களின் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை நீக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, இலங்கை இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பெல்ஜியம், பொலிவியா, கொலம்பியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இவ்வருடம் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய நா…
-
- 1 reply
- 595 views
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஐ.நா மனித உரிமை சாசனங்களுக்கமைய இயற்றப்படவில்லை – அம்பிகா சற்குணநாதன் April 7, 2023 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களுக்கோ சாசனங்களுக்கோ அமைய இயற்றப்படவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது…
-
- 0 replies
- 417 views
-
-
உலகில் மிக அழகான 23 நாடுகளில் இலங்கை ! 2023 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 உலக நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23 நாடுகளுக்குப் பெயரிட்டுள்ளது. விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம், கண்டி, யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலா தலங்களாகவும், இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இர…
-
- 4 replies
- 913 views
-
-
சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கும் எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்க வேண்டும் – நல்லை ஆதின முதல்வர் சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல் வாதிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என நல்லை ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாது விடின் வடக்கு விஜயத்தின் போது சைவதலைவர்கள் சந்திப்புக்களை தவிப்பார்கள் மேலும் இந்தியா ஆதி சமயமான சைவத்தையும், சைவ ஆலயங்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என வைவ சமய அமைப்புக்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள் எனத் தெரிவித்து நல்லை ஆதின முதல்வர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் த…
-
- 3 replies
- 310 views
-
-
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கும் – ஜனாதிபதி தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித…
-
- 9 replies
- 574 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடந்த ஆண்டு இதேநேரம் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. 10 முதல் 12 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார தடையை எதிர்நோக்கி கடுமையான சிரமத்தை மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் சந்தித்திருந்தனர். எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பல கிலோமீற்றர் தொலைவிற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் காத்திருந்தார்கள். சுதந்திர இலங்கை என்றுமே எதிர்நோக்காத பாரிய பொருளாதார நெருக்கடியை, கடந்த ஆண்டு இதேகாலப் பகுதியில் நாடு…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 06 APR, 2023 | 05:55 PM இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், கோவில் ஆகியவற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது. 1948ஆம் ஆண்டின் பின்னர் 1800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது. இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்திற்கு இழப்பீடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் நீதி மையம் வலியுறுத்துகிறது. இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 2021 மே மாதம் நீர்கொழும்புக்கு அப்பால் ஆழமற்ற கடலில் தீப்பற்றி அழிவுற்றது. இதனால் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு கோருவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் நீதி மையம் குற்ற…
-
- 1 reply
- 440 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 APR, 2023 | 05:10 PM பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு - மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வருடங்களின் பின்னர் காணி உரிமையாளர்கள் சிலர் கடுமையான பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். மணற்கேணிப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரையில் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை. இந் நிலையில் இவ்வாறு மணற்கேணிப் பகுதியில் காணியுள்ள, காணிஉரிமையாளர்கள் ஐவர் 06.04.2023இன்று முல்லைத்தீவு மாவட்செயலகத்திற்கு வருகைதந்து, தமது காணி…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது Published By: T. SARANYA 23 MAR, 2023 | 12:12 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 12 மீனவர்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்படவில்லை. கொண்டு வரப்பட்டதும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவ்வாறு 1802 மற்றும் 65 ஆகிய இருபடகுகளே பிடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/1512…
-
- 1 reply
- 404 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 APR, 2023 | 11:42 AM (நா.தனுஜா) ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமுலாக்கப்பங்காளியான 'வேல்ட் விஷன்' உடன் இணைந்து பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மாதகாலத்துக்கான 2 மில்லியன் யூரோ நிதியுதவியின்கீழ் 'கிரேஸ்' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் 'கீழ்மட்ட மோதல் தடுப்பு' செயற்திட்டம் வத்தளை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கற்பிட்டி, நவகத்தேகம, முந்தல் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொ…
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
யாழில் வீடு உடைத்து திருடிய மூவர் கைது யாழில் வீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களைக் களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். யாழ். சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் இணுவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த மூவரை கைது செய்துள்ளதோடு களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர். கைதானவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை…
-
- 3 replies
- 448 views
- 1 follower
-