ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
ஐவர் காயம்! - டயலொக் குறுந்தொலைநகல் செய்தி
-
- 6 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பில் பெண் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சுதந்திர ஊடகவியலாளரான ராதிகா தேவகுமாரி அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ராதிகா தேவகுமாரி அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினர் விசாரனைகளை தொடங்கியுள்ளனர். புதினம்
-
- 0 replies
- 693 views
-
-
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 819 views
-
-
இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தத்தை இராணுவ வெற்றிகளின் மூலம் முடிவுக் கொண்டுவர முடியாதென ரொய்டர்ஸ் செய்தி சேவையின் ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இலங்கை அரச படையினர் மிகவும் வேகமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்னேறி வருவதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், மரபு ரீதியான இராணுவ வெற்றிகளின் மூலம் ஒருபோதும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு வழிகளில் அரச படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், வான் மற்றும் தரை மார்க்கமாக படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவத…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் இரண்டு தரப்பும் அருகருகே நெருக்கமாக நின்று மோதவிருப்பதாக இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக மோதல்களில் ஈடுபட்டுவந்த விடுதலைப் புலிகள், பாரிய சக்திவாய்ந்த இராணுவத்தினருடன் அண்மையிலிருந்து மோதி, இழப்புக்களை ஏற்படுத்த விரும்பாமல் சற்றுப் பின்வாங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டும் அவர், அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் முன்நகர்வுகளை தாமதப்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் தமது பலம்வாய்ந்த போராளி குழுக்களை இரண்…
-
- 4 replies
- 3.1k views
-
-
போர் முனையில் சிறிதளவு காயமடைந்த படைச் சிப்பாய்களைக்; கொண்டு வன்னியை வலுப்படுத்தும் படையணி என்ற இந்தப் படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தப் படையணியினர் நேரடியாகச் சண்டையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். வன்னிக் களமுனையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைப்பதற்கு அதிகளவிலான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்தை விட்டு விலகியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவி;ல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே களமுனையில் காயமடைந்து நேரடியாகப் போரில் ஈடுபட முடியாத படையினரைக் கொண்டு இந்தப் பதிய படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கைப்ப்றப்பட்ட பகுதிகளில் இவர்கள் நடவடிக்…
-
- 4 replies
- 2k views
-
-
மணலாறில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை தாக்குதலில் வயலில் சூடடித்துக்கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இராணுவ வழிமுறைகளின் மீது தாம் நம்பிக்கை கொள்ளவில்லை எனத்தெரிவித்திருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜேர்கன் வீர்த், அரசியல் வழிமுறைகளூடாகவும், மனித உரிமைகளைப் பேணுவதன் மூலமுமே இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற 'சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சமநிலையைப் பேணுதல்' எனும் தலைப்பிலான இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டே அரசியல் சிந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, யுத்தம் இன்று பிரபல்யமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,…
-
- 0 replies
- 763 views
-
-
யாழ்ப்பாணத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் இம்முறை உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பரீட்சை வினாதாள் திருத்தும் மையம் ஒன்றை ஆரம்பிக்குமாறு எழுந்த கோரிக்கைகளுக்கு கல்வியமைச்சர் அனுமதி வழங்கியதை அடுத்து யாழ்ப்பாணத்தில் வினாத்தாள் திருத்தும் மையம் ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணிகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 648 views
-
-
வன்னி மற்றும் யாழ். களமுனைகளில் சிறிலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 758 views
-
-
நான் வீரத்தையும் மானத்தையும் மதிப்பவன் அதனால்தான் பிரபாகரனை நேசிக்கிறேன் * வைகோ தெரிவிப்பு தூத்துக்குடி: ""நான் வீரத்தையும், மானத்தையும் மதிப்பவன் என்பதால் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேசிக்கிறேன்' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கலிபட்டி கல்குமி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் வைகோ பேசியதாவது; தென்மாவட்டங்களில் வீழ்த்த முடியாத கூட்டணியாக அ.தி.மு.க. ம.தி.மு.க. கூட்டணி விளங்குகிறது. நான் வீரத்தையும், மானத்தையும் மதிப்பவன். எனக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், வாஞ்சிநாதன் ப…
-
- 3 replies
- 4.3k views
-
-
இரவு முழுவதும் "பிரித் ஓதி தமது எதிர்ப்பை காட்ட பிக்குகள் முயற்சி. உயர் நீதிமண்றத்தின் தடை உததர்வையும் மீறி , இரவுமுழுவதும் பிரித் ஓதி தமது எதிர்பை காட்ட புத்த பிக்குகள் முனைவதாக அறியப்படுகிறது. உயர் நீதிமண்றம் விதித்திருக்கும் நேரக்கட்டுப்பாட்டையும் மீறி, இரவுவெளைகளில் ஒலிபெருக்கி மூலம் பிரித் ஓதி நீதித்துறைக்கு எதிராக தமது எதிர்பை வெளிபடுத்த போவதாக பிக்குகள் அறிவித்துள்ளனர். இன்று இலங்கையில் யாரும் தூங்க முடியாது என மக்கள் இந்த தேரர்களை ஏசிக்கொண்டு இருப்பதாக தகவல் http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 15 replies
- 4k views
-
-
அந்த இரவு, விடியவே இல்லை! கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி! சகோதரர் பாக்கியநாதனின் இரண்டு வயது மகளை வேலூர் சிறைக்கு அழைத்து வரச் சொல்லிஇருந்தார். குட்டி மருமகளின் மழலைக் குழைவை அதிகமாகவே ரசித்தார். ''அரித்ராவைத்தான் (நளினியின் மகள்) பார்த்து ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, சீக்கிரமே அவகூடவே இருக்கிற மாதிரி தீர்ப்பு வந்துரும்'' என்றவரின் கண்களில் ஒளி! ஆனால், அந…
-
- 2 replies
- 2.3k views
-
-
இலங்கையின் உள்விவகாரத்தில் சில வெளிநாடுகள் தலையிட முனைகின்றன. அதற்கு ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். காலியில் வெள்ளிக்கிழமை தென் மாகாண சபையின் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்துப் பேசுகையிலேயே பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் விக்கிரமநாயக்கா கூறியதாவது; நாம் எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரத்திலும் தலையிட்டது கிடையாது. எங்கள் பிரச்சினையை நாம் தீர்த்துக் கொள்வோம். எமது நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடமுனையும் நாடுகளுக்குஇ "உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எமது பிரச்சினையை நாம் பார்த்துக் கொள்வோம்' எனக் கூறவிரும்புவதாகவும் தெரிவி…
-
- 1 reply
- 771 views
-
-
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு வன்னியை நோக்கிய பார்வை அதிகரித்துள்ளது.( வாராந்த ஆய்வு) லங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் …
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - புலிகள் நடத்திய விமான தாக்குதலில் எந்தவிதமான இராணுவ முக்கியத்துவமோ பாதிப்போ இல்லை. அவர்களை ஆதரிக்கும் சமூகத்தை ஆசுவாசப்படுத்துவதற்காகவே புலிகள் திருகோணமலை துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திவயின சிங்கள பத்திரிகையின் வார வெளியீட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் விமானப்படையினர் இதுவரை ஆறு தடவைகள் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். எமது விமானப் படையினரோ இக்காலக் கட்டத்தில் ஆறாயிரம் தடவைகள் விமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்களின் விமானங்களில் முப்பது கிலோ எடை உள்ள குண்டை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எமது விமானங்க…
-
- 4 replies
- 1.5k views
-
-
-
வன்னிக்கள நிலவரம் மேலும் மோசமாகப்போவதாக லக்பிம ஆங்கில செய்திதாள் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நாளொன்றுக்கு 10 தமிழீழ விடுதலைப்புலிகளை கொல்வதாக கூறுகின்ற போதும்இ கடந்தவாரம் வன்னியில் படையினர் மீது நடத்திய தாக்குதல்; அவர்கள் இன்னும் பலமாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தியுள்ளது என லக்பிம குறிப்பிட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று 57 -1 வது படைப்பிரிவைச்சேர்ந்த ; நான்காவது சிங்கப் படையணி வன்னேரிக்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளைத் தாக்கியது. சிறியரக ஆயுதங்களைக் கொண்டே இந்ததாக்குதல் நடத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 600 மீற்றர் பிரதேசத்துக்குள் படையினர் முன்னேறினர். லெப்டினன்ட்கள் மங்கல ராஜித மற்றும் சமந்த திராணகம ஆகியோர் படையினரின…
-
- 5 replies
- 3.2k views
-
-
இந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடலாம் எனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அதனை இலக்காகக் கொண்டே இராணுவத் திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "இராணுவத்தளபதி களநிலைமைகளைச் சரியாக ஆராய்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கிளிநொச்சியை அடைந்துவிடலாம் என ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறார். இந்தக் கால வரையறையை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது திட்டங்களை வகுத்துள்ளோம்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போர் மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் அவர், மோதல…
-
- 7 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி நிதி உதவிகளை வழங்க உள்ளது. இதற்கென சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு மட்டக்களப்பில் முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டியைத் நடாத்துவது குறித்தான சாத்தியங்களை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் கண்டறிந்ததாகத் தெ…
-
- 3 replies
- 968 views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் யுத்தத்தில் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூரும் வகையில் விசேட ஞாபகார்த்தத் தூபியொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ஞாபகார்த்தத் தூபியை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் நகரின் பாதுகாப்பு நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது இராணுவத் தளபதி இந்த ஞாபகார்த்தத் தூபியைத் திறந்து வைத்துள்ளார். இதேவேளை, யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கு விளக்கம் அளித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 902 views
-
-
சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள நாவுல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் 12 தமிழ் இளைஞர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 657 views
-
-
வன்னிக்குள் ஆழ ஊடுருவியுள்ள இராணுவம் கடுமையான எதிர்ப்புக்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நாச்சிக்குடாவுக்கு தென்புறமாக நிலைகொண்டுள்ள 58 ஆவது படையணியும், அதற்கு சமாந்தரமாக நகரும் 57 ஆவது படையணியும் அக்கராயன் மற்றும் வன்னே?க்குளங்களுக்கு இடையில் உள்ள 8 ஆவது, 9 ஆவது மற்றும் 10 ஆவது மைல்கல் பகுதிகளை நோக்கி முன்நகர்வை மேற்கொண்ட போது கடுமையான சமர் வெடித்திருந்தது. திங்கட்கிழமை அதிகாலை நாச்சிக்குடாவுக்கு தென்புறம் மற்றும் துணுக்காய் பகுதிகளில் இருந்து வடகிழக்காக வன்னே?க்குளம் நோக்கி 58 ஆவது படையணியும், அதற்கு உதவியாக அக்கராயனை நோக்கி 57 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட்டும் நகர்வை மேற்கொண்டிருந்தன. நகர்வை மேற்கொண்ட படையினர் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்…
-
- 1 reply
- 999 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் உள்ள கெளதாரிமுனை பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை 4.15 மணியளவில் விமானப்படையினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த முகாம் அழிக்கப்பட்டுள்ளதாக விமான்பபடை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். 'கடல்' என்று பெயரிடப்பட்டுள்ள கடற்புலிகளின் இந்தத் தளத்தின்மீது - விமானப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலின் பின்னர் இன்று காலை அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது அவதானிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilsey…
-
- 1 reply
- 1.3k views
-
-
சட்டவிரோத ஆயுத முகவர்களின் மூலம் அதி நவீனரக ஆயுதங்களை புலிகள் சீனாவிலிருந்து அண்மையில் கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, இறுதிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்ரேய்னிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக ஆயுதங்களை விநியோகிக்குமாறு புலிகளின் தலைமைத்துவம் உக்ரேய்னில் உள்ள ஆயுத முகவர் நிறுவனமொன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரேய்ன் சட்டவிரோத ஆயுத சந்தையில் மிகவும் குறைந்த விலையில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரியவருகிறது. ரி-56 துப்பாக்கியொன்று 4000 முதல் 5000 ரூபாவிற்…
-
- 10 replies
- 2.5k views
-