ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
வன்னியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்களுக்கெதிரான படுகொலைத்தாக்குதல்களை கண்டித்து யாழ். குடாநாட்டில் மாணவ சமூகத்தினர் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறிலங்காப் படைதரப்பு கடும் விசனமுற்றுள்ளது. அத்தோடு கடும் எச்சரிக்கையும் படையினர் விடுத்துள்ளனர். மாணவர்கள் எக்கட்டத்திலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனவும், பாடசாலைகளில் கறுப்புக் கொடிகளை கட்டுதல், வகுப்புகளை பகிஸ்கரித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என வடமராட்சியில் உள்ள 524 ஆவது படையணியின் கட்டளைப் பணியக அதிகாரி கேணல் விக்கிரமரட்ன எச்சரித்துள்ளார். வன்னிப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களில் பாடசாலை மாணவர்…
-
- 0 replies
- 668 views
-
-
சண்டே ரைம்ஸ் சிரேஸ்ட ஊடகவியலாளர் கிறிஸ்தோபர் கமலேந்திரனை கடந்த இரு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவர் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர். சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் பல்வேறு பட்ட துறைகளில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ஆவார். இந் நிலையில் இவரது அடையாள அட்டை வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 653 views
-
-
தமிழினத்தின் மீது 1958 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் 50 ஆவது நினைவு நிகழ்வு கண்காட்சி கிளிநொச்சியில் நேற்று முன்நாள் புதன்கிழமை தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 483 views
-
-
தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எழுச்சி கொள்ளும் போது, தமிழினம் இமாலய வெற்றிகளைப் பெற முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 589 views
-
-
கருணா மீண்டும் இலங்கைக்கு திரும்பினால், அவர் மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. அவர் இலங்கையர்களுக்கு மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அந்த சபை கேட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் பணிப்பாளர் நாயகம், அரினே கான் இன்று பி பி சி சந்தேசிய வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கோரிக்கைகளை விடுத்தார். அவர் எவ்வாறு விசாரணை செய்யப்பட்டு வழக்கு தொடரப்படுவது தொடர்பில் இலங்கையில் சட்டமுறை எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கு இது ஒரு பரீட்சையாகும் என கான் குறிப்பிட்டுள்ளார். கருணா இலங்கை மக்களுக்கு எதிராக குற்றம் செய்தமை காரணமாக அவரை தண்டிக்கவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என அவர் …
-
- 0 replies
- 693 views
-
-
கச்சதீவு கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது நாளைவரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு வீரகேசரி இணையம் 5/28/2008 5:26:23 PM - கச்சதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 23 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் நேற்றிரவு கைது செய்து பொலிசாரிடம் கையளித்ததையடுத்து, அவர்கள் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிபதி ரீ.ஜே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இராமேஸ்வரம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த 23 மீனவர்களும் உடனடியாக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
- 2 replies
- 852 views
-
-
குருநகரில் இருவர் கடற்படையின் எறிகணை வீச்சில் பலி. இன்று விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான சிறுத்தீவில் கடற்படைமுகாம் தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினரின் செல் வீச்சுக்கு குறைந்தது இருவர் கொல்லப்பட்டார்கள். ஜோசப் பிரான்சிஸ், ஜோசப் பிரான்சிஸ் சகாயராணி ஆகிய தம்பதிகளே கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 9 பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். Civilians killed in shelling after LTTE raid [TamilNet, Thursday, 29 May 2008, 01:32 GMT] At least two civilians, a couple, were killed and nine persons were wounded when shells hit the coastal villages Kurunakar, Kozhumpuththu'rai, Paasaiyoor and in the areas close to J…
-
- 5 replies
- 1.7k views
-
-
பயங்கரவாத்திற்கு எதிராக மகிந்த ராஜபக்ஸ நடத்தி வரும் போருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள், ஊடக ஒடுக்குமுறையானது, யுத்தத்துடன் கைகோர்த்து கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து மற்றுமொரு ஊடகவியலாளர் யுத்தம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து கேட்டதுடன், ஊடக ஒடுக்குமுறைக்கு எதுவான அவசரகால சட்ட நீடிப்பு மீதான வாக்கெடுப்பில், ஐக்கிய தேசிய கட்சி ஏன் எதிராக வாக்களிப்பதில்லை எனவும் கேள்வி எழுப்பினார். இவற்றுக்கு பதிலளித்த ஐக்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
தென் தமிழீழத்தில் அரசின் பயங்கரவாதம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் 7 வயதுச் சிறுவனை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் கூட தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
ஜே.வி.பி.யின் 5ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிக் கொண்டிருந்த கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க திடீரென தமிழில் பேசத் தொடங்கினார். இதன்போது சிங்களவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களுடன் நட்புறவுடன் பழக வேண்டும். இதன்?லமே இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும் எனக் கூறினார். 5ஆவது தேசிய மாநாடு நடந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உங்களிடத்தில் தமிழ் மொழியில் ஒருசில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டே சோமவங்ச அமரசிங்க தமிழ் மொழியில் பேசத்தொடங்கினார். அவர் தொடர்ந்தும் தமிழில் பேசுகையில் கூறியதாவது: அன்பார்ந்த தோழர்களே இனவாதம் இல்லாத ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஏனென…
-
- 4 replies
- 1.7k views
-
-
இரு இளவயது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுதிய குற்றச் செயலையோ, மறுநாள் மீண்டும் வந்து மூத்த பிள்ளையை வெள்ளைவானில் கடத்திச் சென்ற கடத்தல் சம்பவத்தையோ பதிவுசெய்ய மறுத்தது பொலிஸ். அதுசம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தயாரற்று வாளாவிருந்தது பொலிஸ். கல்முனையில் 10,11 மே 2008 இல் நடந்தேறிய இந்தச் சம்பவத்தை ஆசிய மனித உரிமைகள் குழு (AHRC) பதிவுசெய்திருக்கிறது. ஒரு மனிதாபிமான வேண்டுகோள் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டும், கடத்தப்பட்டவரை வெளியில் கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படியும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினரோ இல்லையோ இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படியும், இ…
-
- 10 replies
- 3.6k views
-
-
அரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது. இந்த தீர்மானம் அரபு நாடுகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டால்ää இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக்காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் ட…
-
- 14 replies
- 2.7k views
-
-
விமானங்களால் கொழும்பில் மக்கள் பீதி வீரகேசரி இணையம் 5/29/2008 9:02:14 AM - கொழும்பில் நேற்றிரவு பறந்த மர்ம விமானங்களால் நகர மக்கள் மிகவும் பீதியடைந்தனர். வெளிச்சம் அற்ற நிலையில் விமானங்கள் பறப்பதை நேற்றிரவு 7.15 மணியளவில் கொழும்பு நகரின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானித்துள்ளனர். தொடர்ந்தும் இந்த மர்ம விமானங்கள் பறந்தமையால் மக்கள் பீதியடைந்தனர். இதனால் நேற்றிரவு தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மேற்படி விமானங்கள் விமானப்படைக்கு சொந்தமானவை எனவும் விமானப்படை விமானங்கள் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டதாகவும் விமானப்படை தலைமையகம் தெரிவித்தது.
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தவுடன் கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைத்து தமிழக மீனவர்களின் நலனை காப்போம் என யாழ்ப்பாணம் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ராமேஸ்வரம் வருகை தந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; இலங்கை தமிழர்களுக்காக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ,பி,ஆர்,எல்,எப்,) ,அகில இந்திய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய அமைப்பு ஆகிய 5 கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி தமிழர்களுக்கு தனிநாடு கோரி போராடி வருகிறோம். எங்கள் அமைப்பில் விடுதலைபுலிகள் இல்லாவிட…
-
- 4 replies
- 2.3k views
-
-
"சார்க்' நல்லெண்ண தூதர்களாக சனத் ஜயசூரிய, ஷபனா அஷ்மி [29 - May - 2008] இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சனத் ஜெயசூரியாவும் இந்தியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல ஹிந்தி நடிகையுமான ஷபனா அஷ்மியும் சார்க் நாடுகளின் எய்ட்ஸ் விழிப்புணர்வுத் திட்டத்துக்கான நல்லெண்ணத்துக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவிலுள்ள சார்க் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற தெரிவுக்குழுக் கூட்டத்திலேயே அச்சபை அங்கத்தவர்களால் இவர்கள் இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இக்கௌரவப் பதவியினை வகிக்கும் நல்லெண்ணத்துக்கான தூதுவர்கள் அவர்களின் பதவிக்காலமான இரண்டு வருடகாலத்துக்குள் சார்க் அங்கத்துவ நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வார்களென எதிர்பார்க்கப…
-
- 0 replies
- 983 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இன்று காலை வானூர்தி நிலையத்தில் கறுப்புக்கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறித்து உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபர் விக்டர் பெரேராவிற்கு அக்கட்சி அவசர கடிதம் அனுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
தோஷ பரிகார பூஜைகளின் தமிழக அரசியல் தலைவர்களை யெல்லாம் விஞ்சும் வண்ணம், இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரம சிங்கேவின் மனைவி மைத்ரேயா, தேனி மாவ ட்டத்திலுள்ள குச்சனூர் சனீஸ் வரன் கோயிலுக்கு வந்து தூள் கிளப்பிவிட்டுப் போயிருக்கிறார். ரணில் விக்கிரம சிங்கேவின் ஜாதகத்தைப் பார்த்தபோது, அவ ருக்கு ஜென்ம சனி பாதிப்பு இருப்பதால், உடல் நலம் சம்பந்த மான பிரச்னைகளை எதிர்கொள்ள, தென்மேற்குப் பகுதியில் உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் வேண்டுதல் செய்துகொள்ள பிரபல ஜோதிடர்கள் அட்வைஸ் செய்தி ருக்கிறார்கள். அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன் மைத்ரேயா, குச்சனூர் வந்து பிரார்த்தனை செய்து விட்டுப் போனார். தற் போது, தனது கணவரின் தோஷங் கள் விலகியதற்காக சனிபகவா னுக்கு நன்றி சொல்லி பூஜைகள்…
-
- 8 replies
- 3.2k views
-
-
ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான இலங்கை பிரதிநிதிகளுக்கும்,மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை க்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் ஆஜர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது மன்னாரில் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையி
-
- 0 replies
- 955 views
-
-
வவுனியாவில் கிளேமோர் மூன்று பொலிசார் காயம். வவுனியாவில் சிறிலங்கா பொலிசார் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இன்று காலை கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் மூன்று சிறிலங்கா பொலிசார் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தயசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 2 replies
- 1.2k views
-
-
விவசாயம்,அபிவிருத்திக்கு இலங்கைக்கு உதவ தயார் - உலக வங்கி தெரிவிப்பு வீரகேசரி இணையம் 5/28/2008 11:37:12 PM - விவசாயம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்காக இலங்கைக்கு உதவ உலக வங்கி தயாராக உள்ளது. அணைக்கட்டுகளை பாதுகாத்தல் மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் நாக்கோ இஷி தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாக்கோ இஷி மேலும் கூறியதாவது: 350 நடுத்தர மற்றும் பாரிய அணைகளிலேயே இலங்கையின் விவசாயம் தங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
வவுனியா செல்வநகரில் குடும்பப்பெண் சுட்டுக்கொலை வவனியா மன்னார; வீதி செக்கடிபிலவு பகுதியில் உள்ள செல்வநகர; குடியேற்றத்திட்டத்தில் ரதியக்கா என்றழைக்கப்படும் பாஸ்கரன் மேரி ஜோசப்பின் (52) இனந்தெரியாதவர;களினால் நேற்று இரவு 7.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர் கணவன் கொல்லப்பட்ட 20 நாட்களின் பின்னர; இவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர;. இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகள், இவரை அழைத்து வீட்டிற்கு வெளியே வைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவரின் கணவன் சின்னத்தம்பி பாஸ்கரன் கடந்த 8 ஆம் திகதி பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் வந்தவர;களினால் சுட்டுக்கொல்லப்பட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
'மஹிந்த சிந்தனை' ஆட்சியில் தகிக்கின்றது இலங்கைத் தீவு 29.05.2008 "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதையாக' இருக்கிறது ஜே.வி.பி. இப்போது மேற்கொள்ளும் பிரசாரமும் சூளுரையும். தற்போது ஆட்சியிலிருக்கும் அரசை வீழ்த்தி விரைவில் நாட்டுக்குப் பொருத்தமான மக்களின் விருப்பை நிறைவேற்றக்கூடிய அரசை ஆட்சியில் அமர்த்துவோம் என்றும் அது பிரதிக்ஞை செய்திருக்கின்றது. கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதன் ஐந்தாவது தேசிய மாநாட்டிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா இவ்வாறு சபதம் செய்திருக்கின்றார். நல்லது. இன்று தான் சூளுரைக்கும் விவகாரத்தைத் தன்னால் செய்யக்கூடியதாக இருந்தபோது, "மஹிந்த சிந்தனை'யைத் தூக்கிப்பிடித்து, அந்த வாய்ப்பைக் கோட்டை விட்ட ஜே.வி.பி., இப…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வு ஒளித்தொகுப்பு
-
- 1 reply
- 2.2k views
-