ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும் இந்தியாவிற்கு தாரைவார்ப்பதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை சம்பூர் அனல் மின்னிலையம், மன்னார் கடலடிப்படுக்கை எண்ணை அகழ்வாய்வு என்பன சிறீலங்கா அரசினால் இந்திய அரசுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் மத்தியில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்ற இந்த நிலையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும், இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்க வைப்பது என்ற போர்வையில் நடைபெறும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் பல்வேற…
-
- 0 replies
- 700 views
-
-
வடபோர் முனைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக சிறிலங்காவின் இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் விரைவில் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்படவுள்ளனர் என்று இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1k views
-
-
ஆட்களின்றிச் செல்லும் உளவு விமானம் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு Wednesday, 16 July 2008 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உளவு பார்ப்பதற்காக யு.ஏ.வி. எனப்படும் ஆட்களின்றிச் செல்லக்கூடிய கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானத்துக்குப் பதிலாகவே இது கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள உளவு விமானம் வடபகுதி யுத்த முனையில் புலிகளின் நடமாட்டம் மற்றும் படையினருக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை கண…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு 7/16/2008 11:29:35 PM - இலங்கை தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வினைகாணும் விதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை. அரசின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை என்று இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மல்லோ பிரவுணிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய ராஜாங்க அமைச்சரை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் சம்பந்தன் எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தன் எம்.பி.மேலும் எடுத்துக் கூறியதாவது: பல்லின, பல்கலாசார, பல்சமய மக்க…
-
- 0 replies
- 556 views
-
-
-
- 1 reply
- 957 views
-
-
நெடுங்கேணியில் ஆழ ஊடுருவும் அணியினரால் பாலம் குண்டு வைத்து தகர்ப்பு [புதன்கிழமை, 16 யூலை 2008, 03:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் பாலம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி - ஒட்டுசுட்டானை இணைக்கும் முதன்மை வீதியில் இத்திமடுச் சந்திக்கு அருகாமையில் உள்ள முதன்மைப் பாலமே இன்று புதன்கிழமை அதிகாலை 5:10 மணியளவில் ஆழ ஊடுருவும் அணியினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியில் உள்ள சமளங்குளம் மக்கள் குடியிருப்பில் அமைந்துள்ள இப்பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளதனால் புதுக்குடியிருப்பு நோக்கி வந்த பயணிகள் பேரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான விடத்தல் தீவு பகுதியை அண்மித்த இடங்களில் இருந்து உயிரிழந்த 05 தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுடைய சடலங்களை படையினர் மீட்டு நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://puspaviji.blogspot.com/2008/07/5.html
-
- 4 replies
- 1.9k views
-
-
சார்க் மாநாட்டை முன்னிட்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு மாற்றியமைத்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் நான்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள், ஹில்டன் சுற்றுவட்டத்திலிருந்து ஜோர்ஜ் வீதி, செரமிக்ஸ் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற வீதி, துறைமுகம் வரையிலான வீதி, இன்டர் கொன்டினென்டல், கலதாரி ஹோட்டல், செலிங்கோ கட்டடம், எச்.என்.பீ. வங்கி, கடற்படை மற்றும் பொலீஸ் தலைமையக பிரதேசம், கொள்ளுப்பிட்டி முதல் பழைய பாராளுமன்ற கட்டிடம் வரையிலான காலிவீ…
-
- 0 replies
- 734 views
-
-
சார்க் நாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் எத்தகைய சிரமங்களுமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக இலங்கை ஊடகவியலாளர்கள் ஐம்பது பேருக்கு முதற்கட்டமாக பொது விசா வழங்கப்படவுள்ளதாக தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் இலங்கைக் கிளைத் தலைவர் லக்ஸ்மன் குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த பொது சார்க் விசாவினை ஊடகவியலாளர்களுக்க வழங்குவதற்காக தெரிவுமுறை கட்டமைப்பொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பான சப்மாவின் வருடாந்த மாநாடு கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுமாலை இலங்கை மன்றக் கல்லு}ரியில் நடைபெற்றது. இத…
-
- 0 replies
- 669 views
-
-
சார்க் மாநாட்டை முன்னிட்டு கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள 34 பாடசாலைகளை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கமைய கொழும்பில் 10 பாடசாலைகளும் கட்டுநாயக்க முதல் கொழும்பு வரையுள்ள 24 பாடசாலைகளும் மூடப்படவுள்ளன. இம்மாநாட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்களுக்குப் பாடசாலைகளில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இம்மாதம் 26 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மூடிவடைந்தது முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை இப்பாடசாலைகள் இப்பணிகளுக்காகப் பயன்படுத்தவுள்ளதாகவும் இலங்கை கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. நிருபர்: சிறிதரன் http://www.tamilseythi…
-
- 0 replies
- 695 views
-
-
ஜனநாயகம் மற்றும் மனித உரிமையைப் பேணுவதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள வெற்றிகரமான நடவடிக்கைகளினால் சர்வதேச சமூகம் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆபிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய நாடுகள் என்பவற்றிற்கான பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் மலக் பிறவுண் தெரிவித்துள்ளாராம். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரதி அமைச்சர் பிறவுண் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளை தோல்வியுறச் செய்து ஜனநாயகத்தை அரசாங்க…
-
- 0 replies
- 696 views
-
-
வீரகேசரி இணையம் 7/16/2008 8:39:44 AM - மன்னார் விடத்தல் தீவு பகுதியை இராணுவத்தினர் இன்று காலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இப்பகுதியிலேயே கடற்புலிகளில் பிரதான தளம் அமைதுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 15 replies
- 3k views
-
-
சிறிலங்கா கடற்படையின் படுகொலையைத் தடுக்காத இந்திய அரசைக் கண்டித்து ஜூலை 27-இல் உண்ணாநிலைப் போராட்டம்: வைகோ [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:03 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா கடற்படையைத் தடுக்காத இந்திய மத்திய அரசாங்கத்தைக் கண்டித்து எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் நாள், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் நமது கடல் எல்லையிலேயே தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நமது கடல் எல்லையி…
-
- 2 replies
- 674 views
-
-
தமது ஆயுதக்குழுவை அரச படைகளுடன் இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல்கட்டமாக 200பேர் திருகோணமலையில்; இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும
-
- 9 replies
- 2k views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு வீரகேசரி நாளேடு 7/16/2008 6:21:34 PM - இலங்கை வந்துள்ள பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் மலொக் பிரவுண் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து பேசியுள்ளார். கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளது. சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, பிரித்தானிய அமைச்சர் சந்திப்பில் தற்போதைய நாட்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார். பிரித்தானியா ஜனநாயக நாடாகும் அங்கு வெட்டிக்கொல்லும் சம்பவங்கள், படுகொலைகள் இடம்பெறுவதில்லை. நாட்டின் தற்போதைய ந…
-
- 0 replies
- 623 views
-
-
அளவெட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். அளவெட்டி அம்பனையில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அம்பனை மேற்கைச் சேர்ந்த இ.ரவீந்திரன் (வயது 48) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். அம்பனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவர், மறுநாள் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அம்பனையில் இவர் விவசாயம் செய்து வந்தவர் என்றும் இவரது கொலைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெர…
-
- 0 replies
- 594 views
-
-
மட்டக்களப்பு மனிதப் புதைகுழி: அனைத்துலக விசாரணையை கோருகிறது வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் இன்று புதன்கிழமை சான்றுகளுடன் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றுக்கு தீர்வு எதுவ…
-
- 0 replies
- 627 views
-
-
மகிந்த ராஜபக்சவின் இராணுவ முனைப்புகள் போராளிகளால் வெற்றிகொள்ளப்படும் - இளந்திரையன் புதன், 16 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் இந்தியாவில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் சமாதான முனைப்புகள் குறித்து தெரிவித்த கருத்துத் தொடர்பாக, விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனிடம் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்…
-
- 3 replies
- 977 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப். சீலனின் 25 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மிகுந்த எழுச்சியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
வவுனியா, மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 630 views
-
-
மட்டக்களப்பிலிருந்து 6 கிலோ மீற்றார் தூரத்தில் உள்ள பாலமீன்மடு என்ற கடற்கரை கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடு கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த கிராம மக்கள் குடிநீர் கிணறு ஒன்றை தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்புக் கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். சுமார் ஐந்து அடி ஆழத்தில் 16 பேரது எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் குறித்த சம்பவத்தை கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் கிராம சேவகர் அரச அதிபருக்கு அறிவித்ததாகவும் அரச அதிபர் மாவட்ட நீதவான் இராம கமலனுக்…
-
- 3 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் மழையில், மரத்தின்கீழ் [ செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 22:32 GMT+02:00 ] [இன்போதமிழ்] சிறீலங்கா படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். மன்னாரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள படையினர், அந்த மாவட்டத்தின் எல்லையாகவுள்ள முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை நோக்கி தொடாச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்ந்துள்ள மக்கள் மரங்களின் கீழ் தங்கியுள்ளனர். நேற்று கடுமையான மழை பெய்த நிலையில், மழையின் மத்தியிலும் பல்வேறு சிரமங்களுடன் …
-
- 0 replies
- 638 views
-
-
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை வலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் ஜே.வி.பி.யின் உயர் மட்டக்குழு ஒன்று சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றது. ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் சுனில் ஹன்டுனட்டி தலைமையிலான இக்குழுவினர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களுடன் முக்கியமான பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தக்கு விஜயம் செய்ய ஜே.வி.பி. தூதுக்குழுவினர் மாகாணச் செயலாளர் லீ ஹன்பாய் என்பவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தி இருக்கின்றார்கள். இம்மாகாணத்தில் 25 வெவ்வேறான சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கின்ற போதிலும், அவர்கள் அனைவரும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருவதாகவும். இதற்கு சோஷலிசக் கோட்பாடுகளே க…
-
- 0 replies
- 601 views
-