Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் இன்று அதிகாலையும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக, தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. 500இற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளில் கச்சதீவுக்கு அருகில் தொழிலில் ஈடுபட்டபோது, அங்கு சென்ற கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.சில கடற்றொழிலாளர்கள் கடலில் குதித்ததுடன், மேலும் சிலர் படகில் மறைந்திருந்த காரணத்தினால், உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படாத போதிலும், 40 படகுகள் சேதமடைந்துள்ளன என தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2008-07-31.html

    • 23 replies
    • 3.1k views
  2. ஆகஸ்ட் 1ல் சுவிஸ்நாட்டில் மக்களிள் வீடுகள் தோறும் சிவப்பு நிறத்தில் வெள்ளைச் சிலுவை பொறித்த சுவிஸின் தேசியக் கொடி பட்டொளி வீசிக் காட்சி தரும். அன்றையை தினத்தில் ஒவ்வொரு கிராம, மற்றும் நகர ஆட்சிப் பகுதிகளிலும் பல இலட்சம் பிறாங்குகள் செலவில் இரவு சுமார் 9.30 அளவில் இடம் பெறும் பெரும் வாண வேடிக்கைகளை எவரும் பார்த்து மகிழலாம். இத்தகைய மகிழ்ச்சிக்கு சுவிஸ் நாடு பெருமைப்படும் காரணியாக இருப்பது அதன் இணைப்பாட்சி முறையிலான கன்ரோன்கள் அடிப்படையில் அமைந்த பல்லின மொழி ,மத ,பிரதேச, மக்கள், தமது வேறுபாடுகளின் மத்தியில் ஒன்றிணைந்து ஆட்சி நடத்தும் ,சமஷ்டி ஆட்சி அரசமைப்பு முறையாகும். முக்கியமான சுவிஸ் அரசமைப்புச் சட்ட விதிகள் பற்றியவையே. இவற்றைப் பார்த்த பின்னரும் இலங்கையோ அல்லது இந…

  3. 1987 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம், நான்காம் திகதியன்று, அதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் காணவேண்டும் என்றும், அவரது உரையைக் கேட்க வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசத்திற்குள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஆர்வத்துடன் சுதுமலையில் கூடி நின்றார்கள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய தினம் தமிழீழத் தேசியத்தலைவர் ஆற்றிய உரை, 'சுதுமலைப் பிரகடனம்" என்று பின்னர் பெயர் பெற்றது. தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனம் நடைபெற்று, இன்று 21 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வேளையில், அன்று அவர் கூறி…

    • 0 replies
    • 1.2k views
  4. மகிந்தவின் சாக் கொண்டாட்டம் தலைக்கு 10 ஆயிரம் ரூபாய் படி 500 பேருக்கு சாக் சாப்பாடு, மது வகைகளுக்கு தனிக்கணக்கு இலங்கை மக்களின் வரிப்பணத்திலிருந்து 2880 மில்லியன் ரூபாய்கள் சாக் களியாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வெளிவிவகார அமைச்சின்வீண் விரயம் இந்நிலையில்.................. தொடர்ந்து வாசிக்க..........

    • 1 reply
    • 1.1k views
  5. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக- முழுமையாக- தோற்கடிக்கும் கட்டம் நெருங்கிவிட் போதும் கூட, அவர்களிடம் உள்ள இரகசிய வளங்கள் சிறிலங்கா அரசுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கக்கூடும் என்று அந்நாட்டின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  6. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என் காலில் மண்டியிடும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஆவேசம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டையொட்டி விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தத்துக்கு இலங்கை இராணுவம் மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அரசும் போர் நிறுத்தத்துக்குச் சம்மதிக்கப் போவதாக, "டி வி' சேனல்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. விடுதலைப் புலிகளுடனான போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயமடைந்து அனுராதபுரம் இராணுவ முகாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்…

  7. இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்ற உதவி நிறுவனங்கள் தயக்கம் [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்களினால் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு உதவி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் அக்கராயன், அம்பலப் பெருமாள்குளம், கோட்டை கட்டியகுளம், ஜெயபுரம் ஆகிய பகுதிகளில் தங்கியுள்ள மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு தமது அச்சத்தினையும் தயக்கத்தினையும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறும் இடர்காலக் கூட்டங்களில் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதினம்

    • 0 replies
    • 497 views
  8. "எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன்" [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 06:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன் என்று கடற்புலிகளின் தளபதி நரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் கதிர்வாணனின் வீரவணக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை …

    • 0 replies
    • 1.3k views
  9. இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை மட்டுமல்ல நீர்த்தாங்கிகளையும் எடுத்து வருவதில் இடர்கள் காணப்படுவதாக முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  10. இலங்கை விமானப்படையினரின் MI - 24 ரக உலங்கு வானூர்திகள் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளன என இலங்கை விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் இன்று காலை 11.30 மணியளவில் இடம் பெற்றதாக பாதுகாப்பு அமைச்சுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார். நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-07-31.html

    • 0 replies
    • 826 views
  11. அண்ணன் ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நீங்கள் நீண்ட நெடுங்காலமாக சொர்க்கத்துக்கு கடிதம் எழுதி, பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள

    • 2 replies
    • 1.3k views
  12. இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிறிய அணுமின் உற்பத்தி ஆலைகளை அமைப்பது கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக் இந்தியாவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சில நாடுகள் இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றன. சிறிய ரக அணுமின் உற்பத்தி ஆலைகளின் மூலம் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய சில நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இலங்கை???, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் அணு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை சில நாடுகள் இந்திய அணு நிறுவனத்திடம் ஏற்கனவே விடுத்துள்ளதாகத…

  13. யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி குளத்தில் சில மனித எலும்புகளும், ஆடைகளும், திறப்புக் கோர்வை ஒன்று மீட்கப்பட்டுள்ளன.இன்று காலை பொதுமக்கள் வழங்கிய தகவலால், இவை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகின்றது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. திறப்புக் கோர்வையில் கடைக்குரிய திறப்புகளும் காணப்படுவதால், இவை கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.இருப்பினும

  14. மணலாற்றுப் பகுதியில் சிறிலங்காப் வான் படையினருக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணையில் சிக்கி கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்த படையினரை அநுராதபுர மருத்துவமனைக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட இந்த உலங்கு ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிய பெல் 212 ரக உலங்கு வானூர்தி அவரச அவசரமாக அநுராதபுர வான்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறீலங்காப் படையினர் கருத்துச் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா வான்படையினரிடம் பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் இரண்டே இருந்துள்ளன. அத…

    • 5 replies
    • 2k views
  15. மன்னார் மடுத் தேவாலயத்தில் இம்முறை திருவிழா இடம்பெறவேண்டுமானால் விடுதலைப் புலிகளும், இராணுவத்தினரும் பாதுகாப்பு உத்தரவாதம் தரவேண்டும்'' இவ்வாறு மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நேற்று தன்னைச் சந்தித்த அமைச்சர்கள் மட்ட உயர் குழுவிடம் தெரிவித்திருக்கிறார். திருவிழா இடம்பெறும் பகுதியில் ஆயுதப் பிரசன்னமோ அரசியல் நோக்கங்களோ அல் லது இராணுவ நோக்கங்களோ இருக்கக் கூடாது என்றும் அவர் அமைச்சர்களிடம் எடுத்துக் கூறினார். இந்த விடயம் குறித்து மன்னார் ஆயர் நேற்றிரவு பி.பி.ஸி தமிழோசைக்குத் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வன்னி நிலப்பரப்பில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக் குதல்கள் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து பாரிய நெருக்கடிக்குள் ளாக் கப்பட்டிருக்க…

  16. களமுனைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலங்கைப் படையினர் போதை மருந்துகள் ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதாகக் களமுனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னகர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் படைச் சிப்பாய்களுக்குப் படை அதிகாரிகளால் இவை வழங்கப்படுவதாகத் தெரியவருகிறது. படைநகர்வுகளின் போது விடுதலைப் புலிகளின் கடுமையான முறியடிப்புத் தாக்குதல்களினால் படையினருக்கு நாளாந்தம் இழப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் படையினரை முன்னகர்வுச் சண்டைகளில் ஈடுபடுத்த இப் போதைமருந்து அல்லது ஊக்கமருந்துகள் படையிருக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. இதே வேளை படையினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சில பொதுமக்களும் இச்சந்தேகத்தை வெளிப்ப…

    • 7 replies
    • 1.8k views
  17. வீரகேசரி நாளேடு - இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் பலாத்காரமாக இலங்கைக் கடலில் நுழையவில்லை. பாதுகாப்பமைச்சின் அனுமதியை பெற்றுக் கொண்ட பின்னரே இந்தியக் கப்பல்கள் இலங்கை கடலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். இந்தியா ஆசிய பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே வல்லரசாக திகழ்கின்றது. எனவே அந்த நாட்டின் பிரதமருக்கு உச்சக்கட்டப் பாதுகாப்பென்பது அவசியமாகும். இந்தியப் படையினர் 2500 பேர் வருகை தந்துள்ளதாக ஐ.தே.க. வும் ஜே.வி.பி. யும் பிதற்றுகின்றன. இது குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளõர். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரி…

  18. தமிழ் ஈழ போராட்டத்திற்கு இந்தியர்களின் ஆதரவு கீழ் இனைக்கப்பட்ட செய்தியையும் அதன் கீழ் வாசகர்கள் எழுதி இருக்கும் கருத்துக்களையும் வாசியிங்கள் பெரும்பாலான இந்தியதழிழர்களின் கருத்துகளை http://www.dinamalar.com/fpnnews.asp?News_...17&cls=row3

    • 14 replies
    • 3.4k views
  19. Posted on : 2008-07-31 உயர்நீதிமன்றத்தின் முடிவு புதிய சட்டத் திருப்புமுனை இலங்கையின் சட்டத்துறை வரலாற்றில் மிக முக்கிய மான தீர்மானம் ஒன்றை இலங்கையின் உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் எடுத்திருக்கின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு எதிரான முக்கிய வழக்கு ஒன்றை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதன் மூலம் புதிய சட்டவாத, விவாதத்துக்கான அத்தியாயத்தை உயர்நீதிமன்றம் திறந்து விட்டிருக்கின்றது. இலங்கை அரசமைப்பின்படி, ஜனாதிபதிப் பதவியை வகிக்கின்ற ஒருவர் அந்தப் பதவி முறையில் அல்லது தனிப்பட்ட முறையில் செய்த அல்லது செய்யாமல் விட்ட கருமம் தொடர்பாக அவர்மீது வழக்குத் தொடுத்தலோ, தொடர்ந்து வழக்கு நடத்தலோ ஆகாது. அரசமைப்பின் 35(1) பிரிவு இதனைத் தெளிவாகவும் சந்தேகத்துக்கு அப்பாற் படவும் த…

  20. மக்களின் நிவாரணப் பணிகளுக்காக ஐ.நா 36 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி. 31.07.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணப்பணிகளுக்காக சிறிலங்கா அரசுக்கு அவசர உதவித்திட்டத்தின் கீழ் 36 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக ஐ.நாடுகள் சபை நேற்று அறிவித்துள்ளது. இந்த நிதி போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணப்பணிகளுக்கா செலவிடப்படும் என ஐ.நா.சபையின் அவசர உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோல்மஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா உட்பட 7 நாடுகளுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் சிறிலங்காவிற்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர் இதனைத்…

  21. 0094212224265 தற்பொழுது இது 0212224265 வேலை செய்யும் பழய இலக்கங்கள் சார்க் மாநாட்டுக்கு பிறகு வேலை செய்யலாம் என்று நம்மப்படுகிறது...

  22. குடாநாட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண அனுமதி முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. வெளிமாவட்டத்தில் தங்கும் இடத்தின் உரிமையாளரன் சம்மதம் உறுதிப்படுத்தப்பட்;ட பின்னரே, பயண அனுமதி வழங்கும் புதிய நடைமுறை நாளை -ஓகஸ்ட் முதாலம் திகதி- தொடக்கம் அமுலுக்கு வருகிறது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கலலூரியில் நேற்று நடைபெற்ற அரச உயரதிகாரிகள் மற்றும் சர்வதேச, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரகள் கலந்துகொண்ட கூட்டத்தில் புதிய பயண அனுமதி குறித்து யாழ்.படைகளின் தளபதி ஜீ.ஏ.சந்திரசிறி அறிவித்துள்ளார். புதிய பயண அனுமதி நடைமுறை தொடர்பாக சந்திரசிறி தெரிவித்த விவரங்கள் குறித்து அறிய வந்ததாவது : * அரச ஊழியர்களோ, பொதுமக்களோ வெளி மாவட்டம் ஒன்றுக்கு பயண…

    • 0 replies
    • 840 views
  23. புலத்தில் இருந்து இயங்கும் ஈழத்தமிழர்களின் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிங்கள புலனாய்வுத்துறை முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாக, ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நெருப்புக்கு தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த காலங்களிலும் இதே போன்ற பல முயற்சிகளை சிங்கள புலனாய்வுத்துறை எடுத்த நிலையிலும், தோல்வியிலேயே இம்முயற்சிகள் முடிவுற்றன. ஆனால் சில வருடங்களுக்கு முன் பிரான்ஸிலிருந்து இயங்கும் வங்குரோத்து ஊடகங்களான ரி.ஆர்.ரி வானொலி-தொலைக்காட்சி, ஈழநாடு பத்திரிகை என்பன குகநாதனினால், சிங்கள புலனாய்வுத்துறை எறிந்த பிச்சைக் காசுக்காக மண்டியிட்டது. ஆ…

    • 0 replies
    • 2.4k views
  24. இலங்கையுடனான உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு -சாடுகிறார் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய ரொஷான் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் வருகை இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக தாழ்ந்த மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய குற்றம் சாட்டினார். சிநேகபூர்வ அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெகுமதி அளிப்பது போலேவே ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டதென தெரிவித்த அவர் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் அரசாங்கம் மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு …

  25. கல்கிசையில் தேடுதல்; 11 பேர் கைது வீரகேசரி நாளேடு 7/30/2008 10:58:02 PM - கல்கிசைப் பகுதியில் இன்று இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கைகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கைகளின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியவர்களே கைது செய்யப்பட்டதாக கல்கிசைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மகேஸ் பெரேரா தெரிவித்தார். இன்று காலை 6.00 மணி முதல் முற்பகல் 10 மணி வரையில் இடம்பெற்ற சோதனைகளின் போது பெருமளவான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.கல்கிசை, இரத்மலான மற்றும் கட்டுபெத்தை போன்ற பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளில் பஸ்தரிப்பு நிலையங்கள், ரயில் நிலையங்கள் மேலும் பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள், பயணிகள் என சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது தமது அடை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.