Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'வீரர்கள் மதிக்கும் வீரன்" -சிறீ. இந்திரகுமார்- முதற்பயணம் அது 1984 ஆம் ஆண்டு. செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது. அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர். விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர். லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும். செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடி…

    • 0 replies
    • 708 views
  2. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். அதனால் கருணா மீண்டும் நாடு திரும்பினாலும் முதலமைச்சர் பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லையென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெரிவித்தார். பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த ஆஸாத் மௌலானா மேலும் கூறுகையில்; கருணா நாடு திரும்பிவிட்டாரென்பதால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் மாற்றம் எதுவும் ஏற்படாது. பிள்ளையான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவரே கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவிருப்பார். கருணாவுக்கு அந்தப் பதவி வழங்கப்படாது என்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : இன்று (நேற்று) தான் மீண்டும் நாடு த…

    • 0 replies
    • 1k views
  3. பிற தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி குரல்கொடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "குமுதம்" வார இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல்: புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே? புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிர…

  4. அமிர்தஸன் - தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி சமீபகாலமாக பலருடைய மனதில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசகர் ஆர்.கே. நாரயணன் தலைமையிலான மூன்று பேர்கொண்ட இந்திய அதிகாரிகள் தலைமையிலான குழு கொழும்புக்கு வந்து சென்ற பின்னர் சந்தேகங்கள் வலுவடைந்துள்ளன. அவ்வாறான சந்தேகங்களையும் கேள்விகளையும். இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று நீதியான அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவிபுரியுமா? இரண்டாவது விடுதலை புலிகளை இராணுவ ரீதியில் பலவீனமடைய செய்வதற்குரிய வகையில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கப்போகின

    • 0 replies
    • 770 views
  5. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி யிருக்கிறது.இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே? ``புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் …

    • 0 replies
    • 1.4k views
  6. 1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி எமது விடுதலைப் போராட்டத்தின் புதிய வடிவம் ஒன்று பிறப்பெடுத்த நாளை யாரும் மறந்திருக்க முடியாது. நெருப்புக் குளித்து நின்ற தேசத்தில் தனி ஒருவனாய் பொறுப்புச் சுமந்து போய்வெடித்த அந்த அற்புத தியாகத்தின் தோற்றுவாய் அன்று ஒரு பெரும் மாறுதலை எம் விடுதலைப் போராட்டத்திற்கு பெற்றுத்தந்தது. இறுக்கமான கட்டமைப்புக்குள் வளர்ச்சியுற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பகைப்படையின் எண்ணிக்கையில் மிகச் சொற்பமாகவே இருந்து பல சாதனைகளைச் செய்து கொண்டிருந்த காலமது. யாழ். குடாவில் பெரும் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இப்படிப்பட்ட காலச் சூழ்நிலையில்தான் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஜே.ஆர். அரசு இன்னும…

    • 1 reply
    • 930 views
  7. கிளிநொச்சியில் இன்று கரும்புலி மாவீரர்களின் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 535 views
  8. இலங்கை அரசாங்கம் அங்கு வாழும் தமிழர்களைக் கடந்த வருடங்களாக அடக்கி ஒடுக்கப்பார்க்கிறது. தமிழ் மக்களைப் பல்வேறு வகைகளிற் தடைகளை அமுல்படுத்தி அவர்களை வருத்துகிறது. பொருளாதாரத் தடைகளின் மூலம் நமது மக்களைப் பட்டினியால் சாகடிக்கப் பார்க்கிறது. மனித உரிமை மீறல்கள் எங்கள் மக்களை வதைக்கின்றன. 40,000 படையினரைத் தமிழர் தாயகப் பகுதிகளில் குவித்து அங்கு நாளாந்தம் மனிதப் படுகொலைகளை நடத்திவருகிறது. எனவே இன்று 40வது ஆண்டைப் பூர்த்தி செய்கின்ற தென்னாபிரிக்கத் தமிழர் கூட்டிணைப்புக் கழகம் தென்னாபிரிக்கா அரசிடம் எமது ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஒரு வேண்டுகோளை முன் வைக்கவேண்டும். இலங்கை அரசின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படாவிட்டால் அந்நாட்ன் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவரும்படி நிர்ப்ப…

    • 0 replies
    • 538 views
  9. Started by SARAPI,

    'இலட்சியத்தால் ஒன்றுபட்டு, எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கி விடமுடியாது!"- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். சிங்கள பௌத்தப் பேரினவாதம் மீண்டும் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையைத் தமிழர் தாயகத்தில் ஆரம்பித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கும்போதே, அதுகுறித்து எந்தவித அக்கறையும் கொள்ளாது, தமிழர் தாயகப் பகுதிகளை வன்கவர்ந்து கொண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களை வஞ்சகமாகக் கொன்றும், பகிரங்கமாகவே மனித உரிமை மீறல்களைப் புரிந்து கொண்டும் வந்திருந்த மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு, இந்த ஆண்டு ஆரம்பத்தில் தன்னிச்சையாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்த பின்னர், தனது அரச பயங்கரவாதத்தை மிக உச்ச நில…

    • 0 replies
    • 735 views
  10. * புதிய ஜனநாயகக்கட்சி அறிக்கை யுத்தத்தின் பெயரால் ஊழல் , மோசடி , அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் அதிகாரத்திலிருப்பவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் குறுக்கு வழிகளால் பெரும் செல்வந்தர்களாகியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. மறுபுறத்தே தெற்கில் வாழும் சாதாரண தொழிலாளர் விவசாயிகளின் பிள்ளைகளும் வடக்கு, கிழக்கிலுள்ள சாதாரண குடிமக்களது பிள்ளைகளும் யுத்தப் பீரங்கிக்கு தீனியாகி மாண்டு வருவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சியின் 30 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அதன் மத்திய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அந்நிய பல்தேசியக் கம்பனிகள் நாட்டின் வளங்களை கொள்ளையிட்டுச்…

    • 0 replies
    • 759 views
  11. இராணுவத்தீர்வுக்கான செலவீனமாக தற்போது நாளொன்றுக்கு 61 கோடியே 20 இலட்சம் ரூபா இலங்கையில் செலவிடப்படுவதாக கூறியிருக்கும் ஐ.தே.க.கொழும்பு மாவட்ட எம்.பி.ரவி கருணாநாயக்கா நாட்டுக்கு ஒட்டுமொத்த அனுகூலம் கிடைக்குமாக இருந்தால் இந்தத் தொகை ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று கூறியுள்ளார். பொருளாதார யுத்தத்தில் வெற்றிபெற்றால் சகல யுத்தங்களிலும் வெற்றி பெற முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். எகிப்து, பங்களாதேஷ் நாடுகளிலுள்ள வர்த்தக சம்மேளனங்கள் அரசாங்கத்துக்காக தீர்மானம் எடுப்பதாகச் சுட்டிக்காட்டிய ரவி கருணாநாயக்கா, உள்ளூர் சம்மேளனங்கள் மத்தியில் ஐக்கியம் குறைவாக இருப்பதாகவும் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார் அரசாங்கம் 51000 கோடி ரூபா வட்ட…

    • 0 replies
    • 897 views
  12. (2ம் இணைப்பு)துணுக்காயில் ஆழ ஊடுருவும் அணியினரால் மாணவன் சுட்டுப்படுகொலை [வியாழக்கிழமை, 03 யூலை 2008, 05:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் வேட்டைக்குச் சென்ற மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் துணுக்காய் ஐயன்குளப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10:20 மணியளவில் இடம்பெற்றது. இதில் வேட்டைக்குச் சென்ற மல்லாவி மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவனான இராஜகோபால் ஜீவிதன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். புதினம்

    • 0 replies
    • 666 views
  13. ஐ.நா. விமானங்களை இலங்கையில் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வீரகேசரி நாளேடு 7/4/2008 8:49:22 AM - உலக உணவுத் திட்டம் ஐ.நா. விமானங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முதல் தடவையாக அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. வின் உலக உணவுத் திட்டம் (WFP) தனது பணிகளுக்காக ஐ.நா.வின் மனிதாபிமான விமான சேவை விமானங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாமதமின்றி உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக ஐ.நா. விமானங்களை பயன்படுத்த உலக உணவுத் திட்டம் அனுமதியை கோரியிருந்ததாகவும் அதற்கு அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  14. Posted on : 2008-07-04 தமிழ் மக்களை "விடுவித்து' சிறை வைக்கும் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப் பிரதேசத்தையும் அவர்களின் பிடியிலிருந்து விடுவித்து, அரசப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையி லான இந்த அரசு மிகவும் முனைப்பாகவும் தீவிரமாகவும் உறுதியாகவும் உள்ளது. இதன் காரணமாக வன்னி மீது பெரும் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட அது தயாராகி வருவதும் வெளிப்படை. ஆனால் தமது இந்த நடவடிக்கை யுத்தமே அல்ல என்று அரசு த் தலைவர் சாதிக்கின்றார். ""அப்பாவித் தமிழர்களைப் புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கையே இது. சிலருக்கு இது யுத்தம் போலத் தெரிகின்றது. '' என்று தமது படைகள…

  15. (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 30 பேர் படுகாயம்- 2 உடலங்களும் படைப்பொருட்களும் மீட்பு [வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 2 உடலங்களும் படைப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியுள்ளதாவது: மன்னார் - சன்னார் பகுதிக்கும் கொடிகட்டிய ஆற்றுப்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி ஊடாக நேற்று வியாழக்கிழமை…

    • 0 replies
    • 797 views
  16. தேசவிரோதி கருணாவை பிரித்தானியா நாடு கடத்தியமை தொடர்பாகச் சர்வதேச மன்னிப்புச் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கருணாவின் மீது போர்க் குற்றத்தைச் சுமத்தக்கிடைத்த வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. கருணாவின் மீது சித்திரவதை, சட்டவிரோத நிதிசேகரிப்பு, சிறுவர்களைப் படைகளுக்கு சேர்த்தல், சித்திரவதை ஆகியவை தொடர்பாகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்படவேண்டும் எனத் தாம் கடந்த மேமாதம் 14 ஆம் திகதி மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில், பிரித்தானிய மெட்ரோபொலிட்டன் காவல்துறையினருக்கு கடிதம் எழுதிய போதும் அதற்கு பதில்கள் கிடைக்கவில்லை எனச் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கருணாவின் மீது குற்றங்களைச் சுமத்தத…

    • 0 replies
    • 752 views
  17. கனேடிய தமிழர்களே உங்களின் ஒன்று பட்ட எழுச்சியை கனேடிய அரசிற்கு வெளிப்படுத்த யூலை ஐந்தாம் நாள் தயாராகுங்கள். நீங்கள் பொங்கியெழும் இடம் மற்றும் நேரத்தை ஏற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் உங்களிற்கு அறியத் தருவார்கள். தயவு செய்து சனிக்கிழமையை முழுமையான விடுமுறை நாளாக வைத்திருங்கள். ஒன்ராரியோ சட்டமன்று முன்பாக நடத்த பொங்கு தமிழைபோன்று இல்லை இல்லை அதைவிட எழுச்சியாக அதைவிட பெரும் எண்ணிக்கையில் நாங்கள் அணிதிரள்வோம். எமது போராட்டத்திற்கு பக்க பலமாக எமது மக்களின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி போன்ற இலட்சிக் கோட்பாடுகளை உரத்து ஒலிப்பதுடன் கனேடியத் தமிழர்களால் போராட்டத்திற்கு வலுவுட்டும் செயற்பாடுகளிற்கு எதிரக கனேடிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைளை கண்டிக்கவும், இனி எந்தவொரு நடவடி…

    • 12 replies
    • 2.1k views
  18. கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள???, வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகளை பேணக் கிழக்கு மாகாணசபைக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனத் தமது கட்சி, இலங்கை அரசாங்கத்திடம் கோரவிருப்பதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பிரான்சிலிருந்து சென்றுள்ள பிள்ளாயானின் ஆலோசகராக செயற்படும் ஞானம் என்பவரும் அவுஸ்ரேலியாவிலிருந்து சென்றுள்ள பிள்ளாயானின் பிரத்தியேக செயலாளராக செயற்படும் ரகு என்ற கோகுலனும் சேர்ந்து சில வியாபார முதலீடுகளையும், நிலையான சொத்துக்கள் வாங்குவதற்கும் என பிள்ளாயானிடம் பணம் பெற்றுள்ளார்கள் என்று தெரிகிறது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பிரான்ஸ் வந்து லண்டன் சென்றதாகக் கூறப்படுவதற்கும் கருணாவின் நிதி பரிமாற்றங்களுடன…

    • 0 replies
    • 730 views
  19. பிரித்தானியாவில் இருந்து “கருணா” அந்தனி என்ற பெயரில் நாடு கடத்தப்பட்டமை குறித்து தேசிய பாதுகாப்பு மையத்திற்குத் தெரியாதாம் ஜ வெள்ளிக்கிழமைஇ 04 யூலை 2008இ 01:19.51 யுஆ புஆவு +05:30 ஸ பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டஇதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா நேற்றுக் கொழும்பை வந்தடைந்தபோது மாற்றுப் பெயர் ஒன்றிலேயே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாஇ அந்தனி என்ற பெயரிலேயே இலங்கைக்கு வந்துள்ளார். யு எல் 504 என்ற இலக்கத்தைக்கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து வரப்பட்ட கருணாஇ இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புக்கு மத்தியில் கருணா கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். இந…

  20. "முதலமைச்சர் பதவிக்காக மாகாணத் தேர்தலில் போட்டியிடுவதால் என்னையும், என் குடும்பத்தாரையும் சிலர் அச்சுறுத்துகின்றனர். ஆனால், இவற்றுக்கு நான் பயந்தவனல்ல. பல வருடங்களாக விடுதலைப் புலிகளுடன் போரிட்டவன் நான். இந்த யுத்த காலத்தில் புலிகள் கூட என் மனைவியையோ, பிள்ளைகளையோ அச்சுறுத்தவில்லை. ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலொன்றின் வேட்பாளராக நிற்க முயற்சிக்கும் போது எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்கும் ஆரம்ப முயற்சியாக இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.'' இவ்வாறு வடமத்திய மாகாண சபைக்காக ஐ.தே.க. சார்பில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார். வடமத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தை…

    • 0 replies
    • 961 views
  21. புலம்பெயர் தமிழர்கள் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போராளிகளுக்கு ஏற்படுத்திய எழுச்சி, புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் எதிர்நோக்கும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது ஆகியன தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (01.07.08) தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி வழங்கிய நேர்காணல்(02.07.08) http://www.tamilnaatham.com/interviews20080213.html

    • 0 replies
    • 925 views
  22. தேர்தல் நடத்தப்படவுள்ள வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் குழுவினர் 15 முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 15 முகாம்களின் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த 500 பேர் ஆயுதங்களை கொண்டுள்ளதாகவும் சேனபுர என்ற இடத்தில் உள்ள முகாமில் மாத்திரம் ஆயுதம்தாங்கிய 150 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த கிழக்கு மாகாண தேர்தலின் போது, பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் தமிழ் கிராமங்களுக்குச் சென்று பல்வேறு அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதுடன் தேர்தலுக்கு பின்னர் முஸ்லீம் பிரதேச மக்களை தாக்கியதுடன் முஸ்லீம் பிரதேச வர்த்தகர்கள் உட்பட பலரை கொலை செய்துள்ளனர். இதன் காரணமாக மோதல்கள் நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் ஊரடங்குச் சட்டத்தை …

    • 0 replies
    • 902 views
  23. மாங்குளம் நகருக்கு அப்பாலுள்ள மல்லாவி, துணுக்காய் பகுதிகளில் இடம்பெறும் எறிகணைத் தாக்குதல்களால் பலர் இடம்பெயர்ந்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் எறிகணைத் தாக்குதல்களால் பலர் இடம்பெயர்ந்திருப்பதுடன், அந்தப் பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உடனடியாக இடம்பெயரும் அச்சம் தோன்றியிருப்பதாகவும் எமில்டா சுகுமார், பி.பி.சி.க்குக் கூறினார். துணுக்காய் பிரதேச செயலாளர் அலுவலகத்தை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெறும் எறிகணைத் தாக்குதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் சென்றிருப்பதாகவும், குறிப்பாக கிளிநொச்சி, மாங்குளம், முறிகண்டி ஆகிய பகுதிகளை…

    • 0 replies
    • 737 views
  24. விடுதலைப் புலிகளின் படையணியில் நாற்பதாயிரம்(40000)படை வீரர்கள்? விடுதலைப் புலிகளின் படையணியில் சுமார் (40000) நாற்பதாயிரம் படை வீரர்கள் இருப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக நிலவன் அவர்கள் கனடிய வானொலி ஒன்றுக்கு இன்று பேட்டி ஒன்றின்போது கூறினார் இது எவ்வளவு தூரம் உண்மை? இதுபற்றி ஏதாவது பத்திரிகைகளில் செய்தி வற்துள்ளதா? புலிகளிடம் 2000 3000 வீரர்கள்தான் உண்டு என்று சொல்லிவந்த அரசு தற்பொழுது இப்படி கூறக்காரணம் என்ன?ஏதாவது சதித்திட்டமாக இருக்குமோ? அல்லது சில வருடங்களுக்கு முன் நான்கேள்விப்பட்ட செய்தியின்படி இது உண்மையாக இருக்குமா? அதாவது புலிகளிடத்தில் சுமார் 50000 வீரர்கள் இருப்பதாகவும் சண்டையென்று தொடங்கும் பட்சத்தில் ஒருவா…

    • 8 replies
    • 2.1k views
  25. ஏறாவூரில் கிளைமோர் தாக்குதல் : மூன்று காவல்துறை , இரு பொதுமக்கள் காயம் வெள்ளி, 04 ஜுலை 2008 [நிருபர் வி.சிறீதரன்] வியாழக்கிழமை மாலை 8.15 மணியளவில் மட்டக்களப்பு புகையிரதநிலையத்தில் கிளைமோர் வெடித்துள்ளது. இதில் மூன்று காவல்துறையினரும் இருபொதுமக்களும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதம் இரவு 7.30 மணிக்கு தொடரூந்து நிலையத்தை விட்டகன்றுள்ளது. இதன்போது செல்வகுமார் 25, சாருரூவன் 26, ஆகிய தமிழ் காவல்துறையினரும் ஒரு சிங்கள காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொதுமக்களில் ஒருபொதுமகனும் உள்ளடங்குவதாகவும் அவர் 16 அகவையுடைய அசார் எனவும் காயமடைந்த மற்றய பொதுமகன் 30 அகவையுடைய அப்துல் மஜீட் எனவும் தெரியவருகிறது. காயமடைந்தவ…

    • 2 replies
    • 916 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.