Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 3 நாட்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கத் தீர்மானம் - லால்காந்த செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பணிப்புறக்கணிப்புப் போராட்டதை முன்னெடுக்கப் போவதாக அகில இலங்கை தொழிலாளர் சம்மேளத்தின் தலைவரும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லால் காந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்… தமது கோரிக்கைகளுக்கு சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், சம்பள உயர்வு கோரி கடந்த 10 ஆம் திகதி அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் நடாத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாகவ…

  2. விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கோ அல்லது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கோ அரசாங்கத்துக்கு நேரம் இல்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தமது இராணுவச் செயற்பாடுகளுக்கே கூடுதல் நேரத்தைச் செலவுசெய்வார்கள் என சுயதொழிலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப் புலிகள் நேரத்துக்கு நேரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார…

    • 0 replies
    • 1.1k views
  3. பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்! பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.றிச்சர்ட் இவன்ஸ் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது நிருபர் தெரிவித்தார். ஈழத்தமிழ் மக்களின் பொங்குதமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், இன்றைய பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வல…

    • 57 replies
    • 6.4k views
  4. இலங்கையில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் சுமார் 250 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தியாவிலிருந்து மட்டும் 125 ஊடகவியலாளர்கள் வருகை தருவார்களென்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார். உள்நாட்டிலிருந்தும் சுமார் 200 ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவுள்ள இந்த மாநாட்டில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக் கருதி பார் கோட் எனப்படும் குறியீட்டு முறையுடனான புதிய அடையாள அட்டைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது என்றும் அவர் கூறினார். இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள சகல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அடையாள அட்டைக…

    • 0 replies
    • 682 views
  5. அம்பாறை மாவட்ட சென்கமுவ - ராகுகல வீதியில் யாழ்பொதவெவுக்கு அருகாமையில் உள்ள வீதிச் சோதனைச்சாவடியில் காவலில் இருந்த விஷேட அதிரடிப்படையினரை இலக்கு வைத்து இன்று காலை கிளேமோர் குண்டுத் தாக்குதலொன்றைப் விடுதலைப்புலிகள் மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காலை 7.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விஷேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும்,குறித்த பிரதேசத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர்:சிறிதரன் http://www.tamilseythi.com/srilanka/lanka-...2008-07-15.html

    • 0 replies
    • 796 views
  6. சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பை முன்னிட்டு கொம்பனி வீதி ரயில்கடவையோரம் அமைந்திருக்கும் சட்டரீதியற்ற கட்டிடங்கள் அகற்றப்படவிருப்பதாகவும், அப்பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடங்களில் குடியிருப்புகள் வழங்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இராணுவ மற்றும் விமானப் படையினரின் தலைமையலுவலகங்கள், பொலிஸ் மற்றும் இராணுவ வைத்தியசாலைகள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள சுமார் 200 சட்டரீதியற்ற குடியிருப்புகளே இவ்வாறு அகற்றப்படவிருக்கின்றன” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள சட்டரீதியற்ற குடியிருப்புக்கள் மற்றும் வியாபார நிலையங்களில் தங்கியிருப்போரை ஜூலை 10 ஆம் திகதியிலிருந்த…

    • 0 replies
    • 735 views
  7. விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கோ அல்லது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கோ அரசாங்கத்துக்கு நேரம் இல்லையெனத் தெரிவித்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தமது இராணுவச் செயற்பாடுகளுக்கே கூடுதல் நேரத்தைச் செலவுசெய்வார்கள் என சுயதொழிலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்த போது மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் நேரத்துக்கு நேரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்ட மகிந்த, விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாரெனக் கூறி பேச்…

    • 0 replies
    • 730 views
  8. இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வே தேவை. அதுவே நிரந்தரமானது. ஆகை யால் அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடைமுறைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு இன்று இலங்கை வந்துசேரும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மனோச் பிறவுண் பிரபு இங்குள்ள உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து வலியுத்துவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. பிரிட்டனின் வெளிவிகார மற்றும் பொது நலவாய அலுவல்கள் அமைச்சர் மனோச் பிறவுண் பிரபு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு வருகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத் தலைவர்களையும் எதிர்க்கட்சி களைச் சேர்ந்த தலைவர்களையும் அமைச் சர் பிறவுண் சந்தித்துப் பேசவுள்ளளார். அப்போது போரை நிறுத்தி …

  9. சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவக்கீல்கள், உயர்நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கூடினர். தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜபக்சேவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் கொடும்பாவியை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களை வக்கீல்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கொண்டு வந்த தண்ணீரையும் தூக்கி தூர வீசினர். இதனால் பெரும் பரபரப…

    • 4 replies
    • 1.3k views
  10. அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்: படைத்தரப்பைச் சேர்ந்தவர் பலி 15.07.2008 / நிருபர் குளக்கோட்டன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மொனறாகல சாலையில் சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பொத்துவில் - மொனறாகல சாலையில் உள்ள செங்காமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:25 மணியளவில் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு படையினர் காயமடைந்தனர்…

    • 1 reply
    • 537 views
  11. சிறிலங்காவில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் 15.07.2008 / நிருபர் குளக்கோட்டன் இனப்பிரச்சினைக்கு அரசு என்ன தீர்வைக்கொண்டுள்ளது என்பது தொடர்பாக அறிந்து கொள்ளும் முகமாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு சென்றுள்ளார். இது தொடர்பில் பிரித்தானியா தூதரகம் தெரிவித்துள்ளதாவது: ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஐ.நா. ஆகியவற்றின் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் லோட் மலோச் பிறவுண், நேற்று திங்கட்கிழமை இரவு சிறிலங்கா சென்றுள்ளார். இவர் அரச அதிகாரிகள், எதிர்க்கட்சி உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சமூகத்தலைவர்கள் மற்றும் பொது நிறுவனங்களைச் சார்ந்தோரை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளா…

  12. இவ்வருடத்தில் சிறிலங்காவுக்கு அதிகளவு பண உதவிசெய்த நாடு ஈரான் சிறிலங்காவின் நிதி அமைச்சர் தெரிவிப்பு. இவ்வருட முதல் 5 மாதங்களில் சிறிலங்காவுக்கு அதிகளவு உதவிசெய்த நாடுகளும்/வங்கிகளும் 1) ஈரான் 1.5 பில்லியன் வெள்ளிகள் 2) டென்மார்க் 155.2 மில்லியன் வெள்ளிகள் 3) இந்தியா 109.2 மில்லியன் வெள்ளிகள் 4) ஆசியன் அபிவிருத்தி வங்கி 90 மில்லியன் வெள்ளிகள் 5) உலக வங்கி 43.1 மில்லியன் வெள்ளிகள் 6) யப்பான் 42.2 மில்லியன் வெள்ளிகள் Iran Becomes Sri Lanka's Top Donor COLOMBO, Iran has emerged as Sri Lanka's biggest donor this year, knocking Japan from the position of being the island's main benefactor, the finance ministry said Monday. In the five months …

  13. வவுனியாவில் இருமுனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 743 views
  14. வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும், சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 783 views
  15. வீரகேசரி நாளேடு 7/14/2008 11:19:55 PM - விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு இந்தியா இலங்கைக்கு வழங்கும் ஆதரவினை வரவேற்கிறோம். ஆனால், அதற்கு கப்பமாக இலங்கையின் வளங்களை சூறையாடுவதற்கு இடமளிக்க முடியாது. கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டின் போது இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். சார்க் மாநாட்டின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மேற்கொள்ளப்படவுள்ள சுதந்திர வர்த்தகம் மற்றும் முதலீட்டு நாடுகளுக்கிடையே மனித வளங்களை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையினால் இலங்கைக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை…

  16. களத்தில் தமிழர்களின் பலம் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக, மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டு கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார் முழங்காவில் ஜெயபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிதுள்ளதாவது: ஜெயபுரம் மண்ணில் தமிழ் மக்கள் பற்றும் உறுதியும் திடமுமாக மகிழ்ச்சியான ஒன்றுகூடலில் பொழுதினை கழித்துக்கொண்ருக்கின்றனர். தமிழ் மக்கள் திடமான நிலையில் உறுதியுடன் எழுச்சிகொள்வதையும் இவ்வாறு நிகழ்வுகளை நடத்துவதையும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. …

  17. அண்மையில் அனுராதபுர வீடொன்றினுள் கொள்ளiயிடச் சென்ற காவற்துறை அதிகாரிகளுடன் சேர்ந்த கும்பலொன்றை கைதாகியுள்ளனர். இரு காவற்துறை உள்ளிட்ட 14 சிங்களக் காடையர்கள் கைதாகியுள்ளனர். கண்டி குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்நத ஒரு அதிகாரியும், காவற்துறை அதிகாரி ஒருவரும் இக் கும்பலில் உள்ளடங்குகின்றனர். இக் கும்பலை கெக்கிராவ நீதிமன்றில் ஆஜர் செய்ததாகவும், எதிர்வரும் 16ம் திகதி விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் தப்பிச் சென்றுள்ளதாகத் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/?p=2034

  18. சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்திற்கு இப்போது சிறிலங்கா பாராளுமன்றம் ஒரு பலவீனமான விடயமாகவே இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அவர் எவ்வளவு தூரம் தன்வசம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு 'பெரும்பான்மை"யைப் பெற்றுக்கொண்டு விட்டபோதிலும் இது ஒரு நம்பிக்கையற்ற பலவீனமான பெரும்பான்மை என்பது அவருக்கு நன்கு தெரியும். ஏனெனில் அவரது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் சாம, பேத, தான, தண்டம் என்பனவற்றைப் பிரயோகித்தே இவர்களைத் தம்வசம் இழுத்துக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். மகிந்தவின் வசம் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றில் அவரது மிரட்டலுக்குப் பணிந்தோ அல்லது பணத்திற்கோ பதவிக்கோ பணிந்தோ அவருடன் இணைந்துள்ளனர். இதனால் அவர்களை தம்வசம் வைத்திருப்…

  19. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளாக தான் சிறையில் இருப்பதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நளினி தாக்கல் செய்த மனுவோடு, தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சுப்பிரமணியசுவாமி தாக்…

  20. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவுக்கு உதவிய ஓய்வுபெற்ற இந்தோனேஷிய இராணுவ ஜெனரல் ஒருவர் உட்பட நால்வருக்கு அமெரிக்க நீதி மன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற இந்தோனேஷிய இராணுவ ஜெனரல் எரிக் வெட்லோ (வயது 61) , சிங்கப்பூரைச் சேர்ந்த ஹனிஷா பீன் ஒஸ்மத், இந்தோனிஷியாவைச் சேர்ந்த ஹபி சுபன்தி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த திருநாவுக்கரசு வரதராசா ஆகியோரே இவ்வாறு சிறைத் தண்டனை பெற்றவர்களாவர். சேம் ஏவுகணைகள், தன்னியக்க சுடுகலன்கள் மற்றும் ஏனைய யுத்த தளவாடங்கள் என்பவற்றை விடுதலைப் புலிகளுக்காக கொள்முதல் செய்யவும் அவற்றை விநியோகிக்கவும் இரகசியமாகத் திட்டமிட்டு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வ…

    • 0 replies
    • 1.3k views
  21. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென இலங்கை கடற்படையினர் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடற்படை அதிகாரிகளை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்றிருந்த தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இலங்கை கடற்படையினரே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இந்தியத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும், இந்தச் சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென இலங்கை கடற்படையினர் தெரிவித்திருப்பதாகவும், சம்பவம் இடம…

    • 0 replies
    • 727 views
  22. மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வுமையக் கருத்துக்கணிப்பில் தெரிவிப்பு போரின் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று முப்பது வீதமான சிங்கள மக்களே நம்புகின்றனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் எரித்திரிய கற்கை நெறிகளுக்கான துறையினர் "சமாதான வாக்கெடுப்பு' என்ற தலைப்பின் கீழ் இலங்கையில் இயங்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்துடன் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு விபரத்தின் சில பகுதிகள் வருமாறு; தற்போது நடைபெறும் போர் பாரதூரமான பிரச்சினை என்று 37 வீதமான சிங்கள மக்களே தெரிவ…

  23. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்று டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். 'விரும்பியோ விரும்பாமலோ (றுடைடல-Nடைடல) இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்" என்பதே. ஆனால், அவர் 1948 இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார். அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்ட…

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.