Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2ம் இணைப்பு)பாலமோட்டையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 16 பேர் காயம் [புதன்கிழமை, 30 யூலை 2008, 05:47 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:40 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வினை முறியடிக்கும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மாலை 6:00 மணிவரை நீடித்தது. இழப்புக்களுடன் படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர். …

  2. இரண்டு தசாப்த காலமாக வடக்கு கிழக்கில் ஆயுதமேந்தியவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளை வழங்குவதே பிரதான இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்பயிற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். www.tamilwin.com

    • 5 replies
    • 1k views
  3. களத்தில் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக கிளிநொச்சி வட்டக்கச்சிப் பிரதேசத்திலுள்ள இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று குருதிக்கொடை வழங்கியுள்னர். வட்டக்கச்சி மகாவித்தியாலயம் இராமநாதபுரம் மகாவித்தியாலம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இக்குருதிக்கொடையினை வழங்கினர். www.tamilwin.com

  4. வடபோர்முனைப் பின்தளங்களிலிருந்து சிறிலங்காப்படையினரால் மேற்கொள்ளப்படும் எறிகணை வீச்சுக்கள் அதிகரித்துள்ளன. முகமாலை கிளாலிப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப்படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி நாளாந்தம் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு வருகின்ற சூழலில் கடந்த 26ம் திகதி தொடக்கம் இது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவும் கடுமையான எறிகணை வீச்சுக்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடபோர்முனையில் பாரிய சமர் நடைபெறுவது போன்று நேற்றிரவு முழுவதும் படையினரால் எறிகணை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன. www.tamilwin.com

  5. மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டுகளில் படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனதாக கூறப்படுவோரில் சுமார் 100பேர் மகரஹம பிரதேசத்துக்குட்பட்ட கோமாகம என்னுமிடத்தில் உள்ள இராணுவ முகாமில் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக அதில் இருந்து தப்பிவந்ததாக கூறும் ஒருவர் தெரிவித்துள்ளார். விபரம் http://www.swissmurasam.info/

  6. இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா இலங்கையுடன் ஆழமானதொரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இரு நாட்டு உறவுகளை மேம்படுத்திச் செயற்பட எதிர்ப்பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி புஷ்ஷிடம் தெரிவித்தார். இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத்த்தூதுவராக …

    • 4 replies
    • 1.7k views
  7. வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார். அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரி…

    • 0 replies
    • 1.7k views
  8. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மணலாறு, முகமாலை களமுனைகளில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் வெவ்வேறான தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  9. இது டாக்டர் மேவின் சில்வாவின் இந்த வருட நகைச்சுவை. http://isoorya.blogspot.com/2008/07/blog-post_1484.html

    • 1 reply
    • 1.3k views
  10. வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திவரும் தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டையில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:30 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்னகர்வுத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இம்முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத்தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமுள்ளது. இதில் இதுவரை எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 14 படையினர் காயமடைந்துள்ளனர். புதினம்

    • 4 replies
    • 1.4k views
  11. சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வருவதனைக் கண்டித்து சிறிலங்கா துணை தூதரகத்தினை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பிரிவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 716 views
  12. பதினைந்தாவது „சார்க்“ மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவது பற்றிய செய்திகள்… சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பற்றிய செய்திகளையும் விட அல்லது அமெரிக்க இந்திய அரசியல் மாற்றங்களை விடவும் முக்கியமானதாக பேசப்படவேண்டும் என்ற தோரணையில், சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிங்களப் பேரினவாதிகள் உலக மகா நாடகமொன்றை அரங்கேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனை சரியாக அவதானித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் சாணக்கியம் பொதிந்த குண்டொன்றை (சமாதானக் குண்டு) மகிந்த ராஜபக்சவின் பக்கம் உருட்டி விட்டதும், அவர் உட்பட சிங்களப் பேரினவாதிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள். விபரம் http://www.swissmurasam.info/content/view/8056/31/

  13. 7 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு: படைச் சிப்பாய்க்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை புதன், 30 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] 7 வது சிறுமி மீது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய படைச் சிப்பாய்கு 14 ஆண்டு சிறைத் தண்டமை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை உவர்மலை கோணேசுவரம் பகுதியைச் சேர்ந்த இந்த 7 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட படைச்சிப்பாய்கே இத்தண்டணையை திருகோணமலை மாவட்ட உயர் நீதியாளர் இளஞ்செழியன் வழங்கியுள்ளார். 2002ம் ஆண்டு கடைக்குச் சென்ற சிறமியை தூக்கிச் சென்று மறைவிடம் ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள் உட்படுத்தியதை மதகுரு ஒருவரும் கடைச்சிப்பந்தியும் அவதானித்து கூக்குரல் எழுப்பி, மக்களை வரவழைக்கப்பட்டு, படைச்சிப்பாய் நையப்புடைக்கப்ப…

  14. Posted on : 2008-07-30 கொழும்பில் "சார்க்' திருவிழா நூற்று நாற்பத்தாறு கோடி மக்கள் வசிக்கும் தென்னா சிய வட்டகையைச் சேர்ந்த எட்டு நாடுகளின் அரசுத் தலை ணவர்கள் பங்குபற்றும் "சார்க்' உச்சி மாநாடு கொழும் பில் பலத்த ஆரவார எடுப்புகளோடும் பலத்த கெடு பிடிகளோடும் நடைபெற்று வருகின்றது. இனித்தான் உச்சி மாநாட்டின் உச்சக்கட்டமாக வெளி விவகார அமைச்சர்கள் சந்திப்பும் அதைத் தொடர்ந்து "சார்க்' நாட்டுத் தலைவர்களின் ஒன்றுகூடலும் இடம் பெறப் போகின்றன. பல நூறு கோடி ரூபா நிதியை அள்ளிக் கொட்டி, தடல்புடல் ஏற்பாடுகளைச் செய்து, பாதுகாப்பு நடவடிக் கைகளை முன்னெப்போதுமில்லாதவாறு இறுக்கிப் பிடித்து கொழும்பு செய்யும் இந்த ஒரு வாரக் கூத்தினால் நாட்டுக்கும் இந்தப் பிராந்திய மக்களுக்கும் நன்மை …

  15. நேபாளப் பிரதமர் கிரிஜா பிரசாத் கொயிரால நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நேபாள தூதுவராலய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். பிரதமருடன் நேபாள உயர் அதிகாரிகளையும் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய 35 பேரைக் கொண்ட குழுவொன்றும் இலங்கை வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இம்முறை சார்க் உச்சி மாநாட்டின் செயலாளர்களுக்கான கலந்துறையாடலில் நேபாளக் குழுவுக்கு நேபாள வெளிவிவகாரச் செயலாளர் பேராசிரியர் கயான் சந்தரா தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/nepal-2008-07-30.html

    • 0 replies
    • 651 views
  16. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இருந்தாலும் சார்க் உச்சி மாநாட்டின் பின்னர் அரசாங்கம் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்று வரும் 15ஆவது சார்க் உச்சி மாநாட்டின் ஓரங்கமாக சார்க் நாடுகளது வெளிவிவகார அமைச்சு செயலாளர்களின் மாநாடு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பையிட்டு ஏமாறுவதற்கு அரசாங்கம் இனியும் தயாரில்லை. புலிகள் உண்மையாகவே பேச்சுவார…

    • 0 replies
    • 803 views
  17. இந்துக்கள் தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் ஆடி அடிமாவாசை நாளான எதிர்வரும் முதலாம் நாள் கொழும்பு முகத்துவாரம் கடற்பகுதியை பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. சிறிலங்காப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக வன்னியில் விவசாயிகளும் மாணவர்களும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளமுடியாமல் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 434 views
  19. ஆதி காலத்தில் ஒரு அரசன் எப்படி உருவாகின்றான்? சமுதாயத்தில் ஒரு வல்லவன், தாதா, கொள்ளைக்காறன், மக்களிடம் கொள்ளையடித்து, அதைச் சான்றியிருக்கின்ற ஊரைக் கொள்ளையடித்து, பணம் குவிந்தவுடன் தன்னைப்போல் உள்ள தோழர்களை சேர்த்து, அந்த ஊரின் மக்களை அடிமைப்படுத்துகின்றான். நாளடைவில் இந்த நாணயக்கேடு பிடித்தவன் தானே சட்டங்களை உருவாக்கி, தானே அரசன் என்று பிரகடனப்படுத்துகின்றான். மக்களோ வாழ வழி தேடி அச்சம் கொண்டு அவனையே அரசானக ஏற்றுக்கொள்கின்றார்கள். நாளடைவில் இந்தப் பயம் / அச்சம் பயபக்தியாக மாறுகின்றது. சற்றுத் தெளிவாகச் சிந்தித்தால், கொள்ளைக்காரன்/சண்டியன்/தாதா, அரசனாவதற்கு எல்லா தகுதியும் பெறுகின்றான். சரித்திரம் சொல்லும், வேறு நாட்டை ஆண்டவர்கள், அந்த நாட்டில் எவ்வளவு செல்வங்களைக் கொள்ளை…

    • 0 replies
    • 726 views
  20. வன்னி செய்திகளை இருட்டடிப்பு செய்யும் வகையில் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிப்பு [புதன்கிழமை, 30 யூலை 2008, 11:54 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] சார்க் மாநாட்டு செய்திகளை சேகரிப்பதற்கு கொழும்பு வந்துள்ள அனைத்துலக ஊடகவியலாளர்கள், போர் நடைபெறும் வன்னி பிரதேச செய்திகளை விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்வதை தடைசெய்யும்பொருட்டு, வன்னிப்பகுதிக்கான சகல தொலைபேசி சேவைகளையும் சிறிலங்கா அரசு துண்டித்துள்ளது. பாரிய படைநடவடிக்கையை மேற்கொண்டுள்ளதன் மூலம் வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் மக்களை இடம்பெயரவைத்துள்ள அரச படைகள், அப்பாவி பொதமக்களை இலக்குவைத்து தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன. விடுதலைப்பு…

    • 0 replies
    • 526 views
  21. மூதூர் படுகொலை விசாரணைக்கு பிரான்ஸ் நீதிபதி [புதன்கிழமை, 30 யூலை 2008, 08:20 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மூதூர் படுகொலைகயை விசாரணை செய்வதற்கு பிரான்ஸ் அரசு, நீதிபதி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பட்டினிக்கு எதிரான அமைப்பின் ஊடகத்துறை அதிகாரி லூசிலி குறோஸ்ஜூன் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டு பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள் மீதான படுகொலைகளை விசாரணை செய்வதற்கு பிரான்ஸ் அரசு நீதிபதி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது. ஜூலை மாதம் தொடக்க காலப்பகுதியில் சிறிலங்காவை சென்றடைந்த நீதிபதி, அங்கு விசாரணைகளை மேற்க…

    • 0 replies
    • 527 views
  22. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா கட்சி அலுவலகத்தை பயன்படுத்துவதில் அந்த கட்சிக்கும் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். சதாசிவத்துக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி தொடர்பான வழக்கில் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஜுபக்ஷ பொதுமன்னப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 1k views
  23. ஐரோபிய நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் பிரிட்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கைத் தமிழாகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பிரிட்டன் அரசின் முடிவிற்கெதிராக அண்மையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று வழங்கிய தீர்ப்புத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியிருந்தது. அத் தீர்ப்பு தொடர்பாக எல்லோருமே ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்த வேளையிலே புதிதாக ஒரு அதிர்ச்சித் தகவலை ஐரோபிய நீதிமன்றப் பதிவாளா வெளியிட்டுள்ளார். அதாவது இனி ஐரோப்பிய மனித உ…

    • 0 replies
    • 1.6k views
  24. கிளிநொச்சியில் இன்று காலை குண்டுவீச்சு [ த.இன்பன் ] - [ யூலை 30, 2008 - 02:38 AM - GMT ] சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு குண்டு வீச்சு வானூர்திகள் இன்று காலை 6.20 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் கடைப்பிடித்து வரும் நிலையில் சிறிலங்கா வான்படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 3.00 மணிமுதல் சிறிலங்கா வான்படையின் உளவு வானூர்தி ஒன்று வடக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளிற்கு மேலாக பறப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கிளிநொச்சி நகருக்கு தென்கிழக்காக உள்ள பகுதி ஒன்றின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு கிபிர் வானூ…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.