Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சம்பந்தனிடம் சஜித் கூறியது என்ன? வெளியான தகவல்! எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்பொழுது தகவல்வெளியாகியுள்ளது. இதற்கமைய, இனப்பிரச்சினை விவகாரத்தில் பிளவுபடாத நாட்டுக்குள் நியாயமான முறையில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சகல தரப்பினருடனும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலும் விரிவாகக் கலந்த…

    • 8 replies
    • 688 views
  2. நடாஷா எதிரிசூரிய கைது பௌத்தமதம், பௌத்த பாடசாலைகள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளை அவமதிக்கும் வகையில் “மொடாஹிமானய” எனும் தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே நடாஷா எதிரிசூரிய, கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கபூரை நோக்கி பயணிப்பதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோதே, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் இவர் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கையளிக்கப்பட்டார். கல்கிஸை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான இந்தப் பெண், மலேசியா கோலாலம்பூரை நோக்கி சனிக்கிழமை (28) அதிகாலை 12.05க்கு புறப்படவிருந்த மலேசியா விமானச் …

  3. சீனக் குற்றச்செயல்களின் கேந்திரமாகும் இலங்கை? அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல்வேறு தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது, சீனப் பிரஜைகள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவை பொலிஸாரால் கைப்பற்ற…

  4. சிறையில் பெண் உயிரிழந்த சம்பவம் : வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் இருந்தபோது குறித்த பெண் தாக்கப்பட்டதாகக் கூறி, அவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். பின்னர் வெலிக்கடை பொலிஸில் கடமையாற்றிய ஏழு ப…

  5. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2023 | 09:52 AM (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல் திணைக்களத்தால் அடையாளம் காணப்படும் பகுதிகளில் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுதல் மற்றும் தனியார் காணிகளில் பௌத்த விகாரைகள் நிறுவப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் போர் நிலைமைகள்…

  6. தனியார் பல்கலைக்கழக கல்விக்காக வட்டியில்லா கடனுதவியை வழங்கும் யோசனையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவான்வெல்ல பகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் குறித்த வட்டியில்லா கடனுதவி வழங்கப்படவுள்ளது. குறித்த வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்க…

  7. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:31 PM (எம்.மனோசித்ரா) வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து செய்யப்படவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெ…

  8. Published By: NANTHINI 27 MAY, 2023 | 05:32 PM மலையக மக்களது இலங்கை வருகையின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று (27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்வில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்று மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றினர். இதன்போது தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மலையக மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர். htt…

  9. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:13 PM (நா.தனுஜா) ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக சுமார் இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள் உள்ளிட்ட 72 பேர் அந்நாட்டுப்பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓமானில் பணிபுரியும் இலங்கைப்பெண்கள், தாம் மீண்டும் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 8 ஆம் திகதி முதல் சுமார் இருவாரகாலமாக ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த 8 ஆம் திகதி சுமார் 10 பே…

  10. Published By: RAJEEBAN 27 MAY, 2023 | 02:23 PM இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது. இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என…

  11. இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நியாயமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கைய…

    • 4 replies
    • 291 views
  12. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, அதியுயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் கருவிகளை பிரமுகர் முனையத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் ஸ்கேனிங் சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், விஐபி முனையத்தைப் பயன்படுத்துபவர்களின் பொருட்கள் மற்றும் பைகளை ஆய்வு செய்ய அத்தகைய இயந்திரங்கள் எதுவும் இல்லை. சுங்கத்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இது நிறுவப்படவுள்ளது. https://thina…

  13. கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவைகள் ஆரம்பம் - செந்தில் தொண்டமான் 27 May, 2023 | 11:23 AM கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமான சேவ…

    • 2 replies
    • 495 views
  14. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 09:50 AM கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் மகன் 5 வயதான ஹர்சித் என்ற குழந்தை உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி புதிய சோழன் உலக…

  15. பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – 18ம் திகதி நால்வர் கைது – மன்னிப்புச்சபை கவலை 27 May, 2023 | 11:43 AM பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக்…

  16. உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு ; சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்! Published By: Digital Desk 3 27 May, 2023 | 11:55 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு செய்வதை இன்று சனிக்கிழமை (26) பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அக்கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பவ இடத்…

  17. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயார் – சீ.வீ.கே.சிவஞானம் சமகால நிலைமைகள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை எனவும் போட்டியில்லாமல் அனைவரினதும் ஒத்துழைப்போடும் இணக்கப்பாட்டோடும் தான் தெரிவு செய்யபட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/இலங்கைத்-தமிழரசுக்-கட…

  18. மூன்று மாணவர்களை தாக்கிய விவகாரம் : யாழில் ஆசிரியர் கைது யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1332889

  19. பயனற்ற முதலீடுகளை என்ன செய்யப்போகிறது இலங்கை? இலங்கை தற்போது மீண்டெழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2.9மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானித்ததோடு, அதற்கான முதற்கொடுப்பனவையும் வழங்கியுள்ளது. சர்வதேச நாயண நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி கிடைத்திருந்தாலும் இலங்கை மீண்டெழுவதற்கு சரியான கொள்கையும், மறுசீரமைப்புக்களும் அவசியமாகின்றன.இலங்கை நெருக்கடிகளிலிருந்து ஒரளவு விடுபட்டிருப்பதற்கு இந்தியா, உள்ளிட்ட நாடுகள் கைகொடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமை தொடரும் என்று கூற முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை தனது சர்வதேச கடன்களை…

  20. 146 நாட்களில் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவு இந்த வருடத்தில் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தால் …

  21. பட மூலாதாரம்,MR GAMAGE 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் கிடைத்த உலகிலேயே மிக பெரியதாக அறியப்பட்ட கொத்தணி என கூறப்பட்ட ரத்தினக்கல் கொத்தணி, முன்பு குறிப்பிடப்பட்ட பெறுமதியை விட மதிப்புக் குறைவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் கோப் குழுவில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது. ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் செயற்பட்ட விதமானது, அதன் நிபுணத்துவத்திற்கு ஏற்புடையது அல்ல என்…

  22. யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த இறைச்சியில் கொத்து ரொட்டி தாயரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது. கடந்த 09ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணம் , ஆணைப்பந்தி சந்திக்கு அருகில் உள்ள உணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய நபருக்கு பழுதடைந்த இறைச்சியில் கொத்து ரொட்டி தயாரித்து விற்பனை செய்ததாக பாதிக்கப்பட்ட நபரால் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து மறுநாள் 10ஆம் திகதி காலை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , ஒரு தொகை பழுதடைந்த இறைச்சிகள் , உணவுகள் என்பன மீட்கப்பட்டதுடன் , உணவகத்தில் மேல…

  23. Published By: NANTHINI 25 MAY, 2023 | 09:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விகாரைகளில் சேவை செய்வதற்காக சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இருந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் சேவை தொடர்பில் சரியான தகவல் எதுவும் இல்லை. இதற்காக வருடத்துக்கு 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்த நிலையை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25)இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில…

  24. Published By: DIGITAL DESK 3 26 MAY, 2023 | 09:04 AM யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/156183

  25. ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் தமது மன்னிப்பை கோரியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்கொரணப்பட்ட இந்த திட்டம், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டது. இந்தநிலையில் டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு பாரிய திட்டங்களை உடன்பாடு இன்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.