Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொடர் தாக்குதல்களின் எதிரொலி: சிறிலங்காவின் பங்குச் சந்தையில் சரிவு [சனிக்கிழமை, 07 யூன் 2008, 07:17 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து கொழும்பு பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வாரத்தின் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது. கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து இச்சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்குசந்தை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கம் எதிர்வரும் வாரமும் எதிரொலிக்கலாம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த சில ந…

    • 1 reply
    • 1.3k views
  2. கட்டுபெத்தவில் இடம் பெற்ற குண்டு தாக்குதல் காரணமாக தோன்றிய பதற்றமான சூழ்நிலையையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு வடபகுதியைச் சோந்த மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்ததாக த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பா.உ. சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். இது தொடர்பாக கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் : நேற்று காலை கட்டுபெத்த பகுதியில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து மொரட்டுவை பல்கலைக்கழகப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வடபகுதியைச் சோந்த பல்கலைக்கழக மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. இந் நிலையில், நிலைமை மேலும் மோசமாவதை த:டுக்கவும் வடபகுதி மாணவர்கள் மீது இரவில் தாக்குதல் நடத்தப்படலாம் என…

  3. தெஹிவளை முதல் இன்று (ஜூன்6) கட்டுபெத்த குண்டுத் தாக்குதல் வரையிலான பயங்கரவாத செயற்பாடுகளின் மூலம் பலமான விடுதலைப் புலி வலைமைப்பொன்று கொழும்பில் காணப்படுகின்றமை தெளிவாக புலனாவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வலைமைப்பை பூண்டோடு அழிக்கப்பதற்கு பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உரிய முறையில் வழிநடத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் படையினரின் முன்நகர்வுகளை சகித்துக் கொள்ள முடியாத பிரபாரகன் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்க…

  4. 'இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலைப் புலிகளை மாத்திரம் இலக்கு வைத்தே தாக்குதல்கள் நடத்துகின்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை.' இவ்வாறு அரசின் இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். 'இதனை நாங்கள் கடந்த காலங்களில் நிருபீத்திருக்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகளோ அப்பாவிப் பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததுத் தாக்குதால் நடத்துகின்றனர்.' என்றும் அவர் தெரிவித்தார். பி.பி.சி. தமிழ்ழோசை செய்திச் சேவைக்கு நேற்று இரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கூறியதாவது : கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இன்று (6ம் திகதி)இடம் பெற்ற இரு வேறு பஸ் குண்டுத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிக…

  5. dailymirror.lk வன்னி இழப்புக்களுக்கு இப்படி ஒரு மனிதாபிமானப் பார்வை இருக்குமோ..??!

  6. மொரட்டுவக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இன்று மாலை வரை 46 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 18 மாணவர்களும், 8 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர். கட்டுபெத்தையில் தங்கியிருந்தவர்களும், மொரட்டுவவில் தங்கியவர்களும், வணிக நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவப் பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு மாலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. அப்குதிக்கு பயணம் செய்த பிரதி அமைச்சர் ராதாகிஷ்ணன் கைது செய்யப்பட்டோரை சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் மாணவிகளை முதலில் விடுதலை செய்வதாக, கைது செய்யப்பட்டர்கள் தொடர்பான விபரங்கள் பெற்றோருக்கு அறிவிக்கப்படும் ஏனையவ…

    • 0 replies
    • 1k views
  7. புத்தளப் பகுதியில் இரு முஸ்லிம் குழுக்களிடையே மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. புத்தளம் கறிக்கட்டி ஏதிலிகள் முகாமில் இம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் ஆதரவாளர்களும், மீள் குடியேற்ற துணை அமைச்சர் ரிச்சாட் பத்தியூனின் ஆதரவாளர்களுக்கும் இடையே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இன்றைய நாள் ரவூப் ஹக்கீம் ஏதிலிகள் முகாமைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இக்குழுக்கள் இடையே மோதல்கள் இடம்பெற்றன. இதனால் இருதரப்பு ஆதரவர்களின் வாகனங்கள் தேசமாக்கப்பட்டன. அத்துடன் இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்களுக்கு உள்ளானோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/?p=967

    • 0 replies
    • 695 views
  8. புத்தளத்தில் ஜெலிக்நைற் குச்சிகளை வைத்திருந்து 5பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று புத்தளத்திலிருந்து கற்பிட்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டிகள் இரண்டில் ஒலிபெருகிகள் உள்ளே இக் குச்சிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இரு முச்சக்கர வண்டிகளில் சென்ற 4 முஸ்லிங்கள் மற்றும் சிங்களவர் ஒருவர் என ஐந்து பேரை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 364 ஜெலிக்நைற் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/?p=970

    • 0 replies
    • 617 views
  9. சிறை மீழும் செம்மலுக்கு கவர்னர் பதவி? June 06,2008 திருட்டுக் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்ட கருணா இன்று அல்லது நாளை விடுபடவுள்ளார். கருணாவுக்கு இங்கிலாந்து தஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டது. இந்தியாவுக்கு அனுப்பிவைப்பீர்களா என்று கருணா கேட்டுப்பார்த்தார். அதுவும் முடியாத காரியம் என்று மறுக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர் ஒரே வழி இலங்கைக்குத் திரும்பிச் செல்வதுதான். பழைய ஏஜெண்டுகளுடன் தொடர்பு கொண்டு என்னை எப்படியும் காப்பாற்றுங்கள் என்று கேட்டுள்ளார் கருணா. புங்குடுதீவு கிருஸ்ணன், உண்டியல் ஜெயதேவன் போன்றோர் இலங்கை உளவுத்துறை அதிகாரி கெந்த விதாரணையுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர். கருணாவை அரசியல் ரீதியிலும், பிள்ளையானை கொலை மற்றும் சிங்களக் குடியேற்றங்…

    • 2 replies
    • 2.3k views
  10. வெள்ளவத்தையில் கணினி விற்பனை நிலையத்தில் வெடி பொருட்கள் மீட்பு [06 - June - 2008] [Font Size - A - A - A] * பொலிஸார் தெரிவிப்பு கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில், கணினிகள் விற்பனை நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெகிவளை ரயில் பாதை குண்டுவெடிப்பையடுத்து புதன்கிழமை வெள்ளவத்தைப் பகுதியில் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை நடத்தினர். இதன்போதே கணினிகள் விற்பனை நிலையமொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது சி4 ரக வெடிமருந்து 3 கிலோ, வெடிக்கவைக்கும் கருவிகள் 5, மைக்ரோ பிஸ்ரல் 1, மைக்ரோ பிஸ்ரலுக்குரிய ரவைக்கூடு 1 என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …

  11. மொறட்டுவவில் தமிழ் மாணவர்களுக்கு அடி-உதை: 10 மாணவர்கள் உட்பட 30-க்கும் அதிகமானோர் கைது [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 07:07 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவ கட்டுப்பெத்தவில் இன்று காலை பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலையடுத்து மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்குள் தமிழ் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் பல்கலைக்கழகத்திற்குள் இருந்த தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். 10-க்கும் அதிகமான தமிழ் மாணவர்களை சிங்கள மாணவர்கள் நையப்புடைத்தனர் என்று பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிங்கள …

    • 3 replies
    • 1.8k views
  12. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கைகளைப் பலப்படுத்தி நாம் எழுச்சி கொண்டு வருகின்றோம் என்று தமிழ் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 775 views
  13. கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் எழுச்சியுடன் வீரமுரசு வார நிகழ்வு [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 04:51 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் வட்டத்தின் கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் வீரமுரசு வார நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இரவு எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வு பாரதிபுரம் வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை கப்டன் சரவணா, கப்டன் அறிவு ஆகிய இரு மாவீரர்களின் தந்தை பசுபதிப்பிள்ளை ஏற்ற, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு தூயவன் அரசறிவியல் கல்லூரி முதல்வர் அரசண்ணா ஈகைச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். பிரிகேடியர் பால்ராஜின் திருவுருவப்படத்திற்கு க…

    • 0 replies
    • 952 views
  14. முகமாலை: புலிகளின் உந்துகணைத் தாக்குதலில் டோசர் சேதம் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 04:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். முகமாலைப் பகுதியில் காவலரண் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்காப் படையினரின்டோசர் ஊர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதலிலேயே டோசர் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது. புதினம்

    • 0 replies
    • 1.4k views
  15. நிருபர் எல்லாளன் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 6ஆம் நாள் தமிழீழம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்கள் மீதி திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தியாகி பொன் சிவகுமார், மேஜர் முரளி ஆகியோர் நினைவிலான தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நினைவுகள் இன்று வன்னியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வுகள் த…

    • 2 replies
    • 1.2k views
  16. கண்டியில் குண்டுவெடிப்பாமே பஸ் ஒன்றில்

    • 8 replies
    • 2.2k views
  17. பொத்துவில் காட்டுப் பகுதியில் 9 பேர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 03:11 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் பொத்துவில் மியன்கொட காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டச்சென்ற 9 பேர் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளனர். பொத்துவில் பெரிய உல்லை ஊடாக மியன்கொட என்ற இடத்திற்கு நேற்று முன்நாள் புதன்கிழமை 12 பேர் அடங்கிய குழுவினர் விறகு விட்டச் சென்றனர். இவர்களை மியன்கொட காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டோரில் மூவரை ஆயுதாரிகளை நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்தனர். கடத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபா அடிப்படையில் 12 பேருக்குமான பணத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அப்போதுதான் 9 பேரும் விடு…

    • 2 replies
    • 1.5k views
  18. திருக்கோணமலை குறித்து ஜே.வி.பி பாரளுமன்ற உறுப்பினரின் கருத்து ஆதாரம் வீரகேசரி

    • 1 reply
    • 1.2k views
  19. இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது. இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. புலிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக இல்ரேஸ் எதுவித நன்மையையும் பெற வாய்ப்பில்லை. இலங்கைக்கு பொருளாத…

  20. வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரது நிலைகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் நடத்திய மோட்டார்த் தாக்குதலில் இரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை காலை 6.05 மணிக்கு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. நன்றி பதிவு இணையம்

  21. மொரட்டுவை பிரதேசத்தில் ஊரடங்கு அமுல் - குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்னர். இன்று காலை கட்டுபெத்த பிலியந்தலை வீதியின் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மொரட்டுவ கட்டுப்பெத்த பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் க்ளைமோக் குண்டொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.00 மணி முதல் 12.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனத…

  22. இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் கருத்து நிலைப்பாட்டை அப்படியே வெளிப்படுத்தி யிருக்கின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம்.கடந்த ஐந்து, ஆறு தசாப்தங்களாக இலங்கைத் தீவை ஆட்டிப்படைத்து வரும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுக்கும் இதய சுத்தியுடன் கூடிய எண்ணப் போக்கு இந்த அரசுக்கு இல்லவே இல்லை என்பதை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றா

  23. விசேட சலுகைக்காக சர்வதேசத்தை இறைஞ்சுகின்றது இலங்கை 31.05.2008 போரியல் போக்கிலும் தமிழருக்கு எதிரான இராணுவக் கெடுபிடித் தீவிரத்திலும் ஒரேயடியாக உறுதியாக நிற்கும் தென்னிலங்கை அரசுக்கு இப்போதுதான் உண்மை மெல்ல மெல்லச் சுடத் தொடங்கியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் தனது வெறிப்போக்குக்கு சர்வதேசம் அங்கீகாரம் தராது என்பது இப்போதுதான் கொழும்புக்குப் புரிய ஆரம்பித்திருக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களைத் தூண்டி, முன்னெடுத்து, மேற்கொண்டு வரும் அரசின் செயற்போக்குக்கு எதிராக உலகின் சீற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே, உலகில் மனித உரிமைகள் பேணலுக்கான உயர் காவல் கட்டமைப்பு என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைக…

    • 1 reply
    • 887 views
  24. கிழக்கு முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கையில் சபையில் எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் ஆடையுடன் அமர்ந்திருக்க முடிகிறது. என்று லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கேள்வியெழுப்பியதுடன் பயங்கரவாததிற்கெதிரான யுத்தமென்ற போர்வையில் அரசு சகல தர்மங்களையும நிராகரிப்பதாக தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் : கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து முதலமைச்சா பதவியை தருவதாக ஏமாற்றியுமுள்ள இவ்வரசில் எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறது? எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் உடுத்திக் கொண்டு இச்சபையில் அமர்ந்திருக்க முடிகிறது? கௌதம புத்தர் கூட வன்முறையை விரும்பா…

    • 0 replies
    • 760 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.