ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
27.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்.
-
- 0 replies
- 1.9k views
-
-
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் முனைப்புகளை தீவிரப்படுத்தலாம் என லண்டனில் உள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு யுத்தக்களத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிநோக்கி படையினர் தாக்குதலை மேற்கொண்டாலும் விடுதலைப்புலிகளால் நாடுமுழுவதும் தாக்குதல் நடத்தும் வல்லமை உள்ளதாகவும் அந்த மையத்தின் புலனாய்வுதுறை ஆய்வாளரான ஜோன் டிரக் தெரிவித்துள்ளார். http://www.swissmurasam.info
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரது தலைமையிலான கையாலாகாத அமைச்சர்களும் தேசத்துரோகிகள் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 824 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, சனத் பாலசூரிய, போத்தல ஜெயந்த ஆகிய ஊடகவியலாளர்களை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணிப்புரியும் இவர்கள் இருவரையும், நிறுவனத்தின் பணிப்பாளர் ஊடாக கடந்த திங்கட் கிழமை அழைத்துள்ளார். பேச்சுவார்த்தை என தாம் அழைக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு செயலாளர் கட்டளையிடுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தது என தொழில்சார் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊடக நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, அரச படையினருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் விமர்ச்சிக்க வேண்டாம் எனவும் இராணுவத்தை நேசிக்கும் மக்கள் நாட்டில் இருப்பதாகவும் அவர்களினால் இந்த ஊடகவியலாளர்களுக்கு …
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். நகருக்கு அண்மையில் உள்ள நாவாந்துறையில் ஊடகவியலாளர் ஒருவரும் கணினி தொழில்நுட்பப் பணியாளர் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 870 views
-
-
கிழக்கில் இனக்கலவரத்திற்கு காரணமான சக்திகளை விரைவில் அம்பலப்படுத்தப்போவதாக சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 744 views
-
-
யாழ். நகரப் பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 821 views
-
-
யாழ். மாவட்டம் மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 942 views
-
-
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்காணிப்பு பொறிமுறை ஒன்று இலங்கையில் அவசியம் நிறுவப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரெரா வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 631 views
-
-
கிழக்கில் தற்போது நிலவிவரும் பதட்ட நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சியொன்றும் சதித் திட்டம் தீட்டிவருவதாக தேசிய பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புலனாய்வுத் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் இன்று (மே28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கிழக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, மக்களுக்கு ஜனநாயக ரீதியான வெற்றியை???? பெற்றுக் கொடுத்துள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த நிலைமை…
-
- 2 replies
- 887 views
-
-
கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாம் 26ம் திகதி வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 475 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் அமைச்சர்களான த.மு. தஸாநாயக்க மற்றும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதலின் காரணமாக 24 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 622 views
-
-
புலனாய்வுத் தகவல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் பகிர்ந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் இலங்கை கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் வசந்த கருணாகொட, மோசமான ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயணப் பொருள்களை திறந்த கடல்மார்க்கமாக தேவையான துறைமுகத்துக்கு அவர்கள் எடுத்துச்சென்று தாக்குதல்களை நடத்தும் சக்தியைக் கொண்டிருப்பதாகக் கூறினார். தென்மேற்கு அரேபியாவின் துறைமுக நகரமான அடனில் கோல் கப்பல், ஜோர்தானில் அமெரிக்காவின் போர்க்கப்பல் மற்றும் பிரான்சின் லிம்பேர்க் கப்பல் தாக்கப்பட்டவற்றை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும் என அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் தாக்குதல்களைப் போலவே இந்தத் தாக்குதல்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்…
-
- 0 replies
- 932 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் சின்ன ஊரணியில் இன்று அதிகாலை 2 தமிழ் மீனவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 699 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் கடந்த மூன்று நாட்களாக நடைமுறையில் இருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதையடுத்து அங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 509 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் வசந்த பெரேராவிற்கு 15,000 ரூபாவை அபராதப் பணமாக வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு கொழும்பு நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
கொழும்பு தெஹிவலையில் தொடருந்து வண்டியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ளது. எனினும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா
-
- 61 replies
- 7.3k views
-
-
அடையாள அட்டைகள் காணாமல் போன சந்தர்ப்பத்தில் மீண்டும் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போரிடம் 3000 ரூபா அபாரம் அறவிடப்படவுள்ளது. இதற்கென ஆட்பதிவு சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு சட்டவிதிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய அடையாள அட்டையை பிணையாக வைக்க வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு எல்லா சந்தர்ப்பங்களிலும் தேசிய அடையாள அட்…
-
- 0 replies
- 984 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை தூதுவர்கள் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சர்வதேச சட்டங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிவிலக்கை அடுத்த வருடத்துக்கும் நீடிப்பதற்கு அவசியமான மனித உரிமை விடயங்கள் இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை இந்தக் குழு கண்காணிக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை தூதுவர்களான நெதர்லாந்தைச் சேர்ந்த அர்ஜன் ஹம்பேர்க், சுவீடனைச் சேர்ந்த நோர்லான்டர் மற்றும் ஸ்பெய்னைச் சேர்ந்த ஸ்கோபா ஆகியோர் அடங்கிய குழு ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்…
-
- 0 replies
- 999 views
-
-
வீரகேசரி நாளேடு - இந்த ஆண்டின் தொடக்கம் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரையான காலப் பகுதியில் புலிகள் மற்றும் இராணுவத்தினரது 189 சடலங்களை உரிய தரப்புக்களிடம் கையளித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவித்த ஐ.சி.ஆர். சி.யின் உயர் அதிகாரியொருவர் மோதலில் பலியான வீரர்களின் சடலங்களை கைப்பற்ற நேருமிடத்து அதனை உரிய தரப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜெனீவா சமவாயம் தெரிவிக்கின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே ஐ.சி.ஆர்.சி. மோதலில் பலியானோரின் சடலங்களை உரிய தரப்புக்களிடம் ஒப்படைத்து வருகின்றது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை இரு தரப்பினரது 189 சடலங்களை உரிய தரப்புக்களிடம் கையளித்துள்ளோம். மன்னார்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தென்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவ மதகுருமார் கிளிநொச்சி சென்று மடு தேவாலயப் பகுதியை மோதல் இல்லாத புனித பிரதேசமாகப் பேணுமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து மடு மாதாவின் திருச்சொரூபம் தேவன்பிட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இராணுவத்தினர் மடு தேவாலயப் பகுதியைக் கைப்பற்றியுள்ள போதும் அங்கு காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு இணங்கியுள்ளனர். இந்த நிலையில், மடு தேவாலயப் பகுதியை புனித பிரதேசமாக மதிக்குமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுப்பதற்கு தென்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் கிளிநொச்சி செல்வதற்கு ஏற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : 2008-05-28 அப்பாவிகளை இலக்கு வைப்பது கண்டிக்கப்பட வேண்டியதே! ""பொதுமக்களை இலக்கு வைக்காதீர்கள். அப்பாவிகளை இலக்கு வைக்கக் கூடாது என்பதைப் பயங்கரவாதிகளுக்கு ஊடகங்களும் எடுத்துச் சொல்லவேண்டும்.'' இவ்வாறு பத்திரிகைகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஊடகவியலாளர்கள் குறிப்பாக ஊடகப் பொறுப்பாளர்கள் முன்னெடுக்கவேண்டிய முக்கிய பணி ஒன்றை நினைவூட்டியிருக்கின்றார் இலங்கைத் தேசத்தின் ஜனாதிபதி. சரி. இந்தப் பணியை முன்னெடுப்பதற்குப் பொறுப்பான ஊடகங்கள் இவ்வேலையை எப்படிச் செய்யப்போகின்றன என்பதே கேள்வி. அப்பணியைச் செய்வதற்கு ஊடகப் பொறுப்பாளர்களுக்கு சில வரைவிலக்கணங்கள் தெரிந்திருப்பது புரிந்திருப்பது அவசியமானது…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொழிற்றுறைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் கோட்டாவை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் எதுவிதமான கோரிக்கையும் இதுவரை விடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன இணைப்பு மற்றும் தகவல்துறை தொடர்பான பிரதித் தலைவர் மாகொட் வெல்ட்ஸ்ஹோம், வெளிநாட்டு தொடர்பான ஆணையாளர் பெனீட்டா பொரோ மற்றும் வர்த்தக ஆணையாளர் பீட்டர் மெண்டெல்சன் ஆகியோரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில…
-
- 1 reply
- 966 views
-
-
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டமை, கிழக்கை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமே - புத்திஜீவிகள், கல்விமான்கள் அதிருப்தி ! May 27,2008 கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சு ஏனைய மாகாணங்களில் உள்ளதுபோல், முதலமைச்சரின் கீழ் கொண்டு வரப்படாது தனியான அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து புத்திஜீவிகளும் கல்விமான்களும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். இது கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ள புத்திஜீவிகள், இதற்கு முன்னோடியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இம்மாகாணத்தில் மாகாண சபை உறுப்பி…
-
- 0 replies
- 863 views
-
-
தனித்தமிழ் இராச்சியம் என்ற கோரிக்கை தொடர்பாக வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - புருஸ் பீன் Tuesday, 27 May 2008 ஒரே இலங்கைக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் தீர்வுத் திட்டத்திற்கு 95 வீதமான தமிழர்கள் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் கருத்து வெகுசன வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பீன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இயங்கும் தமிழர் அமைப்பின் சட்டத்தரணியான புருஸ் பீன் இந்த சவாலை விடுத்துள்ளார். இதன்படி, 5 வீதமான மக்களே பிரபாகரனுக்கு ஆதரவு வழங்குவதாகவும், இதனால் தனித்தமிழ் இராச்சியம் என்ற கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளக், சண்டே ஒப்சர்வர் பத்திரிக…
-
- 0 replies
- 878 views
-
-
கொழும்பு நகரின் கதிரேசன் வீதியில் நேற்று (மே27) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரவு 8.30 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனம்தெரியாத நபர்களால் சுடப்பட்டவர் பாலாஜி லொட்ஜ் உரிமையாளரான 56 வயதுடைய எஸ் முத்தையாபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வியாபார நிலையத்தின் முன்பாக நின்றுகொண்டிருந்த இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய வேளை 100 மீற்றருக்குட்பட்ட பகுதியில் காவற்துறை மற்றும் படையினர் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு பெற்றாவில் வீரமைலன் மண்டப உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.2k views
-