Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜி ரணதுங்க இன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமானார். இதனையடுத்து ஜக்கிய மக்கள் முன்னணி உறுப்பினர் நெல் ரூபசிங்க இவரது இடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் கம்பகா மாவட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்காவது நாடாளுமன்ற உறுப்பினராவார். இதற்கு முன் சிறீபதி சூரியாராட்சி, அநுரா பண்டாரநாயக்கா, மற்றும் ஜெயராஜ் பெர்ணான்டோபிள்ளை ஆகியோரே முதலில் இப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தவர்கள் எனத்தெரியவருகிறது. -பதிவு

  2. மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  3. இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி: எட்டுபேர் காயம் சனி, 31 மே 2008 [நிருபர் அ.மயூரன்] கட்டகமுவ கதிர்காமப் பகுதியில் இராணுவ வாகனம் இன்று காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது சிறீலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டு எட்டுபேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. - பதிவு

  4. விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்று அமெரிக்காவினால் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கனடா மாணவர் சாதனை. US accused student wins top MBA award at Canadian University Called role model by Professors and peers, Suresh Sriskandarajah, an MBA student at Wilfrid Laurier University in Canada who is facing charges of "terrorism and links to Liberation Tigers," won a prestigious "entrepreneurial student" award which carries a monetary value of $5000. The criteria for selection includes academic performance and student need, the campus newspaper CordWeekly said. “The university recognizes the principle in law of the presumption of innocence,” explained Ke…

  5. சிறுத்தீவு சிறிலங்கா தளத்தினை அழித்த போராளிகளுக்கு பொதுமக்கள் சார்பில் உலர் உணவுப்பொருட்கள் [சனிக்கிழமை, 31 மே 2008, 09:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளத்தினை தாக்கியழித்த கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணிப்போராளிகளுக்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் உலர் உணவுப் பொருட்களை வடமராட்சி கிழக்கு சமாச பொது முகாமையாளர் பாலசிங்கம் வழங்க கடற்புலிகளின் ஆளுகை பொறுப்பாளர் கண்ணதாசன் பெற்றுக்கொண்டார். ஒன்றரை லட்சம் பெறுமதியான சோடா பிஸ்கட் போன்ற பல உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. …

    • 0 replies
    • 1.2k views
  6. எமது பரிந்துரைகளை சிறிலங்கா அரசு செயற்படுத்தவில்லை: ஐ.நா. பிரதிநிதி பிலிப் அலஸ்டன் [சனிக்கிழமை, 31 மே 2008, 09:28 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை மனித உரிமை நிலைமையை சீர்ப்படுத்துவதற்காக தன்னால் முன்வைக்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பிலிப் அலஸ்டன் தெரிவித்துள்ளார். இலங்கைப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக, இலங்கையில் மனித உரிமை நிலைமையை திருப்திகரமான நிலைக்கு கொண்டுவர இலங்கைக்கு செய்திருந்த பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் பிலிப் அலஸ்டன் இதனைத் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிலிப் …

    • 0 replies
    • 609 views
  7. வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தூண்டில் தொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை சிறிலங்காப் படையினர் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 568 views
  8. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான சிறிலங்காவின் அனைத்து கட்சிக்குழுவில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவையும் இணைத்துக்கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 797 views
  9. சோதியா படையணியின் துணைத்தளபதி லெப்.கேணல் செல்வியின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பங்கேற்று வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. கிழக்கில் இருந்து விலகிச் சென்ற ஜெயந்தன் படையணியை புலிகளின் தலைமைப்பீடம் மீண்டும் கிழக்கிற்கு அனுப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், அம்பாறையிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள் 11 ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியிலும், 16 ஆம் திகதி நாவற்குடாவிலும், 20 ஆம் திகதி அரசடியிலும் வைத்து தலா ஒவ்வொரு பொலிஸார் என மொத்தம் மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில்! அதேநேரம், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்கதல்கள் நடத்தப்பட்டு பலியெடுக்கும் படலம் தெ…

    • 11 replies
    • 2.4k views
  11. மண்டைதீவு சிறுத்தீவு கடற்படையினரின் முகாம் விடுதலைப் புலிகளின் ஈரூடகப் பிரிவினரால் தாக்கியழிப்பு. குறைந்தது 13 கடற்படையினர் பலி. பலர் காயம், ஆயூதங்கள் மீட்பு. Sea Tigers destroy SLN camp close to Jaffna city Liberation Tigers of Tamileelam (LTTE) Sea Tigers naval wing launched a raid in the early hours of Thursday on the Sri Lanka Navy camp located at Chi'ruththeevu islet, close to Ma'ndaitheevu island and Jaffna city, LTTE officials in Vanni told TamilNet. At least 13 Sri Lanka Navy personnel were killed and many sailors wounded in the raid carried out by a special marine wing of the Sea Tigers, the Tiger officials said adding that they have seized weapons and mili…

    • 29 replies
    • 5.4k views
  12. வீரகேசரி இணையம் - அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்இகடலில் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதயே அவதானிக்க முடிகிறது.சமீப காலமாக கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன.இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும்இநவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இதேவேளை இவ்வாறான தாக்குதல் முன்னோட்டங்கள் புலிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள அவாவி நிற்கும் பெருமெடுப்பிலான பாரிய தரைவழித்தாக்குதலுக்கான முன் அதிர்வுகளாகவும் எதிர்பார்க்…

    • 0 replies
    • 792 views
  13. இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அய்யாத்துரை நடேசன் கொல்லப்பட்டு இன்று 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 ஆம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை காலை 8 மணியளவில் தனது வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுததாரிகளினால் அவரது உயிர்காவுகொள்ளப்பட்டது. 2002 ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதானம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்த காலப்பகுதி அது. இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க கோலோச்சியகாலம் அது. விடுதலைப் கிழக்கின் தனித்துவம்பேசி புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறிய மிகப்பரபரப்பான காலம் அது. வீரகேசரி,ஐ.பீ.சீ மற்றும் உள்நாட்டு இலத்திரணியல் ஊடகங்களில் செய்தியாளராக கடமையாற்றிய நடேசன் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். ரிச்சார்டீ சொய்…

    • 0 replies
    • 869 views
  14. உணவுப்பொருள் தட்டுப்பாட்டால் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் போதிய உணவின்றி பாதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இராசலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். “உணவுப் பொருள்கள் உட்பட ஏனைய பொருள்களின் விநியோகம் 80 வீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு போதியளவு உணவுப் பொருள்களை வழங்கமுடியாதுள்ளது” என மாவட்ட செயலாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறினார். உணவுப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றபோதும் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் 12,000 பேருக்கு உலக உணவுத் திட்டத்தின் ஊடாகவும், ஏனைய 17,000 பேருக்கு இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழும் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றார் அவர். “அரசாங்கம…

    • 0 replies
    • 553 views
  15. கடந்த வாரம் ஈபிடிபி துணை இராணுவ ஆயுதக்குழுவின் உப தலைவரென்று கூறப்படும் யாழ் வடமராட்சி கரவெட்டி ஆனைப்பந்தியை சேர்ந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம், அவரது தாயாரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டதும், அக்கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாக இலங்கை அரசும், அதன் துணை இராணுவக்குழுக்களும் போட்டி போட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிந்ததே. http://www.orunews.com/?p=1101

  16. களனி பிரதேசத்தில் தமக்கு ஒத்துழைப்பு நல்கும் ஒரு சில மதுபானக் கடைகளைத் தவிர்ந்த ஏனையவற்றை மூடப் போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனிசிறி என்ற புதிய பாலம் திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். களனி விஹாரையின் மாநாயக்க தேரர் கொள்ளுப்பிட்டி சங்கரக்கித்த தேரர் பெருந்தெருக்கள் அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க களனி விஹாரையின் பஸ்நாயக்க நிலமேல தம்மிக்க அடிகல விமான சேவைகள் பணிப்பாளர் நாளக பமுனுசிங்க தொலைதொடர்பு ஆணைக்குழுவின் தலைவர் பிரியன்த காரியப்பெரும ஆகியோர் உள்ளிட்ட பல முக்கியஸ்தாகள் கலந்து கொண்டனர். மேலும் களனி பிரதேசத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி கடைகளை மூடுவதற்கும் மாதமொன்றுக்கு 4 மாடுகளை விடுதலை…

    • 0 replies
    • 772 views
  17. எந்தவொரு நேரத்திலும் பஸ் வண்டிகள் பயணிக்கும் பாதை மற்றும் அவை பயணித்துக் கொண்டிருக்கும் இடம் என்பவற்றை வாகன ஓட்டுனர்களும், பொது மக்களும் இணைய வழி உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிந்துகொள்ளும் திட்டம் ஒன்றினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்தும் இதனூடாக எவ்வாறு பயனடைவது என்பது குறித்தும் உள்ளூர் பத்திரிகைகள் ஊடாக பொதுமக்களை அறிவூட்டவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஏ.ஜெப்ரி தெரிவித்துள்ளார். "பஸ் பயணிக்கும் வழிகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே பயன்பாட்டிலுள்ளன. வெளிநாட்ட…

    • 0 replies
    • 787 views
  18. வீரகேசரி நாளேடு - மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்தைய நாடுகள் விதித்தால் அது இலங்கையின் இனப்பிரச்சினையின் தாக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான பல உதவித் திட்டங்களை மனித உரிமைமீறல்களை காரணம் காட்டி நிறுத்தியுள்ளன. இந்த நிலையில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதில் அனுதாபம் காட்டப்பட வேண்டுமென சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார். ஆடை ஏற்றுமதி தொடர்பான கோட்டா முறையை ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொண்டால் இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிய வறுமை நிலைக்கு உள்ளாவர்…

  19. 1958 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல- இலங்கைத் தீவின் வரலாறுகளில் தொடரும் முரண்பாடு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் அளித்துள்ளார். "58 இனவெறிக்கு அகவை 50" நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்பு உரை தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய காரணியாக இருக்கின்ற- இருந்து வருகின்ற 1958 ஆம் ஆண்டு இனவெறித் தாக்குதல்கள் தொடர்பான இந்த அரங்க நிகழ்வுகள் உண்மையாக எல்லோரது மனங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. எல்லோரினது உள்ளங்களிலும் இன உணர்வு தூண்டப்பெற்று விடுதலைக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்ற விடுதலை உணர்வில்…

    • 0 replies
    • 744 views
  20. விசேட சலுகைக்காக சர்வதேசத்தை இறைஞ்சுகின்றது இலங்கை 31.05.2008 போரியல் போக்கிலும் தமிழருக்கு எதிரான இராணுவக் கெடுபிடித் தீவிரத்திலும் ஒரேயடியாக உறுதியாக நிற்கும் தென்னிலங்கை அரசுக்கு இப்போதுதான் உண்மை மெல்ல மெல்லச் சுடத் தொடங்கியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் தனது வெறிப்போக்குக்கு சர்வதேசம் அங்கீகாரம் தராது என்பது இப்போதுதான் கொழும்புக்குப் புரிய ஆரம்பித்திருக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களைத் தூண்டி, முன்னெடுத்து, மேற்கொண்டு வரும் அரசின் செயற்போக்குக்கு எதிராக உலகின் சீற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே, உலகில் மனித உரிமைகள் பேணலுக்கான உயர் காவல் கட்டமைப்பு என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைக…

  21. ஹலோ றஸ்ட் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியரின் சகோதரி கடத்தப்பட்டுள்ளார் சனி, 31 மே 2008 [நிருபர் அ.மயூரன்] இனம் தெரியாத ஆயுததாரிகளால் ஹலோ றஸ்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களது சகோதரி 23 ம் திகதி அவரது வீட்டில் இருந்து பலவந்தமாக முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் யாழ்பாணம் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்போது கடத்தப்பட்டவர் 22 அகவையுடைய சுப்பிரமணியம் பிரேமரஞ்சினி எனவும் இவர்கள் சiசாலை வடக்கு தென்மராட்சியை சேர்ந்தவர்கள் எனவும் கொலை அச்சுறுத்தல் காரணமாக மானிப்பாய் வலிகாமம் பகுதிக்கு தனது சகோதரர் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தவர் எனவும் அறியமுடிகிறது. கடத்தல்காரர்கள் முதலில் இவரது…

  22. 'இந்தியத் தடை நீடிப்பில் நமது படிப்பினைகள்" -சேரமான்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மே 15 ஆம் நாளன்று இந்தியப் பேரரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது. இந்தியப் பேரரசு தனது வழமையான பொய்யான கருத்துப் பார்வையிலிருந்தே, அதாவது தமிழ்நாட்டிலும் இந்தியப் பேரரசின் கீழ் இருக்கும் இதர தேசிய இனங்களிடத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கவே இத்தடை என்று கூறியிருக்கிறது. தடைகள்தான் தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர- தடை நீக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது இந்திய ஆளும் வர்க்கம் குடிகொண்டிருக்கும் புதுடில்லியின் தெற்கு மாடம் எனப்படுகிற ~சௌத் புளொக்|கிற்கு இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் தெரியவில்லை போலும்! …

  23. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை பகுதிகள் இந்தியாவுக்குத் தாரை வார்க்கப்படுவதாக ஜே.வி.பி. கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: கிழக்குப் பிரதேச பகுதிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாட்டின் உள் அரசியலில் தலையிடுவதன் மூலமாக புவியியல் மற்றும் பொருளியல் நலன் வாய்ந்த கிழக்குப் பிரதேச பகுதிகளின் மூலம் பயனடைய இந்தியா முயற்சிக்கிறது. நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சினீத் தொழிற்சாலை பகுதி ஆகியவை இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட உள்ளன. சம்பூரில் இந்தியா சார்பில் அனல் மின்நிலை…

    • 0 replies
    • 762 views
  24. திருகோணமலை மூதூர் கடற்றொழிலாளர்கள் மீதான மீன்பிடித் தடையானது மகிந்தவின் ஒரு அரசியல் பழிவாங்கலா என்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் கட்டுரை: மூதூர் பகுதியில் காலை உணவை உட்கொள்ளாத சில பாடசாலை மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். மூதூரில் மீன்பிடித் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத

    • 0 replies
    • 733 views
  25. மனித உரிமைகளும், ஜனநாயகமும் மேம்பட வேண்டிய நாடுகளில் சிறிலங்காவும் அடங்கியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் அங்கத்துவத்தை சிறிலங்கா இழந்த பின்னர் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பினால் வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு அதிக அதிகாரங்களை சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்துவதுடன், அதற்கான அழுத்தங்களையும் மேற்கொள்ளும். மனித உரிமை மீறல்களை ந…

    • 0 replies
    • 823 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.