Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கும் – ஜனாதிபதி தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித…

  2. கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடந்த ஆண்டு இதேநேரம் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. 10 முதல் 12 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார தடையை எதிர்நோக்கி கடுமையான சிரமத்தை மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் சந்தித்திருந்தனர். எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பல கிலோமீற்றர் தொலைவிற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் காத்திருந்தார்கள். சுதந்திர இலங்கை என்றுமே எதிர்நோக்காத பாரிய பொருளாதார நெருக்கடியை, கடந்த ஆண்டு இதேகாலப் பகுதியில் நாடு…

  3. Published By: RAJEEBAN 06 APR, 2023 | 05:55 PM இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், கோவில் ஆகியவற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது. 1948ஆம் ஆண்டின் பின்னர் 1800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது. இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக…

  4. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்திற்கு இழப்பீடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் நீதி மையம் வலியுறுத்துகிறது. இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 2021 மே மாதம் நீர்கொழும்புக்கு அப்பால் ஆழமற்ற கடலில் தீப்பற்றி அழிவுற்றது. இதனால் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு கோருவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் நீதி மையம் குற்ற…

  5. Published By: VISHNU 06 APR, 2023 | 05:10 PM பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு - மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வருடங்களின் பின்னர் காணி உரிமையாளர்கள் சிலர் கடுமையான பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். மணற்கேணிப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரையில் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை. இந் நிலையில் இவ்வாறு மணற்கேணிப் பகுதியில் காணியுள்ள, காணிஉரிமையாளர்கள் ஐவர் 06.04.2023இன்று முல்லைத்தீவு மாவட்செயலகத்திற்கு வருகைதந்து, தமது காணி…

  6. இந்திய மீனவர்கள் 12 பேர் கைது Published By: T. SARANYA 23 MAR, 2023 | 12:12 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 12 மீனவர்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்படவில்லை. கொண்டு வரப்பட்டதும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவ்வாறு 1802 மற்றும் 65 ஆகிய இருபடகுகளே பிடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/1512…

  7. Published By: VISHNU 06 APR, 2023 | 11:42 AM (நா.தனுஜா) ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமுலாக்கப்பங்காளியான 'வேல்ட் விஷன்' உடன் இணைந்து பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மாதகாலத்துக்கான 2 மில்லியன் யூரோ நிதியுதவியின்கீழ் 'கிரேஸ்' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் 'கீழ்மட்ட மோதல் தடுப்பு' செயற்திட்டம் வத்தளை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கற்பிட்டி, நவகத்தேகம, முந்தல் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொ…

  8. யாழில் வீடு உடைத்து திருடிய மூவர் கைது யாழில் வீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களைக் களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். யாழ். சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் இணுவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த மூவரை கைது செய்துள்ளதோடு களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர். கைதானவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை…

  9. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானம்! பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மார்ச் 22ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியானது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒழித்து, அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள், சட்டத்தரணிகள் சங்கம், சிவில் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வர…

  10. வெளிநாடுகளின் உதவியுடன் உரிமைகளை பெற்றுக்கொள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் Published By: Vishnu 06 Apr, 2023 | 11:03 AM அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் நாம் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து விடயங்கைள முன்னெடுப்பது தொடர்பில் ஈபிஆர்எல்எப் மத்தியகுழுவில் கலந்துரையாடப்படதாக அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றதன் பி…

  11. Published By: VISHNU 04 APR, 2023 | 03:57 PM (எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) இலங்கை தேரவாத சிங்கள பௌத்த நாடு ஆகவே பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும். இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது, தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள். பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்க…

  12. Published By: NANTHINI 05 APR, 2023 | 11:46 AM கிளிநொச்சி, பாரதிபுரம் கிராமத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பக்கற் ஒவ்வாமையால் 13 மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (4) அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு திட்டத்தின் கீழ், நிறுவனமொன்று பொதியிடப்பட்ட பால் பக்கற்றுகளை வழங்கியிருந்தனர். அந்த பாலினை அருந்திய பின்னரே மாணவர்களுக்கு வாந்தியும் வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பல வைத்தியர்கள் ஒன்றிணைந்த…

  13. Published By: T. SARANYA 05 APR, 2023 | 10:39 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கம்பஹா மாவட்டத்தில் ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிகவும் பயங்கரமானது. அதனால் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை விரைவில் கைதுசெய்து சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கம்பஹா மாவட்டத்தில் …

  14. நஷ்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நஷ்டம் அடைவதாகவும் அமைச்சர் கூறினார். நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் 1029 மில்லியன் ரூபா எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும் அ…

  15. இந்திய முட்டைகள் நாளை நாட்டை வந்தடையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றிய கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது. குறித்த முட்டை இருப்புகள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/245329

  16. Published By: RAJEEBAN 05 APR, 2023 | 02:57 PM இலங்கையின்பொருளாதாரம் 2023 இல் வீழ்ச்சியடைந்த பின்னரே மீண்டும் 2024 இல் வளர்ச்சி பாதையைநோக்கி செல்லும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 2022 இல் 7 வீதமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மூன்று வீதத்தினால் வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது. இலங்கை மீட்சிக்காக நீண்டபாதையில் பயணிக்கவேண்டும் வறியவர்களும் நலிந்தவர்களும் பாதுகாக்கப்படுவது அவசியம் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிஇயக்குநர் உட்சவ் குமார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/152188

  17. Published By: DIGITAL DESK 5 05 APR, 2023 | 03:25 PM (செய்திப்பிரிவு) இந்திய - இலங்கை கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி 8ஆம் திகதி வரை கொழும்பில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றது. இதில் முதற்கட்டமாக 3ஆம் திகதி முதல் நேற்று வரையில் துறைமுக மட்டத்திலான பயிற்சிகள் கொழும்பிலும் இன்று முதல் 8ஆம் திகதி வரையில் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடல்சார் பயிற்சிகளும் நடைபெறுகின்றன. இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். கில்தான் ( அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு கடற்படைக் கப்பல்) மற்றும் ஐ.என்.எஸ். சாவித்ரி (ரோந்துக் கப்பல்) ஆகிய கடற்படை கப்பல்களால் பிரதிநிதித்துவப்படுத்த…

  18. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு விடுமுறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/247792

  19. 14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை Published By: VISHNU 03 APR, 2023 | 03:12 PM 14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில…

  20. மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைப்பு போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணமும் குறைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மின்சாரத் தேவை 18 சதவீதம் குறைந்துள்ளது. மின் தேவை குறைவதால், மின் உற்பத்தி மற்றும் வழங்கல் செலவும் குறைகிறது. எனவே, இந்த வருடத்திற்கான மின்தேவை மின்சார சபையினால் சரியாக மதிப்பிடப்படவில்லை என…

  21. வடக்கு, கிழக்கை முடக்குவோம்! - சாணக்கியன் தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தினதும் அரசினதும் இனவாதச் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தால் தெற்கு இனவாதிகள் நுழைய முடியாதவாறு வடக்கு, கிழக்கை முடக்கியே தீருவோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரே (விதுர விக்கிரமநாயக்க) நீங்கள் ஓர் இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்புக்கு வந்த போது குசலான மலையில் வைத்து உங்களைத் தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளைச் செய்ய முடிகின்றது. இந்தத் தொல்பொருள் திணைக்…

  22. ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியிலேயே சாத்தியம்-மகிந்த தேசப்பிரிய Published By: Rajeeban 05 Apr, 2023 | 11:14 AM ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியிலேயே சாத்தியம் என தான் கருதுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்கள் குறித்த கருத்துக்களிற்கு மத்தியில்ஜனாதிபதி தேர்தல்களை அடுத்த வருட பிற்பகுதியிலேயே நடத்த முடியும் என கருதுவதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசமைப்பின் அடிப்படையில் தனது முதலாவது பதவிக்காலத்தின் நான்குவருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியால் புதிய மக்கள் ஆணையை பெறு…

  23. ”வடக்கு, கிழக்கில் நடப்பவை எனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி கூற முடியாது” - சார்ள்ஸ் நிர்மலநாதன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி தென்னகோனே முன்னெடுத்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்…

  24. மூன்று மாதங்களில் தனியாள் முற்பை வருமான வரியாக 25 பில்லியன் !! 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாள் முற்பை வருமான வரியாக 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஈட்டியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தனியாள் முற்பை வருமான வரியில் 25,577 மில்லியன் வசூலித்ததாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியனும், பெப்ரவரியில் 10,540 மில்லியனும், மார்ச் மாதத்தில் 11,931 மில்லியனும் வரியாக வசூலித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2023/1329429

  25. நாடாளுமன்ற முடிவை மீறிய சட்டக் கல்லூரி அதிபர் – நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி.க்கள் வலியுறுத்து மாணவர்களை அவரவர் தாய்மொழியில் பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு சட்டக் கல்லூரியின் அதிபரை சலுகைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான குழுவின் முன் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்மொழிந்துள்ளார். சமீபகாலமாக சட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.