ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
கொழும்பில் நால்வருக்கு மரண தண்டனை கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட நால்வருக்குக் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர நேற்று மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கினார். 1996 ஜூலை 31 ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து கபில பெரேரா என்பவரைக் கொலை செய்தனர் என அறுவர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் வழக்கு விசாரணையை எதிர்கொண்ட நால்வருக்கு எதிராக நேற்று மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. (உ) http://www.sudaroli.com/pages/news/today/16.htm
-
- 0 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்? இரு நாட்களில் வெளியிட அரசாங்கம் உத்தேசிப்பு புதன், 14 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்] கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் முன்னணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அதிகூடிய விறுப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/?p=241
-
- 0 replies
- 849 views
-
-
திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த விநியோகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பெட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தல மோசடி-(காணொளித் தொகுப்பு,புகைப்படத்தொகுப்பு) தொடர கீளே சொடுக்கவும்....................... http://esoorya.blogspot.com/2008/05/more-p...rigging-by.html
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (May 13) பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர் பேரவை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இதற்காக வேண்டி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் (May 11) பிரித்தானியாவிலுள்ள இலங்கை மாணவர் பேரவையின் அழைப்பின் பேரில் லண்டன் வந்துள்ளார். ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து.............. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8218.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அக்கரைப்பற்று மக்கமடி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் அப்பகுதியின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களினால் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வழமை நிலை பாதிப்படைந்திருந்தது. இந்த மோதல் இரு அரசியல் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 15 காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சம்மாந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல்களின் போது பல சொத்துச் சேதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 672 views
-
-
பிள்ளையானுக்கு எதிராக வாக்களித்தோர் தாக்கப்படும் போது காவல் துறை உறக்கத்தில்! Wednesday, 14 May 2008 கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிவுற்ற தேர்தலில் பிள்ளையானுக்கு எதிராக வாக்களித்த கல்லாறு மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் புகுந்த பிள்ளையான் குழுவினர் மக்களை வீடு புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். இத் தாக்குதல்களை டீஎம்வீபீயின் காரியாலய பொறுப்பாளரான சின்தூரன் தலைமை ஏற்று நடத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இத் தாக்குதல் பேயாட்டம் கடந்த 11ம் திகதி முதல் இன்று வரை தொடர்வதாகவும் போலீஸில் புகார் செய்தால் கொலை செய்யப்படுவதாக பிள்ளையான் குழுவினர் எச்சரிப்பதால் பீதியில் மக்கள் போலீஸில் புகார் தொடுக்காமல் இருக்கின்றனர். குகநாதன் எனு…
-
- 0 replies
- 757 views
-
-
ஜனநாயகம், மனித உரிமை, தொழிலாளர் பிரிவுக்கான அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் பிரதி உதவிச் செயலாளர் எரிகா ஜே.பார்க்ஸ் ரக்லஸ் அடுத்த வாரம் சிறிலங்காவிற்கு செல்லவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 570 views
-
-
மட்டக்களப்பில் ஜேவிபியின் அலுவலம் மீது தாக்குதல்: சொத்துக்கள் தீக்கிரை செவ்வாய், 13 மே 2008 [மட்டக்களப்பிலிருந்து மகான்] மட்டக்களப்பு, காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனையிலுள்ள மக்கள் விடுதலைப் முன்னணி அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை 2.45 மணியளவில் இனத்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் முஹம்மட் றவூப்புக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பாலமுனையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தின் பின்புறம் அவரது இல்லம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஆயிரம் கோடி இந்திய ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தூத்துக்குடியில் நேற்று ஊடவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டில் இருந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து அப்பாவி மீனவர்களை படுகொலை செய்து வருகின்றனர். இதுவரை 300 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை சுட்டு கொல்லும் இலங்கை கடற்படையினர்இ சில சந்தர்ப்பங்களில் படகுகளை சேதமாக்கியும்இ மீன்களை அபகரித்து வருவதுடன் மீனவர்களை பிடித்துச் சென்று சித்திரவதை செய்து வருவதாகவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடந்த 2…
-
- 0 replies
- 1k views
-
-
'சிங்களத்தின் படைத்துறை மேலாண்மை தோற்றப்பாட்டினைக் கலைத்துவிட்ட முகமாலை படுதோல்வி" -எரிமலை- சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்துறையினரும் இன்னமும் முகமாலையில் ஏற்பட்ட பாரிய படுதோல்வியில் இருந்து மீளமுடியாது இருக்கின்றனர். அது மட்டுமல்லாது, மகிந்த அரசாங்கத்தின் முழு நிகழ்ச்சித் திட்டமுமே இந்த நடவடிக்கையின் ~வெற்றியை| நம்பியே மூதலீடும் செய்யப்பட்டிருந்தது. மே மாதம் 10 ஆம் நாள் இடம்பெறவிருக்கின்ற கிழக்கு மாகாணத் தேர்தலில் இருந்து வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம், அரசியல் பொருளாதார நெருக்கடிகள் போன்ற அனைத்து சிக்கல்களுக்குமான சர்வரோக நிவாரணியாக ~இந்த வெற்றி செய்தியையே| ஜனாதிபதி மகிந்த நம்பியிருந்தார். அதாவது படையினர் முகமாலையில் விடுதலைப்புலிகளின் …
-
- 0 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதாக வெளியான செய்தியைக் கேட்டதும் மட்டக்களப்பின் காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஏன்?? எதற்கு?? உருக்கமானகாரணம்................................... . தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6534.html
-
- 5 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பின் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 726 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முதல் நாள் அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 862 views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், முஸ்லீமோ, தமிழரோ என்பதில் தமக்கு பிரச்சினை இல்லை எனவும் தெரிவுசெய்யப்படும் முதலமைச்சர் கிழக்கில் இருந்து விரட்டப்பட்ட சிங்களவர்களை மீண்டும் அங்கு குடியமர்த்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்............. தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4191.html
-
- 0 replies
- 1k views
-
-
வாகனங்கள் பலவும் நொருக்கப்பட்டன அமைச்சர் அதாவுல்லா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கல்முனையில் வைத்து நேற்று மாலை நடத்தப்பட்ட கல்வீச்சு மற்றும் தாக்குதல்களினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், பலவாகனங்கள் அடித்து நொருக்கப்பட்ட நிலையில் விஷேட அதிரடிப்படையினர் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் அமைச்சர் அதாவுல்லாவை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் கல்முனையில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அரசு தரப்பு வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் அக்கரைப்பற்றிலிருந்து பெரும் ஊர்வலமாக மருதமுனையை நோக்கிச் சென்றனர். இ…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
- 8 replies
- 2.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணியில் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த உறுப்பினரின் கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் நடத்தப்படும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சில வாக்கு சாவடிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் பிள்ளையான் குழுவினால் விரட்டப்பட்டது, மாத்திரமல்ல சிலரை பலவந்தமாக அவர்களது முகாம்களுக்கு இழுத்துச் சென்று, வயர்களினால் தாக்கியதாகவும்.................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_3688.html
-
- 0 replies
- 1.1k views
-
-
முதலமைச்சர் பதவியை எனக்குத் தருவதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க Website
-
- 0 replies
- 906 views
-
-
விமல் வீரவன்ச எம்.பி. தலைமையிலான ஜே.வி.பி. யிலிருந்து பிரிந்து சென்ற அணியினர் தேசிய சுதந்திர முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளது. இக் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணையாளரிடம் முன்னணியின் பொதுச் செயலாளர் நந்தன குணதிலக எம்.பி. யினால் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலமாக விமல் தலைமையிலான ஜே.வி.பி. யின் ஒன்பது எம்.பி. க்கள் இணைந்து செயற்பட்டு வந்தனர். இந்நிலையில் தனது பிரச்சினைக்கு தீர்வு காண கட்சிக்கு மே மாதம் முதலாம் திகதிவரை விமல் வீரவன்ச காலக்கெடு கொடுத்திருந்தார். இல்லாவிட்டால் புது கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே ஏற்கனவே ஜே.வி.பி. யிலிருந்து வெளியேற்…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைப்படி, இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மௌனகுருசாமியை முதலமைச்சராக நியமிப்பது குறித்து.................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8590.html
-
- 0 replies
- 1.7k views
-
-
2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையின் எம்.ஜ. உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப். கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
கிழக்கு முதலமைச்சா பதவியை பிள்ளையான் தட்டிப்பறிக்க ஒருபோதுமே இடமளிக்கப்படாதென தெரிவித்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நாளை புதன் தான் முதலமைச்சாராக பதிவியேற்பது உறுதியென உறுதிபடத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை மேலும் தெரிவித்தாவது : கிழக்குத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகம் சார்பில் அதிக ஆசனங்களைப் பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவாரென மஹிந்த கூறியிருந்தார். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுடன் இது பற்றிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. கிழக்கில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் 8 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 8 தமிழர்களும் தெரிவாகியுள்ளனர். முஸ்லிம் சமூகம் அதிக பிரதிநிதிகளை பெற்றிருக்கும் நிலையில், நானே முதமைச்சராக வரவேண்டு…
-
- 10 replies
- 2.2k views
-
-
தமிழர்களுக்கான பூஸா சிறையில் பலர் சிங்களவர்களால் பாலியல் வல்லுறவு http://tamilnet.com/art.html?catid=13&artid=25626
-
- 3 replies
- 2.3k views
-