Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி இணையம் - அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் அரலகங்வில நுவரகலவிலுள்ள கடையொன்ரில் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அரலகங்வில , நுவரகல ஜே.விபி ஏற்பாட்டாளர் கீத்ரி தயாவிற்கு சொந்தமான கடையொன்றினுள் நேற்று இரவு 9.30 மணியளவில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நுழைந்துள்ளனர்.இவர்களுள் அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் துப்பாக்கியை வெளியில் எடுத்துள்ளதாக அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாரிற்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனினும் , விற்பனை நிலையத்திற்கு ரூபா.75,000/= வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்ப…

  2. வணக்கம் யாழ்கள வாசகர்களுக்கு, வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எம் யாழ்கள வாசகர்களுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன். நன்றி வீரகேசரி இணையம்

  3. வீரகேசரி இணையம் 7/28/2008 11:54:30 AM - திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர் என பிபிசி தமிழ் சேவை தெரிவித்துள்ளது. மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுதாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இ…

    • 3 replies
    • 942 views
  4. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இரண்டு இந்திய யுத்தக் கப்பல்கள் இன்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஐ.என்.ஸ். ரண்வீர் மற்றும் ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இரண்டு யுத்தக் கப்பல்கள் இலங்கைக் கடப்பரப்பிற்கு வெளியே நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படை உத்தியோகத்தர்கள் மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவசர நிலைமைகள் ஏற்பட்டால் குறித்த கப்பல்கள் மேலதிகப் பாதுகாப்பினை வழங்கவுள்ளதாகக் குறிப்பிப்படுகிறது. சார்க் மாநாடு முடிவடையும் வரை குறித்த கப்பல்கள் நிலை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய தென் கரையோரப் பகுதி …

  5. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனத்தில் போலிச் சான்றிதழை பயன்படுத்தி தலைமை விமானியாக பணியாற்றி வந்த ஜேர்மன் வாசியொருவா விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யபட்டு;ளளா. கடந்த பத்து மாதங்களாக விமானியாகப் பணியாற்றி வந்த இவர், ஒரு இணை விமானியே எனவும் பெரிய விமானங்களுக்கான கப்டன் அல்ல என்பதும் உள்ளக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் விமான நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் அவரது சுய விபரச் கோவையிலிருக்கும் அனைத்து தஸ்தோவேஜூக்களும் விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் விமான நிலைய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்தாகவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின், ஏ-340 ரக மிகப்பெரிய விமானத்தில்; பயிற்சிக்காக வந்த கனிஷ்ட தர விமானியொருவர், இந்த…

    • 1 reply
    • 1.9k views
  6. புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானித்து ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா உட்பட அனைத்துச் சாவதேச முன்னணி நாடுகளின் அரசாங்கங்களும் அதனைச் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து விட்ட நிலையில் தற்போது உலகமெங்கும் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இவ்வாறு அண்மைக்காலங்களில் பிரிட்டன் உற்பட ஐரோபிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லண்டன் டவுனிஸ் வீதி 10ம் இலக்கத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன் புலிகள் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி…

  7. தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவுடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 570 views
  8. புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் புகைந்து போன வரலாறு! -- பழ. நெடுமாறன் "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங் கள இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப் பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் புளுகுகளைத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. உலக நாடுகளும் உண்மைகளை அறிந்தே வைத்துள்ளன. எனவே உலக நாடுகளை யும் இவர்களால் ஏமாற்ற முடியாது. அவ் வப்போது இத்தகைய புனை கதைகளை அவர்கள் யாருக்காகக் கூற…

  9. சிறிலங்காவின் வடமத்திய மாகாண சபைக்கு போட்டியிடும் முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா வெற்றியீட்டினால் பதவி விலகுவேன் என்று அமைச்சர் மேர்வின் சவால் விட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 558 views
  10. சிறிலங்காவுக்கு அண்மையாக இந்திய போர்க் கப்பல்கள் [திங்கட்கிழமை, 28 யூலை 2008, 05:39 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா கடற்பரப்புக்கு அண்மையாக இந்திய கடற்படையின் இரு போர் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்திய கடற்படையின் போர் கப்பல்களான ஐஎன்எஸ் ரண்வீர், ஐஎன்எஸ் மைசூர் ஆகியன சிறிலங்கா கடற்பிரதேசத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டு நிற்கின்றன. கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதியே இக்கப்பல்கள் சிறிலங்காவுக்கு அண்மையாக நகர்த்தப்பட்டுள்ளன. இந்திய கப்பல்கள் சிறிலங்கா கடற்பிரதேசத்திற…

    • 0 replies
    • 624 views
  11. கறுப்பு ஜூலை... காய்ந்துபோன ரத்தம்! - ஜூனியர் விகடன் இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்லைகளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால், மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிறைத்த அந்த ஓலக் குரல்கள், நம்முடைய காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள்... கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்! வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்; வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்…

    • 6 replies
    • 1.5k views
  12. விடுதலைப் புலிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும்10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே, இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சீட்டுக் கட்டில் இருந்து உதிரும் சீட்டுக்களைப் போன்று விடுதலைப் புலிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். எனவே அவர்களை மேலும் முறியடிப்பதற்கு இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10 ஆயிரம் பேர் மீண்டும் திரும்ப வேண்டும். கடந்த நான்கு முதல் ஐந்து வருடங்களுக்குள் தப்பியோடியவர்கள் இராணுவத்திற்கு அவசரமாக தேவைப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் தப்பியோடியிருக்கலாம். எனினும், அவர்கள் மீ…

  13. தேவன்பிட்டி பகுதியில் சிறீலங்கா படையினரின் எறிகணைவீச்சில் பொதுமகன் பலி திங்கள், 28 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைவீச்சில் ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் வி.செல்வகுமார் எனவும் இவர் தமது உடைமைகளை நகர்த்திக்கொண்டு செல்லும்போது கொல்லப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வி.தோமஸ், மற்றும் நந்தரூபன் எனவும் தெரியவருகிறது. தேவன்பிட்டி மன்னார் நகரிற்கு வடகிழக்காக 31 கிலோமீற்றர் தொலைவில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு மடுமாத திருஉருவச்சிலை கடந்த 12 வாரங்களாக இங்குள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தமையும் பின்னர…

    • 3 replies
    • 841 views
  14. சிங்களத்தின் வரையறைக்குள் முடக்கும் போர் தந்திரோபாயமும் புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகளும் -தாரகா- புலிகள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய நிலையில் முதன்மையான கேள்வியாகும். இன்று சாதாரண தமிழ் மக்களிலிருந்து அரசியல் நோக்கர்கள் வரை இந்த கேள்வியில்தான் கட்டுண்டு கிடக்கின்றனர். சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் சில நேரங்களில் இது ஒரு புரியாத புதிராகவும் சில நேரங்களில் வேதனைக்குரிய விடயமாகவும் இருக்கலாம். அரசியல் நோக்கர்களைப் பொறுத்தவரையில் இந்தக்கேள்வி, புதிய புதிய ஊகங்களுக்கும், ஆய்வுகளுக்குமான களத்தை தொடர்ந்தும் விரித்துச் செல்லும் ஆய்வுப்பொருளாக இருக்கலாம். ஆனால், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் தோல்வியடை…

    • 1 reply
    • 2.1k views
  15. இராணுவத்தில் இருந்து தப்பிவந்த 6 பேரை படையினரும் வனபரிபாலன அதிகாரிகளும் கைதுசெய்துள்ளனர். யால பாதுகாக்கப்பட்ட வனப்பிராந்தியத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டபோதே இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பேரூந்துகள் தாக்குதல்களுக்கு உள்ளானமையை அடுத்து, புத்தல கதிர்காமம் வீதியில் உள்ள இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்க படையினர் தடைவிதித்துள்ளனர் இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட, படையில் இருந்து தப்பி வந்த 6 பேரிடமும் இருந்து கைத்துப்பாக்கிகளும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். www.tamilwin.com

  16. ஏனைய மாகாண சபைகளுக்கும் வருட இறுதியில் தேர்தல் Sunday, 27 July 2008 இவ்வருடம் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக மிகுதியாகவிருக்கும் ஐந்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும் நடத்திமுடிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணம், தென் மாகாணம், ஊவா, வட மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நவம்பவர் மாதத்துக்கு முன்னதாக நடத்துவதற்கே அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. ஊவா மற்றும் வட மேல் மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கே அரசாங்கம் முதலில் திட்டமிட்டிருந்தது. இருந்தபோதிலும் தற்போதுள்ள நிலையில் அனைத்து மாகாணங்களுக்குமிடையிலான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்ட…

  17. பொலநறுவை ஹிங்குராக்கொட வனப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று இனம் காயப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார். ஹிங்குராக்கொட தியாபெதும வனப் பகுதியிலேயே இப் புதைகுழி இனம் காணப்பட்டுள்ளது. தியாபெதும வனப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றிருந்தவர்களால் அங்கு குழி ஒன்றை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அக்குழியை அகழ்ந்த போது மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறீலங்காவின் மூன்றாவது வான்படைத் தளம் அமைந்திருப்பதோடு இப்பகுதிகளிலேயே சிறீலங்கா துணை இராணுவக் குழுவான…

  18. சமாதானப் பேச்சு நடத்துவதற்கு, அரசாங்கம் விதித்துள்ள நிபந்த னைகளை விடுதலைப் புலிகள் ஏற்காவிடில் ஏனைய தமிழ் அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை அரசாங்கம் கொண்டுவரும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, தமிழீழ கோட்பாட் டையும் கைவிட்டுவிட்டு சமாதான முயற்சிகளில் ஈடுபட முன்வந்தால் அவர்களு டன் பேச்சு நடத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயார் என்றும் பிரதமர் கூறினார். நேற்றுக் காலையில் தியத்தலாவ இரா ணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றபின் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் …

  19. வீரகேசரி நாளேடு - ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுவிக்க மத்திய அரசாங்கம் முன்வந்தால் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து நளினியை விடுதலை செய்யக்கோரும் கையெழுத்து இயக்க அமைப்பாளரும் திரைப்பட பாடல் ஆசிரியருமான தாமரை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். இந்த கையெழுத்து இயக்கத்தில் எழுத்தாளர்கள் சுஜாதா, தி.க.ச…

    • 1 reply
    • 1.2k views
  20. கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் முதலையிடம் பிடிபட்ட இளைஞனை அவரது வளர்ப்பு மாடு காப்பாற்றிய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. தனது கையொன்றினை முதலையிடம் பறிகொடுத்துவிட்டுத் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரணைமடுவைச் சேர்ந்த 26 வயதுடைய நவநீதன் என்ற இவ்விளைஞன் இச்சம்பவத்தை விபரித்தார். கடந்த 18ம் திகதி காலை 8.00 மணியளவில் தான் தனது மாட்டை இரணைமடுக் குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்ததாகவும்; அப்போது குளத்தில் சிறிது தூரம் தான் நீந்திவிட்டுத் திரும்புகையில் முதலையொன்று தனது கையைக் கவ்வி இழுத்துச்சென்று நீருக்குள் மூழ்கடிக்க முயன்றதாகவும்; அப்போது தான் மாட்டின் கயிற்றை எட்டிப் பிடித்துக்கொள்ள ஆபத்தை உணாந்து கொண்ட மாடு வேகமாகக் குளத்திலிருந்து கரையை ந…

  21. அரசியல், படைத்துறை இராஜதந்திர பலத்தை வெளிப்படுத்திய புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 07:34 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பானது அரசியல், படைத்துறை இராஜதந்திர பலத்தை வெளிப்படுத்துகின்றது என்று விடுதலைப் புலிகளின் தூயவன் அரச அறிவியல் கல்லூரியின் முதல்வர் அரசண்ணா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறிலங்கா வான்படையின் தாக்குதல் விசுவமடுவில் இன்று மாலை இடம்பெற்றது. அதற்கு அடுத்ததாக இக்கலையரங்கு நிகழ்வு நடைபெறுகின்றது …

    • 0 replies
    • 657 views
  22. வீரகேசரி நாளேடு - கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள…

    • 20 replies
    • 2.8k views
  23. யாழ். தென்மராட்சி மிருசுவில் பகுதியிலிருந்த பதினாறு குடும்பங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு சிறிலங்காப் படையினர் நிர்ப்பந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 633 views
  24. சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கியுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  25. புலிகள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய நிலையில் முதன்மையான கேள்வியாகும். இன்று சாதாரண தமிழ் மக்களிலிருந்து அரசியல் நோக்கர்கள் வரை இந்த கேள்வியில்தான் கட்டுண்டு கிடக்கின்றனர். சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் சில நேரங்களில் இது ஒரு புரியாத புதிராகவும் சில நேரங்களில் வேதனைக்குரிய விடயமாகவும் இருக்கலாம். அரசியல் நோக்கர்களைப் பொறுத்தவரையில் இந்தக்கேள்வி, புதிய புதிய ஊகங்களுக்கும், ஆய்வுகளுக்குமான களத்தை தொடர்ந்தும் விரித்துச் செல்லும் ஆய்வுப்பொருளாக இருக்கலாம். ஆனால், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகின்றனர். இன்னும் சிறிது காலத்திற்குள் அவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள். சிங்கள நிகழ்சி நிரலை அப்ப…

    • 0 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.