ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துள்ளதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்க தெரவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மலையகத்தைச் சேர்ந்த 15 பேர் கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 542 views
-
-
இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியைக் காப்பாற்றத்தவறியிருப்பதால், இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கப் படைகள் தொடர்ச்சியான படுகொலைகள், கைதுகள், காணாமல்போதல்கள் போன்ற ம…
-
- 0 replies
- 713 views
-
-
கஜநாயக்கவின் மீது கருணா குழுவின் உதவியுடன் தமிழர்களை கடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது [ புதன்கிழமை, 07 மே 2008, 05:49.13 AM GMT +05:30 ] இலங்கை வான் படையின் முன்னாள் உயர் அதிகாரியொருவர் தமிழ் வர்த்தகரை கடத்திய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கொழும்பில் 7 இல் வசிக்கும் சீனி இறக்குமதியாளரான யோகராஜ் ஸ்ரீஸ்கந்தராஜ் மற்றும் அவரது வாகன சாரதியான ராமையா ஜெயராஜ் ஆகியோரை 2006 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி கருணா குழுவின் உதவியுடன் கடத்திச்சென்று பொலநறுவை வெலிக்கந்தையில் தடுத்து வைத்து 6 மில்லியன் ரூபாவை கப்பமாக பெற்றமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்…
-
- 0 replies
- 813 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் நேற்றிரவு ஒத்திவைக்கப்பட்டமை தனக்கு இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றம் செல்லும் வரை தெரியாது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
சிறிலங்காவின் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளையில் கொள்ளைக்கும்பல் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 710 views
-
-
இன்றைய தினம் மூடப்பட்டுள்ளது பாராளுமன்றம் மட்டுமல்ல இலங்கையின் ஜனநாயகத்தின் கதவுகளும்தான் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் காணப்பட்ட ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த விவாதத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் இன்று 10.30 அளவில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாராளுமன்ற வளாகத்திற்கு சென்ற வேளையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 711 views
-
-
* பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்டமைப்பு உறுதியான நம்பிக்கை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற பல்வேறு பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இவர்கள் என்ன தான் தலைகீழாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அரசு பகல் கனவு காண்பதை விடுத்து தோல்வியை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டுமென்பதற்காக அரசு எதையும் ச…
-
- 1 reply
- 882 views
-
-
தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்திச் செல்லல் மற்றும் 60 லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக முன்னாள் வான்படை அதிகாரி நிசாந்த கஜநாயக்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்களின் போது நிசாந்த கஜநாயக்க ஒன்றிணைந்த நடவடிக்கை தலைமையகத்தில் கடமையாற்றியுள்ளார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் வான்படையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிசாந்த கஜநாயக்க, 2006ம் ஆண்டு ஜூன் 18ம் திகதியும், ஜூலை 28ம் திகதியும் கறுவாத்தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் வைத்து நடராஜா ஸ்கந்தராஜா என்ற தமிழ் வர்த்தகரை கடத்திச் சென்ற…
-
- 0 replies
- 615 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா அரச தலைவரின் குடும்ப நிறுவனமான மிகின் வானூர்தி சேவை 3,500 மில்லியன் ரூபாய்கள் இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 836 views
-
-
மடுதேவாலயம் முன்னர் பௌத்த விகாரையாகவும பின்னர் இந்து ஆலயமாகவும இருந்தது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே இங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாந்தை பகுதி மக்கள் கத்தோலிக்கர்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என எல்லாவெல மோனந்த தேரோ தெரிவித்தார். மடு திருச் சொரூபத்தினை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயர் நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. என்றும் அவர் கூறினார். மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதியையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே முப்படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர். ஆனால் மடுமாத திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயா தலைமையிலான 30 மதகுருமார்கள் குழு நிபந்தனையை முன்வைத்துள்ளது. இதன…
-
- 5 replies
- 1.8k views
-
-
புதன் 07-05-2008 11:00 மணி தமிழீழம் [புகழ்] வவுனியாவில் சுடுகலன் தாங்கிய கும்பல் மூன்று வீடுகளில் கொள்ளை. வவுனியா குவாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை இரவு மூன்று வீடுகளில் சுடுகலன் தாங்கிய கும்பல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. வவுனியாவிற்கு மேற்கே குவாங்குளத்தில் அடுத்தடுத்து இருக்கும் மூன்று வீடுகளில் இரவு 7மணியளவில் நுழைந்த கும்பலே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. முகத்தை கறுப்பு துணிகளால் கட்டியவாறு சுடுகலன்களுடன் நுழைந்த ஐந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்கள். குடும்பத் தலைவர்களே இவர்களது பலத்த தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். இதன் பின்னர் வீடுகளில் இருந்தவர்களை அறைகளுக்குள் கொண்டு சென்று அடைத்துவிட்டு வ…
-
- 0 replies
- 944 views
-
-
புதன் 07-05-2008 10:37 மணி தமிழீழம் [புகழ்] தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது. - மனோ கணேசன் நாட்டில் சமாதான வலயங்களை உருவாக்குவதற்கு பதிலாக தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது தமிழர்கள் பிரதேசத்தை சிங்கள மயமாக…
-
- 0 replies
- 813 views
-
-
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற பல்வேறு பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், இவர்கள் என்ன தான் தலை கீழாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அரசு பகல் கனவு காண்பதை விடுத்து தோல்வியை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் திகாமடுல்ல பா.உ கே. பத்மநாதன் தெரிவித்தார். பாரளுமன்றில் செவ்வாயன்று அவரச கால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் : 'கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றெயாக வேண்டுமென்பதற்காக அரசு எதையும் செய்யத் தயாரகியுள்ளது. கிழக்குப்பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர்கள் எல்லாம் தற்போது கிழக்கில் முகாமிட்டுள்ளனர். கிழக்கை அபிவிருத்தி செய்யப் போ…
-
- 1 reply
- 907 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தினை அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 820 views
-
-
இலங்கை மீண்டும் 1970ஆம் ஆண்டு வாழ்க்கை நிலைக்குத் திரும்பியுள்ளதாக பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்ஷா டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். "70ஆம் ஆண்டு வாழ்க்கை நிலைக்கு நாம் ஏற்கனவே மீளத்திரும்பி விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். நாம் இப்பொழுது அந்த வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என அவர் 'டெய்லி பினான்சியல் டைம்ஸ்' இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கிறார். "உலகளாவிய ரீதியில் டொலரின் வீழ்ச்சியும், எண்ணெய் விலை அதிகரிப்பும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பங்கீடு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கம், அதனை விட்டுவிட்டு அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் மருத மடு யாழில் வெடித்து , புகைத்த மும்முனை சமரும், புலிகளின் திடீர் மருதமடு வெளியேற்றமும் இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளதோடு சர்வதேசத்தின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளன. புலிகளை பொருத்தமட்டில் இவை இரண்டும், இராணுவரீதியிலும்,இராஜீகரீதி
-
- 0 replies
- 758 views
-
-
11 வருடங்களாக மூடப்பட்டிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. காலை 10.37 க்கு கூடிய சுப வேளையில் இந்த ஆலை திறந்துவைக்கப்படுகின்றது. வாழைச்சேனை கடதாசி ஆலை திறக்கப்படுவதன் மூலம் இலங்கையின் கடதாசி தேவையை 10 முதல் 15 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என கடதாசி ஆலையின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்தார். 1997ம் ஆண்டு மூடப்பட்ட இந்த கடதாசி ஆலை, தற்போது கிழக்கின் உதயம் திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக திறந்துவைக்கப்படுகிறது. இந்த கடதாசி ஆலையின் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாளாந்தம் சுமார் 10 டொன் கடதாசி உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பத்தில் மாதத்திற்கு 300 டொண் கடதாசி உற்பத்தி செய்ய முட…
-
- 0 replies
- 898 views
-
-
யாழ் குடாநாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு தெரிவுசெய்யப்பட்ட 454 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சுக்குப் பணித்துள்ளது. மீளக்குடியமர்த்துவதற்கான காணிகளை அடையாளம் காணும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளபோதும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்னமும் வழங்கப்படாததால் மீளக்குடியமர்த்தும் பணிகளில் இழுபறிநிலை காணப்படுவதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி சுட்டிக்காட்டினார். நாட்டில் காணப்படும் சூழ்நிலைகள் காரணமாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை வழங்கமுடியாதிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியபோதும், பாதுகாப்பைக் கா…
-
- 0 replies
- 623 views
-
-
வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் வவுனியா மாவட்டத்தின் புளொட் இயக்க முக்கியஸ்தரான 5 பிள்ளைகளின் தந்தை செல்வராசா பவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் புளொட் காரியாலைய நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்ய சென்ற வேளை இன்று மாலை 5.30 அளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நகரசபை மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற் கிளைமோர் குண்டு வெடிபபு ஒன்றில்; இரண்டு பேர் கொல்லப்பட்டனர் இவர்களில் ஒருவர் 53 வயதான சுந்தரலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார் மற்றையவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவத்தில் ஒருவா காய…
-
- 0 replies
- 740 views
-
-
இனப் போராட்டமும் தொலைக்காட்சி சீரியலும் ராஜீவ் காந்தியின் மகள் ப்ரியங்கா கடந்த மார்ச் 19-ஆம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்த்த்துப் பேசியிருக்கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவதைப் பார்க்கும் போது, இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள், தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரப்பான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும், நீதிமன்றத்தையும், மற்றும் பல அரசு நிறுவனங்களையும் - சமயங்கள…
-
- 1 reply
- 1k views
-
-
வட மாகாண ஆளுனராக ஓய்வு பெற்ற இராணுவ படையதிகாரி ஒருவரை நியமிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. முன்னாள் இராணுவத் தளபதி லெப்டிணன் ஜெனரல் லயணல் பலகல்லவை தீர்மானிக்கப்பட்டிருந்தது. வடக்கு மக்களுடன் லயணல் பலகல்லவிற்கு காணப்பட்ட நெருக்கமான உறவின் காரணமாக கோதபாய ராஜபக்ஸவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், வட மாகாண ஆளுநனர் பதவியை ஏற்றுக் கொள்ள லெப்டிணன் ஜெனரல் பலகல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவ்வாறானதொரு நெருங்கிய உறவைப் பேணிய ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனராலான காமினி ஜயசுந்தரவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவும் இந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இத…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கான பிரித்தானியா தூதரகத்தின் படைப் பிரிவு ஆலோசகர் லெப். கேணல் ஏ.எஸ்.காஸ் உள்ளிட்ட பிரித்தானியப் படை அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரை அதிகாரபூர்வமாக சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-